Saturday, November 07, 2009

திருக்கயிலாய யாத்திரை 2009 -3

மானசரோவர் கரையில்

Day 08 Sunday 2nd August 2009 - Drive to Tarchen (4600m) 60km Over Night at Guesthouse:


Lake Manasarovar (4000m). Lake Manasarovar is regarded as the most holy of all of Tibet's many lakes. According to Hindu and Buddhist cosmology the four great rivers of the Indian sub-continent, the Brahmaputra, Sutlej, Ganges, and Indus all arise from the lake. It is said that Lord Vishnu floated in it for an eternity, dreaming, until the life force stirred, and out of the water's infinite potential sprang forth all of creation. This day offers a wonderful opportunity to see the great lake Manasarover with mt. Gurula Mandhata (7728m) on south and Holy Kailash on the north. After bath and Puja drive to Tarchen via Chiu monastery and hot spring.


யாத்திரையின் எட்டாம் நாள் பரமபவித்ரமான மானசரோவரின் கரையில் தங்குகின்றனர் குழுவினர். அன்று மானசரோவர் கரையில் நீராடி திருக்கயிலை நாதனுக்கு ஹோமத்துடன் பூஜைகள் செய்து கிரி வலம் அற்புதமாக நடைபெற வேண்டுமென்று வேண்டி, பின் சியு புத்த விகாரம் கண்டு பின் கிரிவல ஆதார முகாமான டார்ச்சன் அடைகின்றனர். அன்றைய தினத்தின் சில காட்சிகள் இப்பதிவில் காணலாம்.



மலை மேல் அமைந்துள்ள சியூ புத்த விகாரம்

Chiu monastery situated on a hillock


புத்த விகாரத்தின் உட்புறம்

Interiors of Chiu Monastery

மானச்ரோவரை சுற்றிலும் எட்டு புத்த விகாரங்கள் உள்ளன என்று பார்தோமல்லவா அவற்றில் ஒன்றுதான் இந்த சியூ விகாரம், ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது இந்த விகாரம். இதன் அருகில் வெந்நீர் உற்று ஒன்று உள்ளது. மானசரோவரையும் இராக்ஷஸ் தாலையும் இனைக்கும் கங்கா சூ என்ற ஒடையும் இதன் அருகிலேயே ஒடுகின்றது. எந்த வருடம் இந்த கால்வாயில் தண்ணீர் வருகின்றதோ அந்த வருடம் சுபிக்ஷமாக இருக்கும் என்பது இந்தப்பகுதி மக்களின் நம்பிக்கை.

There are eight monasteries surrounding the Holy Manasarovar Lake. This Chiu Gompa is one of them it is situatrd on the top of a hillock. There are some hot springs nearby and also Ganga Chu the canal which connects Manasarovar and Rakshas Tal. When water flows in this canal it is belived that year will be a prosporous year.



அதிகாலையில் திருக்கயிலாயம் மானசரோவரிலிருந்து

( மேக மூட்டதிற்கு இடையிலும் ஐயனின் திருமுக தரிசனம்)

Early morning view of Holy Kailsh

( Though cloud cover is there it has not fully abscured the view of Kailash)





மானசரோவரின் கரையிலிருந்து சிவசக்திக்கு பூஜை

Homam and Pooja to Shivasakthi

It os believed that one can enter this Holy Land only on the invitation of the Lord. ie by His grace only one can enter this portion. So as a thanksgiving gesture all the yatris do the pooja to Lord and Mother for giving their darshan.

அம்மையப்பர் அழைத்தால் ஒழிய நாம் இந்த தேவ பூமிக்கு செல்ல முடியாது. அவனருளால் தானே அவன் தாள் வணங்க முடியும் . எனவே யாத்திரி்கள் மானசரோவரில் தங்கும் போது மாதொருபாகனுக்கு ஹோமம் வளர்த்து பூஜைகள் செய்கின்றனர் அந்த காட்சியைத்தான் தற்போது தாங்கள் காண்கின்றீர்கள்.



Beautiful Long distance view of Holy Kailash
( e clouds are now obscuring the darshan -above
and when there is no cloud cover -below )

ஐயனின் அழகு திருமுகம் (

மேலே- மேகங்கள் மறைக்கும் சமயம், கீழே- மேகங்கள் விலகிச்சென்றபின்)


As we near the Darchen base camp we can see clearly the east face of the Lord as this face is not visible from short distance. In the picture we can see the eastern extension very clearly. The Ganesha and futures of South face is also clearly visible.

ஐயனுக்கு ஐந்து முகங்கள் அவற்றுள் கிழக்கு முகம் தத்புருஷம் என்று அழைக்கப்படுகின்றது. இம்முகத்தை நாம் அருகிலிருந்து தரிசிக்க முடியாது. தூரத்தில் இருந்து தான் தரிசிக்க முடியும். இப்படங்களில் ஐயனின் கிழக்கு முகத்தை ஸ்பஷ்டமாக தரிசனம் செய்கின்றோம். மேலும் தெற்கு முகத்தின் கணேசர், திரி நேத்ரம். ஜடாமுடி, அக்ஷய வட தழும்பு ஆகியவற்றையும் நாம் காண முடிகின்றது.

தார்ச்சென் முகாமிலிருந்து கிடைக்கும் அற்புத தரிசனம்

The view of Holy Kailash from Darchen base camp

எட்டாம் நாளின் நிறைவாக டார்ச்சென் ஆதார முகாமை அடைந்து தங்குகின்றனர். இம்முகாமிலிருந்து நமக்கு ஐயனின் தெற்கு முகத்திமன் மேற் பகுதி மட்டுமே தரிசனம் கிடைக்கின்றது. ஐயனின் முக்கண்களை நாம் முழுதும் தரிசனம் செய்கின்றோம். மேலும் கங்கை வந்து இறங்கிய ஐயனின் ஜடா முடியின் மேல் பகுதியை மட்டும் தரிசிக்க முடிகின்றது. அடுத்த பதிவில் திருக்கயிலாய கிரிவலத்தை தொடங்குவோம் அன்பர்களே.

This is the view of South face of the Lord which we get fron Darchen Base Camp. The guard mountains obscure the lower portion hence we get the darshan of teh Three eyes of the Lord and also the top portion His matted locks from which Ganges flowed . In the nest post we will start with the parikrama of Holy Kailash.

****************

திரு கயிலை பாலா அவர்கள் திருக்கயிலை செல்ல நினைப்பவர்களுக்கு எப்படி முடியுமோ அது போல சேவை செய்ய ஆவலாக உள்ளார். விரும்பும் அன்பர்கள் அவரைக் கீழ்க் கண்ட மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.



Kailai vamadevan Balaspramaniam Arimuthu

kailaibala@gmail.com


மேலும் அவரது புகைப்படங்களின் தொகுப்பை முழுதுமாக காண இங்கே செல்லலாம்.



ஐயனின் அருள் மழை இன்னும் பொழியும் .......

2 comments:

பித்தனின் வாக்கு said...

நல்ல படங்கள். அற்புதமான வரிகள். நன்றி அய்யா.

S.Muruganandam said...

தொடர்ந்து வந்து தரிசனம் பெறுங்கள் பித்தனின் வாக்கு ஐயா.