Saturday, December 05, 2009

திருக்கயிலாய யாத்திரை 2009 -6

சென்ற பதிவைப் பார்த்து திரு. கயிலை பாலா அவர்கள் இன்னும் சில புகைப்படங்களை அனுப்பி வைத்தார் அவை இப்பதிவில் இடம்பெறுகின்றன. இவையும் முதல் நாள் கிரி வலத்தின் காட்சிகளே.

Shri. Kailai Bala was kind enough to send some more photographs of the first day's parikrama. The same is presented in this post.



தங்கள் உடைமைகளை சுமந்து கொண்டு கிரி வலத்தை தொடரும் யாத்திரிகள்.


Yatris undertaking the parikrama with luggage in hand



சத்யோஜாத முகத்தின் முன் புறம் உள்ள நந்தி

Nandi before the west face (close-up)



கிரி வலம் செல்லும் போது முழுவதும் நடந்து செல்ல முடியாதவர்கள், மட்டக்குதிரையையோ அல்லது யாக் என்னும் பிராணியையோ பயன் படுத்தலாம். குதிரையை பயன் படுத்துபவர்களுக்கு குதிரைகள் குலுக்கள் முறையில் ஒதுக்கப்படுகின்றன. ஒரு குதிரையுடன் அதன் ஓட்டுநரும் வருவார் என்பதால், குதிரையில் செல்வது நல்லது.


குதிரைக்காக குலுக்கள் நடைபெறுகின்றது.



For those who want to use ponies for parikrama of Holy Kailash the horse and it's handler are allotted by draw of lots. If you use Yak then one handler handles no of Yaks so better avoid using yak for parikrama.


Draw of lots for allottment of ponies.

Out of the 21 yatris only 5 engaged ponies on the 1st day and another 2 on the 2nd and 3rd day. 14 of us did the full 3 days parikrama by walking.

இவரது குழுவில் 21 யாத்திரிகளில் 14 பேர் நடந்தே கிரி வலத்தை முடித்தனர். முதல் நாள் 5 பேரும், இரண்டாம் நாள் மற்றிம் இரண்டு பேரும் குதிரையை பயன்படுத்தினர்.


One yatri (Nada) and his porter

சாமன்களை சுமந்து செல்ல சிலர் அங்குள்ள போர்ட்டர்களைப் பயன்படுத்துகின்ரனர். அங்குள்ள மக்களுக்கு ஒரு உதவியாக இருக்கும் என்பதால் தேவைப் படுகின்றதோ இல்லையோ போர்ட்டர்களை வாடகைக்கு அமர்த்திக் கொள்வது நல்லது.

யாத்திரியுடன் அவரது போர்ட்டர்

ஆத்ம லிங்க தரிசனம்

இனி அடுத்த பதிவில் இரண்டாம் நாள் கிரி வலத்தின் காட்சிகளை கண்டு களிப்போம்.

Monday, November 30, 2009

திருக்கயிலாய யாத்திரை 2009 -5

முதல் நாள் கிரிவலம் தொடர்கின்றது

வடக்கு முகத்தின் கீழ் ஐயனுக்கு அபிஷேகம்

Ablutions to Lord at the feet of Northern face.

அம்பலக்கூத்தருக்கு ஆனந்தமாக திருநீர் அபிஷேகம் நடைபெறுகின்றது இங்கே. முதல் நாள் கிரி வலம் முடித்தபின் யாத்திரிகள் டேராபுக் முகாமை அடைந்து தங்குகின்றனர். இம்முகாம் ஐயனின் வடக்கு முகத்தின் நேர் கீழே அமைந்துள்ளது. சன்னல் வழியாக இரவு முழுவதும் , ஜன்னல் திருக்கயிலை பக்கமாக அமைந்துள்ளது, எனவே ஐயனின் அற்புத தரிசனம் பெறலாம். முகாமிலிருந்து மலை ஏறி சென்றால் ஐயனின் முகத்தில் இருந்து ஓடி வரும் நதியை காண்கிறோம் அங்கே நாம் கொண்டு சென்ற நம்முடைய தெய்வ மூர்த்தங்களுக்கு அபிஷேகம் செய்து அப்படியே திருக்கயிலை நாதருக்கும் பூஜை செய்கின்றோம். இங்கே ஆனந்த நடராஜ மூர்த்தி, சிவலிங்கம், நந்தி, ஸ்ரீசக்ரத்திற்கு அபிஷேகம் நடைபெறுகின்றது.



After first days parikrama the yatri's stay at the feet of the Lord. Right in front of the Northern face of the Lord. This place is called Derapuk which means cave of the female yak's horn. here we can try some rock climbing, there we can see the river flowing from the face of the Lord. There the yartis do ablutions to their personal God icons. In the picture you see Vibuthi abishekam to Lord Nataraja, Sivalingam and Sri Chakram and Nandi.


மேற்கு முக தரிசனத்துடன் நந்தி மற்றும் கொடி மரம்

Darshan of the western face of the Lord with Nandi

திருக்கயிலாய கிரிவலத்தின் முதல் நாள் நாம் ஐயனின் அனைத்து முகங்களையும் தரிசனம் செய்கின்றோம். காலை தார்ச்சனில் கிழக்கு முகம் மற்றும் கிழக்கு முகத்தின் ஒரு பகுதியின் தரிசனம் செய்கின்றோம். பின்னர் யமதுவாரம் அடைந்து ஐயனின் தெற்கு முகத்தின் முழு தரிசனம், கணேசர் மற்றும் நந்தி தரிசனம் பெறுகின்றோம். பின்னர் நடைப்பயணம் தொடங்கி மேற்கு முகம் அடைந்து அம்முக தரிசனம் பெறுகின்றோம். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு நடைப்பயணத்தை தொடர்ந்து டேராபுக் முகாமை அடைந்து அங்கு தங்குகின்றோம் ஐயனின் நாகக்குடையுடன் கூடிய வடக்கு முகத்தை தரிசனம் செய்கின்றோம். இப்படத்தில் திபெத்தியர்களின் கொடி மரம், ஐயனின் வலப்புறம் மேற்கு முகத்தின் எதிரே உள்ள நந்தி மற்றும் ஐயனின் மேற்கு முகத்தை தரிசனம் செய்கின்றோம்.

In this first day of the parikrama we have the darshan of all the four faces of the Lord. At Darchen we get the glimpse of south and eastern faces. Then we travel by vehicle to Tordoche and yamdwar is situated here from here we get the full view of South face and around lunch time we have the darshan of western face of the Lord. They end the first day's parikrama at the Northern face of the Lord. This is the prostration point infront of the western face of the Lord. We also see the Nandi and flag post of the Tibetians.

மேற்கு முகத்தின் எதிரே உள்ள நந்தியெம்பெருமான்

Nandi in front of the West face.


வெள்ளிப்பனி மலையாம் திருக்கயிலையில் சொக்க தங்கத்தால் ஆன ஊஞ்சலில், நவரத்னங்கள் மாலையாக தொங்க, திருமேனியெங்கும் பால் வெண்ணீறு அணிந்து, பிறைச் சந்திரன், கங்கை சடா முடியில் அணிந்து, திருமேனியெங்கும் நாகங்கள் விளையாட அருள் பாலிக்கும் பவள வண்ணர், நீலகண்டர் சிவபெருமான் மற்றும் பச்சை பசுங்கொடி, பர்வத ராஜகுமாரி, கௌரி, உமையம்மை இருவரையும் தமது மூச்சுக் காற்றினால் ஆட்டி குளிர்வித்துக் கொண்டிருப்பவர் நந்தியெம்பெருமான். இந்த அமைப்பை நாம் திருக்கயிலாய மலையில் கண்கூடாகக் காணலாம். ஐயனின் மேற்கு முகத்தின் முன் உள்ள நந்தியெம்பெருமான்.

Nandi is first among the devotees of the Lord. According to legend, when Lord Shiva and Mother Parvati are seated in the Golden swing , Nandi swings the swing by his breath. We can see Nandi in front of all the faces of the Lord. This is the Nandi in front of the western face of the Lord.



சத்யோஜாதம் என்று அழைக்கப்படும் ஐயனின் மேற்கு முக தரிசனம்.

The darshan of full view of the Western aspect of the Lord.

ஐயனின் மேற்கு முகம் மற்றும் வடக்கு முகம் இரண்டும் இனைந்த அற்புத தரிசனம், டேராப்புக் முகாமை நோக்கி நாம் செல்லும் போது இந்த தரிசனத்தை நாம் பெறுகின்றோம். ஒரு பிரமிட் போன்று தோன்றுகிறதா? இந்தப் பக்கம் இருந்து பார்த்தால், ஆனால் அதுவே தெற்கு முகத்திலிருந்து பார்த்தால் ஒரு பிரம்மாண்ட சிவலிங்கம் போல் அல்லவா காட்சி நமக்கு கிடைக்கின்றது. அது தான் இந்தக் கயிலாய மலையின் தனி சிறப்பு. இவ்வுலகில் உள்ள அனைத்து கோயில்களையும் இங்கே நாம் காணலாம்.



This is the view of the two faces of the Lord as we near Derapuk we get this wonderful darshan. We have the darshan of the west face as well as the North face of the Lord. In this view Kailsh resembles a pyramid but when we see from the south face it resembles a Shiva Linga, this is the uniqueness of this peak.


காப்பு மலைகளுக்கு இடையில் உதிக்கின்ற செங்கதிர் போல தரிசனம் தரும் ஐயனின் வடக்கு முகம். இம்முகத்தில் நாகக்குடையை நாம் தரிசனம் செய்கின்றோம். சிவ சக்தியையும் நாம் இம்முகத்தில் தரிசனம் செய்கின்றோம்.

வாம தேவ முக தரிசனம்

Northern face of the Lord.



நேபாள் வழியாக செல்லும் போது நமக்கு முழு நிலாவன்று மானசரோவரை தரிசனம் செய்யும் அற்புத வாய்ப்பு கிடைக்கின்றது. பூரண சந்திரன் தனது அமுத கலைகளால் மானசரோவரை ஒளிர்விக்கும் அந்த காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும். இங்கே டேராபுக் முகாமில் சந்திரன் ஒளிர்கின்றான்.

When we travel through Nepal, the tour operators normally schedule the yatra to coincide with full moon day. Normally we get a chance to view Holy Lake Manasarovar in the cool rays of fullmoon. Here we see the near full moon on the horizon at Derapuk.