Tuesday, August 09, 2011

திருக்கயிலாய யாத்திரை 2011 -4

ஒம் நமசிவாய




அப்பர் பெருமான் அருளிச்செய்த போற்றித் திருத்தாண்டகம்


திருக்கயிலாயம்

வானத்தார் போற்றும் மருந்தே போற்றி


வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கும் உடலே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி


தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
தேவர்க்கும் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ யாட லுகந்தாய் போற்றி


கயிலை மலையானே போற்றி போற்றி (4)




திருக்கயிலாய மலை எல்லை கடந்த இமயத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 18000 அடிக்கு மேல் அமைந்துள்ளது. வருடத்தின் பாதி நாள் பனி மூடியிருக்கும். சீதோஷண நிலை ஒரே சீராக இருக்காது. மேலே செல்ல செல்ல காற்றில் பிராணவாயு குறையும். எனவே யாரும் நினைத்தவுடன் அங்கு சென்றுவிட முடியாது. மலையேறும் போது ஒரேயடியாக அதிக உயரம் ஏறினால் உயர்மட்ட நோய்களுக்கு உள்ளாக நேரிடலாம். இவை எல்லாவற்றையும் மனதில் கொண்டு யாத்திரையின் இந்த நான்காம் நாள் ( 10-05-11) நைலமில் ஓய்வு நாளாக அமைந்தது. இதனால் யாத்திரிகளின் உடம்பு அடுத்து வரும் உயர் மட்டங்களுக்கு தயாராகி விடும் வாய்ப்புக் கிட்டியது அதே சமயம் ஒய்வுக் கிட்டியது.






பொதுவாக திருக்கயிலாய யாத்திரை செல்ல விழைபவர்கள் ஒரிரண்டு மாதங்களுக்கு முன்பாகவே கிரி வலம் செய்ய தங்கள் உடம்பை தயார் செய்து கொள்வது மிகவும் அவசியம். அவர்களால் முடிந்த் அளவு நடை, ஓட்டம், உடற்பயிற்சி, யோகா, பிராணாயாமம் முதலியன தினம் செய்து வந்தால் யாத்திரை சுகமாக இருக்கும்.







இந்த ஒய்வு நாளை யாத்திரிகளில் சிலர் இங்குள்ள மலையில் ஏறி பயிற்சி செய்கின்றனர். அங்கு சென்று மலையேறும் போது தங்களால் கிரி வலம் செய்ய முடியுமா? என்று தெரிந்து விடுமல்லவா.









மலையேற்றப்பயிற்சி








மலையின் உச்சியில் திரு.இரவி








ஒரு நாள் ஓய்விற்கு பிறகு யாத்திரை பின்னும் தொடர்கின்றது. ஐந்தாம் நாள் காலை (11-05-11) புறப்பட்டு இமயமலையின் பனி மூடிய சிகரங்களின் அழகை இரசித்துக்கொண்டே 5124 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள லாலாங்லா கணவாயை கடந்து மதியம் சாகா (4640 மீ) என்னும் இடத்தில் மதிய உணவை உண்டு டோங்பா என்னும் ஊரை அடைந்து அங்கு இரவு தங்குகின்றனர்.





இமயமலையின் பனி மூடிய சிகரங்கள்





லாலாங்லா கணவாய்





சாகாவில் மதிய உணவு




கண்ணார் அமுதனே போற்றி


கயிலை மலையானே போற்றி போற்றி



யாத்திரை தொடரும்…



















No comments: