Saturday, December 26, 2009

Holy Kailash yatra 2009 -9

மூன்றாவது நாள் கிரிவலம்

மேகங்களுக்கிடையில் ஆனந்த கூத்தரின் திருமுடி தரிசனம்

The peak of the Holy Kailash in among the clouds

இரண்டாம் நாள் கடினமான கிரி வலத்தின் போது அதிகாலையில் ஐயனின் கதிர் ஒளி முகம் கண்டு களிக்கிறோம். பின்னர் சிவஸ்தலத்தை தாண்டி செங்குத்தான மலை ஏறி டோல்மா கணவாயை அடைந்து அங்கு பார்வதி தேவியை தரிசனம் செய்து கௌரி குள தரிசனமும் பெற்று கீழே செங்குத்தான மலையில் பின் இறங்கி ஜுடுல்புக(ஜாங்ஜெர்பூ) முகாமை அடைந்து தங்குகின்றோம்.

கௌரி குளத்தில் இரு யாத்திரிகள்

Two yatris at Gauri Kund

மலைமகள் உமைநங்கை தன் பாங்கிகளுடன் நீராடும் கௌரி குளம் டோல்மா கணவாயிலிருந்து சுமாத் 1 கி.மீ கீழே உள்ளது செங்குத்தான இறக்கம் அதுவும் இரண்டு மலைத்தொடர்களுக்கு நடுவில் அமைந்துள்ளது. ஆகவே வழுக்கும் கற்கள் நிறைந்த பாதையில் இறங்குவது அவ்வளவு உசிதமல்ல என்றாலும். அன்னையின் திருமேனி தழுவும் நீரை பருக இறங்கிய இரு அன்பர்கள்.

The descent to Gauri Kund from Dolma La is very steep as this is situated in between two mountain ranges chances are there that stones may fall , so it is advised not to get down to Gauri Kund. Still out of enthusiam some yatris reach Gauri kund and collect the water which is believed to have curing effects.


ஐயனை தரிசித்த ஆனந்தத்தில் இத்தனை நாட்களாக இந்த பாக்கியத்திற்காகத் தானே காத்திருந்தோம். இனிப் பிறவியில்லை என்ற ஆனந்தத்தில்

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வெண்டறை பொய்கையும் போன்ற
ஈசன் எந்தையின் திருப்பாதக்கமலங்களில் வீழ்ந்து வணங்கும் அன்பர்கள்.

The second day of the kora is the most toughest part of the who;w yatra, the weather at Dolma is very fickle and the yatris havae to cross Dolma before noon. Also yatris are advised not to stay for long time at time at Dolma as this is the highest altitude in the whole yatra and oxygen is very less. Still the yatris take up the yatra willimgly and by the grace of the Lord almost everybody complete the yatra successfully. Only absolute faith is needed in Shivasakthi and they take care of you.




ஐயனின் ஜடாமுடியிலிருந்து தானே கங்கை ஓடி வருகின்றாள். அந்த ஜலமகள் கங்கை விழுந்து உருவான ஆத்ம லிங்கத்தை தரிசனம் செய்கின்றோம்.


Day 11 Wednesday 5th August 2009 – Trekfrom zhutulpuk to Tarchen and drive to Manasarovar Hor. Over Night at Guest House:


Trek to Tangsar Tangmar and a 3 hrs walk brings us to where the river emerges onto the Borkha plain and Our jeeps will be waiting to transport us to Darchen then to Manasarovar Hor. our camp will be at Lake Mansarovar. Time permit we will perform Homa/Siva puja at Lake Manasarovar.



இரண்டாம் நாள் கடினமான கிரி வலத்திற்குப்பின் மூன்றாம் நாள் கிரிவலம் மிகவும் சுலபமானது, சமமான பாதைதான் வரும் வழியில் மானசரோவர், இராக்ஷஸ் தால் ஏரிகளின் தரிசனம் கிடைக்கின்றது. டார்ர்ச்சனில் இருந்து சுமார் 3 கி, மீ தூரத்திற்க்கு முன் வரை வாகனங்கள் வருகின்றன. பின் டார்ச்சன் முகாமை அடைந்து. ஐயனின் தெற்கு முக தரிசனம் பெறுகின்றோம். தெற்கு முகத்தை மிக அருகில் இருந்து தரிசனம் செய்ய அஷ்டபத் செல்ல வேண்டும் அங்கு செல்லும் போது ஆத்ம லிங்க தரிசனம் கிட்டுகின்றது.

Friday, December 25, 2009

Holy Kailash yatra 2009 -8

இரண்டாம் நாள் கிரி வலம் தொடர்கின்றது

மார்கழி மாதம் தொடங்கி விட்டது. அதிகாலையில் எழுந்து மார்கழி நீராடி ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதியை, மாணிக்க வாசக சுவாமிகள் பாடிய திருவெம்பாவையைப் பாடி வணங்கும் தேவர்களின் அதிகாலை நேரம் முதலில் ஒரு திருவெம்பாவை ப் பாடல்.

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னை புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே!

உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன் அடியார் தாள்பணிவோம் ஆங்கு அவர்க்கே பாங்கு ஆவோம்

அன்னவரே எம்கணவர் ஆவார்; அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்;

இன்ன வகையே எமக்கு எங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம்ஏல் ஓர் எம்பாவாய்!



டோல்மா கணவாயில் பிரார்த்தனைகளை கட்டும் ஒரு அன்பர்

A yatri presenting his prayers at Dolma Pass

அன்னை மலையரசன் பொற்பாவை, கௌரி, உமையம்மை, பர்வத புத்ரி, பார்வதியின் ஸ்தலம் இந்த டோல்மா கணவாய் அங்கு அன்னையிடம் தனது பிரார்த்தனைகளை கூறும் அன்பர் இங்கே.



காலை சூரிய ஒளியில் நந்தியின் அற்புத தரிசனம்

Beautiful view of Nandi


ஐயனின் ஒவ்வொரு முகத்திற்கு முன்னரும் நந்தியெம்பெருமானும் அருள் பாலிக்கின்றார். ஐயனின் வடக்கு முகமாம் வாம தேவ முகத்தின் முன் உள்ள நந்தியெம்பெருமான் தரிசனம்.

Nandi is the first among all the servants of the Lord . He is also the mount of the Lord. He is present whereever is Lord is present. Here we have the darshan of the Nandi infront of the North face.

கிழக்கு முகம்

East face

This is the only face of Kailash which we don't get to see from close quarters. This is the view when we trek towards Dolma.

டோல்மா கணவாயை நோக்கி நடக்கும் போது கிடைக்கும் கிழக்கு முகத்தின் தரிசனம். இம்முகத்தின் தரிசனம் நமக்கு அருகில் இருந்து கிடைப்பதில்லை.



கணேசர் குளம்

Ganesh Kund


ஐயனின் அகோர முகத்திற்கு அருகில் மலை ரூபத்தில் முதல் தடவையாக கிரி வலம் வந்த விநாயகரை தரிசனம் செய்தோம் இப்போது அவர் நீராடும் கணேசர் குளத்தை தரிசிக்கின்றோம்.


Route to Dolama Pass and inner parikrama

மேலே உள்ள படம் டோல்மா கணவாய் செல்லும் வெளி கிரி வலத்தின் பாதையையும் உள் கிரி வலத்தின் பாதையும் காட்டுகின்றது. உள் கிரி வலத்தின் போது நாம் கிழக்கு முகத்தில் செங்குத்தான பகுதியில் ஏறி செல்ல வேண்டியிருக்கும். அநேகமாக திருக்கயிலை செல்லும் அனைவரும் வெளிகிரி வலம் வருகின்றனர். வெகு சிலருக்கு மட்டுமே உள் கிரி வலம் செல்லும் பாக்கியம் சித்திக்கின்றது. திருக்கயிலை பாலா அவர்கள் இந்த வருடம் வெளி கிரி வலம், உள் கிரி வலம் மற்றும் நந்தி வலம் மூன்றையும் அவரருளால் முடித்தார்.

The above picture shows two routes one the outer parikarama which normally all the yatris undertake, this passes thro Dolma pass. Very few yatris undertake the inner parikrama. As we have to climb the east face it is very tough and a very experienced guide is required . Sri Kailai Bala by the grace of Lord Shiva completed the outer parikrama, inner parikarama and the Nandi parikrama in 2009. We are now viewing his yatra of outer parikrama later we will the Great views of Inner parikrama also.

டோல்மா செல்லும் வழியில் உள்ள சிவஸ்தலம்

தேவ பூமியான திருக்கயிலாய மலையின் அன்னை பார்வதியின் ஸ்தலமான டோல்மா செல்லும் வழியில் சிவஸ்தலம் உள்ளது. இவ்விடத்தை கடப்பவர்கலை யமன் எடை போடுகிறான் என்பது ஐதீகம். இவ்விடத்தை கடக்கும் அன்பர்கள் தங்களுக்கு மிகவும் பிடித்த ஏதாவது ஒன்றை இங்கே தியாகம் செய்கின்றனர். அதாவது பாசத்தை அறுத்து பதியை அடைய வைராக்கியத்தை அதிகப்படுத்துகின்றனர்.

Before we reach Dolma pass we pass the Shiv Sthal, who ever crosses this Holy land is being estimated bt Lord of Death it is believed, You can find all sorts of things being strwn here that is whoever crossed this place leave something which they love the most which signifies growing up spritually.


டோல்மா கணவாயில் இருந்து செங்குத்தான மலைப்பகுதியை கடந்த உடன் நாம் சந்திக்கும் ஃபோலோங் பனி ஆறு.

ஐயனைக் கண்ட ஆனந்தத்தில் திளைக்கும் யாத்திரிகள். மலையான் மருகன் திருக்கயிலைநாதரை தரிசனம் செய்யும் அந்த ஆனந்தத்தை அவர்களின் முகத்தில் அப்படியே காணலாம்.


You can visualize the ecstacy on the face of the yatris on having the darshan of the Lord. It is simply undescribable you have experience it to unserstand the same. Every yatri undertake this arduous journey just for this Holy darshan.




திரு கயிலை பாலா அவர்களே தேர்ந்தெடுத்து அனுப்பிய புகைப்படங்கள் இப்பதிவில் இடம் பெற்றுள்ளன.

Tuesday, December 08, 2009

திருக்கயிலாய யாத்திரை 2009 -7

இரண்டாம் நாள் கிரிவலம்

Sun Lit North face of the Lord

அதிகாலை சூரிய ஒளியில் மிளிரும் வாமதேவ முகம்

இரண்டாம் நாள் கிரி வலம் மிகவும் முக்கியமானது அதே சமயம் கடினமானதும் கூட, ஏனென்றால் இன்று தான் இந்த யாத்திரையின் அதிக உயரமான டோல்மா கணவாயை நாம் கடக்கிறோம். மதியத்திற்கு முன்னர் டோல்மாவை கடந்து விட வேண்டும் என்பதால் இரண்டாம் நாள் கிரி வலத்தை எவ்வளவு சீக்கிரம் துவக்குகின்றதோ அவ்வளவு நல்லது என்பதால் காலை ஆறு மணிக்கே டேராபுக் முகாமை விட்டு கிளம்புகின்றோம். கிளம்பும் சமயம் ஆதவனின் கதிர்கள் ஐயனின் முகத்தில் நடத்தும் இந்திர ஜாலத்தை இப்பதிவில் காண்கின்றோம்.

உதய சூரியன் போல விளங்கும் திருக்கயிலாயம்

The full view of the North face of the Lord

The second day of the parikrama is the most important day at the same time it is one of the toughest days of the yatra. Because we have to cross the Dolma pass which is the highest point in the whole yatra. As the weather changes very rapidly at these latitude it is always better to cross Dolma before noon. So normally yatris leave Derapuk camp at the time of dawn. In this post we witness the wonderful site of sun's rays illuminating the North face of the Lord.

It's really mesmerizing how the hue changes with time. One should be really blessed to witness this wonderful sight. That also without cloud cover one is doubly blessed to see this great sight.


நிமிடத்திற்கு நிமிடம் அப்படியே நிறம் மாறும் அழகை எப்படி வர்ணிப்பது, முதலில் அருண நிறத்தில் இருக்கும் முகம் அப்படியே சிவப்பாகி பின்னர் மஞ்சள் நிறமாகி அப்படியே சுய நிறமான வெள்ளை நிறத்திற்கு மாறுவதைக் காண நிச்சயம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மேக கூட்டம் இல்லாமல் அப்படியே நிர்மால்யமாக தரிசிப்பது சக்கரைப் பந்தலில் தேன் மழை பொழிந்தது போல இருந்தது.

Crimson Red hued North face

உஜ்வலிக்கும் ஐயனின் நாக படம்

North face and the eastern extension

வடக்கு முகமும் கிழக்கு முகத்தின் தொடர்ச்சியும்

திருக்கயிலாயம் ஒரு கோணத்தில் பார்த்தால் பிரம்மாண்ட சிவலிங்கம் போலவே காட்சியளிக்கும். இங்கே டோல்மா கணவாய் செல்லும் வழியில் கிழக்கு முகத்தின் தொடர்ச்சியைக் தரிசிக்கிறோம்.

We see the eastern extension when we trek to Dolma pass. In this view Mount kailash resembles a huge Sivalingam. The formless form of Lord Shiva which is worshipped in all the temples.

East face of the Lord

ஐயனின் கிழக்கு முகம்

This is the view of the eastern face of the Lord. Like other faces we will not be able the have the darshan of this face from near because of the extension of the east face. There is a speciality in this photo that we are able to see the east face, Nandi and Ganesh Kund in this photograph.

ஐயனின் கிழக்கு முக தரிசனம். இம்முகத்தை நாம் அருகில் இருந்து தரிசிக்க முடியாது ஏனென்றால் கிழக்கு முகத்தின் தொடர்ச்சி டோல்மா வரை நீண்டிருப்பதால். இப்படம் மிகவும் அற்புதமான ஒரு படம் ஏனென்றால் இதில் நாம் ஐயனின் கிழக்கு முகம், நந்தி மற்றும் கணேஷ் குளம் மூன்றையும் ஒன்றாக தரிசனம் செய்கின்றோம்.

Mother's Navel

அன்னையின் நாபி


In Tibet, they call it mother navel - you are suppose to stand your back facing the rock and place your finger on the rock, there is a specific hole marked in the rock and if your finger enters that spot you are born with less sin and if it does not then .............. I tried three time and I failed to get the right spot and Bimalji tried three times and all the time he was right on the spot. I presume that I must have been born with lot of karmas to resolve. ( These are the words of Shri Kailai Bala)

அன்னையின் நாபி என்றழைக்கப்படும் கல். நம்முடைய பாவங்கள் எவ்வளவு உள்ளது என்பதை இக்கல்லில் கை வைத்து தெரிந்து கொள்ளலாம்.


Shri Kailai Bala at Dolma

பார்வதி தேவியின் திருமுன்னர் தி்ரு.கயிலை பாலா

Dolma is the abode of Mother Parvati for Hindus, and for Buddhists it is their guardian deity Tara. Before reaching Dolma it is believed that Lord Yama ( God of Death) assesses tha yatri. Normally yatris leave some thing they love the most as an offer to Lord Shivasakthi. The real meaning is as you go up spritually we have to develop the habit of non inclusiveness.

. டோல்மா திபெத்தியர்களின் காவல் தேவதை , புத்தர்களுக்கு தாரா தேவி, இந்துக்களுக்கு

சகல செல்வங்களும் தரும் இமய கிரி ராஜ தனயை மாதேவி நின்னைச்

சத்யமாய் நித்யமுள்ளத்தில் துதிக்கும் உத்தமருக்கு இரங்கி மிகவும்

அகிலமதில் நோயின்மை கல்வி தன தானியம் அழகு புகழ் பெருமை இளமை

அறிவு சந்தானம் வலிதுவு வாழ்நாள் வெற்றி ஆகு நல்லூழ் நுகர்ச்சி

தொகை தரும் பதினாறு பேறும் அருளும்

சுகிர்த குணசாலி, பரிபாலி, அநுகூலி திரிசூலி, மங்கள விசாலி- பார்வதி தேவி.


இங்குள்ள ஒரு கல்லே பார்வதி தேவி. சிவ சக்தியினரின் கர்ப்பகிரகமாக டோல்மா கணவாய் நம்பப்படுகின்றது. ஆனால் இந்த கல்லை நாம் தொட்டு வணங்க முடியாது, மேலும் திபெத்தியர்களின் கொடிகளால் கர்ப்பகிரகம் மறைக்கப்பட்டுள்ளது. இந்த கொடிகள் காற்றில் அசையும் போது அவை அமைதி, சகோதரத்துவம், மகிழ்ச்சி, அன்பு முதலிய உணர்ச்சிகளை பரப்புகின்றன என்பது ஐதீகம்.


Ganesh Kund

கணேசர் குளம்

கௌரி குளம்

Gauri Kund

மாதொருபாகனின் வாம பாகம் அம்பிகைக்குரியது கைலையில் இத்தத்துவம் இயல்பாக அமைந்துள்ளது. விசுவ லிங்கமாக எழுந்தருளியிருக்கும் தக்ஷ’ணா மூர்த்தத்தின் இடது பக்கம் அதாவது கிழக்கு திசையில் டோலமா மற்றும் கௌரி குளம் அமைந்துள்ளது.

Gauri Kund is the lake in which Mother Parvati baths along with her maids.


Day 10 Tuesday 4th August 2009 - Trek from Dirapuk to Zutulpuk Gompa (4790m) over -Night at Camp:

The hardest but the holiest day of the pilgrimage. We will cross through a rocky expanse dotted with stone. Cairns draped with the clothes offered by pilgrims as a spiritual sign of death. Gauri kund is one of the holiest sites to view/visit from the top. Further hiking brings us- to the accent up to Dolma-La pass (5630m). After a nice break at the top of the pass we will head down the steep trai1 to our eventual campsite at Zutul Puk Monastery (the cave of miracles where Milarepa meditated. Total hiking for the day will be 18 km 8 hrs.



இன்னும் பல புகைப்படங்களை திரு பாலா அவர்கள் அனுப்பியுள்ளார்கள் அவை அடுத்த பதிவில் வரும்.