Friday, June 07, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -21 (திருக்கயிலாய யாத்திரை-2012)

பழைய டாங்போவிலிருந்து ஹோரேவரை

காத்மாண்டுவில் இருந்து பயணம் செய்த
 பாதையின் வரைபடம்


வழியில் பனி மூடிய சிகரங்கள்

பாலைவன மணற்குன்றுகள்

பனி ஆறுகள்


சோதனை தந்த சோதனைச் சாவடிஹோரேவை நெருங்குகின்றோம்

திருக்கயிலாயம் நேபாளம்  செல்லும் பக்தர்கள்  முன்னர் நைலாம்- சாகா- பிரயாங்- மானசரோவர் என்று பயணம் செய்தார்கள். தற்போது பாதை சரிப்பட்டுவிட்டதாலும் Diamox சாப்பிடுவதாலும்  இது நைலாம்- டாங்போ – மானசரோவர் என்று ஒரு நாள் குறைந்து விட்டது. நேராக மானசரோவர் கரைக்கே சென்று விடுகின்றனர். இந்த அத்துவான மலை-பாலைவனத்தில் தான் எத்தனை சோதனைச் சாவடிகள், ஒரு சோதனைச் சாவடியில் ஏகப்பட்ட வண்டிகள் நின்றிருந்தன. அங்கு சுமார் 2 மணி நேரம் வெட்டியாக நின்றோம் கடவு சீட்டு உட்பட சோதனை செய்த பிறகே செல்ல அனுமதித்தனர். எங்கள் சீன வழி காட்டி இது போன்ற சாவடிகளில் மட்டும் இறங்கி குழு விசாவை காட்டி விட்டு பின் ஜீப்பில் ஏறி சென்று விடுவார்.இவ்வாறு  மலங்காட்டில் பயணம் செய்து மாயும் லா கணவாயைக் (5200 மீ) கடந்து  மதிய வேளைக்கு ஹோரே அடைந்தோம், எதற்காக இவ்வளவு சிரமம் எடுத்து வந்தோமோ அந்த எண்ணம் அவனருளால் நிறைவேறியது. ஆம் அந்த முக்கண் முதல்வரின் முதல் தரிசனம் திவ்யமாக கிட்டியது. அந்த அற்புத தரிசனத்தை அடுத்த பதிவில் காணலாமா அன்பர்களே?
*****************
திருஞான சம்பந்தர் தேவாரம்

திருக்கயிலாயம்


பாடல் எண் : 1

பொடிகொளுருவர் புலியினதளர் புரிநூல் திகழ்மார்பில்
கடிகொள்கொன்றை கலந்தநீற்றர் கறைசேர் கண்டத்தர்
இடியகுரலா லிரியுமடங்கல் தொடங்கு முனைச்சாரல்
கடியவிடைமேற் கொடியொன்றுடையார் கயிலை மலையாரே.

பொருள் : மேகங்களின் இடிக்குரல் கேட்டு அஞ்சிய சிங்கங்கள், நிலைகெட்டு ஓடத்தொடங்கும் சாரலை உடைய கயிலைமலையில் வாழும் இறைவர், திருநீறு பூசிய திருமேனியை உடையவர். புலியின் தோலை உடுத்தவர். முப்புரிநூல் விளங்கும் மார்பில் மணம் கமழும் கொன்றை மாலையோடு திருநீற்றையும் அணிந்தவர். விடக்கறை பொருந்திய கண்டத்தை உடையவர். விரைந்து செல்லும் விடைமீது ஏறி அவ்விடை எழுதிய கொடி ஒன்றையே தம் கொடியாகக் கொண்டவர்.தேவாரம் முழுவதையும் பொருளுடன் படிக்க இங்கு செல்க    http://thevaaram.org/

யாத்திரை தொடரும்....................

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

திவ்ய தரிசனத்தை காண காத்திருக்கிறோம்... நாங்கள் செல்வோமா ? என்று தெரியவில்லை... இந்த பகிர்வுகள் மூலம் ஒரு மகிழ்ச்சி...

நன்றி...

வாழ்த்துக்கள்...

Muruganandam Subramanian said...

உண்மையாக வேண்டுபவர்களுக்கு அவர் நிச்சயம் தரிசனம் தருவார், நம்பிக்கையுடன் தினமும் வேண்டுங்கள் தங்கள் ஆசை நிறைவேறும்.

என்ன உதவி வேண்டுமென்றாலும் கேளுங்கள் ,உதவுகிறேன் ஐயா.