Thursday, November 06, 2008

கண்டேன் அவர் திருப்பாதம் (திருக்கயிலாய தரிசனம்) -20

13ம் நாள் - திருக்கயிலாய கிரி வலத்தின் இரண்டாம் நாள்

டேராபுக்கிலிருந்து ஜாங்ஜர்பூ வரை நடைப்பயணம் 25 கி.மீ




அப்பர் பெருமான் அருளிச்செய்த போற்றித் திருத்தாண்டகம்


திருக்கயிலாயம்

உடலின் வினைக ளறுப்பாய் போற்றி


ஓள்ளெரி வீசும் பிரானே போற்றி


படருஞ் சடையின் மதியாய் போற்றி


பல்கணக் கூத்தப் பிரானே போற்றி


சுடரிற் றிகழ்கின்ற சோதி போற்றி


தோன்றிஎன் னுள்ளத் திருந்தாய் போற்றி


கடலிலொளியாய முத்தே போற்றி


கயிலை மலையானே போற்றி போற்றி (15)





Holy Kailsh like Rising sun between vajrapani and avalokeshwara
உதய சூரியன் போல் திருக்கயிலாயம்





Lord in His usual self
சுவேத வர்ணேஸ்வராக எம்பெருமான்


Golden yellow Hued Lord Shiva - தங்கமென மின்னும் எம்பெருமான்





Full of red - அருண நிறத்தில் எம்பிரான்





வர்ண ஜாலத்தின் அடுத்த கட்டம்





காலையில் 4 மணிக்கே எழுந்து லீ சூ நதியில் காலைக்கடன்களை முடித்துக்கொண்டு டோல்மா கணவாய்க்கு புறப்பட்ட போது எம்பெருமான் அளித்த தரிசனத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. அதை இந்திர ஜாலம் என்பதா மகேந்திர ஜாலம் என்பதா? முதலில் சூரியனின் காலைக்கதிர்கள் எம்பெருமானின் முடியில் உள்ள நாக படத்தை மட்டும் சிவப்பாக்கினான், பின் நேரம் செல்ல செல்ல அப்படியே அது கீழே நகர்ந்தது, சில நிமிடங்களில் முகம் முழுவதும் சிவப்பு நிறமாகி விட்டது, பின் அப்படியே தங்க வர்ணம், இன்னும் சிறிது நேரத்திற்கு பின் முன் போல தூய வெள்ளை றமாகி விட்டது. ஸ்ரீ ருத்ரத்திலே வருகின்ற



அஸெள யஸ்தாம்ரோ அருண உத பப்ரு: ஸுமங்கல:

யே சேமாகும் ருத்ரா அபிதோ திக்ஷு ஸ்ரிதா:

ஸஹஸ்ரஸோ -வைஷாகும்-ஹேட ஈமஹே



( சூரியனைப் போல எம்பெருமான் காலையில் தாமிர சிவப்பு வர்ணத்தில் காட்சி தரும் எம்பிரான் பின் சிறிது றம் மாறி சிவப்பு றமாகி(அருண) பின் தங்க வர்ணம் ஆகின்றார், அவர் தனது ஆயிரம் கதிர்களால் உலகமெங்கும் பரவி நம்முடைய அறியாமை இருளை நீக்குகின்றார், அவர் மங்கள வடிவினர், இவ்வாறு ஆயிரம் ருத்ரர்களாக விளங்கும் சிவபெருமானை அடி வீழ்ந்து வணங்குகின்றோம்.) என்ற மந்திரத்திற்கு அருமையான விளக்கத்தை அளித்தார் எம்பெருமான் இந்த வாமதேவ முக வர்ண ஜாலத்தால்.



டோல்மா கணவாய் இந்த யாத்திரையின் உயரமான இடம். கடல் மட்டத்திலிருந்து 5500 மீட்டர் உயரம் (18600 அடி), வடக்கு முகத்திலிருந்து டோல்மா கணவாய் வரை, மலை, சிவலிங்கத்தின் தாரா போல ஒரே மலையாக நீண்டுள்ளது. இந்த இடம் சிவ சக்தி ஸ்தலம் என்றும் அறியப்படுகின்றது. இங்கிருந்து தான் எம்பெருமான் மோக மாயையை விடுத்து யோகிஸ்வரராக யோகத்தில் அமர கயிலை சென்றார் என்பது ஐதீகம்.

லிபு கணவாயைப்போலவே இங்கும் பிராண வாயு குறைவு, காலையில் 7மணியிலிருந்து 9 மணிக்குள் கடந்து விடுவது நல்லது, மேலும் யாத்திரையின் மிகவும் குளிரான இடமும் இதுதான், இந்த இடத்தின் žதோஷ்ணமும் அதி வேகமாக மாறக்கூடியது, மேலும் பனிப் புயல்கள் அடிக்கும் வாய்ப்பு உள்லதால் அதிக நேரம் தங்குவது நல்லது அல்ல . டேராப்புக்கிலிருந்து டோல்மா கணவாய் 7 கி. மீ து‘ரம் தான் ஆனால் ஏற்றக் கோணம் 60 டிகிரிக்கும் மேல் என்பதால் மிகவும் கடினமான ஏற்றம். அடியேன் குதிரையில் சென்றதால் அதிக சிரமம் தெரியவில்லை, டோல்மா செல்லும் போது நமக்கு சிவ ஸ்தலத்தின் தரிசனம் கிடைக்கின்றது, சுமார் இரண்டு கி.மீ து‘ரம் இருக்கும் போது கைலாய தரிசனம் மலைகளினால் மறைக்கப்படுகின்றது. வழியெங்கும் துகளால் நிறைந்திருக்கின்றன, டோல்மாவை கடப்பவர்களை யமன் கணக்குப் போடுகிறான் என்பது ஐதீகம்.

டோல்மா சென்றதின் நினைவாக ஏதாவது ஒன்றை தியாகம் செய்ய வேண்டும், எனவே பலர் தாங்கள் அந்த பழைய ஆடைகளை இங்கேயே போட்டுவிட்டுச் செல்கின்றனர். நாம் ஆன்மீகத்தில் அதிகம் உயர உயர நமது இந்து தர்மப்படி பாசங்களை அறுக்க வேண்டும் எனவே தான், காசி, கைலாயம் முதலிய இடங்களுக்கு செல்லும் போது நமக்கு மிகவும் விருப்பமான பழக்கம் ஏதாவது ஒன்றை விட வேண்டும் என்ற வழக்கம் உள்ளது. அடியேன் வெண்ணெய் உண்பதை இங்கு தியாகம் செய்தேன். நாங்கள் டோல்மா கணவாயை அடைந்த போது நல்ல வெய்யில் எனவே அதிக சிரமம் இருக்கவில்லை. டோல்மா திபெத்தியர்களின் காவல் தேவதை , புத்தர்களுக்கு தாரா தேவி, இந்துக்களுக்கு











சகல செல்வங்களும் தரும் இமய கிரி ராஜ தனயை மாதேவி நின்னைச்
சத்யமாய் நித்யமுள்ளத்தில் துதிக்கும் உத்தமருக்கு இரங்கி மிகவும் அகிலமதில் நோயின்மை கல்வி தன தானியம் அழகு புகழ் பெருமை இளமைஅறிவு சந்தானம் வலிதுவு வாழ்நாள் வெற்றி ஆகு நல்லூழ் நுகர்ச்சி தொகை தரும் பதினாறு பேறும் அருளும் சுகிர்த குணசாலி, பரிபாலி, அநுகூலி திரிசூலி, மங்கள விசாலி-
பார்வதி தேவி
.


இங்குள்ள ஒரு கல்லே பார்வதி தேவி. சிவ சக்தியினரின் கர்ப்பகிரகமாக டோல்மா கணவாய் நம்பப்படுகின்றது. ஆனால் இந்த கல்லை நாம் தொட்டு வணங்க முடியாது, மேலும் திபெத்தியர்களின் கொடிகளால் கர்ப்பகிரகம் மறைக்கப்பட்டுள்ளது. இந்த கொடிகள் காற்றில் அசையும் போது அவை அமைதி, சகோதரத்துவம், மகிழ்ச்சி, அன்பு முதலிய உணர்ச்சிகளை பரப்புகின்றன என்பது ஐதீகம். திரு முட்கல் அவர்கள் தான் கொண்டு வந்திருந்த கங்கை நீரால் டோல்மாவில் உள்ள கற்கள் எல்லாம் பார்வதி தேவி என்பதால் ஒரு கல்லை எடுத்து வைத்து பார்வதி தேவியாக ஆவாஹனம் செய்து அபிஷேகம் செய்தார். போக்ரே தம்பதியினர் ஒரு சிறு யாகம் செய்தனர். அடியேன் லலிதா சகஸ்ர நாமம் பாராயணம் செய்தேன்.



ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே ! சரண்யே த்ர்யம் பகே தேவி நாராய நமோஸ்துதே !! என்று ஆயிரம் முறை ஜபித்து வணங்கினோம்.



மாதொருபாகனின் வாம பாகம் அம்பிகைக்குரியது கைலையில் இத்தத்துவம் இயல்பாக அமைந்துள்ளது. விசுவ லிங்கமாக எழுந்தருளியிருக்கும் தக்ஷிணா மூர்த்தத்தின் இடது பக்கம் அதாவது கிழக்கு திசையில் டோலமா மற்றும் கௌரி குளம் அமைந்துள்ளது. இங்கிருந்து பின் இறக்கம் துவங்குகின்றது இந்த 7 கி. மீ இறக்கத்தில் குதிரையை பயன்படுத்துவது நல்லதல்ல என்பதால் அனைவரும் கால் நடையாகவே இறங்கினோம். சிறிது தூரம் சென்றதும் கௌரி குளத்தை தரிசனம் செய்கிறோம். பார்வதி தேவி தன் சேடியருடன் இங்கு நீராடுவதாக ஐதீகம். இதன் தண்ர் புற்று நோயை குணமாக்கும் வல்லமை படைத்தது என்று நம்பப்படுகின்றது.

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுணைந்த அணியே அணியும் அணிக்கழகே என்று அம்பிகையை வாழ்த்தி வணங்கினோம்.










கௌரி குளம்



புராணங்களின் படி சிவ பெருமான் பவள வண்ணத்தினர், அம்மை பார்வதியோ பச்சை வண்ணத்தினள், அண்ணன் திருமால் நீல வர்ணத்தினர். மரகத வல்லி மீனாட்சி அம்மை நீராடுவதாலோ என்னவோ நாம் மேலிருந்து பார்க்கும் போது கௌரி குளம் மரகத பச்சை வடிவத்தில் ஜொலிக்கின்றது. சுற்றிலும் எங்கும் மலைகள் ஆகவே குளம் மட்டும் பச்சை றத்தில் ஒளிர்வது ஒரு அதிசயம் தான். ஆனால் கீழே சென்று முகர்ந்து கொண்டு வந்த கௌரி குளத்தின் தண்ணீர் தூய ஸ்படிகம் போல் இருக்கின்றது. மரகத பச்சை றத்தில் இருக்கும் அந்த கௌரி குளத்தை தரிசித்தவுடன் நமக்கு உடல் புல்லரிக்கின்றது. கௌரி குளத்தை அடைய செங்குத்தான இறக்கத்தில் 2 கி. மீ கீழே இறங்க வேண்டும், வழுக்கும் பாதை மேலும் மேலிருந்து கற்கள் விழும் என்பதால் கீழே இறங்குவது பாதுகாப்பானதல்ல, ஆயினும் எங்கள் குழுவினரில் திரு முட்கல் அவர்களும், திரு ஜோஷ’ அவர்களும் கீழே இறங்கி தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்தனர். மற்றவர்கள் எங்கள் போர்ட்டர்கள் மூலம் தண்ர் கொண்டுவரச் செய்தோம், அவர்கள் ஒரு கேனுக்கு 5 யுவான் கட்டணம் வசூலித்தனர். பின் அப்படியே கீழே இறங்கினோம் நடுவில் பல ஆறுகள் ஓடின, பனி பல இடங்களில் கிடந்தது அவற்றை கடந்து ஜாங்ஜர்பூவை (4650 மீ உயரம்) அடைந்தோம். அந்த சிவ சக்தியின் அருளால் இரண்டு கடினமான கணவாய்களையும் நாங்கள் எந்த சிரமமும் இல்லாமல் கடந்து விட்டோம், அதற்காக அந்த

காமனை கனலா எரித்த நம்பி,

அன்று மத யானை உரித்த நம்பி,

திரிபுரம் தீயெழ செரித்த நம்பி,

அருங்கூற்றை குமைத்த நம்பி,

தக்கன் தன் வேள்வி புக்கு அன்று இமையோரை இரித்த நம்பி,

அரியயன் தலை வெட்டி வட்டாடிய நம்பி

சிவபெருமானுக்கும், கடம்பாடவியில் குயிலாயும், இமயாசலத்தில் மயிலாயும், இவ்விசும்பில் கமலத்தின் மீது அன்னமாயும் விளங்கும் கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழை அம்பிகைக்கும் அவர்களுக்கு ஆயிரம் ஆயிரம் கோடி நன்றிகள் செலுத்தினோம்.

ஜாங்ஜெர்பூ முகாமில் அனைவருக்கும் கட்டில் கிடைக்கவில்லை ஆனால் பாதி அறைகளில் கட்டில் இருந்தது சென்ற ஆண்டைவிட முன்னேற்றம். ஜாங் சூ ஆற்றின் ஓரத்திலேயே அமைந்துள்ளது முகாம். எல்லா முகாமிற்கு அருகில் ஒரு புத்த விகாரம் இருப்பது போல் இங்கும் உயரத்தில் ஒரு புத்த விகாரம் உள்ளது. கடுமையான நடை பயணத்திற்குப்பின் இரவு உணவு தேவாமிர்தமாக இருந்தது.

இந்த 13ம் நாள் சிவ சக்தி தரிசன நாள்
. யாத்திரையின் மிக கடினமான கட்டத்தை மிக எளிதாக சிவ சக்தியின் அருளால் கடந்த நாள்.

No comments: