Monday, January 04, 2010

Holy Kailash yatra 2009 -11

These are some visuals of the spritual experiences of some of the yatris during the parikrama of Holy Kailash. Shri Kailai Bala has nicely tried to patray the same in picture.

திரு. கயிலை பாலாவுடன் யாத்திரை செய்த சில அன்பர்கள் அனுபவித்த தெய்வீக உணர்வுகள் இங்கே சித்திரமாக காட்டப்பட்டுள்ளன.


தெற்கு முகத்தை தரிசிக்கும் போது ஐயனை தக்ஷிணாமூர்த்தியாக, சொல்லாமல் உண்மைப் பொருளை சின் முத்திரையால் உணர்த்திய ஆதி குருவாக கண்டார் ஒரு அன்பர்.

A yatri had the vision of Adi Guru Shri Dakshinamurthy during the darshan of the South face of the Lord.

During the parikarama the couple were blessed with the vision of the Shiva family ie Lord Shiva, Mother Parvati, Ganesh and Murugan.

கிரி வலம் வரும் போது இந்த தம்பதியினர் சிவ குடும்பத்தை தரிசனக் காட்சி காணும் பேறு பெற்றார்கள்.

மானசரோவர் கரையில் யாகம் நடத்திய போது அகம் மகிழ்ந்த தேவர் குழாம் யாக குண்டத்தின் மேலே நின்று யாத்திரிகளை ஆசீர்வாதம் செய்யும் அற்புத காட்சி ஒரு அன்பர் கண்களுக்கு தோன்றியது.

During the yagna on the banks of Holy Manasarovar one yatri had the divine vision of celestials blessing the yatris.Do you see a Human face with eyes, nose and mouth . This face is formed of ice and is real and has been captured in photo.

ஐயனின் முகத்தை காண்கின்றீர்கள். இரு கண்களும், நாசியும், வாயும் அப்படியே நம்மை மயக்குகின்றன.


தெற்கு முகத்தில் முக்கண் விளங்கும் மேற்பாகத்தில் இன்னொரு முகம்.

View of another face at the three eyes .

இது பனியி்னால் ஆன முகமல்ல ஆனால் கல்லிலேயே முகமாக காட்சி தருகின்றார்.

A real face on the rock of the Holy mountain.Cloud formation like the OM on the Gurla Mandata mountains.

ஓம் என்னும் பிரணவம் மேகங்களினால் ஆனது குர்லா மாந்தாதா மலைகளின் மேல்.

Sunday, January 03, 2010

Holy Kailash yatra 2009 -10

யாத்திரை நிறைவு

தெற்கு முக தரிசனம் நந்தி மற்றும் கணேசருடன்

Holy view of South Face with Ganesh and Nandi

மூன்று நாட்களில் திருக்கயிலாய கிரி வலம் முடித்தபின் யாத்திரிகள் மீண்டும் டார்ச்சன் முகாமை வந்து அடைகின்றனர். அங்கிருந்து அஷ்டபத் சென்று ஐயனின் தெற்கு முக தரிசனத்தை அருகில் இருந்தும் பெறலாம். பின் முகாமில் தங்கியவர்களுடன் சேர்ந்து அனைவரும் தங்கள் இல்லம் செல்ல தங்கள் பயணத்தை துவக்குகின்றனர் மிகுந்த ஆனந்தத்துடன்.

After the completion of three days of parikrama of Holy Kailash with great satisfaction the yatris return back to Darchen base camp. From there they cam travel upto Asthapath and have the close up view of the south face and Ganesh and Nandi. Then they start their return journey to their homes with the satisfaction of a good darshan of Holy Kailash and parikrama.


The group of yatris thank the Lord Shiva and Mother Parvati for a good darshan. May be they are praying that this kind darshan should remain etched in memory for ever and we shoukd get this gokden chance of having your darshan again and again.

மலையரசன் பொற்பாவைக்கும் மலையான் மருகனுக்கும் தங்கள் நன்றியை தெரிவிக்கும் யாத்திரிகள். இந்த அனுபவத்தை நாங்கள் என்றென்றும் மறக்க முடியாது. மறுபடியும் மறுபடியும் தங்கள் தரிசனம் கிட்டவேண்டும் என்று வேண்டி நிற்கின்றனரோ?

The view of Tibetian children playing merrily at the feet of the Lord and also on the banks of Holy Manasarovar. These are nomadic people and graze their yaks and make a living and they do not have any permanent settlement.

ஐயனின் காலடியிலும் மானசரோவர் கரையிலும் விளையாடி மகிழும் திபெத்திய குழந்தைகள். இந்த திபெத்திய மக்கள் தங்கள் யாக் களை மேய்த்துக் கொண்டு நாடோடியாக அலைகின்றனர்.

The majestic view of Gurla Mandata ranges

குர்லா மாந்தாதா மலைத் தொடர்


யாத்திரையை இனிமையாக முடித்து விட்டு டார்ச்செனிலிருந்து கிளம்பி மானசரோவர் கரையில் உள்ள ஹோரேவை அடைந்து மானசரோவர் கிரி வலத்தையும் முடிக்கின்றனர். பின் அங்கிருந்து கிளம்பி பர்யாங், சாகா, நைலாமு வழியாக காத்மாண்டுவை அடைந்து பின் தங்கள் தங்கள் இல்லம் திருகின்றனர்.

At the end of the yatra the yatris leave from Darchen drive to Hore at the banks of Holy Manasarovar and cpmplete the parikrama of Manasarovar also and return to Kathamandu via paryang, Saga and Nylam.

Thanks to Kailai Bala for having allowed adiyen to use his yatra photos in this blog with this we have come to the end of outer parikrama series and with the next post we will start with some stunning views of Holy Kailash during Nandi parikrama and Inner parikrama, hope you will join the yatra in future also.

இப்பதிவுடன் திருக்கயிலாய யாத்திரை நிறைவு பெறுகின்றது. அநேகமாக அனைவரும் வெளி கிரி வலம் மட்டுமே வருகின்றனர். வெகு சிலரே நந்தி கிரி வலமும், உள் கிரி வலமும் வருகின்றனர். திரு கயிலை பாலா அவர்கள் இந்த இரண்டு கிரி வலங்களையும் சென்ற வருடம் முடித்தார் அந்தப் படங்களுடன் நாம் அடுத்த பதிவிலிருந்து காணலாம் அந்த அற்புத தரிசனத்தை, காணக் கிடைக்காத காட்சிகளையும் வந்து கண்டு களிக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

ஓம் நமசிவாய

திரு கயிலை பாலா அவர்கள் திருக்கயிலை செல்ல நினைப்பவர்களுக்கு எப்படி முடியுமோ அது போல சேவை செய்ய ஆவலாக உள்ளார். விரும்பும் அன்பர்கள் அவரைக் கீழ்க் கண்ட மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.Kailai vamadevan Balaspramaniam Arimuthu

kailaibala@gmail.com


மேலும் அவரது புகைப்படங்களின் தொகுப்பை முழுதுமாக காண இங்கே செல்லலாம்.ஐயனின் அருள் மழை இன்னும் பொழியும் .......