Friday, August 12, 2011

திருக்கயிலாய யாத்திரை 2011 -5

ஓம் நமசிவாய

நற்றுணையாவது நமச்சிவாயவே என்று அறுதியிட்டு கூறிய திருநாவுக்கரச பெருமான் பாடிய இக்கயிலாய பதிகத்தை தினமும் நம்பிக்கையுடன் சிவபெருமானின் முன் திருவிளக்கேற்றி பாராயணம் செய்தால் நிச்சயம் திருக்கயிலை தரிசனமும் மானசரோவர் ஸ்நானமும் திண்ணம் என்பதால் ஒவ்வொரு பதிவிலும் ஒரு பாடல் இடம்பெறுகின்றது.

அப்பர் பெருமான் அருளிச்செய்த

போற்றித் திருத்தாண்டகம்திருக்கயிலாயம்


ஊராகி நின்ற உலகே போற்றி


ஒங்கி அழலாய் நின்றாய் பே'ற்றி

பேராகி எங்கும் பரந்தாய் போற்றி

பெயராது என் சிந்தை புகுந்தாய் போற்றி

நீராவியான நிழலே போற்றி

நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி

காராகி நின்ற முகிலே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி (5)


த்ரிபுராந்தகனை, த்ரியம்பகனை, த்ரிசூலதாரியை தரிசிக்க நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து புறப்பட்ட யாத்திரிகள் யாத்திரையின் ஐந்தாம் நாள் 12-05-11 அவர்கள் எதற்காக இந்த யாத்திரையை மேற்கொண்டார்களே அந்த நோக்கத்தை அடைந்தனர் . ஆம் அன்றைய தினம் அவர்களுக்கு மான் மழு ஏந்தும் மாப்பெரும் கருணையனின் முதல் தரிசனம் கிட்டியது. மேலும் அன்றைய தினம் அவர்கள் புனித மானசரோவரிலும் நீராடினர்.உறைந்து கிடக்கும் பிரம்மபுத்திரா நதி


காலையில் தோங்பாவிலிருந்து புறப்பட்டு மதியம் பிரம்மபுத்திரா நதியை அடைந்தனர், மே மாதம் என்பதால் நதி இன்னும் உருக ஆரம்பிக்கவில்லை அப்படியே பனியாகவே இருந்தது. இங்கு மதிய உணவு உண்டு பின்னர் மானசரோவர் ஏரிக்கு புறப்பட்டனர்.

திருக்கயிலாயத்தின் முதல் தரிசனம்

எவ்வளவோ புண்ணியம் செய்தவர்கள் இவர்கள் மானசரோவர் கரையை அடைந்தவுடனே பொன் பொதி மத்த மாலை புனல் சூடும் மாதொரு பாகரின் தரிசனம் இவர்களுக்கு கிட்டியது. ஆனந்தத்தால் அவர்கள் சிவசக்திக்கு ஆயிரம் கோடி நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.ஆனந்தத்தில் யாத்ரிகள்


பொன்னார் மேனியன், வரிப்புலித் தோலை இடையில் கட்டியவன், மின்னார் செஞ்சடையில் கொன்றை அணிந்த சிவபெருமானின் தரிசனம் கண்டு களிக்கும் அன்பர்கள்.


கௌரி சங்கர்

மானசரோவர் ஏரி பிரம்மா தனது மனதில் இன்று தோற்றுவித்தது. மிகவும் புனிதமான ஏரி. இதன் தீர்த்தம் நம் உடலில் பட நாம் பல ஜென்மங்களில் புண்ணியம் செய்திருக்கவேண்டும். மானசரோவர் ஒரு சக்தி பீடமும் மற்றும் வைணவர்களின் ஒரு திவ்ய தேசமும் ஆகும். ஆகவே திருக்கயிலாயமும், மானசரோவரும் இனைந்த இந்த காட்சியை கௌரி சங்கர் என்று அழைக்கின்றனர்.சீனா முழுவதும் இப்போது சாலைகள் மேம்படுத்தப் பட்டுள்ளன. இந்த தார் சாலை அதற்கு சான்று, முன் போல எலும்புகள் குலுங்கும் வண்ணம் பயணம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.மானசரோவரில் புனித நீராட செல்லும் பக்தர்கள்
வழியோர ஒரு சிற்றுண்டி அகம்
புனித மானசரோவர் குளம்
மானசரோவரில் புனித நீராடி ஜன்ம சாபல்யம் பெற்ற அன்பர்கள் அன்றிரவு அங்கேயே தங்கினர். அடுத்த நாளும் அங்கேயே தங்கி ருத்ர ஹோமம் செய்து சிவசக்திக்கு நன்றி செலுத்தினர் இக்காட்சிகளை அடுத்த பதிவில் காணலாம் அன்பர்களே.


யாத்திரை தொடரும்…Thursday, August 11, 2011

Kailash Yatra 2011 - 5

On the fifth day of the Holy yatra ( 12-05-11) to Mount Kailash the yatri's were blessed with the first darshan of Lord Shiva. Also they were blessed with a holy bath in the Holy Manasarovar lake for which even celestials long for.
Fully frozen Brahmaputra River


The yatris had breakfast at Dongpa (4800m) and left by land cruiser to Quhu. Before reaching Quhu on the banks of Holy Manasarovar the yatris have to cross the mighty Brahmaputra river which was fully frozen at that time as it was the month of May. They had lunch at Brahmaputra and continued their journey .The first darshan of Holy Kailash


OM Namashivaya! OM Namashivaya!
OM Namashivaya! OM Namashivaya!
OM Namashivaya! OM Namashivaya!
Yatri's offering their prayer to Lord Shiva

The yatri's were overwhelemed with joy at the sight of Holy Lord with bull flag, who drank the dreaded poison to save the universe. They offered their prayer to the Lord who have the beautiful Lady Uma on his left side.
As this is for what they undertook this yatra so alla the hardships they underwent on the preceeding days vanished and there was only happiness and peace in their mind. They thanked Shivasakthi for having selected them showered their grace. They rememmbered that even after three days of stay some are not blessed with the full of the Lord.
Gowri ShankarManasarovar stands for Mother Sakthi and Kailash is Lord Shiva. So this view of both Kailash and Manasarovar is also called as Gowrishankar or Shivasakthi. Incidentally Manasarovar which aoriginated from the mind(manas) of Lord Brahma is also consideed as a Shakti peetam. One of the 51 Holiest shrones of Mother Goddess.


As can be seen the route is well laid with pucca tar road. Earlier it used to be a bone rattling journey. Now there is lot of improvement on the Chinese side and this has reduced the difficulties of the yatris.The yatris are proceeding for a holy bath in Manasarovar.

A roadside tibetian restaurant

Holy Manasarovar lake
After the ritual bath in Manasarovar the yatris rested on the banks of the Manasarovar as the next day was a rest day for them for conductiong some religious rituals on the banks of Manasarovar.Yatra continues.........
Tuesday, August 09, 2011

திருக்கயிலாய யாத்திரை 2011 -4

ஒம் நமசிவாய
அப்பர் பெருமான் அருளிச்செய்த போற்றித் திருத்தாண்டகம்


திருக்கயிலாயம்

வானத்தார் போற்றும் மருந்தே போற்றி


வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கும் உடலே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி


தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
தேவர்க்கும் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ யாட லுகந்தாய் போற்றி


கயிலை மலையானே போற்றி போற்றி (4)
திருக்கயிலாய மலை எல்லை கடந்த இமயத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 18000 அடிக்கு மேல் அமைந்துள்ளது. வருடத்தின் பாதி நாள் பனி மூடியிருக்கும். சீதோஷண நிலை ஒரே சீராக இருக்காது. மேலே செல்ல செல்ல காற்றில் பிராணவாயு குறையும். எனவே யாரும் நினைத்தவுடன் அங்கு சென்றுவிட முடியாது. மலையேறும் போது ஒரேயடியாக அதிக உயரம் ஏறினால் உயர்மட்ட நோய்களுக்கு உள்ளாக நேரிடலாம். இவை எல்லாவற்றையும் மனதில் கொண்டு யாத்திரையின் இந்த நான்காம் நாள் ( 10-05-11) நைலமில் ஓய்வு நாளாக அமைந்தது. இதனால் யாத்திரிகளின் உடம்பு அடுத்து வரும் உயர் மட்டங்களுக்கு தயாராகி விடும் வாய்ப்புக் கிட்டியது அதே சமயம் ஒய்வுக் கிட்டியது.


பொதுவாக திருக்கயிலாய யாத்திரை செல்ல விழைபவர்கள் ஒரிரண்டு மாதங்களுக்கு முன்பாகவே கிரி வலம் செய்ய தங்கள் உடம்பை தயார் செய்து கொள்வது மிகவும் அவசியம். அவர்களால் முடிந்த் அளவு நடை, ஓட்டம், உடற்பயிற்சி, யோகா, பிராணாயாமம் முதலியன தினம் செய்து வந்தால் யாத்திரை சுகமாக இருக்கும்.இந்த ஒய்வு நாளை யாத்திரிகளில் சிலர் இங்குள்ள மலையில் ஏறி பயிற்சி செய்கின்றனர். அங்கு சென்று மலையேறும் போது தங்களால் கிரி வலம் செய்ய முடியுமா? என்று தெரிந்து விடுமல்லவா.

மலையேற்றப்பயிற்சி
மலையின் உச்சியில் திரு.இரவி
ஒரு நாள் ஓய்விற்கு பிறகு யாத்திரை பின்னும் தொடர்கின்றது. ஐந்தாம் நாள் காலை (11-05-11) புறப்பட்டு இமயமலையின் பனி மூடிய சிகரங்களின் அழகை இரசித்துக்கொண்டே 5124 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள லாலாங்லா கணவாயை கடந்து மதியம் சாகா (4640 மீ) என்னும் இடத்தில் மதிய உணவை உண்டு டோங்பா என்னும் ஊரை அடைந்து அங்கு இரவு தங்குகின்றனர்.

இமயமலையின் பனி மூடிய சிகரங்கள்

லாலாங்லா கணவாய்

சாகாவில் மதிய உணவு
கண்ணார் அமுதனே போற்றி


கயிலை மலையானே போற்றி போற்றியாத்திரை தொடரும்…