Wednesday, November 04, 2009

திருக்கயிலாய யாத்திரை 2009 -2

திருக்கயிலை நாதரின் முதல் தரிசனம்

சென்ற பதிவில் கயிலை பாலா குழுவினர் நேபாள் தலை நகர் காத்மாண்டுவிலிருந்து மானசரோவர் வரும் வரையிலான பயணத்தை பார்த்தோம். இந்தப் பதிவில் அவர்கள் மானசரோவர் கரையை அடைவதற்கு முன் முதலில் கண்ட திருக்கயிலை நாதரின் தரிசனம் மற்றும் மானசரோவரில் அவர்கள் தங்கிய காட்சிகளையும் காணலாம்.

In the previous post we saw about the journey from Kathmandu to Manasarovar, in this post we will the pictures of the first darshan of Holy Kailash and the ceremonial bath in Holy Manasarovar.


திபெத்தியர்களின் பிரார்த்தனை கொடி மரம்

The prayer flag post of Tibetians

மேலே நாம் காணும் படம் மானசரோவர் கரையில் உள்ள திபெத்தியர்களின் பிரார்த்தனை கொடி மரம் ஆகும். இதில் ஐந்து நிறங்களைக் கொண்த கொடிகளை நாம் காணலாம் அவை பஞ்ச பூதங்களைக் குறிக்கின்றன. திபெத்தியர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறிய பின் இக்கொடிகளை கட்டி தங்கள் நேர்த்திக் கடனை முடிக்கின்றனர். இக்கொடிக் கம்பத்தில் உள்ள பழமையான கொடிகளை கொண்டு வந்து நம் இல்லத்தில் வைத்திருந்தால் வளம் பெறுவோம் என்பது ஐதீகம்.

This is a prayer flag post on the shores of Holy Manasarovar. Tibetians tie these flags as a mark of thanks giving to their God on the fulfillment of their prayers. There flags consists of five different colors which represent the five elements( space, air, water, fire and earth) of nature. We can find these flag posts all along the parikrama route at important places.


ஐயனின் முதல் தரிசனம்

First darshan of Kailash

திருக்கயிலை நாதரின் முதல் தரிசனம் , ஹோரே என்னும் திபெத்திய கிராமத்தை நெருங்குகையில் , முதல் தரிசனம் சித்திக்கின்றது. முதலில் நமக்கு கிதைக்கும் தரிசனம் ஐயன் அகோர முகம் என்னும் தெற்கு முகமே ஆகும். சுற்றிலுமுள்ள மலைகளின் மேலே திருக்கயிலாய பர்வதம் ஒரு சிங்காதனம் போல விளங்க அந்த சீரிய சிங்காதனத்தில் அமர்ந்து மத்தமும், மதியும், கங்கையும் செஞ்சடையில் சூடும் மணிமிடற்றண்ணலும், மலையரசன் பொற்பாவையும் தன் குடிமக்களை காக்கும் காட்சி கண்ணில் தெரிகின்றதா? திருக்கயிலாய மலையில்
ஐயனின் அருல் போல எப்போதும் பனி மட்டும் உருகுவதே இல்லை.


This is the first view of Holy Kailash . The south face of the Lord is the face which faces India and also this is the face which we get darshan for long during the parikrama. When we travel from India or from Nepal also we get the darshan of this face only. The Kailash peak resembles a mighty throne in which Lord Shiva with matted locks containing snake, Ganges, Moon and flowers and His consort Mother parvati sit and rule this whole universe. The snow never melts in this Holy peak.ஆனந்த களிப்பில் யாத்திரிகள்
Ecstacy of the yatris

ஐயனைக் கண்ட ஆனந்தத்தில் உள்ளமுருக சங்கொலித்து கொண்டாடுகின்றனர் யாத்திரிகள். சில சமயம் மேகங்கள் வந்து திருக்கயிலை நாதரை மறைத்து கண்ணாமூச்சி விளையாடும் அது போல இல்லாமல் முதல் தடவையிலேயே அம்மையப்பரின் தரிசனம் கண்ட களிப்பில் ஐயனை மனதார வாழ்த்துகின்றனர் அன்பர்கள்.


The yatri's express their joy of having the darshan of their Lord by blowing conch which is consid
ered an auspicious music instrument used during pooja and thank the Lord. They undertook this yatra to have the darshan of the Lord and their wish has come true and they express their happiness in this way. Many times the weather especially heavy clouds play a spoilsport, there had been times when some yatris have returned without physically seeing the Lord because of clouds but felt His compassion in the Holy Land. These yatris are ecstatic because they are blessed with His divine view the first time itself.

மானசரோவரின் புனித தீர்த்தம் சேகரிக்கும் அன்பர்கள்
Holy Manasarovar

பாவங்களையெல்லாம் போக்கும் மானசரோவர் தடாகத்தில் யாத்திரிகள் புனித நீராடி மகிழ்கின்றனர். பல ஜன்மங்களில் செய்த புண்ணியத்தின் பயனால் மட்டுமே இந்த ஒரு பாக்கியம் ஒருவருக்கு கிட்டுகின்றது. மேலும் அவர்களின் ஏழு தலைமுறையினருக்கு புண்ணியம் கிட்டும். யாருடைய உடலில் இக்குளத்தின் ஒரு திவலை நீர் படுகின்றதோ அவர்களின் அனைத்து பாவங்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனி போல் விலகிவிடும் என்று புராணங்கள் பேசும் புனித மானசரோவர் நீரை தங்கள் இல்லங்களுக்கு எடுத்து செல்ல சேகரிக்கும் அன்பர்கள். சிவசக்தியின் கிரி வலம் செல்வதற்கு முன் யாத்திரிகள் தங்கள் உடலையும் உள்ளத்தையும் சுத்தப்படுத்திக் கொள்கின்றனர்.

A Holy dip in the Holy Manasorovar absolves one of his sins accumulated in previous births and provides deliverence to seven generations. it is because of the good in several previous births one gets a chance to have a dip in these Hly waters in which celestials have bath early in the morning and then pray Shivasakthi. By this Holy dip the yatris clean their body and mind before undertaking the parikrama of the Holy Kailsh mountain.

ஐயனின் தெற்கு முகம் சற்று அருகாமையில். படத்தில் தெரியும் உயரம் சுமார் 2000 அடிகள்.

See the perfect view of Kailash peak standing out above the surrounding Kailsh ranges. The height of the Kailash peak is around 2000 ft above the sorrounding range of mountains.

புத்த விகாரத்தில் திரு கயிலை பாலா

Shri Kailai Bala litting a lamo in a Gompa

மானசரோவரை சுற்றிலும் 8 புத்த விகாரங்கள் உள்ளன. ஒரு சக்கரத்தின் ஆரக்கால்கள் போல இவை விளங்குகின்றன. புத்தரின் தாய் மாயா தேவி மானசோவரில் நீராடிய பின்னரே புத்தர் கருக்கொண்டார் என்பது ஐதீகம். இங்கே திரு கயிலை பாலா அவர்கள் ஒரு புத்த விகாரத்தில் விளக்கேற்றுகின்றார்.

Manasarovar is sorrounded by a total of 8 Buddhist monastries also called as Gompas. Buddha's Mother Maya devi conceived Buddha after beibg purified by a bath in Manasarovar. Shri Kailai Bala is offering a lamp in the Gompa .


பனி படர்ந்த மலைப் பிரதேசமான இமய மலையில் வாழும் நாடோடி திபெத்திய மக்களின் உற்ற துணைவன் யாக் என்னும் சடை எருமை. நம்முடைய பசு மாடுகள் போல அவர்களின் அனைத்து தேவைகளுக்கும் யாக் பயன்படுகின்றது, பொருட்களை எடுத்து செல்லவும், பிரயாணம் செய்யவும், பால் தயிருக்கும் சில சமயம் உணவாகவும் யாக் இவர்களுக்கு பயன்படுகின்றது. இதன் சடையிலிருந்தே கம்பளி தயாரிக்கப்படுகின்றது இப்பகுதியில் நிலவும் குளிருக்கு யாக்கின் கம்பளிதான் சிறந்தது. இறந்த யாக்கின் கொம்பு ஒரு மங்களப் பொருளாகும். ஒவ்வோரு திபெத்தியரின் வீட்டின் முன்னரும் யாக்கின் கொம்பு தொங்க விடப்பட்டிருக்கும். அது போலவே கிரி வலப் பாதியில் சில முக்கிய சந்திப்புகளில் கற்களை அடுக்கி அதில் புத்தரின் மந்திரங்களை ( ஓம் மணி பத்மே ஹம்) எழுதி அதன் மேல் யாக்கின் கொம்புகளை வைத்து ஒரு வழிபடும் இடமாக வைத்துள்ளதைக் காணலாம். அத்தகைய ஒரு வழிபாட்டு மேடை.

yak is the beast of burden and also domestic animal of the Tibetians. They rear them in their homes for milk and wool ans is also used to transpot men and material in these in hospitable regions. Also Tibetians consider Yak's horn an an auspicious thing. You can witness yak's horm in front of their houses. They believe that this brings prosperity and good luck to them. You can witness many heaps of stone written with mantras of Buddhist scriptures like OM MANI PADME HUM and over them these yak's horn. These serve as prayer spots for them.

நாம் யாத்த்திரை மேற்கொள்ளும் பாதையில் முறையான சாலைகள் கிடையாது. கல்லைப் பரப்பி வைத்துள்ளனர் அதுதான் பாதை. மேலும் இந்த உயர் மட்டங்களில் தட்ப வெட்பமும் மிகவும் அலாதியானது. நிமிடத்திற்கு நிமிடம் அது மாறும். ஆகவே மதியத்திற்கு பின் இங்கு பயணம் செய்வது உசிதமானதல்ல. இங்கு அப்போதுதான் பெய்த மழையினால் உண்டான் காட்டாற்றில் லேண்ட் குருசியர் வாகனங்கள் செல்லும் காட்சி.

Most of the tibet is underdeveloped and there are no proper roads , in some places a road is just a levelled area with rocks, also the weather is very much unpredictable at these higher altitudes. It will be shining and the next moment it will start raining, or it will be gale. So most of the time journey is made during morning's only it is better to reach the intended destination before noon. Here the Toyota Land Cruiser vehicles carrying the yatris are passing through a stream.

மாலை நேரத்தில் மயக்கும் மானசரோவர் அழகு


View of Manasarovar from Chiu Gompa in the evening


இந்த எட்டாம் நாள் ஐயனின் முதல் தரிசனம் கண்டு களிப்பு எய்தி, மானசரோவரில் நீராடி தூயமை அடைந்து திருக்கயிலை நாதரின் கிரி வலம் செய்ய ஆவலுடன் அன்பர்கள் மானசரோவர் கரையில் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Day 08 Sunday 2nd August 2009 - Drive to Tarchen (4600m) 60km Over Night at Guesthouse:


Lake Manasarovar (4000m). Lake Manasarovar is regarded as the most holy of all of Tibet's many lakes. According to Hindu and Buddhist cosmology the four great rivers of the Indian sub-continent, the Brahmaputra, Sutlej, Ganges, and Indus all arise from the lake. It is said that Lord Vishnu floated in it for an eternity, dreaming, until the life force stirred, and out of the water's infinite potential sprang forth all of creation. This day offers a wonderful opportunity to see the great lake Manasarover with mt. Gurula Mandhata (7728m) on south and Holy Kailash on the north. After bath and Puja drive to Tarchen via Chiu monastery and hot spring.


No comments: