Friday, December 25, 2009

Holy Kailash yatra 2009 -8

இரண்டாம் நாள் கிரி வலம் தொடர்கின்றது

மார்கழி மாதம் தொடங்கி விட்டது. அதிகாலையில் எழுந்து மார்கழி நீராடி ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதியை, மாணிக்க வாசக சுவாமிகள் பாடிய திருவெம்பாவையைப் பாடி வணங்கும் தேவர்களின் அதிகாலை நேரம் முதலில் ஒரு திருவெம்பாவை ப் பாடல்.

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னை புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே!

உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன் அடியார் தாள்பணிவோம் ஆங்கு அவர்க்கே பாங்கு ஆவோம்

அன்னவரே எம்கணவர் ஆவார்; அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்;

இன்ன வகையே எமக்கு எங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம்ஏல் ஓர் எம்பாவாய்!



டோல்மா கணவாயில் பிரார்த்தனைகளை கட்டும் ஒரு அன்பர்

A yatri presenting his prayers at Dolma Pass

அன்னை மலையரசன் பொற்பாவை, கௌரி, உமையம்மை, பர்வத புத்ரி, பார்வதியின் ஸ்தலம் இந்த டோல்மா கணவாய் அங்கு அன்னையிடம் தனது பிரார்த்தனைகளை கூறும் அன்பர் இங்கே.



காலை சூரிய ஒளியில் நந்தியின் அற்புத தரிசனம்

Beautiful view of Nandi


ஐயனின் ஒவ்வொரு முகத்திற்கு முன்னரும் நந்தியெம்பெருமானும் அருள் பாலிக்கின்றார். ஐயனின் வடக்கு முகமாம் வாம தேவ முகத்தின் முன் உள்ள நந்தியெம்பெருமான் தரிசனம்.

Nandi is the first among all the servants of the Lord . He is also the mount of the Lord. He is present whereever is Lord is present. Here we have the darshan of the Nandi infront of the North face.

கிழக்கு முகம்

East face

This is the only face of Kailash which we don't get to see from close quarters. This is the view when we trek towards Dolma.

டோல்மா கணவாயை நோக்கி நடக்கும் போது கிடைக்கும் கிழக்கு முகத்தின் தரிசனம். இம்முகத்தின் தரிசனம் நமக்கு அருகில் இருந்து கிடைப்பதில்லை.



கணேசர் குளம்

Ganesh Kund


ஐயனின் அகோர முகத்திற்கு அருகில் மலை ரூபத்தில் முதல் தடவையாக கிரி வலம் வந்த விநாயகரை தரிசனம் செய்தோம் இப்போது அவர் நீராடும் கணேசர் குளத்தை தரிசிக்கின்றோம்.


Route to Dolama Pass and inner parikrama

மேலே உள்ள படம் டோல்மா கணவாய் செல்லும் வெளி கிரி வலத்தின் பாதையையும் உள் கிரி வலத்தின் பாதையும் காட்டுகின்றது. உள் கிரி வலத்தின் போது நாம் கிழக்கு முகத்தில் செங்குத்தான பகுதியில் ஏறி செல்ல வேண்டியிருக்கும். அநேகமாக திருக்கயிலை செல்லும் அனைவரும் வெளிகிரி வலம் வருகின்றனர். வெகு சிலருக்கு மட்டுமே உள் கிரி வலம் செல்லும் பாக்கியம் சித்திக்கின்றது. திருக்கயிலை பாலா அவர்கள் இந்த வருடம் வெளி கிரி வலம், உள் கிரி வலம் மற்றும் நந்தி வலம் மூன்றையும் அவரருளால் முடித்தார்.

The above picture shows two routes one the outer parikarama which normally all the yatris undertake, this passes thro Dolma pass. Very few yatris undertake the inner parikrama. As we have to climb the east face it is very tough and a very experienced guide is required . Sri Kailai Bala by the grace of Lord Shiva completed the outer parikrama, inner parikarama and the Nandi parikrama in 2009. We are now viewing his yatra of outer parikrama later we will the Great views of Inner parikrama also.

டோல்மா செல்லும் வழியில் உள்ள சிவஸ்தலம்

தேவ பூமியான திருக்கயிலாய மலையின் அன்னை பார்வதியின் ஸ்தலமான டோல்மா செல்லும் வழியில் சிவஸ்தலம் உள்ளது. இவ்விடத்தை கடப்பவர்கலை யமன் எடை போடுகிறான் என்பது ஐதீகம். இவ்விடத்தை கடக்கும் அன்பர்கள் தங்களுக்கு மிகவும் பிடித்த ஏதாவது ஒன்றை இங்கே தியாகம் செய்கின்றனர். அதாவது பாசத்தை அறுத்து பதியை அடைய வைராக்கியத்தை அதிகப்படுத்துகின்றனர்.

Before we reach Dolma pass we pass the Shiv Sthal, who ever crosses this Holy land is being estimated bt Lord of Death it is believed, You can find all sorts of things being strwn here that is whoever crossed this place leave something which they love the most which signifies growing up spritually.


டோல்மா கணவாயில் இருந்து செங்குத்தான மலைப்பகுதியை கடந்த உடன் நாம் சந்திக்கும் ஃபோலோங் பனி ஆறு.

ஐயனைக் கண்ட ஆனந்தத்தில் திளைக்கும் யாத்திரிகள். மலையான் மருகன் திருக்கயிலைநாதரை தரிசனம் செய்யும் அந்த ஆனந்தத்தை அவர்களின் முகத்தில் அப்படியே காணலாம்.


You can visualize the ecstacy on the face of the yatris on having the darshan of the Lord. It is simply undescribable you have experience it to unserstand the same. Every yatri undertake this arduous journey just for this Holy darshan.




திரு கயிலை பாலா அவர்களே தேர்ந்தெடுத்து அனுப்பிய புகைப்படங்கள் இப்பதிவில் இடம் பெற்றுள்ளன.

No comments: