Thursday, April 18, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -8 (திருக்கயிலாய யாத்திரை-2012)

காத்மாண்டுவிலிருந்து கொடாரி பேருந்து பயணம்

பயணம் செய்த பேருந்து

31/05/2012  வியாழக்கிழமை  அன்று அதிகாலை மணிக்கே எழுந்து தயாராகி பைக்களை எல்லாம் வெளியே வைத்துக்கொண்டு சீன எல்லைக்கு அழைத்துக் கொண்டு செல்லக்கூடிய பேருந்துக்காக காத்திருந்தோம். பேருந்து சுமார் மணிக்கு வந்தது, பைகளை எல்லாம் ஏற்றிய பின் அந்த முக்கண் முதல்வரை, ஆலம் உண்ட நீல கண்டரை, மலையரசன் பொற்பாவை உமையுடன் தரிசனம் செய்ய புறப்பட்டோம்  


கோசி நதியோரமே பயணம்

முதலில் பக்தபூர் வழியாக நெடுஞ்சாலையில் பயணம் செய்தோம்  114 கி.மீ தூர   இந்த அரனிகா ராஜ்மார்க்  (Aranika Rajmarg)  என்று அழைக்கப்படும் இந்த இரு வழிப்பாதை நெடுஞ்சாலையை முதலில் சீனா  1963-64ல் கட்டியதுஇப்போது இதன் ஒரு பகுதி தற்போது ஜப்பான் அரசின் உதவியுடன் நான்கு வழிப்பாதை ஆகியுள்ளதுபின்னர் காத்மாண்டு நகரத்தை கடந்து துலிகேல்லை கடக்கும் போது  143 அடி உயர சிவபெருமானை பேருந்திலிருந்தே தரிசனம் செய்தோம்காலைச் சூரிய ஒளியில் இந்த காட்சி மிகவும் இரம்மியமாக இருந்தது.


கொண்டல் கொஞ்சும் மலைச் சிகரங்கள்

 பின்னர் அழகிய   பாலன்சௌக் பள்ளத்தாக்கில் பயணம் செய்து டோலாகாட் என்னும் நகரை அடைந்தோம்,  பல் வேறு   சுற்றுலா அமைப்பாளர்கள் நதியில் படகுப் பயணம் நடத்துகின்றனர்இரு பக்கமும் இமயமலையின் அருமையான காட்சி பச்சை பசேல் என்று இருந்ததுவழியில் பல கிராமங்கள்சூரிய கோசி நதியோரமாவே பயணம் செய்தோம். வழியெங்கும் பெரிதும் சிறிதுமாக பல அருவிகள். பல கிராமங்கள் எல்லா கிராமங்களிலும் விவசாயம் நடைபெறுகின்றது. இப்பகுதி மக்கள் சிறந்த உழைப்பாளிகளாக உள்ளனர் என்பது தெளிவாக தெரிந்தது. 



இடையில் சிறிது நேரம் மழை 

வழியெங்கும் கருப்பு ஆடை அணிந்த விசேஷப் படையினர் பல இடங்களில் சோதனை செய்த பின்னரே மேலே செல்ல அனுமதிக்கின்றனர்.  ஒரு இடத்தில் பைகளை எல்லாம் சோதனை செய்தனர் ஏன் என்று விசாரித்த போது சீனாவிற்கு கடத்தல் அதிகம் அதுவும் சந்தனக் கடத்தல் அதிகம் ஆகவேதான் இவ்வளவு சோதனை என்று கூறினார்கள்மேலும் சரியான ஆட்கள்தான் செல்கின்றார்களாஎன்று பாஸ்போர்ட்டையும் சரி பார்த்தனர்.   இதனால் பயணம் மிகவும் தாமதப்பட்டதுநாங்கள் சென்ற போது மழைக் காலம் இல்லை எனவே எந்த பிரச்னையும் இல்லைஆனால்  ,மழைக் காலத்தில் இப்பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு தாமதமாக வாய்ப்பு உள்ளது.
தேநீர் அருந்திய ஜீரோ கிலோ கிராமம்
(படத்தில் பாண்டே சகோதர சகோதரி மற்றும் நடுவில் அமீத் அஹர்வால்)



எண்ணற்ற அருவிகள் சங்கமங்கள்


ஜீரோ கிலோ என்ற இடத்தில் தேநீர் அருந்தினோம்வழியில் கோசி நதியில் பல நீர் மின் நிலையங்களைப் பார்த்தோம்பார்பிஸே என்ற இடத்தில்  Bungy Jump  என்னும் வீர விளையாட்டு நடைபெறும் பாலத்தைக் கண்டோம்அடுத்து பல்பிங் பாலத்தை கடந்து   சிந்த்பால் சோக் மாவட்டத்தில் உள்ள தோதாப்பாணி சுடு நீர் ஊற்றுகளை கடந்து சீன எல்லை ஊரான கொடாரியை (Kodari) அடைந்தோம்


மலை  உச்சியில் ஒரு வீடு

வழியெங்கும் இயற்கை அன்னை பச்சைப் போர்வையுடன
 எழிலாய் காட்சி தருகின்றாள் 

வழியிலொரு கிராமம்

சீனப்பகுதியில் பத்து நாட்களுக்கு அனைவருக்கும் வேண்டிய உணவு பொருட்கள் அனைத்தையும் காத்மாண்டுவில் இருந்தே வாங்கிச் செல்கின்றனர், கோதுமை மாவு, அரிசி, பால் பவுடர், சர்க்கரை, எண்ணெய், காய்கறிகள்பழ வகைகள், ரொட்டி, போர்ன்விடா குப்பிகள், குடி தண்ணீர் குப்பிகள் என்று அனைத்து பொருட்களையும் மற்றும் சமையலுக்கு வேண்டிய பாத்திரங்கள், எரிவாயு உருளைகள், அனைவருக்கும் தட்டு டம்ளர் ஆகியவற்றை இரண்டு வண்டிகளில் நிரப்பிக்கொண்டு வந்தனர். அனைவரது பெரிய பைகளும் இந்த வண்டிகளில்தான் கொண்டு வரப்படுகின்றன. சேர்ப்பாக்காள் இதிலேயே படுத்து தூங்குகின்றனர். 



ஆற்றின் குறுக்கே தடுப்பணை, நீர் மின் நிலையம்

************

திருநாவுக்கரசர்  தேவாரம்

திருக்கயிலாயம்






கயிலை மலையை காவல் காக்கும்
அதிகார நந்தியில்  திருவான்மியூர்  மருந்தீஸ்வரர்


கடியவன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடி
வடிவுடை மங்கை யஞ்ச வெடுத்தலு மருவ நோக்கிச்
செடிபடத் திருவி ரல்லா லூன்றலுஞ் சிதைந்து வீழ்ந்தான்
வடிவுற வூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே. (8)


பொருள் :கொடிய இராவணன் வெகுண்டு ஓடிச்சென்று கயிலை நன்மலையைப் பார்வதி அஞ்சுமாறு பெயர்த்த அளவில் சிவபெருமான் பொருந்த நினைத்து அவனுக்குத் தீங்கு நிகழுமாறு திருவிரலால் அழுத்திய அளவில் உருச்சிதைந்து விழுந்தான் . விரல் நன்றாகப் பொருந்த ஊன்றியிருந்தாராயின் மறித்தும் நோக்கு இல்லை அன்றே .



தேவாரம் முழுவதையும் படிக்க செல்லுங்கள் http://www.thevaaram.org/

                                                                                                    புனித யாத்திரை தொடரும்.  .   .   .   


4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான படங்களுடன் இனிமையான பயணம்...

நன்றி.... தொடர வாழ்த்துக்கள்...

S.Muruganandam said...

வாருங்கள் திண்டுக்கல் தனபாலன் ஐயா.
அவனருளால் யாத்திரை இன்னும் தொடரும். தாங்களும் தொடர்ந்து வாருங்கள்.

நிகழ்காலத்தில்... said...

விவரமான தகவல்களுடன் இடுகை நன்கு வந்திருக்கிறது. தொடர்ந்து இதுபோலவே எழுதுங்கள்.

கொடாரி வரையில் பாதையின் தரம் கேள்விக்குறியாகத்தான் இருக்கும்.

மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்..

S.Muruganandam said...

மீண்டும் வாருங்கள் நிகழ்காலத்தில் சிவா. தொடர்ந்து வந்து தரிசனம் பெறுங்கள்.

துல்லிக்கேலை கடந்த பின் பாதை சிறிது மோசமாகத்தான் இருந்தது ஆனால் மழைக் காலம் இல்லை என்பதால் எந்த சிரமமும் ஏற்படவில்லை.