Thursday, June 20, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -31 (திருக்கயிலாய யாத்திரை-2012)

அஷ்டபத்தில்  ஆனந்த   தரிசனம் 

திருக்கயிலாயம் நந்திபர்வதம் ரிஷப தேவர் நினைவிடம்

அஷ்டபத் நோக்கி வண்டியில் செல்கின்றோம்

செல்லும் வழியில்

உறைந்த பனியாற்றைக் கடக்கின்றோம்



பனியாற்றிலிருந்து  ஒரு தாரை


பனியிலும் புல்

பனியில் கோயல் குடும்பத்தினர்

ஹிமான்சு, புனிதா, குப்தா, மஹேந்திர குமார்

ஆற்றைக் கடந்து நடைப் பயணம்

எடி அஹர்வால்


வழியில் பல முயல்கள் (எலியோ???)



தெற்கு முகத்தின் முதல் தரிசனம்


இன்னும் அருகே செல்கின்றோம்

ஐயனின் திருமுன் கௌஷிக் குடும்பத்தினர்

மேகம் விலக காத்திருக்கின்றோம்

ஆனந்தக் கூத்தனின் ஆனந்தக் காட்சி

அம்பலவாணரின் அற்புத தரிசனம்

திருமுடி, த்ரிநேத்ரம், ஜடாமுடி, கணேசர், கிழக்கு முகத்தின் ஒரு பகுதி  அனைத்தையும் மிக அருகில் இருந்து  திவ்யமாக தரிசனம்  செய்கின்றோம்


ஜடா முடியை சிலர் மேரு தண்டா என்று அழைக்கின்றனர்


கணேசர், ஐயன் மற்றும் நந்தி

2005ல் சென்ற போது மேகமில்லாமல் நிர்மலமான வானத்துடன், பனியும் குறைவாக இருந்த போது  அஷ்டபத்தில் இருந்து எடுத்த படம்.

ஐயனுக்கு எதிரே நந்தியெம்பெருமான்

நவரத்னங்கள் பதித்த பொன்மயமான ஊஞ்சலில் திருவோலக்கம் கொண்டு எழுந்தருளியிருக்கும்,பவளம் போல் பால் வெண்ணீறு அணிந்த சிவெபெருமானையும், பச்சை பசுங்கொடியாம் பார்வதியையும் தனது மூச்சுக் காற்றால் குளிர்வித்துக்கொண்டிருக்கும் நந்தியெம்பெருமான்.  

 ஜைனர்களின் முதல் தீர்த்தங்கரர் ரிஷபதேவர் நினைவிடம்
( சுதார் )

திருக்கயிலாயம், நந்தி, ரிஷப தேவர் நினைவிடம்
 மூன்றும் இனைந்த காட்சி



ஈசனடி போற்றி, எந்தை அடி போற்றி, 
தேசன் அடி போற்றி,சிவன் சேவடி போற்றி

ஐயனை தரிசனம் செய்து விட்டு
 ஆனந்தமாக திரும்பி வருகிறோம்



சுந்தர், பாபு, வைஷ்ணவ்
காலை சுமார் 6 மணியளவில் மானசரோவரிலிருந்து புறப்பட்டோம். தார்சாலையை விடுத்து இரு பக்கமும் ஒரே வெள்ளிப்  பனி மயம். பனிப் பொழிவும் லேசாக இருந்தது.  மலையரசன் பொற்பாவை உடனாய் திருக்கயிலை நாதனை தரிசனம் கிட்ட வேண்டும், கிரி வலம் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டே பஜனைப் பாடல்களைப் பாடிக்கொண்டே சென்றோம் சுமார் அரை மணி நேரம் கழித்து அவனருளால் அவன் தாள் வணங்க செல்லும் எங்கள் பிரார்த்தனைக்கு செவி சாய்த்து பனிப் பொழிவை நிறுத்தினார். டார்ச்சனை நெருங்கிய போது ஐயனின் கருணை முகம் கொண்டு சூரியனாக வெளிப்போந்து வந்து ஆசீர்வாதம் செய்தார். டார்ச்சனை அடைந்த போது நல்ல வெயிலாக இருந்ததால் முதலில் அஷ்டபத் தரிசனத்தை முடித்து விடலாம் என்று புறப்பட்டோம்.

 சேர்ப்பாக்கள்  ஒருவருக்கு 100 யுவான்கள் வீதம்  லேண்ட குரூசியர் வண்டி ஏற்பாடு செய்து கொடுத்தனர். சுமார் மூன்று கி.மீ இருக்கும் போதே பனி ஆறு உறைந்து கிடந்ததால் வண்டி கடக்க முடியாது என்று இறக்கி விட்டு விட்டனர். சென்ற தடவை சென்ற போது ஆற்றைக் கடந்து அஷ்டபத் மிக அருகில் சென்று  இறக்கி விட்டார்கள். இந்தத் தடவை ஆறு உறைந்து கிடந்ததால் மூன்று கி.மீ முன்பாகவே இறக்கி விட்டனர்.  கால் நடையாக மிகவும் கவனமுடன்  உறைந்து கிடந்த பனியாற்றை கடந்து அப்புறம் சென்று சுமார்  மூன்று கி.மீ தூரம் மேலும் கீழுமாக  நடந்து சென்று ஐயனையும் நந்தியெம்பெருமானையும், ரிஷப தேவரின் முக்தி ஸ்தலத்தையும் தரிசனம் செய்தோம். ஆனால் மிக அருகில் செல்ல முடியவில்லை நிர்மலாக ஐயனின் தரிசனம் கிட்டவில்லை ஆயினும் அந்த வ்யோமகேசர் - அதாவது ஆகாயத்தையே தனது ஜடாமுடியாக கொண்ட ஈசன் தனது ஜடா முடியில் இளம் பிறை, சலமகள், பொற்கொன்றை, ஊமத்தை, எருக்கு அணியும் பரம கருணா மூர்த்தி இன்று கொண்டல்களும் அணிந்து தரிசனம் அளித்தார்.  ஆம் அவரது முடி பாகத்தை இன்று மேகங்கள் அணி செய்து கொண்டிருந்தன. பனி முழுவதுமாக உருகவில்லை என்பதால் வெள்ளிக் கவசம் சார்த்தியது போல அருமையான  தரிசனம் தந்தார். 


வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி, காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி, கச்சாக நாகமசைத்தாய் போற்றி , காராகி நின்ற முகிலே போற்றி, கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி, காவாய் கனகத்திரளே போற்றி கயிலை மலையானே போற்றி என்று அப்பர் பெருமானின் "போற்றித் திருத்தாண்டகம்" பாடி அடி வீழ்ந்து வணங்கி விட்டு ஐயா உன்னை வணங்கி ஆரம்பிக்கும் உன் கிரி வலம் முழுமையடைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு  இன்றே கிரி வலம் செய்ய வேண்டும் என்பதால் அதிக நேரம் அங்கே செலவழிக்காமல், சீக்கிரம் டார்ச்சன் திரும்பி வந்தோம்.
***********************

சேரமான் பெருமான் இயற்றிய

திருக்கயிலாய ஞான உலா

திருமாலும் நான்முகனும் தேர்ந்துணராதங்கண்
அருமால் உற அழலாய் நின்ற பெருமான்




1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா... ஆகா... சிறப்பான படங்கள் மூலம் எங்களுக்கும் தரிசனம் கிடைத்தது... நன்றி...