Tuesday, December 28, 2010

திருக்கயிலாய உள் கிரி வலம் - 1

உள் கிரிவல வரை படம்



மேலே உள்ள வரை படத்தில் வெளி கிரி வலம் மற்றும் உள் கிரி வலம் மற்றும் நந்தி கிரிவலப்பாதைகளின் பாதை தெளிவாக காட்டப்பட்டுள்ளது. இறைவனை முழு அலங்காரத்தில் சர்வாபரண பூஷிதனாக தரிசனம் செய்தாலும் அபிஷேக காலங்களில் ஐயனின் உண்மையான சொரூபத்தை அப்படியே தரிசனம் செய்வதும் ஒரு அழகுதானே. அது போல வெளி பரிக்கிரமாவின் போது தூரத்திலிருந்து ஐயனின் கொடுமுடியை திவ்யமாக தரிசனம் செய்தாலும் ஐயனின் மிக அருகே சென்று அவரின் திருமுடியிலிருந்து விழுகின்ற பனியில் உருண்டு புரண்டு வணங்கும் அந்த பாக்கியம் வெகு சிலருக்கு மட்டுமே வாய்க்கின்றது. இவ்வாறு உள் கிரி வலம் செய்யும் வாய்ப்பு திரு. கயிலை பாலா அவர்களுக்கு வாய்த்தது. அவர் அனுப்பிய புகைப்படங்களின் தொகுப்பே இனி வரும் பதிவுகள். அடியேன் நேரடியாக உள் கிரி வலம் செய்ததில்லை என்பதால் ஏதாவது தவறு ஏற்பட்டால் அதை அன்பர்கள் அடியேனுக்கு தெரியப்படுத்தினால் அதை சரி செய்ய ஏதுவாக இருக்கும்.

Day 15 : Drive from Darchen to Sheralung Gompa then trek to Dirapuk
Early Morning (3 :00 AM) jeeps will drive to Sheralung Monastery starts Kailash Parikarma. Reach Diraphuk overnight Guesthouse.
Day 16 : Dirapuk
Full day at North face of Holy Mountain. Special Puja and hawan will be performed and a short walk to have closer view of Holy Kailash ( Charan Sparsh ). Overnight Guesthouse.


மேலே உள்ள வரை படத்தில் காட்டியுள்ளபடி முதலில் டார்ச்சன் ஆதார முகாமிலிருந்து தான் உள் கிரிவலமும் தொடங்குகின்றது. டார்ச்சனிலிருந்து அஷ்டபத் செல்லும் வழியில் முதலில் வண்டிகளின் மூலமாக செர்லங் புத்தவிகாரத்தை அடைந்து அங்கிருந்து நடைப்பயணத்தை தொடங்குகின்றனர். பின் ஐயனின் ஸத்யோஜாத முகத்தின் தரிசனம் மிக அருகாமையில் பெற்று டேராபுக் அடைந்து அங்கு தங்கி ஐயனின் வாமதேவ முக தரிசனமும் பெறுகின்றனர் அங்கு ஒரு நாள் தங்கி பூஜை முடித்து சரண ஸ்பரிஷமும் பெறுகின்றனர் அந்த காட்சிகளை இப்பதிவில் காணலாம்.



டார்ச்சனில் இருந்து கிளம்புகின்றனர்



டேராப்புக்கை நோக்கி நடைப்பயணம் வெளி கிரி வலப்பாதையில்

உள் கிரி வலப்பாதையில் செரிலங் புத்த விகாரத்தில் இருந்து செல்லும் போது திபெத்தியர்களின் மயான பூமிக்கு அருகில் காட்டு நாய்கள் அதிகமாக இருக்கும் என்பதால் வெளி கிரிவலப்பாதை வழியாகவே செல்கின்றனர்(???).



சத்யோஜாத முகம்


ஐயனின் நாக முடி



வடக்கு முகத்தின் சரண ஸ்பரிஷம் பெற
மேலே ஏறி செல்லும் குழுவினர்.

சரண ஸ்பரிஷம்

















உள் கிரி வலம் இன்னும் வளரும் .........










No comments: