Saturday, August 15, 2009

அற்புத கயிலாயக் காட்சிகள்

Some Wonderful darshans of Holy Kailash

திருக்கயிலாய தரி்சனம் செய்யச் செல்பவர்களுக்கு கிடைக்கும் தரிசனம் மற்றும் அனுபவம் ஒன்றே அல்ல. ஒவ்வொருவருக்கும் ஒரு ஒரு அனுபவம். நிமிடத்திற்க்கு நிமிடம் தரிசனம் மாறுபடுகின்றது. நாம் செல்லும் சமயம், தரிசனம் செய்யும் நேரம், நாம் பார்க்கின்ற கோணம் , எங்கிருந்து பார்க்கிறோம் என்பதைப் பொறுத்து தரிசனம் மாறுபடுகின்றது. இப்பதிவில் தாங்கள் காணப்போகும் தரிசனம் அனைத்தும் சில அற்புதமான தரிசனங்கள்.

The darshan (holy view) that one gets is different it depends on the time at which the yatra is undertaken and also the time when we have the darshan. The place and the angle from which we have the darshan and the will of the Lord determine the darshan we get. The spritual experience one gets when he get the darshan depends on his level sprituality. In this post you get to see many unique spritual experiences of different devotees of Lord Shiva.

ஆத்ம லிங்க தரிசனம்

Darshan of Athma Lingam


தேவ லோகத்தில் இருந்து கங்கையானவள் பூமிக்கு பகீரதனின் தவத்தின் காரணமாக வரும் போது, கங்கை அப்படியே இறங்கினால் பூமி முழுவதும் சிதைந்து விடும் என்பதால் சிவபெருமான் கங்கையை தனது ஜடாமுடியில் தாங்கினார் அல்லவா?

இவ்வைபவத்தை மாணிக்கவாசகர் தம் திருச்சாழல் பதிகத்தில் இவ்வாறு பாடுகின்றார்.

மலைமகளை ஒரு பாகம் வைத்தலுமே மற்று ஒருத்தி

சலமுகத்தால் அவன்சடையில் பாயும்அதுஎன்?ஏடி!

சலமுகத்தால் அவன்சடையில் பாய்ந்திலனேல் தரணிஎல்லாம்

பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடு ஆம் சாழலோ!

பொருள்: ஏடீ, தோழீ! உன் தலைமகன் சிவபெருமான், மலையரசன் பொற்பாவை பார்வதியை தன் வாம பாகத்தில் கொண்டிருந்தாலும், வேறொருத்தியாகிய கங்கை கோபம் கொண்டு நீருருவத்தோடு, அந்த பரமனார் சடை முடியில் பாய்வது யாது காரணமடீ? எனத்தோழி தலைமகளை பழித்துரைக்க நீர் வடிவத்தோடு சிவனாரின் சடையில் கங்கை பாய்ந்திலளாயின், பூலோகமெல்லாம் பாதாளத்தின் கண்ணே உட்புகும்படி பாய்ந்து, பொல்லாக் கேடு விளையும் சாழலோ! என்று தலைமகள் தோழிக்கு அவனை இயற்பட மொழிந்தாள்.

அந்த ஆகாய கங்கையை அகோரம் எனப்படும் தெற்கு முகத்தில் ஐயனின் ஜடாமுடியில் மேலிருந்து கீழாக நாம் தரிசிக்கின்றோம். ஆகாய கங்கையிலிருந்து வடிந்த நீரில் உருவான ஆத்ம லிங்கத்தை இப்படங்களில் நாம் தரிசனம் செய்கின்றோம். கங்கைக்கு நேர் கீழே இறைவன் லிங்க ரூபத்தில் தரிசனம் தரும் இக்காட்சியை திருக்கயிலாய யாத்திரை துவங்கும் சமயம் அதாவது ஜூன் மாதம் சென்ற அன்பர் திரு. கயிலை பாலா, மலேசியா அவர்கள் அனுப்பி உதவினார். அவருக்கு மிக்க நன்றிகள் இப்படத்தையும் மற்றும் இப்பதிவில் உள்ள பல அரிய படங்களையும் அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்ள அனுமதி தந்ததற்காக.

According to legend King Bagirath did penance to bring river Ganges from celestial world to this world, pleased with his penance Ganges agreed to flow, but because of the force with which She will flow the world will get shattered Lord Shiva agreed to hold Her in His matted locks and let Her gently. We have the darshan of the three eyes of the Lord and His matted locks and Ganges in His south face. The Athma lingal you see in tha above photographs is fromed from the water flowing from the Akash Ganga. One cannot but wonder the shape of the ice formation which resembles Shiva Linga. This can be witnessed in June when the snow is fully not melt. This photo was sent by Kailai Bala, Malysia. The author is thankful to Lord Shiva and Bala for allowing to put it in blog for the benifit of all.ஐயன் நந்தி மற்றும் ஆகாய கங்கை தரிசனம்

AkaSh Ganga & Nandi Darshan


பனி முழுவதும் உருகாத ஜூன் மாதத்தில், ஐயன் முழுவதும், நந்தியெம்பெருமான் முழுவதும் வெள்ளிக் கவசம் பூட்டியது போல் முழுவதும் வெண்பனியினால் மூடப்பட்டிருக்கும் அழகை தரிசித்த அன்பர்கள் தரிசனம் செய்த ஆகாய கங்கை . கங்கையிலிருந்து வடியும் நீர் உறைந்து இங்கே காட்சி தருகின்றது . அகோர முகத்திற்கு முன்னே உள்ள நந்தி்யெம்பெருமானின் தரிசனத்தையும் நந்தியெம்பெருமானின் பின்னே ஓடி வரும் கங்கையும், அவ்வாறு ஓடி வந்த கங்கை நீர் தேங்கி குளமாகி உறைந்துள்ள ஆகாய கங்கையின் தரிசனத்தையும் காண்கின்றோம். பின்னர் இப்பனி உருகி மானசரோவரில் வந்து சேருகின்றது. அதாவது மானசரோவரின் நீர் அம்மையப்பரின் அபிஷேக நீர்.

மேல் படத்தை அனுப்பியவர் கயிலை பாலா அவர்கள் , கீழ்ப்படத்தை அனுப்பியவர் அடியேனுடன் ஐயனின் தரிசனம் கண்ட தபஸ்வி அவர்கள். அவருடைய ஒன்று விட்ட சகோதரி கண்ட தரிசனத்தை அடியேனுக்காக அனுப்பினார் அதை அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொள்வது அந்த சிவசக்தியின் மாப்பெரும் கருணை.

During June when the yatra is being allowed from Nepal side and the snow is not fully molten we get to see the Akash Ganga. The water from the Ganges flows down past Nandi in front of the Lord and stagnates before flowing to Manasarovar lake. In the second picture you can see clearly the flowing Ganges. The first photo was sent by Kailai Bala and second one by author's fellow yatri shri Tapaswi.திரிநேத்ரத்தில் ஐயனின் திருமுக தரிசனம்

Real face Darshan

நமது இந்தியத் திருநாட்டை நோக்கி அமைந்துள்ள மற்றும் நாம் திருக்கயிலாயும் செல்லும் போது முதன் முதலில் தரிசனம் செய்யும், மற்றும் யாத்திரையின் போது அதிகமான நாட்கள் தரிசனம் செய்யும் முகம் ஐயனின் தெற்கு முகம். அம்முகத்தல் ஐயனின் முக்கண்கள், ஜடாமுடி, ஜடாமுடியில் கங்கை, மற்றும் இராவணன் கட்டி இழுத்த அட்சய வடத்தின் தழும்புகள் ஆகியவற்றை தரிசனம் செய்யலாம்.

எம்பெருமானின் முக்கண்ணில் அற்புத ஐயனின் திருமுக தரிசனம் கண்டு அதை படத்திலும் பிடித்தவர் திரு. கயிலை பாலா அவர்கள். பனியினால் ஆன இரண்டு திருக்கண்கள், திருமூக்கு, திருவாய் என்று (மனித) முகமாக காட்சி தரும் அற்புதத்தை கண்டு மெய் சிலிர்க்கின்றது. மிகவும் பேறு பெற்றவர் திரு. கயிலை பாலா அவர்கள்.


This is a very unique photo of the face of the Lord at his three eyes. You can clearly see the eyes, nose and mouth formed out od snow. Kailai Bala was fortunate enough and blessed to get this wondedrful darshan.


அகோர முகத்தில் ஐயனின் திருமுகம்

மேலே முக்கண்ணில் முக தரிசனம் கண்டோம் அது போல கீழ்ப்பகுதியில் திரு. கயிலை பாலா கண்ட இன்னொரு முக தரிசனம். திருமூக்கும் திருக்கண்களும் ( கண் மணி கூட) கூர்ந்து கவனித்தால் ஸ்பஷ்டமாகத் தெரியும். ஐயன் செய்யும் லீலைகள் தான் எத்தனை எத்தனை. ஆயிரம் கண்ணுடையவன் இங்கே நான்கு கண்களை மட்டும் காட்டி அருள் புரிகின்றார்.

This face darshan is at the bottom of the south face. You can clearly see the eye ball of the Lord , Nose and Mouth in this picture.

மேலே பார்த்த இரு முகக் காட்சிகளும் பனியினால் அமைந்தது போல காட்சி தந்த முகங்கள், இப்படத்தில் காட்சி தருவது மலைப்பாறையில் தெரியும் முகம். திருமுகத்தை பெரிது படுத்திக் காட்டியுள்ளார் கயிலை பாலா அவர்கள். ஆத்ம லிங்கத்தை வலக் கோடியில் தரிசனம் செய்கின்றீர்கள். (படத்தின் மேல் கிளிக்கினால் முழுப்படத்தையும் காணலாம்).

In this picture you get the face formed on the rock face unlike the earlier ones which was formed out of snow.


வெள்ளி கவசம் போர்த்திய ஐயனும் நந்தியும்

Lord and Nandi in Silver armour


நேபாளம் வழியாக திருக்கயிலாய யாத்திரை ஜூன் மாதமே துவங்குகின்றாது. அப்போது பனிப்பொழிவு இருக்காது ஆனாலும் பனி முற்றிலுமாக உருகி இருக்காது. கிரிவலப்பாதையெல்லாம் பனியாக இருக்கும். மேலே கூறியது போல் வெள்ளிக் கவசம் போர்த்தியது போல் காட்சி தரும் ஐயன் மற்றும் நந்தியின் தரிசனம். நந்தியெம்பெருமானை மேலே உள்ள படத்தில் மிக அருகில் இருந்து தரிசிக்கின்றோம்.

In these photos you get the darshan of Lord and Nandi fully covered with snow, as if they have been covered with silver armour. These photos were also taken during the June yatra.

நந்தியெம்பெருமான்

Nandi in front of West face of the Lord

இப்படத்தில் சத்யோஜாதம் எனப்படும் மேற்கு முகத்தின் எதிரே நந்தியெம்பெருமான் எழிலாக வீற்றிருந்து ஐயனை ரசிக்கும் அழகை தரிசனம் செய்கின்றீர்கள்.

You clearly see the Nandi in front of the West face of the Lord. in this picture.

2 comments:

sury said...

கயிலாய மலைக்கே சென்று வந்தது போல இருக்கிறது.
அழகான வர்ணனை.
நன்றி. வாழ்த்துக்கள்.
ஆசிகள்.

சுப்பு ரத்தினம்.

Kailashi said...

வருகைக்கு மிக்க நன்றி சுப்பு ரத்தினம் ஐயா.