Saturday, February 20, 2010

திருக்கயிலாய நந்தி கிரி வலம் - 2

சென்ற பதிவில் நந்தி கிரி வலத்தில் அஷ்டபத்தில் இருந்து கிளம்பி, சிலுங் புத்த விகாரம், அஷ்டபத், ஆத்மலிங்க தரிசனம் கண்டு பின் கைலாய கங்கை சங்கமம் கண்டு ஐயனின் திருவடித்தாமரைகளின் அடியை அடையும் வரை ஆன பகுதியை கண்டோம், இப்பதிவில் நந்தியெம்பெருமானின் முன் பக்க விஸ்பரூப தரிசனமும் சப்த ரிஷி குகையின் தரிசனமும் காண்போம்.

திருகயிலை பாலா அவர்களின் அனுபவத்தை ஆங்கிலத்தில் பார்க்க விரும்புபவர்கள் இங்கே கிளிக்கவும் நந்தி கிரி வலம்.நந்தி கிரி வலத்தின் முக்கிய இடங்களையும் அவைகளுக்கிடையில் உள்ள தூரத்தையும், மொத்த தூரத்தையும், உயரத்தையும் காட்டும் அட்டவணை.
( படத்தை கிளிக்கி பெரிதாகப் பார்க்கலாம்)
மேலே இருந்து விழுந்த கற்களினால் பாதை மிகவும் சிரமமாக இருந்ததால் சேர்ப்பா கும்பு அவர்கள் முன்னே சென்று பாதையை சரி செய்யும் காட்சி. அவருடன் சேர்ப்பா ஆங்செரிங் அவர்களும் உடன் இருக்கின்றார்.
ஆத்ம லிங்க தரிசனத்திற்க்குப் பின் செங்குத்தான சுமார் 0.5 கி, மீ ஏற்றம் மிகவும் கடினமானதாக இருந்ததாம். திருக்கயிலாய மலையின் தெற்கு திருவடி மலை அது கையில் கயிறோ அல்லது வேறு மலை ஏறும் சாதனங்கள் ஏதும் இல்லையாம். இந்த நந்தி கிரி வலத்தின் மிகவும் உயரமான இடம் இது என்பதால் ஆக்ஸிஜன் மிகக் குறைவாகவே இருந்ததாம், அதிலும் செங்குத்தான மலையேற்றம் , மிகவும் சிரமப்பட்டுத்தான் மூச்சு முட்டியதாம், மேலிருந்து கற்கள் விழும் அபாயம் இருந்ததால் சேர்ப்பாக்கள் அப்படியே இவர்களை இழுத்துச்சென்று சப்த ரிஷி குகைகளில் சேர்த்தார்களாம், நடுவில் மூச்சு வாங்க ஒரு நிமிடம் நிற்கககூட முடியவில்லையாம்.

ஒருவர் பின் ஒருவராகத்தான் ஏற முடிந்ததாம் அந்த கடவுள் உருவத்தில் சேர்ப்பாக்கள் கையைப் பிடித்துக்கொண்டு மேலே ஏற்றும் காட்சி படத்தில் கயிலை ஆனந்த்.

மிகவும் மேலே கஷ்டப்பட்டு ஏறும் காட்சிதெற்கு கயிலாயத்தின் திருவடிமலைப்பகுதி செங்குத்தாக இருப்பதையும் மிகவும்
சிரமத்துடன் யாத்திரி ஏறும் பாங்கையும் காட்டும் படம் .
இவ்வளவு சிரமத்துக்கிடையிலும் ஐயனின் கருணை மழை இவர்கள் மேல் பொழிந்த அற்புத காட்சி. மிகவும் சிரமப்பட்டு மேலே ஏறி வரும் தனது அடியார்களை தனது அமுத தாரையினால் ஐயன் குளிமைப்படுத்தும் காட்சி. இதனால் அன்றோ இவரை போலே பாபா ( எளிமையானவர்) என்று வணங்கி மகிழ்கின்றனர் அன்பர்கள்.


கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்

இவ்வளவு கஷ்டப்பட்டு மேலே ஏறி ஐயனின் திருவடியில் இருக்கின்ற சப்த ரிஷி குகையை அடைந்து சிறிது நேரம் பொறுத்துத்தான் அவர்களது மூச்சு சரியாக ஆனதாம். ஐயனின் திருவடியை ஸ்பரிசித்த ஆனந்தத்தில் ஐவரும் சப்தரிஷி குகையை அடைந்தனர்.
சென்னையை சேர்ந்த கயிலை ஆனந்த சுமார் இருபது தடவை திருக்கயிலாய யாத்திரை செய்துள்ளார் , இந்தத் தடவைதான் அவர் வெற்றிகரமாக நந்தி கிரி வலத்தை முடித்துள்ளார். அவர் கயிலை சந்திரா அவர்களுக்கு உதவும் காட்சி. இவ்வளவு கடினமான பாதையில் ஒருவருக்கொருவர் உதவினால்தானே அனைவரும் யாத்திரையை முடிக்க முடியும்.


ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே

எவ்வளவு அருமையான ஒரு வாய்ப்பு, எத்தனை ஜென்ம புண்ணியத்தின் பலனாக இந்த வாய்ப்புக் கிடைத்தது. அந்த சிவசக்தி உளம் மகிழ்ந்து தங்களின் திருவடி ஸ்பரிசம் பெற ஐவரையும் அனுமதித்துள்ளார். அதற்காக தங்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ளும் அன்பர்கள்.


இந்த யாத்திரையை வெற்றிகரமாக நடத்திக்கொடுத்த கயிலை பிமல்
( நிறுவனர் - ECOTREK NEPAL) அவர்கள் அந்த மலையரசன் பொற்பாவைக்கும், திருக்கயிலை நாதருக்கும் தன் நன்றியை தெரிவித்துக் கொள்ளும் காட்சி
உள்ளத்தில் ஆனந்தம் பொங்க கௌரி அம்மைக்கும் மலையரசன் மருகனுக்கும் கண்ணில் ஆனந்த பாஷ்பம் மீதூர இவர்கள் ஐவரும் அப்படியே அமர்ந்து சிவ புராணத்தையும் தேவார திருவாசகப் பாடல்களையும் பாடி அந்த சிவசக்தியை வணங்கி தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். ஐயா உனது திருவடி ஸ்பரிசித்து எங்கள் ஜென்ம சாபல்யம் அடைந்தோம். இனி ஒரு அன்னை கரு வராமல் எங்களை இந்த் சம்ஹார சாகரத்தில் இருந்து காப்பாற்று என்று வேண்டிக் கொண்டார்களாம்.

As a sense of gratitude, we sat and sang some devotional songs. Tears rolled, voice chocked, we were emotionally delighted, we shed the tear of joy, celebrated the attainment of this Parikrama. The full version of Sivapuranam was sung and we couldn’t stop the profusely rolling tears from our eyes as much as we could not stop the intense happiness in our hearts. - Kailai BalaAs a sense of gratitude, we sat and sang some Sivapuranam in full and other devotional songs. Tears rolled, voice chocked, we were emotionally delighted

சப்த ரிஷி குகையில் ஆனந்த ஐவர்

சிவபுராணம் ஓதும் காட்சிKailai Nada, Meganathan, Kailai Vira, Kailai Karul, Devan and Tamila were not gifted to have the holy darshan despite being so near to HIM

அருகில் வந்தும் திருவடி தொழ மட்டுமே முடிந்த அறுவர்

சமயம் அதிகமாகிவிட்டதால் இந்த அறுவரும் ஆத்ம லிங்க தரிசனத்துடனே திரும்பிச்செல்லும் படியாகிவிட்டது. அவர்களுக்கு ஐயனின் திருவடிகளைத் தொட இன்னும் சமயம் வரவில்லை. அனைவரும் மேலே ஏற அனுமதித்தால் இன்னும் சமயம் அதிகமாகும் மேலும் அனைவரும் திரும்பும் போது பிரச்சினை ஏற்படலாம் என்பதால் யாத்திரையை ஏற்பாடு செய்த பிமல் அவர்கள் முடிவு எடுத்தார் இவர்கள் அறுவரும் அந்த முடிவை ஏற்றுக்கொண்டு அங்கேயே இருந்து ஐயனின் அடியை அடைந்த ஐவரும் இன்னும் உள்ள பாதையையும் வெற்றிகரமாக சிவசக்தி அருளால் கடக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அங்கேயே வெகு நேரம் இருந்து பிரார்த்தனை செய்து கொண்டு பின்னர் திரும்பி டார்ச்சன் முகாம் திரும்பி விட்டனர்.


Serdung Chuk Sum - 13 Golden Chortens

சப்தரிஷி குகையில் அமைந்திருக்கும் 13 ஸ்தூபிகள்

ஐயனின் திருவடி நிழலில் அமைந்துள்ள சப்தரிஷி குகை திபெத்திய மொழியில் செர்துங் சுக் சம் என்றும் அழைக்கப்படுகின்றது. செர் என்றால் பொன், துங் என்றால் ஸ்தூபி, சுக் சம் என்றால் பதின்மூன்று, அதாவது பதின்மூன்று பொன் ஸ்தூபிகள் என்று பெயர். இவற்றை உள் கிரி வலப் பாதையில் உள்ள கெங்டா புத்த விகாரத்தினர் பராமரித்து வருகின்றனர். ஐயனின் நிழலில் இவை இருப்பதால் அதிகமாக பழுதடையவும் இல்லை.
These chortens are protected to a certain extend by the long horizontal crack which prevents the rock fall and snow from damaging it.

சப்தரிஷி குகைக்கு வரும் அன்பர்கள் தங்கள் நினைவாக பல பொருட்களை அங்கேயே விட்டுவிட்டு செல்கின்றனர். ஒரு பகவத் கீதை்யை பார்த்ததாக கயிலை பாலா கூறுகின்றார். இவர் தன் பங்கிற்கு ஒரு கல்யாண அழைப்பிதழையும் அவருடைய பெற்றோர்களின் ஸ்தோத்திர புத்தகத்தையும் அம்மையப்பரின் திருவடிகளில் அர்பணித்தாராம்.ஐயனின் திருவடியில் ஐவரும் சுமார் ஒன்றரை மணி நேரம் அமர்ந்து இருந்து சுற்றிலும் உள்ள இயற்கைக் காட்சிகளை கண்டு களித்தனர். பிரார்த்தனை செய்தனர். அதே சமயம் திரும்பி செல்வதற்கான யாத்திரைக்காக தங்கள் உடலுக்கு வேண்டிய ஒய்வெடுத்துக் கொண்டனர்.

Group photo for the Album

Kailashis Chandra, Bala, Rajan, Karu, Nagarajan, Bimal, Krishna, Basu and porters are seen in this photo.

( Sherpa Angsering and Kailai Anantha not seen )


நந்தி கிரி வலத்தின் போது கிடைத்த ஒரு அற்புதக்காட்சி


ஐயனின் பூதப்படையின் முதல்வர் நந்தியெம்பெருமான், வெள்ளை விடையாக ஐயனை எப்போதும் தாங்கும் பேறு பெற்றவர் இவரே. ஐயனின் வாகனமும் கொடியும் ரிஷபம் எனப்படும் நந்திதான். மேலும் திருக்கயிலாய மலையை காவல் காப்பவர் இவரே , யாரை ஐயனை தரிசனம் செய்ய உள்ளே அனுமதிக்கலாம் என்னும் அதிகாரம் பெற்றவர் இவர் என்பதால் இவர் அதிகார நந்தி என்றும் அழைக்கப்படுகின்றார். ஐயனின் மானும் மழுவும் கரங்களில் ஏந்தி பொற்பிரம்பு கையில் ஏந்தி திருக்கயிலை மலையை காவல் காக்கும் அதிகார நந்தி வாகனத்தில் சிவபெருமான் பிரம்மோற்சவ காலங்களில் மூன்றாம் நாள் காலை அதிகார நந்தி வாகனத்தில் சேவை சாதிப்பதை காண்பதே ஒரு அழகு. இவர் மனைவி சுயம்பிரபா தேவி. பிரதோஷ காலத்தில் சிவ பெருமான் தியாகராஜன் நந்தி தேவரின் கொம்புகளுக்கிடையில் ஆனந்த தாண்டவம் ஆடியதால் பிரதோஷ வேளையில் நந்தியெம்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது. சிவ நிந்தணை செய்த இராவணன், தக்ஷன் ஆகியோருக்கு சாபம் கொடுத்து அவர்கள் அழிவுக்கு வழி வகுத்தவர் நந்தி தேவர் ஆவார். தாங்கள் கீழே காண்பது அந்த நந்தி தேவரின் முன்பக்க விஸ்வரூப தரிசனம். நாம் அநேகமாக வெளி கிரி வலம் செய்யும் காலத்தில் நந்தியின் பின் பக்க தரிசனம் மட்டுமே கிடைக்கின்றது. இந்த முன்பக்க தரிசனம் பெற்ற கயிலை பாலாவிற்கு அநேக நன்றிகள் இதை அனைவருடனும் பகிர்ந்து கொண்டதற்காக.


Nandhi Bhagawan in full Viswaroopam


The above photo of Nandhi Bhagavan in viswaroopa is unique and a very rare seen anywhere. The usual view is the one taken from Astapad. This photo was taken from the Saptarishi Caves.நந்தி கிரி வலம் தொடரும் ..............