Friday, May 30, 2008

கண்டேன் அவர் திருப்பாதம் - 4 திருக்கயிலாய யாத்திரை

திருக்கயிலாய யாத்திரை செல்ல செய்ய வேண்டியவை



நம் கோனும் பிராட்டியும் இந்த புவனம் முழுவதற்கும் அரசன் அரசியாக வீற்றிருந்து அருள் பாலிக்கும் அழகுதான் என்னே!






மை கலந்த கண் பங்கன், மாதியலும் பாதியன், செங்கண் கருங்குழலி நாதன், பேரமை தோளி காதலன், மானேர் நோக்கி மணாளன், பஞ்சேரடியாள் பங்கன், குவளைக் கண் கூறன், கொம்பரார் மருங்குல் மங்கை கூற வெண்றன், செவ்வாய் சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளன், கயல் மாண்ட கண் பங்கன், பந்தணை விரலி பங்கன், அம்மை ஜகத்ஜனனி பார்வதியுடன் உறையும் திருக்கயிலை யாத்திரை( இந்தியா வழியாக ) செல்ல நாம் செய்ய வேண்டியவற்றை இப்பதிவில் காண்போம்.

முதலில் யாத்திரைக்கான விளம்பரம் வரும் வரை காத்திருந்து வந்தவுடன் விண்ணப்பம் இட வேண்டும். விண்ணப்பம் இட்ட பின் அம்மையப்பா உந்தன் இல்லம் வரை நான் வர தாங்கள் உத்தரவு தர வேண்டும் என்று தினமும் வேண்ட வேண்டும். யாத்திரிகள் குலுக்கல் மூலமாக தேர்வு செய்யப்படுவதால் தன்னுடைய இல்லத்திற்கு சிவசக்தி அழைத்தால் மட்டுமே( தேர்வு செய்யப்பட்டால்) மட்டுமே நாம் செல்ல முடியும்.அவர்கள் தரிசனம் பெற முடியும்.

ஜனவரி மாத கடைசி அல்லது பிப்ரவரி மாத முதல் வாரத்தில் எல்லா நாளிதழ்களிலும் திருக்கயிலாய யாத்திரை மேற்கொள்ள விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18 வயது ரம்பியவர்களும் 70 வயதை தாண்டாத இந்திய குடி மக்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை அனுப்ப மார்ச் 15 ம் தேதி இறுதி நாள். விண்ணப்பப் படிவங்களை KMVN.org அல்லது kmyatra.org என்ற இணைய தலங்களிலிருந்தும் இறக்கிக் கொள்ளலாம். இவ்விரண்டு இணைய தலங்களிலும் இந்திய அரசின் கைலாஷ்-மானசரோவர் பற்றிய முழு விவரங்களும் உங்களுக்கு கிடைக்கும். விண்ணப்பதாரர் நல்ல உடல் நலம் இருப்பவராய் இருத்தல் மிகவும் அவசியம். திருக்கயிலாய மலையின் சுற்றுப்பாதை 5000 மீட்டருக்கு மேல் உயரமானதால் அங்கு பிராண வாயு குறைவாக உள்ளது, மேலும் காற்றின் அழுத்தமும் உயரத்தில் செல்ல செல்ல குறைவு எனவே உடல் நலம் நன்றாக இருப்பது முக்கியம். குறிப்பாக, இதய நோய், ஆஸ்த்மா, இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறு நீரக கோளாறு, வலிப்பு நோய் உள்ளவர்கள் இந்த யாத்திரையை மேற்கொள்ள முடியாது. ஒவ்வொரு ஆண்டும் மொத்தம் 16 குழுக்கள் அனுப்பபடுகின்றன. ஒவ்வோரு குழுவிலும் அதிக பட்சம் 40 பேர். இதிலே 44 பேர் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர் 19 பேர் பெண்கள், 25 பேர் ஆண்கள். 2006 வருடத்திலிருந்து இந்த எண்க்கை அதிக பட்சம் 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆயினும் மருத்துவ பரிசோதனையைப் பொறுத்து குழுவினரின் எண்க்கை மாறுபடும். ஏனென்றால் žனப் பகுதியில் உள்ள தங்குமிடங்களில் 30 பேருக்கு மேல் தங்குவது கடினம் என்பதால் இந்தக் கட்டுப்பாடு.

முதல் குழு மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத முதல் வாரத்தில் கிளம்புகின்றது. பின் ஒவ்வொரு வாரமும் அடுத்த குழு கிளம்புகின்றது. 16வது குழு செப்டெம்பர் 15 தேதி செல்கின்றது. அடியேனுக்கு 2005ம் வருடத்திய 14ம் குழுவில் செல்லும் பாக்கியம் கிடைத்தது.எங்கள் யாத்திரை ஆகஸ்ட் மாதம் 15 நாள் தொடங்கி செப்டம்பர் மாதம் 12 தேதி வரை நடை பெற்றது. விண்ணப்பித்தவர்களிலிருந்து கண மூலம் யாத்திரை செல்பவர்கள் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் அந்த எம்பெருமான், கயிலாயபதி, உமாபதி, பசுபதி, சிவகாமிபதி, கௌரிபதி, அம்பிகாபதி தன்னுடைய இல்லத்திற்கு யார் யார் வரவேண்டும் என்று தானே முடிவு செய்கிறார். பின்னர் அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உடனே தந்தி மூலம் இந்த செய்தி அறிவிக்கப்படுகின்றது. ஆனால் இப்போதைய உலகம் இன்டெர்னெட் உலகம் எனக்கு செய்தி கிடைத்தை இ-மெயில் மூலமாக.சென்னையிலுள்ள குமான் மண்டல அபிவிருத்தி கார்ப்பரேசன் (KMVN) மூலமாக எம்பெருமானுடய அழைப்பை பற்றிய செய்தி எனக்கு வந்தது. குமான் மண்டல அபிவிருத்திக் கழகம், உத்தராஞ்சல் அரசின் சுற்றுலா றுவனம் யாத்திரிகளின், உணவு, தங்கும் இடம், வாகன வசதி அனைத்துயும் கவனித்துக் கொள்கின்றது. இந்திய திபெத் எல்லை பாதுகாப்புப் படை (ITBP) யாத்திரிகளுக்கு பாதுகாப்பு வழங்குகின்றது.

யாத்திரைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி தெரிந்தவுடனே நாம் செய்ய வேண்டிய முதல் வேலை நமது உடலை அந்த கடினமான யாத்திரைக்கு தயார் செய்வது. நடை, ஒட்டம், யோகா, பிராணயாமம் ஏதாவது ஒன்றை தினமும் காலையும் மாலையும் செய்து வந்தால் உடலும் பலப்படும், நமது கை கால்களில் உள்ள தசைகள் அந்த கடினமான உயர் மட்ட நடைப்பயணத்திற்கு ஏற்றவாறு பலப்படுவது மிகவும் நல்லது. யாத்திரையும் சுகமாக இருக்கும்


மானசரோவர் கரையிலிருந்து திருக்கயிலாய தரிசனம்





யாத்திரைக்கு எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள் என்ன என்று விரிவாகப் பார்க்கலாமா?

1. கம்பளி ஆடைகள் - உயர் மட்டம் ( high altitude) என்பதால் இரவில் நல்ல குளிராக இருக்கும், மேலும் லிபு கணவாய், டோல்மா கணவாய் ஆகியவற்றை கடக்கும் போது நல்ல பனியும் இருக்கும் எனவே தலைத்தொப்பி, ஸ்வெட்டர்கள், கம்பளி உள் ஆடைகள்(Inners), கம்பளி அல்லது தோல் கையுறைகள் (hand gloves), கம்பளி காலுறைகள் ( woolen socks) ஆகியவற்றை தயார் செய்து கொள்ள வேண்டும். அவரவர்கள் குளிரைத் தாங்கும் சக்திற்கேற்ப இரண்டோ மூன்றோ எடுத்துச் செல்லவும். மேலும் யாத்திரையின் போது காற்றும் மிக வேகமாக வீசும் என்பதால் wind sheeter ஒன்றும் தேவைப்படும்.

2. கறுப்புக் கண்ணாடி- பனிச்சிகரங்களில் உள்ள பனித் துகள்களில் சூரிய ஒளி பட்டு சிதறும் போது அதில் புற ஊதாக்கதிர்கள் அதிகம் இருக்கும் என்பதால் கண்ணை பாதுகாத்துக் கொள்ள நல்ல UV filter கொண்ட கறுப்பு ற கண் கண்ணாடி தேவை அதுவும் கழுத்தில் மாட்டிக்கொள்ளும் கயிருடன் இருந்தால் மிகவும் நல்லது..

3. மலையேறும் காலகள்: (Trekking/hunter/Marching Shoes) - ஏனென்றால் மலையேறும் போது வழுக்காமலிருக்க. வழியில் பல்வேறு நீர் வீழ்ச்சிகளை கடந்து செல்ல வேண்டி இருக்கும் மேலும் பனியில் நடக்கும் போது காலகள் நனையும், ஈர காலகளுடனே நடந்தால் காலில் கொப்புளங்கள் வர வாய்ப்பு உள்ளது மேலும் அவை அங்கே எளிதில் ஆறாது , எனவே இரண்டு ஜோடி காலகள் கொண்டு சென்றால் நல்லது. இரண்டு அதிகப்படி laces எடுத்து செல்வதும் நல்லது. Action Shoes ல் நல்ல தரமான Trekking Shoes குறைந்த விலையில் கிடைக்கின்றன. நீர் வீழ்ச்சிகளைக்கடக்கும் போது அந்து கொள்ள எளிதில் உலர்ந்து விடும் canvas வகை காலகளையும் எடுத்து செல்லலாம்.

4. உடைகள்:- நாம் அணியும் ஆடைகள் எளிதில் உலர்ந்து விடுவனவாக இருந்தால் மிகவும் நல்லது. இரண்டு/மூன்று Track suits இருந்தால் போதும் யாத்திரை முழுவதையும் நாம் முடித்து விடலாம், சாமான்களின் எடையும் குறைவாக இருக்கும். பேண்ட்/ சர்ட் என்று அதிகப்படியாக எடுத்து செல்வதால் உபயோகம் இல்லை. மேலும் உயர் மட்டங்களில் காற்று அதிக வேகத்தில் வீசுவதால் துகளை துவைத்தாலும் žக்கிரமாக காய்ந்து விடுகின்றன. கூஞ்சி, தக்லகோட், டார்ச்சென் முதலிய இடங்களில் நாம் தங்கும் சமயம் துகளை துவைத்துக் கொள்ளும் வசதிகள் உள்ளன.

நாம் எடுத்து செல்லும் பொருட்களின் எடைக்கு கட்டுப்பாடு உள்ளது, மொத்தம் 25 கிலோ பொருள்களைத்தான் நாம் மேலே எடுத்து செல்ல முடியும். அதிலும் 5 கிலோ அனைவருக்கும் பொதுவான உணவு, பூஜை சாமான்கள், மருந்துகள் முதலியன என்பதால் நம்முடைய சொந்த பொருள்கள் 20 கிலோ மட்டுமே அனுமதிக்கப்படுகின்றது. யாத்திரையின் நடைப்பயணத்தின் போது நமது பொருட்கள் கோவேறுக் கழுதைகள் மூலமாக நம்முடன் அனுப்பி வைக்கப்படுகின்றது என்பதால் இந்த கட்டுப்பாடு. குழுவினர் அனைவருடைய சாமான்களும் மொத்தமாக எடை போடப்படுவதால் எங்கள் குழுவில் யாருக்கும் எந்த சிரமும் வரவில்லை. நம்முடைய பொருட்களின் எடை அதிகமாக இருந்தால் அதற்காக அதிக பணம் செலுத்த வேண்டி வரும். எனவே நமக்கு வேண்டாத பொருள்களை தாருசூலா, நபிடாங், தக்லகோட் முதலிய இடங்களில் வைத்து செல்லவும் வசதி உள்ளது பின் திரும்பி வரும் போது அவற்றை நாம் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் .

5. தொப்பி- : சூரியனின் கதிர்களை நமது முகத்தில் விழாதவாறு தடுக்கும் தொப்பி ஒன்று ( Peaked cap or broad brimmed straw hat).

6.தண்ணீர் பாட்டில் அல்லது சுடு தண்ணீர் வைத்துக் கொள்ள பிளாஸ்க் கழுத்தில்/தோளில் மாட்டிக் கொள்ளக்கூடியது - .கைலாய கிரி வலம் வரும் போது சூப், காபி முதலியன போட்டு அருந்தவும், நடைப்பயணத்தின் போது ஏற்படும் தண்ர் தாகத்தை தக்கவும் இது பயன்படும். மேல் மட்டங்களில் உள்ள தண்ரில் தாது உப்புகள் அதிகம் என்பதால் குளோரின் மாத்திரைகளை எடுத்துச் செல்வது நல்லது அவற்றை தண்ரில் கலந்து அருந்த. எங்கள் குழுவினர் அனைவருக்கும் பொதுவாக இவற்றை வாங்கிச் சென்றோம்.

7. டார்ச் லைட்: - பெரியது ஒன்று , இரவு நேரங்களில் இயற்கை உபாதைகளை கழிக்க செல்லும் போது பயன்படும். உயர் மலைகளில் பேட்டரி செல்கள் (Battery cell)
žக்கிரம் தீர்ந்துவிடும் என்பதால் அதிகப்படியான பேட்டரிகளை எடுத்துச் செல்லவும், ஒன்றிரண்டு பல்ப் (bulb) கைவசம் இருப்பதும் நல்லது. பேட்டரி செல்களை கம்பளி துயில் சுற்றி அதிகம் குளிர் படாமல் வைத்தாலும் அவை சிறிது நாட்கள் அதிக நாட்கள் உழைக்கும்.


8. மழைக் கோட்: - நாம் யாத்திரை செய்யும் காலம் தென் கிழக்கு பருவக்காற்றுக் காலம் என்பதால் மழை, பனிப் பொழிவு மேலும் நீர் வீழ்ச்சிகள் முதலியவற்றிலிருந்து காத்துக் கொள்ள ஒரு rain coat அவசியம்.

9. இடுப்புப்பை:- இடுப்பில் மாட்டிக்கொள்ளக்கூடிய பை (belt pouch) தண்ணீரில் நனையாதது ( water proof) பணம், பாஸ்போர்ட், சிறிய கேமரா, மருந்துகள், சாக்கலேட்கள் பச்சை கற்பூரக்கட்டி, சூப் பவுடர்கள் முதலிய பொருட்களை வைத்துக் கொள்ள. கழுத்துப்பை: : பாஸ்போர்ட் முதலிய மிகவும் முக்கியமான பொருட்களை வைத்துக் கொள்ள தண்ணீரில் நனையாத கழுத்தில் தொங்கவிடக்கூடிய பை ஒன்று மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


10. பிளாஸ்டிக் பை - : நம்முடைய உடமைகளை மேலே எடுத்து செல்லும் போது மழை, பனியிலிருந்து காப்பாற்ற, பொருட்கள் நனையாமலிருக்க அவற்றை பிளாஸ்டிக் பைகளில் வைத்து கட்டி எடுத்து செல்வது அவசியம். கோவேறு கழுதைகள் மூலம் பொருட்கள் எடுத்து செல்லப்படுவத ‘ல் கடினமான பெட்டிகளுக்கு ( suit case ) அனுமதி இல்லை. பைகளிலேயே ( flexible bags) பொருட்களை எடுத்து செல்ல வேண்டும். ஒரு பைக்கு இரண்டு பிளாஸ்டிக் பை, ( உரப்பை போன்று கெட்டியானது) மற்றும் அவற்றை நன்றாக கட்டுவதற்குரிய பிளாஸ்டிக் கயிறுகள் அவசியம்.

11. தட்டு, டம்ளர், ஸ்பூன். žனப்பகுதியில் கைலாய மற்றும் மானசரோவர் கிரி வலத்தின் போது பயன் படும்.

12. முகக்கிரீம்கள் :- குளிரிலிருந்து முகத்தை கைகளை காப்பாற்றிக் கொள்ள cold cream/ vaselin, புற ஊதாக் கதிர்களை தடுக்கும் sun screen lotion எடுத்துக் கொள்வது நல்லது. காலையில் வெளியே நடைப்பயணத்திற்கு புறப்படுவதற்கு முன் இரண்டையும் ஒன்றாக குழைத்து முகத்திலும் கைகளிலும் பூசிக் கொண்டு சென்றோம்.

13. மெழுகு வர்த்திகள்: - žனப்பகுதியில் கிரி வலத்தின் போது முகாம்களில் மின்சாரம் கிடையாது, இந்தியப் பகுதியிலும், ஜெனெரேட்டர்கள் குறிப்பிட்ட சமயங்களில் மட்டுமே ஓடுகின்றன எனவே மெழுகுவர்த்தி எடுத்துச் செல்வது அவசியம். தீப்பெட்டிகளை எடுத்து சென்றால் காற்றின் வேகத்தில் அவை அனைந்து விடலாம் எனவே லைட்டர்கள் மிகவும் உபயோகமாக இருக்கும்.

14. ஊன்று கோல் (walking stick): - மிகவும் அவசியம் குறிப்பாக நாம் இறக்கங்களில் கீழிறங்கும் போது உடுக்கை இழந்தவன் கைபோல நாம் விழுந்து விடாமிலிருக்க பெருந்துணையாக இருக்கின்றன. எங்களுக்கு மஹாதேவ் அமர்னாத் சேவா சமதியினர் கைத்தடியை இலவசமாக வழங்கினர். இல்லவிட்டால் தாருசூலாவில் கிடைக்கும் வாங்கிக் கொள்ளலாம்.

15. மற்ற அவசியமான பொருட்கள் : மேலும் கத்தி, கத்தரிக்கோல், தரமான செருப்பு, பாக்கட் டைரி, டாயிலெட் பேப்பர் முதலியன.

16. விருப்பபடி எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள்: அவரவர்கள் வசதிப்படி, விருப்பப்படி கேமரா, வீடியோ கேமரா எடுத்துச் செல்லலாம். உயர் மட்டங்களில் பேட்டரிகள் சீக்கிரம் தீர்ந்து விடும் எனவே அதிகப்படியாக (extra) எடுத்துச் செல்வது நல்லது.

சீனப்பகுதியில் உங்களுடைய சார்ஜ் செய்யும் பேட்டரிகளை சார்ஜ் செய்ய பிளக் கிடையாது என்பதால் பல்ப் ஹோல்டர்களுடன் இனைந்த பிளக் எடுத்து செல்லலாம்.

குடை, பெட்ஷ“ட்(உல்லன்) நடைப்பயணத்தின் போது முழங்கால்களில், காப்பு ( Knee guard) அந்து நடந்தால் அவ்வளவாக அழுத்தம் முழங்கால் மேல் வருவதில்லை. இதை விளையாட்டு வீரர்கள் அதிகம் பயன்படுத்துவர், ஆனால் நடைப்பயணத்தின் போது இது அடியேனுக்கு மிகவும் உதவி செய்தது. இந்த காப்பு அந்த நாட்களில் முழங்கால் வலி சிறிதும் இல்லாமலிருந்தது. கைலாஷ்- மானசரோவர் சமிதியினர் டெல்லியில் கையுறை, காலுறை முதலியவற்றை விற்ற போது முழங்கால் காப்பு, பாத மூட்டு காப்பு (Ankle guard) மற்றும் முழங்கை காப்பும் விற்றார்கள் தங்களுக்கு வேண்டியதை பெற்றுக் கொள்ளுங்கள்.

மானசரோவர் தீர்த்தம் கொண்டு வர கேன் அல்லது பாட்டில், இவற்றை தக்லகோட்டிலும் வாங்கிக் கொள்ளலாம். அவற்றிலிருந்து தண்ர் ஒழுகாமல் இருக்க (žல் செய்ய) M-Seal அல்லது ஃபெவிகால் சில சமயம் குதிரைக்காரர்கள் எடையைக் குறைப்பதற்காக மானசரோவர் தண்ரை கீழே ஊற்றி விட்டு பின் நமது இருப்பிடம் வந்த உடன் வேறு தண்ரை ரப்பி தந்து விடுகின்றனர், எனவே கேன்களை žல் செய்வது மிகவும் அவசியம், உடையாத பிளாஸ்டிக் பாட்டிலாக இருந்தால் நம்முடைய பொருட்களுடனே வைத்து பேக் செய்து விடலாம்.

பச்சைக் கற்பூரக்கட்டி ( Smelling Camphor ) உயர் மட்டங்களில் பிராண வாயு குறைவு என்பதாலும் குறிப்பாக லிபு கணவாய் மற்றும் டோல்மா கணவாயில் பனி பெய்தால் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமமாக இருக்கும் அப்போது இதை கைகுட்டையில் சுற்றி மக்கட்டில் கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமம் ஏற்படும் போது முகர்ந்து கொள்ள மூச்சு žராகும்., மானசரோவரில் நீராடும் போது குளிர் தெரியாமலிருக்க கடுகு எண்ணெய். கடுகு எண்ணெய்யை உடலில் தேய்த்துக் கொண்டு குளித்தால் குளிர் அதிகமாக தெரியாது ஆகவே 250 மி.லி கடுகு எண்ணெய், மற்றும் மூதாதையர்களுக்கு மானசரோவரில் தர்ப்பணம் கொடுக்க கருப்பு எள் ஆகியவற்றை டில்லியிலேயோ அல்லது தாருசூலாவிலோ வாங்கிக்கொள்ளலாம்.

17. உணவுப் பொருட்கள்: - இந்தியப்பகுதியில் நம்முடைய உணவையும், உறைவிடத்தையும் மற்றும் உடமைகளையும் KMVN றுவனம் தன்னுடைய பொருப்பில் ஏற்றுக் கொள்கின்றது. ஆனால் žனப்பகுதியில் தக்லகோட் என்ற இடத்தில் நாம் தங்கி இருக்கும் போது மட்டுமே உணவு வழங்குகின்றது அதுவும் žன உணவைத்தான் வழங்குகின்றனர் நம்மில் பலருக்கு அது சுவையனதாக அமைவதில்லை. மேலும் குறிப்பாக கிரிவலத்தின் போது நம்முடைய உணவை நாமே சமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அனைத்து குழுவினரும் ஒன்றாக இனைந்து பணம் சேர்த்து சமையல்காரர்களை வாடகைக்கு அமர்த்தி உணவு சமைத்துக் கொள்கின்றனர். சமையலுக்கு தேவைப்படும் பொருட்களை டில்லியிலிருந்தே வாங்கிச் செல்கின்றனர். நாங்களும் அவ்வாறே செய்தோம். ஆயினும் அந்த சமையல் காரர்களும் நம்முடனேயே நடந்து வருகின்றனர் என்பதாலும், அந்த குளிரில் எளிதில் சமையல் செய்ய முடியாது என்பதாலும் நமக்கு எளிதான உணவே கிடைக்கும். எனவே நம்முடன் ஜூஸ் பவுடர்கள், தாகத்தை தக்கும் புளிப்பு மிட்டாய்கள், பிஸ்கட்கள், சிப்ஸ், கார வகைகள், முந்திரி, பாதாம் போன்ற பருப்பு வகைகள், பேரீச்சம் பழம், சூப் பவுடர்கள், சாக்லேட்டுகள், சூயிங் கம், காபி பவுடர், பால் பவுடர், இனிப்புக்கள் போன்ற நொறுக்கு தீனிகள், கடலை மிட்டாய்கள், ரொட்டிகள் முதலியன எடுத்து செல்வது மிகவும் அவசியம். வழியில் வரும் கிராமங்களில் உள்ள குழந்தைகளுக்கு வழங்க அவரவர்கள் விருப்பபடி சாக்கலேட் எடுத்து செல்லலாம்.

18.பூஜைப் பொருட்கள்: மேலும் பூஜைக்கு வேண்டிய சாமான்கள் அவரவர்கள் விருப்பப்படி எடுத்துச் செல்லலாம். அர்ச்சனைக்காக வில்வம், விளக்கு, பூஜை ம, பூஜை தட்டுக்கள், கற்பூரம், பத்திகள், நைவேத்தியத்திற்கு கல்கண்டு, முந்திரி பேரீச்சம் பழம் முதலிய நைவேத்திய பொருட்கள். பாராயண புத்தகங்கள் எடுத்து செல்லலாம். டோல்மா, மானசரோவர் கரை, அஷ்டபத் முதலிய இடங்களில் யாகம் வளர்த்து பூஜை செய்யலாம் என்பதால் அதற்கு வேண்டிய நெய், சமித்துக்கள், யாக பொருட்களை எடுத்து செல்லலாம். அங்கு பூஜையில் வைக்க வெள்ளியால் செய்த வில்வ தளங்கள், சிறு திரிசூலம் முதலியவற்றை எடுத்து செல்லலாம். தாங்கள் பூஜை செய்யும் சிறு மூர்த்திகளையும் எடுத்துச் செல்லலாம். யாகத்தின் போதும் மானசரோவரில் குளிக்கும் போதும் உடுத்த வேஷ்டி கொண்டு செல்வது உத்தமம். இப்புத்தகத்தின் இறுதியில் மொத்த பொருட்களின் லிஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

19.மருந்து மாத்திரைகள்: - சீனப்பகுதியில் மருத்துவ வசதி மிகவும் குறைவு என்பதால் நமக்கு வேண்டிய அவசியமான மருந்துகளை எடுத்து செல்வது மிகவும் அவசியம். காய்ச்சல், சளி, வயிற்றுப் போக்கு, உடல், தலை வலி ஆகியவற்றுக்கு வேண்டிய மருந்துகள், தைலங்கள் ஆகியவற்றை எடுத்துச்செல்வது மிகவும் நலம் பயக்கும். C விட்டமின் மாத்திரைகள் சளியிலிருந்து காப்பாற்றும். மேலும் Band aid, காயத்திற்கு போடும் மருந்துகள் , electral powder , பஞ்சு முதலிய முதல் உதவிக்கு வேண்டிய பொருட்கள். இரத்த அழுத்ததை கட்டுப்படுத்தும் மருந்து முதலியன எடுத்து செல்லலாம். எங்களுக்கு கைலாஷ்- மானசரோவர் சமிதியினர் இலவசமாக கொடுத்த இரண்டு பை மருந்துகளுடன் எங்கள் குழுவில் ஒரு மருத்துவர் இருந்ததனால் அவரும் இரண்டு பைகள் மருந்து கொண்டு வந்தார் எனவே நாங்கள் கொண்டு சென்ற மருந்துகளை அப்படியே திருப்பிக் கொண்டு வந்தோம் ஆயினும் எல்லா மருந்துகளையும் எடுத்து செல்வது நல்லது. உயர் லைகளில் வரக்கூடிய நோய்களை ( high altitude sickness) பற்றி அறிந்து கொள்வது நல்லது. ஒவ்வொரு குழுவினருடன் ஒரு sleeping bag மற்றும் பிராண வாயு சிலிண்டர் எடுத்து செல்கின்றனர். உயர் மட்டங்களில் மட்டுமே ஏற்படும் நோய்களைப் பற்றி படித்துத் தெரிந்து கொள்வதும் நல்லது. அரசு அனுப்பும் கையேட்டில் இவை பற்றிய குறிப்புகள் உள்ளன. இணைய தலங்களில் சென்றும் இவற்றைப் பற்றி படித்து தெரிந்து கொள்ளலாம்.


நாம் மொத்தம் ரூ15500/- KMVNக்கு செலுத்த வேண்டும், முதலிலேயே ரூ5000/- வரைவோலையாக அனுப்பிவிட்டதால் மீதி ரூ10500/- டெல்லியில் செலுத்த வேண்டி வரும், விசாவிற்காக ரூ200/-, டில்லியில் மருத்துவ பரிசோதனை கட்டணங்களுக்கு ரூ2000/- அன்னிய செலாவக்காக ரூ40000/- ( 601 அமெரிக்க டாலர் žன அரசுக்கு, மற்றும் žனப்பகுதியின் போர்ட்டர், குதிரை, மற்ற செலவுகள்), இந்தியப்பகுதியில் போர்ட்டர், மற்றும் குதிரைக்கு ரூ7500/- , மற்ற உதிரி செலவுகளுக்காக ரூ5000/- என்று மொத்தம் ரூ75000/- டெல்லி எடுத்து செல்ல வேண்டும். அடியேன் அன்னிய செலாவயை 800 அமெரிக்க டாலர்கள் சென்னையிலேயே HDFC வங்கியில் மாற்றி எடுத்துச் சென்றேன்.

மேலும் ஒரு Notary Public ன் முன்னால் கையெழுதிடப்பட்ட பிரமாண பத்திரத்தை (Indemnity Bond), அரசுக்கு நாம் அளிக்க வேண்டும். அதற்கான மாதிரி கையேட்டில் இருக்கும். அவரவர்களின் ஊரில் அதைப் பெற முடியாதவர்கள் இந்த பத்திரத்தை டெல்லியிலும் பெற்றுக் கொள்ளலாம்.



விண்ணப்ப படிவம் பெற இங்கே கிளிக்கவும்



காலை சூரிய ஒளியில் மின்னும் திருக்கயிலாயம்


தரிசனம் தொடரும்.......



No comments: