Monday, September 02, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -43 (திருக்கயிலாய யாத்திரை-2012)

டார்ச்சனிலிருந்து சாகா திரும்புதல்

ஐயனின் அற்புத தரிசனம் 

பாலைவன  பயணம்

அருமையான தார் சாலை










 திரு. சுந்தர் அவர்கள் 

பாம்பு போல நெளிந்து வளைந்து செல்லும் மலைப் பாதை 



சாகாவை நெருங்கும் போது
 சிறிது தூரம் மண் பாதையில் பயணம் 

டார்ச்சனை தாண்டியவுடன் ஐயனின் தெற்கு முகமும் கிழக்கு முகத்தின் தொடர்ச்சியுமான அற்புதமான தரிசனம் கிட்டியது. மானசரோவரின் அடுத்த பகுதி கிரிவலத்தை முடித்து ஹோரே வந்தடைந்து சென்ற பாதை வழியாகவே மணல் புயல், பனி சிகரங்கள், வரை ஆடுகள், மேயும் யாக் கூட்டங்கள், செம்மறி ஆட்டு மந்தைகள் மாறும் மொட்டை மலைகளின் முகங்கள், பனி மூடிய சிகரங்கள், ஏரிகள் என்று பார்த்துக்கொண்டே பயணம் செய்தோம். தரிசனமும் , கிரி வலமும் முடித்ததனால் மனது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். பாதை நன்றாக இருந்ததால்  வேகமாகவும், சுகமாகவும் பயணம் செய்தோம். சாகாவை நெருங்கும் போது சிறிது தூரம்  மண் பாதையில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. சுமார் இரண்டு கி.மீ தூரத்தை கடக்க சுமார் ஒரு மணி நேரம் ஆனது  இரவு பத்து மணியளவில் சாகா வந்தடைந்தோம். அங்கும் அனவருக்கும் பொதுவான குளியலறை உள்ள ஒரு ஒரு சாதாரண தங்கும் விடுதியில் தங்க வைத்தனர். இரவு உணவை உண்டு விட்டு மறுநாளே காத்மாண்டு திரும்பமுடியும் என்ற நம்பிக்கையுடன் உறங்கச்சென்றோம்.

No comments: