Friday, July 18, 2008

கண்டேன் அவர் திருப்பாதம் (திருக்கயிலாய யாத்திரை) -12

திருசிற்றம்பலம்


5ம் நாள் - பூக்களின் சமவெளியில் புத்தியிலிருந்து கூஞ்சி வரை நடைப்பயணம் (17 கி.மீ)அப்பர் பெருமான் அருளிச்செய்த போற்றித் திருத்தாண்டகம்

திருக்கயிலாயம்

இமையாது உயிரா இருந்தாய் போற்றி

என்சிந்தை நீங்கா இறைவா போற்றி

உமைபாக மாக அணைத்தாய் போற்றி

ஊழி ஏழான ஒருவா போற்றி

அமையா வருநஞ்சம் அமர்ந்தாய் போற்றி

ஆதி புராணனாய் நின்றாய் போற்றி

கமையாகி நின்ற கனலே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி (8)
* * *


இந்த ஐந்தாம் நாள் பனி மூடிய சிகரங்கள், பூச்சமவெளி மற்றும் வாசனை மரங்களின் நாள்

ஐந்தாம் நாள் இந்தியப்பகுதியின் நடைப்பயணத்தின் இரண்டாம் நாள் காலை 5 மணிக்கே புறப்பட்டோம் இருள் பிரிந்தும் பிரியாமலும் இருந்தது. ஆரம்பத்திலேயே கடினமான 5 கி. மீ ஏற்றம் என்பதால் அந்த ஊர் வழக்கப்படி எங்கள் L.O அவர்கள் அட்சதை தூவி ஆசி கூறி ஒவ்வொருவரையும் அனுப்பி வைத்தார். மலைகளில் ஏறும் போது பல இடங்களில் புதர்களில் நூல் கயிறு கட்டி இருப்பதைக் கண்டோம். அதன் அருகே அரிசி மகள், மஞ்சள், குங்குமம் சிதறிக் கிடப்பதையும் காணலாம். இங்குள்ள மலை வாழ் மக்கள் தங்கள் இல்லங்களை அடைய மலையில் ஏறித்தான் செல்ல வேண்டுமென்பதால் எங்கெங்கெல்லாம் கடினமான பாதை உள்ளதோ அங்கெல்லாம் இவ்வாறு இறைவனை வழிபடுவதற்காக புதர்களில் நூலால் சுற்றியுள்ளனர், அங்கு அவர்கள் ன்று வணங்கி, அரிசி தூவி, மஞ்சள் குங்குமம் தூவி வழிபட்டு செல்கின்றனர். எங்கள் L.O அவர்களும் அவ்வாறே செய்து கொண்டு வந்தார். ஒருவரை வாழ்த்துவதற்கும் நாம் அட்சதை தூவுவது போல அரிசி தூவி வாழ்த்துகின்றனர்.
மேலிருந்து அப்படியே பாயும் நீர்வீழ்ச்சி
மலையில் ஏறும் போது சூரிய உதயம் மலையில் நடத்தும் வர்ண ஜாலத்தை பார்த்து ரசித்தோம். மிகவும் கடினமான ஏற்றம் பாதி து‘ரம் தான் ஏற முடிந்தது பின் குதிரையில் ஏறிக்கொண்டோம், குதிரைக்கும் மிகவும் மூச்சு வாங்கியது. டெல்லியில் நடைபெற்ற TMT பரிசோதனையின் முக்கியத்துவம் இங்கு புரிந்தது, அங்கு நடந்ததோ ஒரே ஒரு TMT இங்கு ஒவ்வொரு ஏற்றத்திலும் நடப்பதோ நூற்றுக்கணக்கான TMTகள். நமது உடல் யாத்திரைக்கு தகுதியானதாக ஏன் இருக்கவேண்டும் என்ற உண்மை இப்போது நன்றாக விளங்கியது. மலையைக் கடந்து சியாலே (3300 மீ உயரம்) என்ற என்ற இடத்தை அடைந்தோம் இந்த இடத்திலிருந்து மிகவும் ரம்மியமான சமவெளி தொடங்குகின்றது.இந்த சமவெளி பூக்களின் சமவெளி (Valley of Flowers) என்று அழைக்கப்படுகின்றது. பச்சை கம்பளம் விரித்தாற் போல் புல் வெளி அதிலே பல வண்ண மலர்கள், வெள்ளை, மஞ்சள், கத்தரிப்பூ, நீலம், சிவப்பு என்று பலவித மலர்கள் காற்றில் அசைந்தாடும் அழகை வர்க்க வார்த்தைகளே இல்லை. பல வர்ண மலர்களில் அவரது வடிவத்தை கண்டேன் சிவப்பு றம் அவர் செம்பவளத் திருமேனி, பச்சை றம் அவர் தேவி றம், வெள்ளை றம் அவர் மேனி பூச்சு, நீல றம் அவரது கண்டம். எதிர்பக்கம் நேப்பாளப்பகுதியில் பனி மூடிய அன்னபூரணா சிகரம். அலையாழி அரிதுயிலு மாயனது தங்கையை, அத்தி வரதன் தங்கையை, கோதண்ட இராமன் சோதரியைஅன்னபூர்ணா சிகரங்கள்
அன்ன பூர்ணே சதா பூர்ணே சங்கர பிராண வல்லபே
ஞான வைராக்ய சித்யர்த்தம் பிக்க்ஷாம் தேஹி ச பார்வதி!


என்று வணங்கி நகர்ந்தவுடன் சங்ரூர் சிகரங்களையும் கண்டோம். நடுநடுவே மலை ஆடுகள் ஓடி வந்தன. இப்பகுதியிலும் காளி நதியை ஒட்டியே பாதை செல்கின்றது ஆனால் அதன் வேகம் குறைந்து விட்டதை காணலாம்.சியாலேவில் காலை உணவை சாப்பிட்டோம். இந்த இடத்துக்கு மேல் கண்ணுக்கு கறுப்பு கண்ணாடி மிகவும் அவசியம். ஏனென்றால் பனி மூடிய மலை தொடங்கி விட்டதால் புற ஊதா கதிர்கள் அதிகம் அவை கண்ணை பாதிக்கும் என்பதால். பிறகு மூழ்குகின்ற கிராமமான கர்பியாங்கை (Garbyang) அடைந்தோம் அதற்கு முன் இரண்டு ஏற்றங்கள் மற்ரும் ஒரு இறக்கத்தை கடந்தோம் அருமையான மலர்களை தரிசித்துக் கொண்டே.
கர்பியாங்கில் இரு குழுவினர்


கர்பியாங்கில் ITBPயினர் காபியுடன் காத்திருந்தனர். அங்கே எம்பெருமானை தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த 11வது குழுவினரை சந்தித்து அவர்கள் ஆசி பெற்றோம். அவர்களுக்கு எம்பெருமானின் அருமையான தரிசனம் கிடைத்தது என்று கூறினர். கர்பியாங் அருகிலும் நேபாளத்தை இனைக்கும் ஒரு நட்புப்பாலம் உள்ளது. இந்தப்பகுதியில் நேபாள மாவோக்களின் நடமாட்டம் அதிகம் என்பதால் ITBPயினர் காவலுக்கு கூடவே வந்தனர்.


பூச்சமவெளியில் ஆசிரியரும் குதிரை காப்பாளரும்

(உயர் மட்டங்களில் எவ்வாறு உடை அணிய வேண்டும் என்பதைக் காட்ட இப்படம் இடப்பட்டுள்ளது)

மதிய உணவை ஷ’ஷ்டி என்ற இடத்தில் உட்கொண்டோம். பின் வாசனை மரஙகள் றைந்த பகுதி வழியாக சென்றேம். கூஞ்சியை நெருங்க நெருங்க ஆதி கைலாசம் மற்றும் சின்ன கைலாசம் என்று அழைக்கப்படும் பனி மூடிய சிகரத்தின் தரிசனம் கண்டோம். இரு பக்கமும் குங்குமப் பூதோட்டம் . பின் நேபாளத்திலிருந்து வரும் பச்சை நிற டிங்கர் நதி மற்றும் காவி நிற காளி நதியின் சங்மமம் கண்டோம் பின் இரண்டும் இணைந்து ஒரே நதியாக ஓடியது. இவ்வாறு தானே ஜீவாத்மாக்கள் ஆகிய நாம் அந்த பரமாத்மாவுடன் ஒன்றாக சங்கமம் ஆக இவ்வித யாத்திரைகளை மேற்கொள்கின்றோம். பின் காளி நதியைக் கடந்து கூஞ்சி அடைந்தோம்.

கூஞ்சி கிராமத்தினர் அளித்த வரவேற்பு

கூஞ்சி கிராம மக்கள் எங்களுக்கு அன்பான வரவேற்பு அளித்தனர். கூஞ்சி அமைந்துள்ள இந்த சமவெளி பியான்ஸ் பகுதி என்று அழைக்கப்படுகின்றது. வேத வியாசர் இப்பகுதியில் உள்ள ஒரு குகையில் பல வருடம் தவம் செய்த்தாக ஐதீகம் எனவே அவர் பெயரால் இந்தப்பகுதி இவ்வாறு அழைக்கப்படுகின்றது. இப்பகுதிகளில் கஸ்து‘ரி மான், பனிச்சிறுத்தை முதலியன வசிக்கின்றன என்று எங்கள் L.O அவர்கள் கூறினார். காளி நதியைக் கடந்து கூஞ்சி கிராமத்திற்க்குள் நுழைந்ததும் அந்த கிராம மக்கள் எங்களை மேள தாளத்துடன்( முரசு போன்ற சிறிய கருவி) அழைத்து சென்று வரவேற்பு அளித்தனர். அவர்களின் அன்பு மழையில் நனைந்து அவர்களின் விருந்தோம்பலை இரசித்து கூஞ்சி முகாம் அடைந்தோம். இதற்கு மேல் லிபுக்கணவாய் வரை ஏற்றம் தான்.


அமைதியாகப் பாயும் காளி நதி

அடுத்த நாள் நடைபெறும் மருத்துவ பரிசோதனைக்காக ஓய்வு எடுத்தோம். இங்கு சிலருக்கு தலை வலி வந்தது. உயர் நிலைகளில் மேலும் அதிக உயரம் ஏறி பின்னர் இறங்கி வந்தால் தலைவலி சென்று விடும் என்று கூறினார்கள். மாலை அவ்வாறே அங்கு அருகில் உள்ள வியாசர் கோவிலுக்கு சென்று வந்தோம் தலைவலி பறந்து விட்டது முதல் நாள் போல இன்று கால் வலி வரவில்லை. இரவில் இங்குள்ள கோவிலில் ITBPயினருடன் பஜனைப்பாடல்கள் பாடி அனைவரும் நாளை மருத்துவபரிசோதனையில் தேற வேண்டும் என்று ஐந்தலையரவு கொண்டரைக் கசைத்த சந்த வெண்பொடி சங்கரனை வேண்டினோம்.

இந்த ஐந்தாம் நாள் பனி மூடிய சிகரங்கள், பூச்சமவெளி மற்றும் வாசனை மரங்களின் நாள்


யாத்திரை தொடரும்.........

No comments: