Sunday, June 01, 2008

கண்டேன் அவர் திருப்பாதம் - 5 (திருக்கயிலாய யாத்திரை)

யாத்திரையின் முதல் நாள் - டெல்லியில்


அப்பர் பெருமான் அருளிச்செய்த போற்றித் திருத்தாண்டகம்
திருக்கைலாயம்
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி யுள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத் தொலியே போற்றி
ஆற்றாகி அங்கே யமர்ந்தாய் போற்றி
ஆறங்க நால் வேதம் ஆனாய் போற்றி
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி 1( திருவையாற்றில் திருக்கயிலாய காட்சி கண்ட அப்பர் பெருமான் திருக்கயிலை நாதரைப் போற்றிப் பாடிய போற்றித்திருத்தாண்டகத்தின் ஒவ்வொரு பாடலை பதிவின் ஆரம்பத்தில் படித்து அருள் பெறலாம்)

மலையரசன் பொற்பாவையும் ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியையும் பூலோக சொர்க்கமாம் திருக்கயிலையிலே சென்று தர்சிக்க செல்லும் முன்பு டெல்லியில் உடல் பரிசோதனையில் தேற வேண்டும். விசா வாங்க வேண்டும் மற்றும் வெளிநாட்டு செலாவணி, மற்றும் கிரிவலத்தின் போது உணவிற்காக வேண்டிய பொருட்கள் வாங்குவது ஆகிய செயல்களூக்காக மூன்று நாட்கள் தேவைப்படும். இப்பதிவில் டெல்லியில் எங்கள் குழுவினரின் முதல் நாள் அனுபவத்தை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். "ஓம் நமசிவாய" நாமம் சொல்லி ஆரம்பிப்போம் யாத்திரையை.

2005ம் வருடத்திய ஆகஸ்ட் பதினான்காம் நாள் சென்னையிலிருந்து புறப்பட்டு டெல்லி சென்று சேர்ந்தேன், யாத்திரீகளுக்கு குஜராத் சதனில் இருப்பிடத்திற்கும், உணவிற்கும், டெல்லி அரசாங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆட்டோ மூலம் அங்கு சென்று சேர்ந்ததும், வெள்ளி விழா ஆண்டு யாத்திரைக்கு, டெல்லி அரசின் தீர்த்த யாத்திரைக் குழு தங்களை வரவேற்கின்றது என்ற பேனர் வரவேற்றது. எனக்கு வழங்கப்பட்ட அறை எண் 108, அந்த கயிலை நாதனின் கருணையே அவருக்கு உகந்த எண்ணே அறையாக வந்தது என்று அவருக்கு நன்றி தெரிவித்தேன். ஜோஷி என்றொரு அன்பர் , மிகவும் தீவிர சிவ பக்தர், யாத்திரை முழுவதும் காலில் எந்த காலயும் அயாமல் நடந்து வந்தவர், காலாபானி என்ற இடத்தில் உள்ள காளி கோவிலுக்காக, எண்ணெய் கொண்டு வந்தார். நடை பயணத்தின் போது அவர் அந்த எண்ணெய் கேனை தானே சுமந்து வந்தார் யாரிடமும் அந்த கேனை தரவில்லை. அவர் தானாகவே முன் வந்து எல்லா உதவிகளையும் முதல் நாள் இரவு செய்து தந்தார். இங்கு குஜராத் உணவே கிடைக்கின்றது. உணவருந்தும் அறையில் கைலாய மலையின் முழு தோற்றம் தரும் ஒரு படம் , ஹெலிகாப்டலிருந்து எடுக்கப்பட்ட படம் மாட்டப்பட்டுள்ளது. அதை பார்க்கும் போதெல்லாம் ஏ கருணா சாகரா, தயா சிந்தோ எங்களை உன்னுடைய திருப்பாத தரிசனம் தந்து அருள் செய் என்று வேண்டிக்கொண்டோம்.

அங்கு கைலாய யாத்திரை முடித்துவிட்டு வந்திருந்த ஒரு கன்னட வயதான தம்பதியினர் அங்கு தங்கியிருந்தனர், அவர்களிடம் நல்ல தரிசனம் கிடைத்ததா என்று வினவினேன். அவர்களும் அருமையான தரிசனம் கிடைத்தது. கைலாய தரிசனம் மட்டுமல்ல, நந்தி, நாக், ஓம் அனைத்து தரிசனமும் நன்றாக கிடைத்தது ஓம் பருவதம் போகும் போது மேக மூட்டத்தால் மூடப்பட்டிருந்தது ஆனால் வரும்போது நல்ல தரிசனம் கிடைத்தது என்று கூறினார். என் மனதிலும் இருந்த ஒரு மேக மூட்டம் விலகியது, நான் படித்த சில கைலாய யாத்திரை கட்டுரைகளில் கைலாயம் சென்றவர்கள் இரண்டு மூன்று நாள் தங்கியும் கூட மேக மூட்டத்தினால் தரிசனம் சரியாக கிடைக்காமல் திரும்பி வந்துள்ளனர் என்று படித்திருந்தேன், அதுவே மனதில் பதிந்திருந்தது, அந்த தம்பதிகளுக்கு நல்ல தரிசனம் கிடைத்தது என்று கேள்விப்பட்டவுடன் மிகவும் சந்தோஷமாக இருந்தது, அவர்களின் ஆசியும் பெற்றுக் கொண்டேன்.

பின் என்னுடன் நாசிக்கிலிருந்து வந்த சசி குமார் தபஸ்வி என்ற அன்பர் எனது அறையை பகிர்ந்து கொள்ள வந்தார், அவரும் சிறந்த சிவ பக்தர், அவருடைய வீட்டிலே இரண்டு வில்வ மரங்கள் இருப்பதாகவும், தினமும் லிங்க மூர்த்திக்கு வில்வ தளம் சார்த்தி வழிபடுவதாகவும் கூறினார். அன்று தொடங்கிய எங்கள் உறவு, யாத்திரை முழுவதும் தொடர்ந்தது ஒரு அண்ணன் போல அவர் என்னை பார்த்துக் கொண்டார், எல்லா முகாம்களிலும் அவர் முன்பே சென்று விடுவார், எனக்காக தனக்கு அருகிலே இடம் வைத்திருப்பார். அடியேனும் அவரும், அடுத்த நாள் மருத்துவ பரிசோதனையில் என்ன ஆகுமோ தெரியவில்லை அந்த கால கண்டர், காலமூர்த்தி, காலாக்னி, கால நாசனர், நம்மை இது வரை கொண்டு வந்தார், தன்னுடைய இருப்பிடம் வரை அழைத்து தரிசனமும் கொடுப்பார் என்று நம்புவோமாக என்று பிரார்த்தனை செய்து கொண்டு காலையில் 6 மணிக்கே கிளம்ப வேண்டும் என்பதால் சீக்கிரமே தூங்கச் சென்றோம்.

அடுத்த நாள் காலையில் žக்கிரம் எழுந்து தயாராகி மனதில் அந்த ஜகந்நாதன், சசிதரன், விரூபாக்ஷன், வாமதேவன், லோக நாதன், ஜடாமகுடதாரியின் ஓம் நமசிவாய மந்திரத்தை ஜபித்துக் கொண்டே டெல்லி அரசின் பேருந்தின் மூலம் ITBP மருத்துவமணையை அடைந்தோம். அன்று ஆகஸ்டு 15 என்பதால் மருத்துவ பரிசோதனை நடைபெற வேண்டிய பத்ரா மருத்துவமனை அன்று விடுமுறை என்பதால் மருத்துவ பரிசோதனை அன்று நடைபெறவில்லை. அதற்கு பதிலாக ITBP அதிகாரிகள் மருத்துவ பரிசோதனையின் முக்கியத்துவத்தையும், மலைகளில் நாம் நடந்து செல்லும் போது செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை முதலியவற்றைப்பற்றி விளக்கினார். றைய திரவப்பொருட்களை குடிக்க வேண்டும், அதிகாலையில் கிளம்பி மதியத்திற்குள் சேர வேண்டிய இடத்தை அடைவது நல்லது, குழுவினர் எல்லோரும் ஒன்றாக நடப்பது நல்லது, இரவிலே வெளியே வரும் போது நன்றாக நம்மை போர்த்திக்கொண்டுதான் வர வேண்டும் போன்ற நல்ல அறிவுறைகளை கூறினர்.


அவர்கள் கூறிய தாரக மந்திரம் COLD.

C - உங்கள் உடம்பை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள், சுத்தமான துணிமணிகளையே அணியுங்கள்.( Keep body and clothes clean)

O- உங்கள் உடம்பு அதிகமாக சூடாவதை தவிருங்கள். ( Avoid over heating)

L - அணிகின்ற துணிமணிகளை இறுக்கமாக அணியாமல் தொள தொள என்று அவது நலம், மேலும் ஒரே ஸ்வெட்டர் அணிவதை விட பல அடுக்குகளாக அணிவது மிகவும் நல்லது.
( Put on clothes loose and in many layers).

D- உடம்பையும் துணிகளையும் ஈரமில்லாமல் வைத்துக் கொள்ளவும்
( Keep body and clothes dry)9000 அடி உயரம் வரையில் நம் உடம்பு எல்லாவித žதோஷண நிலைக்கும் ஏற்றவாறு நன்றாக இருக்கும், அதற்கு மேலே செல்ல செல்ல ஆக்சிஜன் காற்றில் குறைகின்றது, அதே சமயம் காற்றின் அழுத்தமும் குறைகின்றது, ஆகவே இந்த முன்னேற்பாடுகளுடன் நாம் செல்வது நல்லது. மேலும் கையிலாய மலைப்பகுதியில் žதோஷணம் திடீரென்று மாறக்கூடியது ஒரு நிமிடம் நல்ல வெய்யில் அடுத்த ஐந்து நிமிடங்களில் கடும் குளிர் என்று மாறும் எனவே ஸ்வெட்டர் ஒன்றாக அணியாமல் பல்வேறு அடுக்குகளில் அணிந்தால் வேண்டாதவற்றை கழற்றிக் கொள்ளலாம். சில சமயம் பயங்கர வேகத்துடன் காற்று வீசும். எனவே wind sheeter எனப்படும் கோட் அவசியம் கையில் இருக்க வேண்டும். மழை எப்போது பெய்யும் என்று சொல்ல முடியாது எனவே கைப் பையில் எப்போதும் மழை கோட் வைத்திருப்பதும் அவசியம்.

இராவண ஏரியின் முன் எங்கள் குழுவினர்பனிப்புயல், நில நடுக்கம் ஏற்பட்டால் நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான கையேடும் வழங்கப்பட்டது. அன்றே எங்களது பாஸ்போர்ட்களை KMVN அதிகாரிகள் விசாவிற்காக வாங்கிச் சென்றனர். நமது பாஸ்போர்ட்டில் விஸா முத்திரை பதிக்கப்படுவதில்லை குழு விசாவே சீன து‘தரகம் வழங்குகின்றது. பிரமாண பத்திரத்தை(Indemnity Bond) இன்றே வாங்கிக் கொண்டனர்.

அந்த திரியம்பகேஸ்வரரை, ஸ்தாணுவை, அக்ஷமாலாதரியை, வ்ருஷபத்வஜரை, கங்காதாரனை, நாகாபரண சுந்தரனை, வ்யோமகேசனை, சந்தரலங்கார சேகரனை, வாம தேவனை, சதா சிவனைக் காண செல்லும் ஒவ்வொரு யாத்திரை குழுவையும் இனைப்பு அதிகாரி ( Liaison Officer - L.O), எனப்படும் இந்திய அரசின் ஒரு அதிகாரி தலைமையேற்று அழைத்து செல்கின்றார். குழுவினரின் நலத்தை பாதுகாப்பதுடன், அரசுடன் தினமும் சம்பந்தம் வைத்துக் கொண்டு யாத்திரையின் முன்னேற்றத்தை தினமும் அரசுக்கு இவர் அனுப்புகின்றார். ஏதாவது தேவையேற்பட்டால் žன அதிகாரிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்துபவர் இவரே. žனப்பகுதியில் இருக்கும் போது தொடர்பு கொள்ள இந்திய அரசு ஒரு செயற்கைகோள் தொலைப்பேசியும் இவர் மூலம் அனுப்புகின்றது. யாத்திரையின் முன்னேற்றம் பற்றி இவர் அனுப்பும் செய்திகள், தகவல்கள் அனைத்தும்" kmyatra.org " என்ற இனைய தளத்தில் தினமும் புதிப்பிக்கப்படுகின்றது, யாத்திரீகளின் குடும்பத்தினர் இத்தளத்தை பார்த்து யாத்திரையின் முன்னேற்றத்தை அறிந்து கொள்ளலாம். எங்களது Liason Officer இனைப்பு அதிகாரி திரு. பொனால் சிங் போனால், டில்லி வனவிலங்கியல் பூங்காவின் தலைவர். (Director, Delhi Zoo) அவரும் அன்று எங்கள் அனைவரையும் வந்து சந்தித்து எங்களைப் பற்றிய தகவல்களைப் பெற்று சென்றார். அன்று ITBP மருத்துவர்களால் எங்களது இரத்த அழுத்தம் மட்டும் பரிசோதிக்கப்பட்டது, யாருக்கு குறைந்த அழுத்தத்தில் பிரச்சினை இருந்ததோ அவர்கள் அனைவருக்கும் மறு நாளும் பரிசோதனை நடைபெறும் என்பது அறிவிக்கப்பட்டது.

அன்றைய மதிய உணவை எங்களுக்கு டில்லியை சேர்ந்த கைலாஷ்-மானசரோவர் சேவா சமிதி என்னும் தொண்டு நிறுவனத்தினர் வழங்கினர். அவர்கள் ஒரு இடுப்புப்பை வழங்கினார்கள் அதில் யாத்திரைக்கு தேவையான சிறிய ஆனால் மிகவும் உபயோகப்படக்கூடிய பொருட்கள் இருந்தன. அவையாவன தாகத்தை தக்கும் குளிர்பான பௌடர், காபி து‘ள், பால் பவுடர், ஆரஞ்சு மிட்டாய்கள், நெல்லிக்காய் வத்தல், ஊசி நு‘ல், லைட்டர், பச்சை கற்பூரக்கட்டி முதலியன. முக்கியமாக லிபு மற்றும் டோல்மா கணவாய்களை நாம் கடக்கும் போது ஆக்சிஜன் மிகவும் குறைவாக இருக்கும் அப்போது இந்த பச்சை கற்பூரத்தை நாம் முகர்ந்து கொண்டு செல்லும் போது மூச்சுத்திணறல் ஏற்படாது பாதுகாக்கும் அரிய மருந்து, கட்டியை ஒரு கை குட்டையில் முடிந்து மணிக்கட்டில் கட்டிக் கொள்ள வேண்டும், தேவைப்படும் போது அதை முகர்ந்து கொள்ளலாம். இச்சமிதியில் உள்ள அன்பர்கள் அனைவரும் திருக்கயிலாயம் சென்று வந்தவர்கள் என்பதால், நமக்கு அவசியம் தேவைப்படும் பொருட்களை நமக்கு அன்பளிப்பாகவே வழங்குகின்றனர். இவர்கள் ஒரு வாரத்திற்கு தேவையான உணவு வகைகளையும், இரண்டு பை மருந்துகளையும் அனைவருக்கும் பொதுவாக வழங்கினர். மருந்துப்பையில் இரத்த அழுத்தத்தை அளக்கும் இரண்டு கருவிகளும் ஆபத்துக் காலத்தில் பயன் படுத்த இரண்டு சிறு பிராண வாயு சிலிண்டரும் இருந்தன. சிவஸ்துதிகள் அடங்கிய ஒரு புத்தகத்தையும் வழங்கினர். இவர்கள் வழங்கிய பையில் இருந்தவை எல்லாம் சிறிய பொருட்கள ஆனால் அதே சமயம் யாத்திரைக்கு மிகவும் அவசியமான பொருட்கள், நம்மால் கொண்டு செல்லப்படாத பொருட்களாகவும் இருந்தது. அதில் இருந்த பொருட்கள் யாத்திரையின் போது மிகவும் உதவியாக இருந்தன.


மேலும் இவர்கள் woolen socks, cotton socks (எளிதல் ஈரத்தை உறிஞ்சும் அதே சமயம் எளிதில் உலர்ந்துவிடும்), கையுறைகள் (gloves), தொப்பிகள், கறுப்பு கண்ணாடிகள் முழங்கால் காப்பு, முழங்கை காப்பு, குதி கால் காப்பு ITBT மருத்துவமணைகே கொண்டு வந்து அடக்க விலையிலேயே விற்றனர், மிகவும் அவசியமான டில்லியில் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்த இப்பொருட்களை நாங்கள் வாங்கிக் கொண்டோம். எனவே டெல்லியில் இவற்றை வாங்க செல்ல வேண்டிய சிரமம் குறைந்தது. மேலும் இவர்கள் யாத்திரிகள் அனைவருக்கும் மாலை அவித்து மரியாதை செய்தனர். கைலாய மலையில் நாம் நடந்து கொள்ள வேண்டிய முறைகளைப்பற்றி விளக்கமாக கூறினர்.


அவர்கள் கூறிய சில உண்மைகள் நாம் மலைகளிலே நடந்து செல்கின்ற போது நம்முடைய கம்பளித் தொப்பியை எந்த காரணம் கொண்டும் கழற்றக் கூடாது அவ்வாறு செய்தால் குளிர் காற்றின் காரணமாக தலைவலி வர வாய்ப்பு உண்டு, வியர்வை அதிகமாக வந்தாலும், முகாமில் அறையின் உள்ளே சென்ற பிறகே நாம் தொப்பியை கழற்ற வேண்டும். ஸ்லிப்பர்களை நாம் பயன்படுத்தினால் வழுக்கி விட வாய்ப்பு உள்ளது எனவே எப்போது வெளியே சென்றாலும், Trekking Shoe அந்து செல்வதே பாதுகாப்பானது, உயர் மட்டங்களிலே நடந்து செல்கின்ற போது இயற்கையாகவே நாம் களைப்படைந்து விடுவோம் அதே சமயம் பிராண வாயு (ஆக்சிசன்) குறைவு என்பதால் சிலர் எரிச்சலடைந்து மற்றவர்களுடன் சச்சரவு செய்வர், அவ்வாறு செய்யக்கூடாது குழுவினர் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்தாலே யாத்திரை சுகமாக இருக்கும். குதிரைகளில் பயணம் செய்யும் அன்பர்கள் குறிப்பாக பாதை கீழே இறங்கும் போது குதிரையில் பயணம் செய்யக்கூடாது. பல சமயங்களில் குதிரையில் இருந்து யாத்திரிகள் கீழே விழுந்து தங்கள் எலும்புகளை முறித்துக் கொண்டது இத்தகைய இறக்கங்களிலே என்று கூறினர்.

குறிப்பாக நான்கு இறக்கங்களை அவர்கள் கூறினார்கள், 

1. லிபுக்கணவாயில் இருந்து கீழே இறங்கும் 4 கி, மீ து‘ரம்,
2. டோல்மா கணவாயிலிருந்து கீழே இறங்கும் 7 கி.மீ து‘ரம்,
3. சியாலேவ்விலிருந்து புத்தி வரை உள்ள 5 கி.மீ. இறக்கம்
4. காலாவிலிருந்து லகன்பூர் வரையிலான 4444 படிகளை கொண்ட இறக்கம்.முடிந்தால் கைலாய கிரி வலத்தின் போது யாக்கில் பயணம் செய்யாமல் குதிரைகளிலே பயணம் செய்யுங்கள் பணம் சிறிது அதிகம் ஆனாலும் பாதுகாப்பானது என்றனர். மேலும் குதிரையிலே பயணம் செய்யும் போது ஏற்றம் என்றால் நாம் முன்னே சாய்ந்து கொள்ள வேண்டும், அதுவே இறக்கம் என்றால் பின்னே சாய்ந்து கொள்ள வேண்டும் அப்போது தான் குதிரைக்கும் சிரமமில்லாமல் இருக்கும் என்று கூறினர். அவர்கள் அப்போது ஒரு மங்களப்பாடல் பாடினர்கள் அது அப்படியே மனதில் லை கொண்டு விட்டது, அந்த பசுபதிக்கே உரிய ஒம் நமசிவாய என்ற ஐந்தெழுத்தின் பெருமை சொல்லும் பாடல் அது

ஓம் மங்களம் ஓங்கார மங்களம்
ஓம் நம சிவாய மங்களம்

ந மங்களம் நகார மங்களம்
நாத பிந்து கலா தீத வேத மங்களம் (ஓம்)

ம மங்களம் மகார மங்களம்
மஹா தேவ தயா சிந்து ஈச மங்களம் (ஓம்)

சி மங்களம் சிவாய மங்களம்
சித்த புத்தி ஆத்ம ரூப வேத மங்களம் (ஓம்)

வ மங்களம் வகார மங்களம்
வாத பேத ரஹித் பர பிரம்ம மங்களம் (ஓம்)

ய மங்களம் யகார மங்களம்
யதா தத்வ பரிஞான வேத மங்களம் (ஓம்)


என்பதே அந்தப்பாடல், அவர்கள் அனைவருக்கும் மாலை அவித்து ஆசி கூறி வழியனுப்பினர். பின் அனைவரும் குஜராத் சதன் திரும்பினோம்.குஜராத் சதனில் L. O அவர்கள் தலைமையில் நடந்த கூட்டம்
அங்கு L.O தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது அதில் பல குழுக்கள் அமைக்கப் பெற்றன, பூஜா கமிட்டி, உணவு கமிட்டி, பொருளாதார கமிட்டி, போக்குவரத்து கமிட்டி, உடமைகள் கமிட்டி, மருத்துவ கமிட்டி, முதலியன அமைக்கப்பெற்றன. ஒவ்வொரு குழுவினரின் கடமைகள் என்ன என்பதையும் அனைவருக்கும் விளக்கினார் L.O அவர்கள். அந்த சந்திர சேகரின் உள்ளத்தை உணராமல் வந்திருந்த 44 பேர்களையும் வைத்து கமிட்டிகளை அமைத்தோம், ஆனால் அந்த கொங்குவிரி கொன்றையொடு கங்கை வளர் திங்கள செஞ்சடையவரின் அழைப்பு அனைவருக்கும் இல்லை என்ற உண்மை அடுத்த நாளே தெரிய வந்தது.

ஒவ்வொரு யாத்திரியும் பொது செலவுகளுக்காக ரூ 2000/- பொருளாதார கமிட்டியினரிடம் வழங்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. அந்த பணத்திலிருந்து கயிலாய கிரிவலத்தின் போது சமையலுக்கு வேண்டிய பொருட்கள், சமையல்காரர்களின் சம்பளம், குளோரின் மாத்திரைகள், நம்முடைய பைகளை தண்ர் புகாமலிருக்க கட்ட வேண்டிய உரப்பை, கட்டும் கயிறு, M-seal, மற்றும் பூஜை சாமான்கள் முதலியவற்றிக்கும், வழியில் நமக்கு பேருதவி செய்கின்ற ITBP யினருக்கு சிறு னைவுப்பரிசுகள் முதலியன வாங்குவதற்கும் ற்ற பொது செலவுகளுக்கும் பயன் படுத்தப்படும் என்று அனைவருக்கும் விளக்கப்பட்டது.


இரவு உணவு " மஹாதேவ் அமர்நாத் யாத்திரை சேவா சமிதியினரால்" வழங்கப்பட்டது. அவர்களும் தங்களுடைய அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். நாம் நம்முடைய முயற்சியினால் கைலாயம் செல்லவில்லை, அந்த பாசுபத விச்சை விரி நச்சரவு கச்சயுடை பேணியழகர் நம்மை அங்கு அழைத்திருக்கின்றார், எனவே எல்லா கவலைகளையும் அவரது திருப்பாதங்களிலே சமர்ப்பித்து விட்டு அவரைப்பற்றிய சிந்தனைகளை மட்டுமே மனதில் கொள்ளுங்கள், ஓம் நமசிவாய என்னும் மந்திரம் எப்போதும் தங்கள் இதயத்தில் ஒலிக்கட்டும், எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொள்வார். மானசரோவர் தீர்த்தம் கொண்டு வர கேன்களை விட பெப்சி பாட்டில்கள் சிறந்தவை, கேன்கள் கோவேறு கழுதைகளில் வரும் போது உடைந்து விட வாய்ப்பு உண்டு ஆனால் பாட்டில்கள் உடையாது. மானசரோவர் தீர்த்தம், கௌரி குள தீர்த்தம், கயிலாய மலையிலிருந்து வரும் ஆற்றின் தீர்த்தம் மூன்று தீர்த்தங்களை சேகரிக்க மூன்று பாட்டில்கள் எடுத்துச் செல்லுங்கள் என்று அறிவுறுத்தினர். யாத்திரையின் போது எது செய்வதாக இருந்தாலும், L.O அவர்களின் அனுமதி பெற்றே செய்ய வேண்டும். கைலாய மலை தேவ பூமி என்பதால் இயற்கை உபாதைகள் ஏற்படும் போது முதலில் அந்த ஆண்டவனை வணங்கி, மன்னிப்பு கேட்டுக் கொண்டு பின் கைலாய மலைக்கு எதிர்பக்கமாக அவற்றை கழிக்கவும் என்பதை அழகாக விளக்கினர். பிரம்ம முகூர்த்த நேரத்தில் மானசரோவர் ஏரியில் தேவர்கள் நட்சத்திர ரூபமாக வந்து நீராடி கைலை நாதனை வணங்கி விட்டு செல்கின்றனர் பலர் இந்த அற்புதத்தை கண்டுள்ளனர், நீங்களும் கண்டு களியுங்கள். கிரி வலம் வரும் போது முடிந்தால் இரு மலைகளை தாண்டி கைலாய அடிவாரம் வரை முடிந்தவர்கள் L.O அவர்களின் அனுமதி பெற்று சென்று வாருங்கள், தேவையில்லாமல் செல்லும் வழியில் உள்ள செடிகளையும் மரங்களையும் தொட வேண்டாம், விஷ செடிகள் உள்ளன , குறிப்பாக தேள் செடி என்றொரு செடி உள்ளது அது நமது உடலில் பட்டால் அந்த இடம் தேள் கொட்டியது போல் இரண்டு ம நேரத்திற்கு மேல் வலி இருக்கும். எனவே எந்த செடியையும் தொட வேண்டாம் , நடக்கும் போது எனவே மலைகளை கைகளால் தடவிக்கொண்டு நடக்க வேண்டாம் என்று பல்வேறு உதவியான குறிப்புகளை வழங்கினர். இவர்கள் அருமையான ஒரு ஸ்லோக புத்தகமும், சிவ பெருமானின் ஒரு சிலையும், கைலாய யாத்திரை பற்றிய ஒரு புத்தகமும், மேலே கூறிய ஓம் மங்களம் பாடல் உட்பட மற்ற பக்திப் பாடல்கள் அடங்கிய ஒரு ஒலி நாடாவும் ( audio casette), கைத்தடியும், žனப்பகுதியில் பேட்டரிகளை சார்ஜ் செய்ய அவசியமான ஹோல்டர்களில் மாட்டக்கூடிய பிளக்குகளும் இலவசமாக வழங்கினர். இரவு உணவுக்குப்பின் அனைவரும் சேர்ந்து பஜனைப் பாடல்களுடன் ஒரு கூட்டு வழிபாடு நடத்திவிட்டு து‘ங்கச்சென்றோம்.

4 comments:

ஜீவி said...

அருமையான பதிவு. ஓர் உறுதிப்பாடு இருந்தால் தான் இந்தத் தரிசனப்பேறு கிட்டும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்; அந்த உறுதிப்பாடு உங்களிடம் நிறையவே இருந்திருக்கிறது. எல்லாம் அந்த மஹாதேவனின் அருள். அவன் அருளால் அவன் தாள் வணங்கி.. அவன் கருணை இல்லாமல் எதுவும் சாத்தியபடாது என்பது சர்வ நிச்சயமாய்த் தெரிகிறது.

தொடர்ந்து எழுதுங்கள்.. தங்கள் திருத்தொண்டிற்கு என் அன்பான வணக்கங்கள்..

Kailashi said...

முதற்கண் வணக்கம் ஜீவி அவர்களே.

நன்றாக சொன்னீர்கள்.

\\அவன் அருளால் அவன் தாள் வணங்கி.. அவன் கருணை இல்லாமல் எதுவும் சாத்தியபடாது என்பது சர்வ நிச்சயமாய்த் தெரிகிறது\\

நம்மை தங்கள் இல்லத்திற்கு அழைத்து திருத்தரிசனமும் கொடுப்பவர்கள் அம்மையப்பர் , அந்த பேற்றை அடைய அவர்களை சரணாகதி அடியாமல் வேறு வழி என்ன.

வரும் காலங்களிலும் வந்து தரிசனம் பெறுங்கள்.

நன்றியுடன் கைலாஷி

கோமதி அரசு said...

நாங்கள் அடுத்தமாதம் செல்ல நினைத்துள்ளோம். அந்த சமயம் நல்ல சமயம் தானா ?
மஹாதேவனின் அருளாசி கிடைக்க வாழ்த்துங்கள்.

Kailashi said...

வாருங்கள் கோமதி அவர்களே. தாமதமாக பதில் அளிப்பதற்கு மன்னிக்கவும். வேலை நிமித்தமாக வெளியூர் சென்று விட்டதால் உடனடியாக பதில் தரமுடியவில்லை.

சிவசக்தியிடம் தங்களுக்கு மிக அருமையான தரிசனம் வழங்குமாறு பிரார்த்தித்துக் கொள்கிறேன். நம்பினவர்க்கு நடராஜா வர், நம்பிக்கையுடன் செல்லுங்கள் நிச்சயம் அருமையான தரிசனம் கிட்டும்.

செப்டெம்பர் மாதம் யாத்திரைக்கு மிகவும் உகந்த மாதம். பனி அதிகம் இருக்காது. வழியெல்லாம் சுத்தமாக இருக்கும். எல்லாம் அவரின் திருவிளையாடல் அவர் பாதத்தில் எல்லா கவலைகளையும் விட்டுவிடுங்கள், மற்றதை அவர் பார்த்துக் கொள்வார்.

ஓம் நமசிவாய