Friday, May 10, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -10 (திருக்கயிலாய யாத்திரை-2012)


மூன்றாம் நாள் சீனாவில் நுழைதல் மற்றும் ஜாங்மூவில் தங்கல்  

சீனப் பகுதியில் மழையுடன் நுழைகின்றோம்



சிறிது நேரம் அந்தப் பக்கம் இருந்த கடைகளில் தங்கினோம். நேபாளப்பகுதியில் இந்திய ரூபாயை சீன யுவானாக மாற்றுவதை விட இந்தக் கடைகளில் மாற்றுவது நல்லது. சிறிது மழை மட்டுப்பட்டவுடன் மழை கோட்டை மாட்டிக்கொண்டு பேருந்து நிறுத்தி வைத்திருக்கும் இடத்திற்கு ஓடினோம். கிட்டதட்ட கி.மீ தூரம் மலையேற்ற பயிற்சி அனைவருக்கும் கிடைத்ததுபேருந்து செல்லும் வழியெங்கும் ஏகப்பட்ட லாரிகள் சரக்குகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தன எனவே வண்டி எறும்பு போலத்தான் ஊர்ந்து சென்றது. ஆயினும் வண்டி ஒட்டுநர் எந்த வித சலிப்பும் இல்லாமல் பொறுமையாக ஒட்டிச்சென்றார். 


பேருந்துக்காக சிறு நடை பயணம் 
(திரு. தேபசிஸ் முகர்ஜி அவர்கள்)

வழியில்  சிறிது நேரம் ஓய்வு
(திரு கைலாஷ சந்திர கௌஷிக்)

 மலை மேல் ஜாங்மூ நகரம்

நாங்கள்  36 யாத்ரிகள் என்பதனால் ஒரு பேருந்து ஏற்பாடு செய்து தந்தார்கள் இல்லையென்றால் நான்கு யாத்திரிகள் ஒரு    Land Cruiser  என்னும் வாகனத்தில் சென்றிருக்க வேண்டும் அவ்வாறு சென்றிருந்தால் ரூபாய்  5000/- அதிகம் ஆயிருக்கும். Volvo வண்டி தருவதாக கூறியிருந்தார்கள் ஆனால் கொடுத்ததோ  HUGER வண்டி  இனி வரும் பத்து நாட்களுக்கு பயணம் இந்த வண்டியில்தான் பயணம்வண்டியில் குளு குளு வசதியுள்ளதுமேலும்    GPS வசதியும் உள்ளதுசீனாவில் வண்டிகள் எல்லாமே வலது கை ஓட்டமுடையவை ஆகவே பல தடவை வண்டியின் உள்ளே அமர்ந்திருக்கும் நமக்கு இவர் தவறான பக்கத்தில் செல்வது போல தோன்றியது.

ஜாங்மூ நகரின் ஒரு இந்து ஆலயம் 

 ஜாங்மூ  நகர ஹோட்டலில் பிரார்த்தனை

இவ்வாறு சுமார்  மணி நேரம் ஊர்ந்து சென்று ஜாங்மூ நகரின்((2,300 மீ/ 7,545 அடி)   ஒரு ஹோட்டலுக்கு அழைத்து சென்றனர்.  திட்டமிட்டபடி இன்றே நைலாம் சென்றிருக்க வேண்டும் ஆனால் அங்கு ஹோட்டல்கள் எல்லாம் நிறைந்து விட்டதால் இங்கு தங்குகின்றோம் என்று கூறினார்கள் இங்கு ஹோட்டல் வாடகை குறைவு என்பதால் இங்கே தங்க வைத்தார்கள் என்பது பின்னால் புரிந்தது. இந்த ஒரு ஹோட்டலில்தான் முன் வாடகை 50 யுவான்கள் வசூலித்தனர் அறைகளை காலி செய்த போது திருப்பித் தந்து விட்டனர். இரண்டு பேர் தங்க வேண்டிய அறையில் மூன்று பேரை தங்க வைத்தனர்.


 ஜாங்மூ  நகரக்காட்சிகள் 


குறுகிய பாதை இருபுறமும் நெடிய கட்டிடங்கள் இதுதான் ஜாங்மூ

 ஒரு காய்கறிக்கடையில் நிஷா பாண்டே


அன்று அதிகாலையில் இருந்து அலைந்து கொண்டிருந்தோம் என்பதால் சிறிது நேரம் பஜனைப் பாடல்கள் பாடி சிவசக்தியை வணங்கி வீட்டு படுக்க சென்றோம்,. இந்த ஹோட்டலில்தான் சீனப்பகுதியில் கழிவறைகள் சரியாக இருந்தன இதற்கப்புறம் நல்ல கழிவறைகள் கிட்டவில்லைஇந்த ஒரு அம்சம் மட்டும் ஏழு வருடங்களுக்கு முன் நாங்கள் மேற்கொண்ட யாத்திரையின் போது எப்படி இருந்ததோ அப்படியேதான் உள்ளது  சீனப்பிரதேசத்தின் வளப்பிற்கும். நேபாளப் பகுதியின் ஏழ்மைக்கும் நடுவே போட்கோசி என்னும் நதி மட்டும்தான் உள்ளது. அது போல அப்பக்கம் பசுமை இப்பக்கம் வெறுமை.  அநேகமாக அனைத்து ஹோட்டல்களிலும் நாமே சமையல் செய்து கொள்ள அனுமதிக்கின்றனர் எனவே எங்களுடன் வநத சேர்ப்பாக்களே சமையல் செய்து உணவு பரிமாறுகின்றனர். அறை வாடகை மட்டுமே அவர்களுக்கு கொடுக்கின்றனர்.



காய்கறி நிறுக்கும் துலாக்கோலைப் பாருங்கள்

சீன மழலைகள்
 
(இறைவனின் படைப்புகளை படம் எடுக்கும் ஆர்வம் உள்ள திரு. சுந்தர் அவர்கள் கை வண்ணம்)


ஜாங்மூவிலிருந்து கொடாரி மற்றும் நேசப்பாலம்

ஜாங்மூ  ஹோட்டலில்  காலை சிற்றுண்டி



மறு நாள் காலை சூரிய உதயம் அருமையாக உதித்தது தன் செவ்வண்ணக் கதிர்களினால் சூரியன் அந்த ஜாங்மூ நகரத்தை தழுவும் அழகைக் கண்டு களித்தோம். பனி உருகி விட்டதால் நகரமெங்கும் கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருந்தன. மலைப்பிரதேசம் என்பதால் அடுக்கடுக்காக நெருக்கமாக வீடுகள் அமைந்துள்ளன. நகரின் நடுவே பெரும்பாதை செல்கின்றது. இன்றைய தினம் நைலாம் நகரில் தங்க வேண்டும் என்பதாலோ என்னவோ வண்டி ஓட்டுநர் தாமதமாக வந்தார். எனவே காலை உணவை முடித்து விட்டு நாங்கள் ஜாங்மூ நகரை சிறிது  சுற்றி வந்தோம்.

சீன வண்டி ஓட்டுநர்

எல்லைப்புற நகரம் என்பதால் நகரம் முழுவதும் கடைகள் நேப்பாளத்தில் இருந்து வருபவர்கள் மொத்தமாக பொருட்களை வாங்கிக்கொண்டு செல்கின்றனர். பலதரப்பட்ட ஒப்பணை (Cosmetics)  பொருட்கள் விற்கும் கடைகளையும் அழகு நிலையங்களையும் பார்த்தோம். இந்நகரில் ஒரு இந்துக் கோவிலும்  உள்ளது. நகரத்தை சுற்றி வந்து அழகான குழந்தைகளை புகைப்படம் எடுத்துக்கொண்டு வண்டி ஓட்டுநர் வந்தவுடன் நைலாமிற்கு புறப்பட்டோம்


சீன ஒப்பனைப் பொருட்கள்


ஜாங்மூ நகரை சுற்றிப்பார்க்கும் யக்யாங் பாண்டே, 
புனிதா பரத்வாஜ் மற்றும் உமா கோயல் அவர்கள்


 சீனப் பகுதியில் பயணம் செய்த பேருந்து


***************************

திருநாவுக்கரசர்  தேவாரம்

திருக்கயிலாயம்



கயிலை மலையை காவல் காக்கும்
அதிகார நந்தியில் திருமயிலை  கபாலீஸ்வரர்




கற்றனன் கயிலை தன்னைக் காண்டலு மரக்க னோடிச்
செற்றவ னெடுத்த வாறே சேயிழை யஞ்ச வீசன்

உற்றிறை யூன்றா முன்ன முணர்வழி வகையால் வீழ்ந்தான்

மற்றிறை யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே. (10)




பொருள் :சிவபெருமானுடய கயிலைமலையைக் கண்ட அளவில் இராவணன் வெகுண்டு ஓடிச் சென்று அதனை எடுத்த அளவில் பார்வதி அஞ்ச , எம் பெருமான் அவன் செயலை உள்ளத்துக் கொண்டு தன் விரலை ஊன்றிய மாத்திரத்தே அறிவு அழியும் நிலையில் இராவணன் விழுந்தான் . சற்று எம்பெருமான் அழுத்தி ஊன்றியிருந்தால் மீண்டு அவன் உயிரோடு கண் விழித்துப் பார்க்கும் வாய்ப்பே ஏற்படாது போயிருக்கும் .



தேவாரம் முழுவதையும் படிக்க செல்லுங்கள் http://www.thevaaram.org/

                                                                                                    புனித யாத்திரை தொடரும்.  .   .   .   



2 comments:

ப.கந்தசாமி said...

ரசித்தேன்.

S.Muruganandam said...

தொடர்ந்து வந்து ரசியுங்கள் கந்தசாமி ஐயா.