Saturday, January 31, 2009

கண்டேன் அவர் திருப்பாதம் (திருக்கயிலாய தரிசனம்) -30

நேபாளம் மூலமாக செல்பவர்கள் அனுபவம் -1


அப்பர் பெருமான் அருளிச்செய்த
போற்றித் திருத்தாண்டகம்


திருக்கயிலாயம்

முடியார் சடையின் மதியாய் போற்றி

முழுநீறு சண்ணித்த மூர்த்தி போற்றி

துடியா ரிடையுமையாள் பங்கா போற்றி

சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி

அடியா ரடியாமை யறிவாய் போற்றி

அமரர் பதியாள வைத்தாய் போற்றி

கடியார் புரமூன்று மெய்தாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி. (29)அடியேன் சென்றது மத்திய அரசு நடத்தும் யாத்திரை, இவ்வழியாக செல்ல முடியாமல் நேபாளம் வழியாக செல்ல விரும்புகின்றவர்களுக்கும் உதவும் விதமாக, அவ்வழி செல்கின்ற யாத்திரிகள் திருக்கயிலாயம் எவ்வாறு செல்கின்றனர் என்பதை சுருக்கமாக தருகின்றேன்.


பசுபதி நாதர் ஆலயம்


சென்னையிலிருந்து இரயில் மூலமாகவோ அல்லது விமானம் மூலமாகவோ டெல்லி சென்று பின் அங்கிருந்து விமானம் மூலம் நேபாள தலை நகர் காத்மாண்டுவை அடைகின்றனர். ஒரு சில சுற்றுலா நிறுவனங்கள் பெங்களூர் சென்று அங்கிருந்து நேராக காத்மாண்டுவை அடைகின்றனர். நாங்கள் குஹூவில் சந்தித்த குழுவினர் அவ்வாறே வந்திருந்தனர், இவர்களுக்கும் பாஸ்போர்ட் அவசியம் ஆனால் விசா காத்மாண்டுவில் வழங்கப்படுகின்றது, இங்கும் குழு விசாதான் வழங்கப்படுகின்றது குறைந்தது ஐந்து பேராவது ஒரு குழுவிற்கு வேண்டும்.


போதி நாத் புத்த விஹாரம்


அடியேன் நண்பர் திரு. இராஜேஸ்வர் அவர்கள் நேபாள் வழியாக ஜூலை மாதம் 2006ல் யாத்திரை மேற்கொண்டார் அவரது அனுபவத்தை விவரித்துள்ளேன், அவர் சென்னையில் உள்ள Travel masters India (TMI) என்ற நிறுவனத்தின் மூலம் இந்த யாத்திரையை மேற்கொண்டார். நேபாள் பகுதியில் Heritage tours and travels என்ற நிறுவனத்தினர் இவர்களது யாத்திரை சம்பந்தமான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டனர். அவர் டெல்லி சென்று பின் அங்கிருந்து காத்மாண்டுவை அடைந்தார். முதல் நாள் காத்மாண்டு்வில், ஹோட்டலிலே தங்க வைக்கப்பட்டார் அன்று யாத்திரை பற்றிய குறிப்புகள் வழங்கப்பட்டது.


முதல் நாள் நிலச் சரிவு


இரண்டாம் நாள் காலையில் காத்மாண்டுவில் பசுபதி நாதர் கோவில் , சக்தி பீடமான குஹ்யேஸ்வரி கோவில் போதிநாத் ஆலயம் (புத்த விகாரம்) ஆகிய கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தனர். மதியத்திற்கு மேல் யாத்திரைக்கு தேவையான பொருட்களை சுற்றுலா நிறுவனத்தினர் வழங்கினர். ஒரு பை, எண் இடப்பட்டது , ஒரு மூக்கு கவசம், ஒரு தூங்கும் பை ( Sleeping bag), ஒரு பெரிய கோட் முதலியன அனைவருக்கும் வழங்கினர், கைத்தடி வேண்டியவர்களுக்கு அடக்க விலையில் விற்றனர். அவர் கொண்டு சென்ற பொருட்களை (suit caseல் கொண்டு சென்றதை ) அந்த பைக்கு மாற்றிக் கொண்டார். அடையாளத்திற்காக எண் இடப்பட்டிருப்பதால் அவரவர்களுடைய பை சரியாக அவரவர்களின் அறைக்கு செர்பாக்களால் சேர்க்கப்பட்டதாக கூறினார். முந்தைய நாள் யாத்திரிகள் அதிகமாக சென்றதால் ஜ“ப்பிற்கு சிறிது சிரமம் ஏற்பட்டது ஆனால் எப்படியோ சுற்றுலா நிறுவனத்தினர் மாற்று ஜ“ப்புகளை ஏற்பாடு செய்து கொடுத்தார்களாம்.


நேபாளத்தையும் சீனாவையும் இணைக்கும் நட்பு பாலம்


மூன்றாம் நாள் காத்மாண்டுவிலிருந்து கோடாரி வழியாக ஜாங்மூக்கு புறப்பட்டனர். யாத்திரையின் முதல் நாளே அவரது குழு ஒரு நிலச்சரிவை சந்திக்க வேண்டி வந்தது எனவே அவர்களது பயணம் நான்கு மணி நேரம் தாமதப்பட்டது. ஆயினும் நேபாள சீன எல்லை எப்போதும் மாலை 6 மணிக்கே மூடப்படுவது, அன்று இவர்கள் செல்லும் வரை திறந்திருந்ததாக கூறினார். ஒரு ஜ“ப்பில் யாத்திரிகள் நால்வர் ஒரு ஓட்டுனர், ஒரு சேர்பா என ஆறு பேர் பயணம் செய்தார்களாம். சில பைகள் ஜ“ப்பிலேயே சென்றன, மற்றவை லாரி மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. பின் நட்புப்பாலம் வழியாக நடந்து žனாவிற்குள் நுழைந்து நுழைவு சம்பிரதாயங்களை முடித்து ஜாங்மூ (3800மீ)அடைந்தனர். பன்னாட்டு எல்லையை கடக்க வண்டிகள் அனுமதிக்கப்படுவது இல்லையால் அவர்களது பொருட்கள் இறக்கப்பட்டு பின் போர்ட்டர்கள் மூலம் சீனாவிற்குள் எடுத்து செல்லப்பட்டதாம். ஜாங்மூவிலிருந்து பின் žLand Cruiser ஜ“ப்களில் நைலமூ(3750 மீ) அடைந்து அங்கு ஹோட்டலில் தங்கினர், நாள் ஒன்றுக்கு 30 யுவான்கள் வரை சுற்றுலா நிறுவனத்தினர் செலுத்துகின்றனர், அதிகமான வாடகை உள்ள ஹோட்டல்களில் தங்க விரும்பினால் அவ்வாறு தங்க அனுமதித்தார்களாம், ஆனால் அதிகப்படியான கட்டணத்தை யாத்திரிகளே செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன். அவர்கள் குழுவில் இந்தியாவிலிருந்து சென்ற முப்பது பேர்களும், மற்றும் மலேசியாவிலிருந்து வந்திருந்த 14 பேர்களும் கூடவே யாத்திரை செய்தார்களாம். யாத்திரையின் மூன்றாம் நாள் அவர்கள் கிட்டத்தட்ட 150 கி.மீ பயணம் செய்தார்களாம்.நான்காம் நாள் நைலாமூவில் ஓய்வு நாள் உடல் உயர் மட்ட பயணத்திற்கு தயார் ஆகவதற்காக. .


வழியெங்கும் நீர்விழ்ச்சிகள்


ஐந்தாம் நாள் நைலாமூவிலிருந்து புறப்பட்டு லா பக் கணவாய் பெக்கு-சோ வழியாக சாகாவை (4450 மீ) அடைகின்றனர். பாதை மிகவும் ரம்மியமாக இருந்தது 100 அடிக்கு ஒரு நீர் வீழ்ச்சி, வழியில் இயற்கையின் அழகை இரசித்துக் கொண்டே சென்றார்களாம். அவர்கள் பயணம் சென்றதும் நதியை ஒட்டியே, நேபாளத்தையும், சீனாவையும் பிரிக்கும் ஆறு. சுற்றுலா நிறுவனத்திரே சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்கின்றனர். சமையல்காரர்கள், மற்றும் சமையலுக்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் அவர்களே லாரிகளில் எடுத்து செல்கின்றனர். காலையில் எளிய உணவே வழங்குகின்றனர். பகலும் இரவும் அனைவருக்கும் ஏற்ற உணவை வழங்கினார்கள் என்று கூறினார். பரிக்கிரமாவின் போது கூட மதிய உணவிற்காக சிறிது உணவு கட்டி கொடுத்து விட்டார்களாம். ஆகவே எந்த சமயத்திலும் உணவிற்காக இவர்களுக்கு பிரச்சினை இருக்கவில்லை. இன்று இவர்கள் யாத்திரையின் மிகவும் கடினமான மற்றும் மிகவும் நீண்ட தூரமான பயணத்தை மேற் கொண்டார்களாம். மிகவும் களைத்து விட்டதாக நண்பர் கூறினார். 12 மணி நேரத்திற்கு மேலாக பயணம் செய்து சாகாவை அடைந்தார்களாம். சாகாவிலும் ஒரு ஹோட்டலில் தங்கினார்களாம். ஹோட்டலுக்கு அருகிலேயே சீன ராணுவ முகாம்கள் இருந்ததாம், அங்கங்கு ராணுவ தளங்களை புகைப்படம் எடுக்கவேண்டாம் என்று எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன என்று கூறினார். சென்ற வருடம் முதல் சாகாவில் பிரமபுத்திராவின் குறுக்கே ஒரு பெரிய பாலம் கட்டப்பட்டிருப்பதால் இவர்கள் படகு மூலம் பிரமபுத்திராவை கடக்க வேண்டிய அவசியமேற்படவில்லை என்றார். அதனால் கிட்டதட்ட நான்கு மணி நேரம் படகுக்காக காத்திருக்க வேண்டிய சமயம் குறைந்தது என்றார். தற்போது சீனப்பகுதியிலும் யாத்திரிகளுக்கான வசதிகளில் முன்னேற்றம் ஏற்படுகின்றது என்பதற்கு இது ஒரு சான்று.


ஆறாம் நாள் சாகாவிலிருந்து புறப்பட்டு பரியாங் (4600 மீ) என்னும் இடத்தை அடைந்து அங்கு தங்குகின்றனர். இன்று இவர்கள் 185 கி, மீ ஜ“ப்பில் பயணம் செய்கின்றனர்.


நேபாள் வழி யாத்திரை இன்னும் தொடரும்........


*********

Om Namah Shivay

Kailashi ji.

I was part of the 7th batch in 2007 - 7th July to 31st July 2007.

I have posted some photos at

picasaweb.google.com/jeyceebeeYou can check this and may pass on the link to fellow yatris.

இப்பதிவுகளை கண்ட ஒரு அன்பர் ஜகதீஸ் அவர்கள் தாம் சென்ற யாத்திரையின் புகைப்படங்களை பிகாசோவில் இட்டிருப்பதை கூறினார் அவ்விடமும் சென்று தரிசனம் பெற வேண்டுகிறேன்.


Wednesday, January 28, 2009

Kailash Manasarovar darshan (yatra) - 28/29

25th day Darchula to Jagheswar Bus journey – 300 Km


This 25th day was a day of hectic traveling. As the Indian side of the yatra is taken care of by KMVN the tourism corporation of Uttaranchal Government normally they include visit two important pilgrimage places in the itinerary. Thus Pathal Buvaneshwar and Jageshwar were include in this year’s yatra. We left early in the morning and went to the local temple at Daruchula which is the local deity of L.O worshipped mother Kali there and then proceeded to Mirthi the Head quarters of ITBP.


At Mirthi, HeadQuarters of ITBP

On the onward journey we missed this place because of land slides, there ITBP commander hosted us breakfast and presented us with the group photos shot at Ogla. We all thanked them for their yeomen service and left for Pathal Bhuvaneswar the bus journey was tiresome after a hectic yatra .
Pathal Bhuvaneswar

In Pathal Bhuvaneswar there is a cave temple which contains stalactite which resemble many puranic incidents , the author has also seen many caves at different places but the formations here were entirely different and correlated to the incidents described after as visit to the caves lunch was served at KMVN Guest house . We left for Jogeshwar this journey was also long and we reached Jageshwar in the night and took a well deserved rest.
****************


26th day Jageshwar back to Delhi

Jageshwar temple complex

Jageshwar also called as Dharuka Van, because of the abundance of Theva Dharu trees is revered as Jyotir Linga sthal of Uttaranchal. The main deity here is Lord Shiva as Mrrithynjaya ( The victor of death) and Nageshwara ( The Lord with Snakes) which is considered as the Jyotir Linga ( Linga of light) and His consort Aputhi ambal, other important shrines are Kedareswara, Annapoorani, Durga and Baduga Bairava. There are a total of 300 small and big shrines in this temple complex.


The Gigantic Davatharu Tree at Jageshwar

As we were told that the early morning pooja is at 3’o clock we all got up early and were at the temple for the pooja and witnessed the ablutions to the Lord we saw the big Devatharu tree whose circumference was about 5 mts and height around 90 mts and returned to the guest house and had photo session as we will be going to our respective places. Just as we left Jageshwar there was a slight held up at a village just oustside of Jageshwar we sat on the road and chanted bhajans, we were lucky that the road rook was lifted in about 2 hrs we continued our journey and reached Kathakodam, two yatris Mr Kanjan Chaudhary and Sharmista Dutta took leave of us as there was direct train to Kolkata from there. We all bid them farewell with heavy heart.

Adiyen with shri Tapaswi in front of Jageshwar Guest house


We continued our journey to Delhi and in between it rained heavily but when we reached Delhi the rain had stopped. We all stayed in Gujarati Sadan. Our L.O had arranged for our Yatra certificates and were delivered to us at Gujarati sadan. Most of us didn’t sleep that day night we were just going through the finer moments and the grace of Shiv Sakthi, in the morning the author bid adieu to all others especially Mr.Tapaswi who was more than a brother and Mr. Dhanuskodi and left for Chennai and reached Chennai.

With this posting the yatra through Indian side is complete. From the next posting we will see in brief the yatra through Nepal so that prospective yatri's will have a complete picture about the Kailash Manasarovar yatra.

Monday, January 26, 2009

கண்டேன் அவர் திருப்பாதம் (திருக்கயிலாய தரிசனம்) -29

26ம் நாள் ஜாகேஸ்வரிலிருந்து டெல்லி பேருந்து பயணம்
*********

அப்பர் பெருமான் அருளிச்செய்த
போற்றித் திருத்தாண்டகம்


திருக்கயிலாயம்

உரியா உலகினுக் கெல்லாம் போற்றி

உணர்வென்னு மூர்வதுடையாய் போற்றி

எரியாய தெய்வச் சுடரே போற்றி

ஏசுமா முண்டியுடையாய் போற்றி

அரியா அமரர்கட் கெல்லாம் போற்றி

அறிவே அடக்கமுடையாய் போற்றி

கரியானுக் காழியன் றீந்தாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி (27)

****************

ஜாகேஸ்வரர் கோவில் வளாகம்

யாத்திரையின் 26ம் நாள் அதிகாலையில் எழுந்து KMVN சுற்றுலா விடுதிக்கு நேர் எதிரே உள்ள ஜாகேஸ்வர் கோவில் வளாகத்திற்கு சென்றோம், இந்த வளாகத்திலே மொத்தம் 200க்கும் மேற்பட்ட தெய்வ சந்திகள் உள்ளன. தேவதாரு மரங்கள் நிறைந்திருப்பதால் தாருகாவனம் என்றும் அழைக்கப்படுகின்றது.ஒரு மரம் மிகவும் பெரியதாக இருந்தது நான்கு பேர் சேர்ந்தால் தான் அதன் சுற்ற்ளவை அளக்க முடியும் அவ்வளவு அதிக சுற்றளவுள்ள உயரமான தேவதாரு மரம்.

அவ்வளாகத்தில்் உள்ள முக்கிய சன்னிதிகள், மிருத்யுஞ்சயர், "தாருகாவனே நாகேஸ்வர் "என்றபடி, நாகேஸ்வரர் சந்தியும் உள்ளது இவரை ஜோதிர் லிங்கம் என்று இங்குள்ளவர்கள் நம்புகின்றனர். மேலும் அம்பாளுக்கு தனி சந்நிதி, அம்மையின் திருநாமம் ஆபூதி அம்பாள், மேலும், கேதாரிஸ்வரர், அன்னபூரணி, துர்க்கை, அனுமன், வடுக பைரவர் ஆகியோர்களுக்கும் சன்னதிகளும் உள்ளன..

திரு தபஸ்வியுடன் ஜாகேஸ்வர் சுற்றுலா விடுதியில்

பின் டெல்லிக்காக கிளம்பினோம். கடைசியாகவும் எங்களை சோதிக்க விரும்பிய எம்பெருமான் ஒரு சிறு சிரமத்தை கொடுத்தார். வழியிலே ஒரு சிறு தடங்கல், பாதை அடைப்பு ஆகவே எங்கள் பேருந்து நிறுத்தப்பட்டது. அனைவரும் சாலையில் உட்கார்ந்து சிவபெருமானை நோக்கி பஜனை செய்தோம், சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. கரும் பச்சை, வெளிர் பச்சை, பச்சை என்று ஓடிய நதிகளை ரசித்துக் கொண்டே வந்தோம்.

கொல்லு தேவதா கோவிலில் திரு தனுஷ்கோடி

வழியிலே கொல்லு தேவதா எனப்படும் தெய்வத்தின் கோவிலுக்கு சென்று வழிபட்டோம் மிகச்சிறந்த பிரார்த்தனை ஸ்தலம். கோவிலெங்கும் மணிகள் கட்டப்பட்டிருக்கின்றன. பிரார்த்தனை நிறைவேறிய பின் கட்டியவை பெரிய மணியிலிருந்து சிறிய மணி என வழி நெடுக மணிகள். மாலை மூன்று மணியளவில் காத்தகோடம் வந்து அடைந்தோம். வங்காளத்திலிருந்து வந்திருந்த இரு யாத்திரிகள் அங்கிருந்தே கொல்கத்தாவிற்கு இரயில் வண்டி இருந்ததால் அனைவரிடமும் பிரியா விடை பெற்றனர். ஒரு மாத காலம் ஒன்றாக துன்பங்களையும் இன்பங்களையும் அனுபவித்த அவர்கள் பிரிந்து சென்ற போது கஷ்டமாகவே இருந்தது.

மாதா ச பார்வதி தேவி
பிதா தேவோ மஹேஸ்வர:
பாந்தவா சிவ பக்தா ச
ஸ்வதேசோ புவன த்ரயம்

என்ற படி நாம் அனைத்து சிவ பக்தர்களும் உறவினர்கள் என்ற உணர்வுடன் பிரிந்தோம். அங்கிருந்து பின் பொருட்களை ஒரு பெரிய பேருந்துக்கு மாற்றி, இரவு 11 மணியளவில் டெல்லி வந்தடைந்தோம். ந'ங்கள் டெல்லியில் நுழையும் போது இறைவன் வருண பகவானை அனுப்பி எங்களை ஆசிர்வதித்தான். ஆம் மழை எங்களை வரவேற்றது. குஜராத் சதன் அடைந்ததும் வெளியுறவுத் துறை வழங்கும் கைலாய யாத்திரையை முடித்த சான்றிதழ் எல்லாருடைய கையிலும் கிடைத்தது, எங்கள் L.O அதற்கான முயற்சிகளை செய்திருந்தார். அன்று இரவு நாங்கள் அனைவரும் உறங்கவேயில்லை, காலையில் எல்லோரும் அவரவருடைய ஊருக்கு செல்ல வேண்டும் என்பதால் யாத்திரையைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.

எண்மேலு மெண்ண முடையாய் போற்றி

ஏறரிய வேறுங் குணத்தாய் போற்றி

பண்மேலே பாவித் திருந்தாய் போற்றி

பண்ணோடி யாழ்வீணை பயிற்றாய் போற்றி

விண்மேலு மேலு நிமிர்ந்தாய் போற்றி

மேலார்கள் மேலார்கள் மேலாய் போற்றி

கண் மேலுங் கண்ணொன் றுடையாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி (28)

************27ம் நாள் சிவசக்தி தரிசனம் முடித்து இல்லம் திரும்பிய நாள் - யாத்திரை சுப நிறைவு.

மலையரசன் பொற்பாவை சமேத திருக்கயிலை நாதரின் மாப்பெருங்கருணையினால் அவர்களின் அருமையான திருத்தரிசனம் பெற்று அ
வர்களை கிரி வலம் வந்து வணங்கி அவர்களின் இணையார் திருவடிகளில் வீழ்ந்து வணங்கும் வாய்ப்பைத் தந்த , அந்த பரம பிதாவிற்கும், ஜகன் நாயகிக்கும், மிகவும் அருமையான ஒரு யாத்திரையை கொடுத்தற்கு மனதில் கோடி கோடி நன்றியுடன் சென்னை திரும்பினேன் .

இனி மேல் கயிலாய யாத்திரை செல்பவர்களுக்கு உதவ வேண்டும் அதே சமயத்தில் அந்த பரம் பொருளின் புகழையும் எடுத்து இயம்பவேண்டும் என்ற எண்ணத்தை அந்த இறைவனே எண்ணுள் ஏற்படுத்தினான் அதனால் உருவானதே இவ்வலைப்பூ. மேலும் இப்பதிவில் உள்ள போற்றித் திருத்தாண்டகத்தை நம்பிக்கையுடன் எம்பெருமான் முன் திருவிளக்கேற்றி பாராயணம் செய்து வந்தால் அவர் கைலாய தரிசனம் தருவார் என்பது நிச்சயம்.

ஒம் நமசிவாய

இதுவரை விரிவாக இந்தியப்பகுதியில் செல்லும் யாத்தி்ரை பற்றி விரிவாக கண்டோம். நேபாள் வழியாக செல்லும் விழையும் அன்பர்களுக்கும் விதமாக அவ்வழி யாத்திரை பற்றி இனி வரும் பதிவுகளில் சுருக்கமாக காணலாம்.