Wednesday, July 10, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -37 (திருக்கயிலாய யாத்திரை-2012)

 டோல்மாவில் பார்வதி அம்பாள் தரிசனம்


 பனி நிறைந்த பிரார்த்தனைக் கொடிகள்


அன்னை பார்வதியின் அந்தப்புரம்
 இந்த டோல்மா கணவாய்

 யாத்திரையின் மிகவும் உயரமான இடம்
 என்பதால் இவ்வளவு பனி  

அன்னையின் திரு முன்
 திரு.முகர்ஜி அவர்கள்

அன்னையை வணங்கும் ஒரு வெளிநாட்டு குழுவினர்கௌரியன்னைக்கு பூஜை செய்யும் பக்தர்கள் 


 அம்பாளின் திருமுன்
 சுதார், அமீத் அஹர்வால்

பார்வதியின் பாதம் போற்றும் 
போர்ட்டர் சிறுவன், அடியேன், ஹிமான்சு, சுதார், சுஜய் ஹஜ்ரா, அமீத்

நாங்கள் பணி புரியும் நிறுவனக் கொடி....

அன்னைக்கு சமர்ப்பணம்


  அம்பிகையின் முன்னர் 
தந்தையும் (சுதார்) தனயனும் (ஹிமான்சு)

 சிவசக்தியின் மாப்பெருங்கருணையினால் வெற்றிகரமாக, மகிழ்ச்சிகரமா
 எந்த இடர்ப்பாடும் இல்லாமல் பனி நிறைந்த காலத்தில் முடித்ததை 
பகிர்ந்து கொள்ளும் அமீத் அஹர்வால்

சென்ற தடவை சென்ற போது எங்கள் குழுவினர் மட்டுமே அன்றைய தினம் கிரி வலம் செய்தோம். இன்றோ எத்தனை குழுக்கள் என்பது தெரியவில்லை. ஆயினும் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் இருப்பர். கிரி வலத்திற்கு இப்போதுதான் அனுமதி கிடைத்தது என்பதாலும்,முதல் நாள் சாகா தாவா பண்டிகை என்பதால் அதைப் பார்க்க வந்த பக்தர்களாகவும் இருக்கலாம் ஆயினும் கூட்டம் அதிகமாவே இருந்தது. மலையேற்றப் பாதையில் ஒருவர் பின் ஒருவராக இராணுவ வீரர்கள் போல பக்தர்கள் மலை ஏறிக்கொண்டிருந்தனர்.

எங்கள் குழுவில் சிலர் இன்றைய தினம் குதிரையில் செல்ல விரும்பினர். டோல்மா வரைக்கும் 300  யுவான்களுக்கு அவர்களுக்கு குதிரை கிடைத்தது. குதிரைக் காரர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒரே நாளில் இரண்டு மூன்று தடவை மேலும் கீழும் செல்ல முடியும் என்பதால்  சிறு தூரம் செல்லவே விரும்பினர். முதல் நாள் பெய்த பனி உருகி உருகாத பனியில் சிறு சிறு அடியிட்டு மிகவும் மெதுவாக ஏறினோம். செங்குத்தான ஏற்றம், வழுக்கும் பாதை , பக்தர்களும் அதிகம் ஆகவே மெதுவாகவே மலை ஏற முடிந்தது. ஐந்தெழுத்து மந்திரத்தையும் அன்னையின் மந்திரத்தையும் மனதில் ஜபித்துக் கொண்டே சுமார் மூன்று மணி நேரம் மலையேறி டோல்மா கண்வாயை அடைந்தோம்.

அங்கு அதிக நேரம் இருக்க முடியாத சீதோக்ஷண நிலை என்பதால் அன்னையை சகல செல்வங்களும் தரும் இமயகிரி ராஜ தனயையை அலையாழி அரிதுயிலு மாயனது தங்கையை, குமார கண நாதாம்பிகையை அபிராமி அந்தாதி பாடி வணங்கி   உடனே கீழே இறங்கினோம். இன்றைய தினம் சுமார் ஆயிரம் சிவ பக்தர்கள் கிரி வலம் செய்திருப்பார்கள் என்று தோன்றியது இத்தனை பக்தர்களைப் பார்த்த போது அடியேன் மனதில் தோன்றிய எண்ணம் இதுதான். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு Faith moves the mountains அதாவது தன்னம்பிக்கை இருந்தால் மலையும் நகரும். ஆனால் இங்கோ ஆட்டிவித்தால் யாரொருவர் ஆடாதாரே என்று அப்பர் பெருமான் பாடிய சிவபெருமான் மலை ரூபத்தில் தனது பக்தர்களை நகர்த்திக்கொண்டிருந்தார். Here a mountain is moving His faithful.

2 comments:

நிகழ்காலத்தில் சிவா said...

பனித்தூவல் பரவலாக இருக்கிறது...நான் சென்றபோது இந்த அளவுக்கு இல்லை..

படங்கள் மனக்காட்சியாக விரிகின்றன. நன்றி

http://www.arivhedeivam.com/2011/09/kailashyatra-siva-20.html

Muruganandam Subramanian said...

நாம் யாத்திரை செல்கின்ற சமயத்தை பொருத்து பனி இருக்குமல்லவா? இது ஜுன் மாதத்தின் முதல் வாரம் என்பதால் இவ்வளவு பனி இருந்தது.

முழுவதும் உறைந்த கௌரி குளத்தைக் அடுத்த பதிவில் காண வாருங்கள் சிவா.