Tuesday, August 19, 2008

Kailash Manasarovar yatra (darshan) - 16

Ninth and tenth day stay at Taklakot (China)


10th day stay at Taklakot


Gunji temple

Though we had some hiccups by land slides and delays caused because of that, we crossed into China without any problem by the Grace of Shivsakthi for their darshan. As ITBP authorities had instructed us not to use pony for the steep descent of 3 Kms from Lipuleh pass into Tibet, we avoided the ponies though they were available ( many people have broken their limbs while traveling on ponies in this stretch) and started trekking down to the waiting bus parked ready for us with the Chinese officials and our guide. It was one of the hardest days of the journey after the steep climb in biting cold as we had trekked through snow the feet were soggy and it pained a lot , some how we all pulled along and reached the bus parked some 2 Kms away. As we were trekking we could witness the magnificent Gurala Mandata mountains, the magnificent mountain ranges welcomed all of us into Tibet. On the Chinese side there was no vegetation at all and the land was barren in contrast to the Indian side, later we learnt that rainfall on the Chinese side is scanty. One difference we observed was the advancement Chinese side has made on their side , motorable road is there is on the Chinese side almost upto the pass but on the Indian side we trekked for around 6 days before reaching the pass. The bus journey was bone rattling one through streams and rocky paths.



We were taken to the Purang guest house at Taklakot . The Immigration formalities were completed, we paid 601 U.S. dollars as fees to the Chinese Government and our passports were verified but no visa stamp was affixed in the individual passports. We were all given accommodation at the Guest house there in about three rooms 5 yatris were accommodated. Hot water is available for limited period in the morning, only problem here was the toilets which were of vintage ones akin to open ones which we were using in the 60’s . The same was the case throughout the yatra.






Let us now see how this land of Tibet has been described in our anvcient scriptures. Tibet was called Thrivistabam. According to legends the origin of the universe started in this holy land. The three forces Sun. lightning and fire combined here and hence the universe originated proclaim the legends so this land is holy. In the epic Mahabaratham Tibet is mentioned as thirathavibistam and sage Vyasa describes the land as the central part of aryavartham and as the holiest place. For the next twelve days we will be staying in this holy land.
Mr Mudgal told that now (2007) a three storied building is built and only two yatris are accommodated in a room and the room has attached bathrooms and toilets this is really an remarkable advancement on the Chinese side.



After three days of high altitude trekking this day was a day of rest. We converted the American dollars into Chinese yuvans, normally we have go to the bank for currency conversion but on that particular day as it was a bank holiday our guide arranged for the conversion at some local commercial establishment. The exchange rate was 7 yuvans for an American dollar. Every yatri paid about 200 Yuans to Mr. Mudgal for common expenses on the Chinese side. We enjoyed the well deserved rest this day .




Gurla mandata Mountain Ranges




Taklakot in Tibetan Chinese side is a big town on the Kailash Manasarovar yatra route and is situated on the banks of river Karnali. This is a old trading town and consists of many market places, Gompas and Buddhist shrines. As we had been warned not to photograph any buildings we followed the same. International calls can be made from here we found the state owned telecom centre to be cheaper and made calls home and informed them about the progress of the yatra.



One thing the author wishs to mention here is about the food being provided at the Guest house . They are provided at the set time only if we are little late also we have to skip the meals. They provide with Chinese foods which is not very much palatable to us, they provide rice, boiled vegetable and soup and pine apple. There is a difference of about 4:30 Hrs between Indian and Chinese time so normally they provide food according to their time and bell is rung when the food is ready and immediately we have to rush to have the food and once we miss the time later food is not served. On the first day we didn’t do much just visited the Tibetan market for some shopping and bought plastic cans for transport of Holy Manasarovar Water. On the second day we washed all our clothes and then went for shopping of vegetables to the local market with our cooks and our guide accompanied us . For every yatra batch one guide is provided by the Chinese Government who takes care of the welfare of the yatris for the whole yatra period on the Chinese side, our guide was conversant with English and also spoke little Hindi. He called himself David and as it was easy for us to remember that name we all called him by the same name. During transportation the oil pouches provided by Kailash yatra samiti had got damaged and also the sugar packets got soaked in the oil and were not fit for consumption so we bought them at Taklakot then we packed our items. The land is barren here and as they get very scanty rainfall in a year the place was full of dust and we saw that everybody wear dust masks, we also purchased nose masks they costed 1 yuan each. The roads here are just metalled roads and are not tar topped so the journey was bone rattling.



Two interesting episodes happened when we were staying here at Taklakot. As in a big group of diversified personalities there is bound to be some difference of opinion such a thing happened in our batch also. Some of our batch members wanted to do the Parikrama of Manasarovar first and then the parikrama of Kailash as Sep 01 was an auspicious day and a good day in which Pradosham and Shivrathri came together they wanted that it is better that we at the feet of the Lord on that day. A meeting took place and after taking into account many factors and the advice of the guide L.O decided that it is better that we do the Kailash Parikrama first and then go for Manasarovar Parikrama later as the weather was good at that time. Though those who wanted to do the Manasarovar Parikrama first were unhappy at that decision later they agreed to the decision of L.O with reservations with the satisfaction that it is the will of the Supreme that prevails .




Cactus at 14000 ft





The second episode is that we met a group of German tourists who had come for the Kailash trip the group was being lead by an Indian, a photographer from Mumbai was leading the group, he had visited Kailash 15 times and had photographed the abode of the Lord and published books on Kailash. He gave many valuable hints to have a complete darshan of Kailash. We felt was by His grace only we met the photographer. Then we all waited for that moment when we will be leaving to meet the three eyed, blue throated trident wielding Lord of the Universe and Mother who were so graceful and brought us all nearer to them to give their darshan to us.


After three days high altitude trekking the rest did good to all of us and also the body got acclamatized for the next three days Kailsh Parikrama.

கண்டேன் அவர் திருப்பாதம் (திருக்கயிலாய யாத்திரை) -16

சீனப்பகுதியில் முதல் இரண்டு நாட்கள்

9 நாள் லிபுக்கணவாயிலிருந்து தக்லகோட் வரை பேருந்துப்பயணம் (13 கி.மீ தூரம்)




10ம் நாள் ஓய்வு நாள்






அப்பர் பெருமான் அருளிச்செய்த போற்றித் திருத்தாண்டகம்

திருக்கயிலாயம்



பொறையுடைய பூமிநீ ரானாய் போற்றி





பூதப்படையாள் புனிதா போற்றி





நிறையுடைய நெஞ்சின் இடையாய் போற்றி





நீங்காதுஎன் னுள்ளத்து இருந்தாய் போற்றி





மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி





வானோர் வணங்கப் படுவாய் போற்றி





கறையுடைய கண்டம் உடையாய் போற்றி





கயிலை மலையானே போற்றி போற்றி (12)







கூஞ்சி சிவன் கோவில்



எத்தனை கோடி யுக தவத்தின் பயனாக இந்த அரிய வாய்ப்பு கிடைத்ததோ அதற்காக அந்த அம்மையப்பருக்கு கோடி கோடி நன்றிகள் கூறி, நீலகண்டனை, அம்மை சிவகாம சுந்தரி நேசனை, காமனை கண்ணால் எரித்த மகேஸ்வரனை காண சீனப்பகுதியில் வலது கால் எடுத்து வைத்தோம்.





திபெத்தில் நுழைந்ததும் கண்ணில் பட்டது பனி மூடிய குர்லா மந்தாதா மலைத் தொடர். மூன்று கி.மீ து‘ரம் சரியான இறக்கம். முன்பே இந்த இறக்கத்தில் குதிரைகளை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டிருந்ததால் நடந்தே சென்றோம். பின் சம தளம் வந்ததும் குதிரையின் மேலே ஏறி எங்களுக்காக காத்திருந்த பேருந்தில் ஏறினோம். நமது இந்தியப்பகுதியில் நாம் கிட்டத்தட்ட 65 கி.மீ தூரம் நடைப்பயணம் செய்ய வேண்டி இருந்தது. ஆனால் அதற்கு எதிர்மாறாக சீனப்பகுதியில் வெறும் 3கி.மீ இறக்கம் மட்டுமே நாம் நடக்க வேண்டி வந்தது, அவர்கள் பாதையை தங்கள் எல்லை வரை சரியாக்கி வைத்திருக்கின்றனர். ஒரு வித்தியாசம் கண்ணில் பளீரென தெரிந்தது இந்தியப்பகுதியில் சிறு தாவரங்கள் இருந்தன ஆனால் சீனப்பகுதியில் ஒரு தாவரமும் கண்ணில் படவில்லை மொட்டையாக இருந்தது.

குர்லா மாந்தாதா மலைத்தொடர்கள்


குர்லா மந்தாத்தா மலைத்தொடர்களை பற்றிய சிறு குறிப்பு. குர்லா மந்தாத்தா அவர்கள் சூரிய வம்சத்தின் சக்ரவர்த்தி . இராம சந்திர மூர்த்தியின் கொள்ளு தாத்தா . அவர் பெயராலே அவர் சிவபெருமானை நோக்கி தவம் செய்த இந்த மலைத்தொடர் அறியப்படுகின்றது. சர்வலோக நாயகனாம் சிவபெருமான் சக்கரவர்த்தி என்றால் கணங்களின் நாயகனான கணேசர் ஞானத்துக்கு அதிபதி, வீரத்திற்கு அதிபதி முருகர், இவர்கள் இருவரும் அதாவது ஞானமும், வீரமும் இந்த குர்லா மந்தாத்தா மலைத்தொடரில் ஒரு குகையில் பிறந்தனர் என்பது ஐதீகம்.

கைலாய மலைத்தொடருக்கும், குர்லா மலைத் தொடருக்கும் இடையே தான் மானசரோவர் தடாகம் இராக்ஷ்ஸ் தால் ஆகிய இரண்டு ஏரிகளும் உள்ளன. இந்த மலைத்தொடர் கயிலாய மலைத்தொடரை விட உயரமானது. இதன் உயரம் 7000 மீட்டர். இந்த மலைத்தொடரைப் பார்த்துக்கொண்டே கைலாய மலையிலிருந்து உற்பத்தியாகி, திபெத், நேபாள் வழியாக பாயும் கர்னாலி நதியை கடந்து திபெத்தில் உள்ள தக்லகோட் ( 4000 மீ உயரம்) என்னும் இடத்தை அடைந்தோம். கைலாய யாத்திரையின் மிகப்பெரிய சீன நகரம் இதுவே, முதல் இரண்டு நாட்கள் இங்குள்ள பூராங் சுற்றுலா இல்லத்தில் தங்குகிறோம்.






இந்த ஓய்வு இல்லத்தில் இரண்டு அறைகள் சேர்ந்த ஒரு தங்கும் விடுதியில் ஐந்து பேர் தங்கும் வகையில் அறைகள் வழங்கப்படுகின்றன. உணவு சுற்றுலா இல்லத்தாரால் வழங்கப்படுகிறது, சீன உணவுதான் வழங்கப்படுகிறது, வேக வைத்த காய்கறிகள், சூப், அரிசி சாதம் முதலியன கொடுக்கின்றனர். நம்மில் பலருக்கு இந்த உணவு பிடிக்கவில்லை. அவர்கள் வழங்கிய அன்னாசிப்பழம் மட்டும் நன்றாக இருந்தது. சாப்பாடு குறிப்பிட்ட நேரத்தில்தான் வழங்கபப்டுகின்றது, சாப்பாட்டு மணி அடித்தவுடன் உடனே சென்று உணவு உண்ண வேண்டும் இல்லாவிட்டால் பட்டினியாக இருக்க வேண்டியதுதான். சுடு தண்ணீர் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வருகின்றது அந்த சமயத்தில் நாம் நமது குளிப்பது, துவைப்பது முதலிய வேலைகளை முடித்துக் கொள்ள வேண்டும். மேலும் நமது இந்திய நேரத்திற்கும், சீன நேரத்திற்கும் 4.30 மணி நேர வித்தியாசம் உள்ளது. தக்லக்கோட்டில் உள்ள நேரம் கிட்டத்தட்ட நமது இந்திய நேரத்தை ஒத்தே இருக்கின்றது. ஆனால் அவர்கள் žன நேரத்தை பின்பற்றுவதால் மணி வித்தியாசம் உள்ளது. உணவை அவர்கள் தங்கள் நேரப்படி வழங்குகின்றனர். எனவே நாம் இரவு உணவை நம்முடைய இந்திய நேரப்படி 6 மணிக்கு உட் கொள்ளவேண்டும் அதே போல காலை 4 மணிக்கே எழுந்து கொள்ள வேண்டும். இந்த சமயங்களில் நாம் கொண்டு சென்ற சாக்கலேட்டுகள், பிஸ்கட், கார வகைகள் நமக்கு மிகவும் உதவியாக இருக்கும். தக்லகோட்டில் ஆப்பிள், ஆரஞ்சு முதலிய பழங்கள் கிடைக்கின்றன.






ஒரே ஒரு அம்சம் மிகவும் புராதானத் தரமாக žனா முழுவதும் இருப்பது இவர்களது கழிவறை(toilet), எங்கும் ஃபிளஸ்( flush) கழிப்பறைகள் கிடையாது. நமது இந்தியாவில் 70களில் எப்படி இருந்ததோ அதே நிலைமையில் தான் இன்றும் இவர்களது கழிவறைகள் உள்ளன. அது ஒன்றுதான் மிகவும் சிரமமாக இருந்தது. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்பதால் இவ்வாறு உள்ளதா அல்லது žனா முழுவதும் இவ்வாறு உள்ளதா என்று தெரியவில்லை. பல நாட்கள் அதிகாலையில் எழுந்து திறந்த வெளியிலேயே காலைக்கடனை கழித்தோம்.

முதலில் žன சுங்க அதிகாரிகள் வந்து நமது பாஸ்போர்ட், மற்றும் விசா முதலியவற்றை சோதித்தனர். 601 அமெரிக்க டாலர்களை இன்று தான் žன அரசுக்கு கட்டினோம். நம்முடன் யாத்திரை முழுவதும் வரும் ஆங்கிலம் பேசத் தெரிந்த திபெத்திய வழிகாட்டி நமது எல்லாத்தேவைகளையும் கவனித்துக் கொண்டார். எங்களது வழி காட்டியின் பெயர் டேவிட் மிகவும் நல்லவர், எங்களுக்கு எல்லாவகையிலும் உதவினார், மிகவும் ஒத்துழைப்பு நல்கினார். சமையல்காரர்கள் யாத்திரை ஆரம்பிப்பதற்கு முன்பே தக்லகோட் சென்று தங்கி விடுகின்றனர். ஒவ்வொரு குழுவினரும் தங்கள் வசதிற்கேற்ப இவர்களை வாடகைக்கு அமர்த்தி கொள்கின்றனர். நாம் தங்கும் பூராங் சுற்றுலா இல்லத்திற்கே இவர்கள் வந்து காய்கறிகள் மற்றும் மளிகை சாமான்கள் வாங்க உதவி செய்கின்றனர் பின் தக்லகோட் திரும்பி வரும் வரை நம்முடனேயே இருக்கின்றனர்.








எங்கள் குழுவினர் 27 பேர் என்பதால் நான்கு பேரை வாடகைக்கு அமர்த்திக் கொண்டோம். அன்றே அமெரிக்க டாலர்களை žன யுவான்களாக மாற்றிக் கொண்டோம். கிரிவலத்தின் போது சமைப்பதற்கு வேண்டிய காய்கறிகளை இங்குள்ள மார்க்கெட்டில் வாங்கிக் கொண்டோம். நாங்கள் டெல்லியிலிருந்து கொண்டு வந்த எண்ணெய், சக்கரை முதலியவை சேதமடைந்து விட்டதால் அவற்றை புதிதாக இங்கு வாங்கினோம்.அனைவரும் 200 யுவான்கள் பொது நிதிக்கு வழங்கினோம். இந்த 200 யுவானிலிருந்து சமையலுக்கு வேண்டிய காய்கறிகள் தக்லகோட்டில் வாங்கினோம், சமையல் காரர்களின் சம்பளம், மற்றும் வழிகாட்டிக்கு சிறு அன்பளிப்பு, கைலாச தரிசனம் பெற அலி ரோடு, அஷ்டபத் முதலியவை சென்ற வண்டி வாடகை, கேன்கள் மற்றும் பொது செலவுகள் அனைத்திற்கும் இப்பணம் செலவிடப்பட்டது. டெல்லியிலிருந்து வந்திருந்த முட்கல் என்பவர் எல்லாரிடமும் அமெரிக்க டாலர்களை பெற்று žன யுவான்களாக மாற்றி பொதுச் செலவுகள் எல்லாமும் செய்து மீதி பணத்தை மீண்டும் சரியாக திருப்பிக் கொடுத்தார். இவர் சென்ற வருடம் கயிலாயம் சென்று வந்தவர், இரண்டாம் முறையாக எங்களுடன் வந்தார், இவரது அனுபவம் எங்கள் குழுவினர் அனைவருக்கும் மிகவும் பயன்பட்டது.



போன வருடம் இவர் இரண்டாவது குழுவில் சென்றார், அப்போது லிபு கணவாயில் முழங்கால் அளவு பனியில் நடந்து வந்தோம், இந்த வருடம் பனியே இல்லை என்று கூறினார். இந்நகரத்தில் தொலைப்பேசி வசதி (I.S.D) உள்ளது சுற்றுலா இல்லத்திற்கு அருகிலேயே அரசின் தொலைத்தொடர்புத்துறையின் தொலைப்பேசியகம் உள்ளது அதிலே கட்டணம் குறைவாக இருந்ததால் அங்கிருந்து வீட்டைத்தொடர்பு கொண்டு பேசினோம். இன்றைய தினம் கோகுலாஷ்டமி தினமானதால் விஸ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்தோம்.

žனப்பகுதியில் இரண்டாம் நாள் யாத்திரையின் பத்தாம் நாள் ஓய்வு நாள், அன்று இந்நகரத்திலே உள்ள திபெத் மார்க்கட் சென்று மானசரோவர் தீர்த்தம் கொண்டு வருவதற்கான பிளாஸ்டிக் கேன்களையும் மற்றும் வேண்டிய பொருட்களையும் வாங்கினோம். ஓய்வு நாள் என்பதால் பழைய துணிகலை துவைத்து காய வைத்தோம், காற்றின் வேகம் அதிகம் என்பதால் உடனே காய்ந்து விடுகின்றது.






14000 அடி உயர தாவரம்



இங்கு பெரும்பாலான வீடுகளின் வாசல் படியில் யாக்கின் கொம்பு வைக்கப்பாட்டிருப்பதை பார்த்தோம். திபெத்தியர்கள் யாக்கின் கொம்பு தங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை அளிப்பதாக நம்புவதால் இவ்வாறு தங்கள் வாயில் படியின் மேல் அமைத்துள்ளனர் என்று எங்கள் L.O அவர்கள் விளக்கினார். மேலும் žனப்பகுதியில் மழை மிகவும் குறைவு மேலும் சாலைகளுக்கு தார் போடப்படவில்லை, கற்களைக் கொட்டி மண்ணால் மூடி விடுகின்றனர். எனவே பஸ் பயணம் எலும்பை நொறுக்குவது போல் தான் உள்ளது, மேலும் தூசி மிகவும் அதிகம் எனவே மூக்கிற்கு காப்பு மிகவும் அவசியம். ஒரு யுவானுக்கு நல்ல மூக்குக் கவசம் (mask) கிடைக்கின்றது, ஒன்றிரண்டு வாங்கிக் கொண்டோம். žனப்பகுதியில் உள்ள தங்குமிடங்களில் அதிக பட்சம் 30 பேர் தான் தங்க முடியும் எனவே 40 பேர் கொண்ட குழுவாக இருந்தால் தக்லகோட்டில் L.O அவர்கள் குழுவினரை இரு பிரிவாக பிரிப்பார் ஒரு குழு முதலில் மானசரோவர் கிரிவலம் செய்யும், அடுத்த குழு முதலில் கைலாய கிரிவலம் செல்லும் மூன்று நாட்கள் கழித்து பின் இரண்டு குழுவினரும் சந்தித்து பின் அடுத்த கிரிவலத்திற்கு செல்வர். எங்கள் குழு சிறியது என்பதால் அனைவரும் ஒன்றாகவே முழு யாத்திரையையும் மேற்கொண்டோம். இங்கு ஒரு சிலருக்கு முதலில் மானசரோவர் கிரிவலம் செய்து விட்டு பின் கைலாய கிரிவலம் செல்லவேண்டும், ஏனென்றால் செப் 1 அன்று பிரதோஷம் மற்றும் சிவராத்திரி இரண்டும் இனைந்து வருகின்றது அந்த நாளில் கைலாய கிரிவலம் நல்லது என்பதால். எங்கள் L.O அவர்கள் அனைவரையும் கூப்பிட்டு பேசி, எங்கள் வழிகாட்டியுடனும் கலந்து கொண்டு žதோஷணம் நன்றாக இருப்பதால் முதலில் கைலாய கிரிவலம் செல்வதே நல்லது என்னும் முடிவெடுத்தார். அனைவரும் அதற்கு கட்டுப்பட்டோம்.






இங்கு ஒரு மும்பையைச்சேர்ந்த புகைப்படக்காரரை சந்தித்தோம் அவர் 8 முறை இது வரை கைலாய கிரிவலம் வந்துள்ளார். அவர் கிரி வலத்தை பற்றி சில நல்ல குறிப்புகள் வழங்கினார். இந்த வருடம் அவர் ஒரு ஜெர்மன் குழுவினருடன் வந்திருந்தார். அடுத்த நாள் எம்பெருமானின் தேவ பூமியில் கால் பதிப்போம், அவரது தரிசனம் பெறுவோம் என்ற மகிழ்ச்சியில் உறங்கச்சென்றோம்.






2008ல் திரு. முட்கல் அவர்கள் நான்காவது முறையாக திருக்கயிலாயம் சென்றார் அப்போது தக்லகோட்டில் ஒரு புது அடுக்கு மாடி கட்டிடம் கட்டியுள்ளனர் யாத்திரிகளை அதில் தங்க வைக்கின்றனர் என்று கூறினார். சீனப்பகுதியில் யாத்த்திரிகளுக்கு வசதிகள் பெருகுவதற்கு இது ஒரு சான்று.






சீனப் பகுதியின் முதல் இரண்டு நாட்கள் வரப்போகின்ற திருக்கயிலாய் கிரி வலத்திற்க்கு நம்மை தயார் செய்ய அளிக்கப்படும் ஓய்வு நாட்கள்.