Friday, August 12, 2011

திருக்கயிலாய யாத்திரை 2011 -5





ஓம் நமசிவாய





நற்றுணையாவது நமச்சிவாயவே என்று அறுதியிட்டு கூறிய திருநாவுக்கரச பெருமான் பாடிய இக்கயிலாய பதிகத்தை தினமும் நம்பிக்கையுடன் சிவபெருமானின் முன் திருவிளக்கேற்றி பாராயணம் செய்தால் நிச்சயம் திருக்கயிலை தரிசனமும் மானசரோவர் ஸ்நானமும் திண்ணம் என்பதால் ஒவ்வொரு பதிவிலும் ஒரு பாடல் இடம்பெறுகின்றது.





அப்பர் பெருமான் அருளிச்செய்த

போற்றித் திருத்தாண்டகம்







திருக்கயிலாயம்






ஊராகி நின்ற உலகே போற்றி


ஒங்கி அழலாய் நின்றாய் பே'ற்றி

பேராகி எங்கும் பரந்தாய் போற்றி

பெயராது என் சிந்தை புகுந்தாய் போற்றி

நீராவியான நிழலே போற்றி

நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி

காராகி நின்ற முகிலே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி (5)










த்ரிபுராந்தகனை, த்ரியம்பகனை, த்ரிசூலதாரியை தரிசிக்க நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து புறப்பட்ட யாத்திரிகள் யாத்திரையின் ஐந்தாம் நாள் 12-05-11 அவர்கள் எதற்காக இந்த யாத்திரையை மேற்கொண்டார்களே அந்த நோக்கத்தை அடைந்தனர் . ஆம் அன்றைய தினம் அவர்களுக்கு மான் மழு ஏந்தும் மாப்பெரும் கருணையனின் முதல் தரிசனம் கிட்டியது. மேலும் அன்றைய தினம் அவர்கள் புனித மானசரோவரிலும் நீராடினர்.















உறைந்து கிடக்கும் பிரம்மபுத்திரா நதி














காலையில் தோங்பாவிலிருந்து புறப்பட்டு மதியம் பிரம்மபுத்திரா நதியை அடைந்தனர், மே மாதம் என்பதால் நதி இன்னும் உருக ஆரம்பிக்கவில்லை அப்படியே பனியாகவே இருந்தது. இங்கு மதிய உணவு உண்டு பின்னர் மானசரோவர் ஏரிக்கு புறப்பட்டனர்.





















திருக்கயிலாயத்தின் முதல் தரிசனம்













எவ்வளவோ புண்ணியம் செய்தவர்கள் இவர்கள் மானசரோவர் கரையை அடைந்தவுடனே பொன் பொதி மத்த மாலை புனல் சூடும் மாதொரு பாகரின் தரிசனம் இவர்களுக்கு கிட்டியது. ஆனந்தத்தால் அவர்கள் சிவசக்திக்கு ஆயிரம் கோடி நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.























ஆனந்தத்தில் யாத்ரிகள்














பொன்னார் மேனியன், வரிப்புலித் தோலை இடையில் கட்டியவன், மின்னார் செஞ்சடையில் கொன்றை அணிந்த சிவபெருமானின் தரிசனம் கண்டு களிக்கும் அன்பர்கள்.






































கௌரி சங்கர்













மானசரோவர் ஏரி பிரம்மா தனது மனதில் இன்று தோற்றுவித்தது. மிகவும் புனிதமான ஏரி. இதன் தீர்த்தம் நம் உடலில் பட நாம் பல ஜென்மங்களில் புண்ணியம் செய்திருக்கவேண்டும். மானசரோவர் ஒரு சக்தி பீடமும் மற்றும் வைணவர்களின் ஒரு திவ்ய தேசமும் ஆகும். ஆகவே திருக்கயிலாயமும், மானசரோவரும் இனைந்த இந்த காட்சியை கௌரி சங்கர் என்று அழைக்கின்றனர்.







சீனா முழுவதும் இப்போது சாலைகள் மேம்படுத்தப் பட்டுள்ளன. இந்த தார் சாலை அதற்கு சான்று, முன் போல எலும்புகள் குலுங்கும் வண்ணம் பயணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.











மானசரோவரில் புனித நீராட செல்லும் பக்தர்கள்








வழியோர ஒரு சிற்றுண்டி அகம்




புனித மானசரோவர் குளம்
















மானசரோவரில் புனித நீராடி ஜன்ம சாபல்யம் பெற்ற அன்பர்கள் அன்றிரவு அங்கேயே தங்கினர். அடுத்த நாளும் அங்கேயே தங்கி ருத்ர ஹோமம் செய்து சிவசக்திக்கு நன்றி செலுத்தினர் இக்காட்சிகளை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே.










யாத்திரை தொடரும்…



















2 comments:

Samy said...

I got Dharsan.A good experience.samy

S.Muruganandam said...

Welcome Samy (true tamilan) . Thank you and visit again