Friday, August 30, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -41 (திருக்கயிலாய யாத்திரை-2012)

கிரிவலம் நிறைவு

ட்ரூங்டோவில் உள்ள அறிவிப்பு பலகை

வண்டிகள் காத்துக்கொண்டிருக்கின்றன

(பின் புலத்தில் குர்லா மாந்தாதா மலைத் தொடர்கள்)

சிவசக்தியின் அருளால் கிரி வலம்
 நிறைவு செய்த அன்பர்கள் 

இளம் யாத்திரிகள் ஹிமான்சு & ஹர்ஷித்

டார்ச்சன் நகரம்

பறவைப் பார்வையில்  டார்ச்சன் நகரம்

சூரிய அடுப்பு


டார்ச்சனிலிருந்து திருக்கயிலையின் திருமுடி தரிசனம்


திருக்கயிலையின் அற்புத தரிசனம்


திருக்கயிலாய மலைத் தொடர்

எதிரே குர்லா மாந்தாதா மலைத் தொடர்


 ட்ரூங்டோவிலிருந்து பேருந்து மூலமாக அனைவரும் டார்ச்சன் வந்தடைந்தோம். கிரி வலம் வராமல் தார்ச்சனில் தங்கியிருந்தவர்கள் எங்களுக்காக ஆவலுடன் காத்திருந்தனர். அனைவரும் மகிழ்ச்சியாக அளவளாவினோம். அவர்கள்  நாங்கள் சென்ற தடவை  கிரி வலம் செல்லும் போது தங்கிய விடுதியில்தான் தங்கியிருந்தனர். இன்றைய தினம் வானம் மேகம் இல்லாமல் நிர்மலமாக இருந்தது. வெயில் குளிருக்கு மிகவும் இதமாக இருந்தது. ஐயன் வெள்ளிப் பனித் தலையராக அருமையாக  திருமுடி அருமையாக  தரிசனம் தந்தருளினார். 

 சென்ற தடவையின் போது அடியேனுக்கு ஐயன் முதல் முழு தரிசனம் தந்த இடத்திற்கு சென்று இன்னொரு முறை அவரை வணங்கினேன்.  இங்கு தங்கியிருந்தவர்கள் அஷ்டபத்திற்கும், யம துவாரத்திற்கும் சென்று வந்தனராம். சுடு தண்ணீர் 20 யுவானுக்கு வாங்கி குளிக்க முயன்றிருக்கின்றனர் தலையில் சூடாக விழுந்த தண்ணீர் இடுப்பு வரை வருவதற்குள் குளிர்ந்து விடுவதால் சிலருக்கு சளி பிடித்து விட்டது என்றனர். டார்ச்சனில் இருந்து ஒரு பக்கம் திருக்கயிலாய மலைத் தொடர்களையும் மறு பக்கம் குர்லா மாந்தாதா ம்லைத் தொடர்களையும் அருமையாக காணலாம். மதிய உணவை அந்த விடுதியிலேயே முடித்துக்கொண்டு அப்போதே  காத்மாண்டிற்காக கிளம்பினோம். அடுத்த பதிவில் டார்ச்சனில் கிடைத்த ஐயனின் திருமுடி தரிசனத்தை காணலாம். 


2 comments:

இராஜராஜேஸ்வரி said...

திருக்கயிலையின் அற்புத தரிசனம்
அருமையாய் காட்சி தந்து ஆனந்தப்படுத்தியதற்கு
இனிய நன்றிகள்..!

S.Muruganandam said...

மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி