Friday, April 12, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -6 (திருக்கயிலாய யாத்திரை-2012)

காத்மாண்டு

படான் அரண்மனை சதுக்கம் 

படான் சதுக்கம் பற்றிய கல்வெட்டு


அடுத்து நாங்கள் சென்றது படான் சதுக்கம் ஆகும்நேபாளத்தின் மூன்று முக்கிய நகரங்கள் காத்மாண்டுபடான் மற்றும் பக்தபூர் ஆகியவை ஆகும்.  இவற்றுள் காத்மாண்டு மற்றும் படான் நகரை பாக்மதி ஆறு பிரிக்கின்றதுஇந்நகரம் அழகிய நகரம் என்னும் பொருள்படும் லலித்பூர் என்றும் அழைக்கப்படுகின்றதுஅசோக சக்க்ரவர்த்தி கட்டிய நான்கு ஸ்தூபிகள் இந்நகரின் நான்கு எல்லைகளில் உள்ளனவிநாயகப்பெருமான்

படான் தற்போது ஒரு பாதுகாக்கப்பட்ட  கலாசார மையமாக விளங்குகின்றது. வாகனங்கள் தர்பார் சதுக்கம் என்னும் அரண்மனை சதுக்கத்திற்கு அனுமதிக்கபடுவதில்லை. வாகனங்களை எல்லையிலேயே நிறுத்தி விட்டு நடந்துதான் செல்ல வேண்டும். தர்பார் சதுக்கத்தை பார்வையிட கட்டணம் வசூலிக்கின்றனர்தர்பார் சதுக்கத்தில் எல்லாவிதமான இந்து மற்றும் புத்த கோயில்கள்  நிறைந்திருக்கின்றன.


நரசிம்மர் 


சட்டக்கைகளில் அருமையான மர சிற்பங்கள்


 தலை வாசல் ல்கதவின் அருமையான மர வேலைப்பாடு 


 நகரின் நடு மையமாக தர்பார் சதுக்கம் உள்ளது. இந்த சதுக்கத்தின் நுழைவில் கணேசர்அனுமன்மற்றும் நரசிம்மர் சிற்பங்கள் உள்ளன.    இந்த சதுக்கத்தின் கிழக்குப்பகுதியில் தென் வடலாக அரண்மனை உள்ளது. இந்த அரண்மனை மூன்று மாடி கட்டிடம், தற்போது இந்த அரண்மனை ஒரு அருங்காட்சியமாக விளங்குகிறதுஅரண்மணையின் கூரையை தாங்கும் அநேக சட்டங்களில் அருமையான மர சிற்பங்கள் மற்றும் ஜன்னல்களில் உள்ள வேலைப்பாடுகளையும் காண கண் கோடி வேண்டும் பல கரங்களையுடைய தெய்வ உருவங்களை மிகவும் நுணுக்கமாக செதுக்கியுள்ளனர் நேவார் தச்சர்கள்.   அதன் எதிரே அநேகம் கோயில்கள் உள்ளன.  வட கோடியில் பீமனுக்கான மூன்றடுக்கு பகோடா பாணி ஆலயம் உள்ளது. அதன் அருகே மங்கா ஹிடி எனப்படும் குளம் உள்ளது அதில் உள்ள முதலை வடிவ தாரைகள் அருமை.


லிங்கத்துடன்கூடிய முன் கருடப்பலகைஅழகிய உலோக யமுனை  சிற்பம்


 சாளர ஜன்னலில் நுணுக்கமான மர வேலைப்பாடு

படான் அரண்மணை

கிருஷ்ணர் ஆலயம்
இதன் அருகே மணி மண்டபம் உள்ளது.  அடுத்தது விஸ்வநாதர் ஆலயம்இவ்வாலயம் இரண்டடுக்கு பகோடா பாணி ஆலயம்அதற்கடுத்த ஆலயம் மிகவும் அருமையான கிருஷ்ணர் ஆலயம்மூன்று நிலை ஆலயத்தின் மூன்றாவது நிலையில் முன் பக்கத்தில் கிருஷ்ணர் அருள் பாலிக்கின்றார் பின் புறம் இராமர் அருள் பாலிக்கின்றார்.  மற்றும் விநாயகர் மற்றும் நரசிம்மர் சன்னதிகளும் உள்ளன. . கர்ப்பகிரகத்தின் சுவர்களில் அருமையாக தசாவாதர மர சிற்பங்கள் அருமைஇரண்டாவது நிலையில்  இராமாயண காட்சி மற்றும்   முதல் நிலையில் மஹாபாரத காட்சி சிற்பங்களும் கண்ணுக்கு விருந்து.  கிருஷ்ணரை நோக்கியவாறு தூணின் மேல் எழில்மிகு கருடன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.கிருஷ்ணர் ஆலயத்தை அடுத்து ஜகந்நாராயணர் ஆலயம் செங்கல்லால் ஆனது. அழகிய கருட கம்பம் 

சிகார வடிவக் ஜகந்நாதர் கோயில் 

படான் தர்பார் சதுகத்தின் பல கோவில்கள்


அற்புத நுண்ணிய வேலைப்பாடுடன் கூடிய கட்டிடம் 

இதை அடுத்து யோகேந்திர மல்ல அரசனின் சிலை உள்ளதுஇதை அடுத்து ஹரி சங்கர் ஆலயம் அதாவது சங்கர நாராயணர் ஆலயம்இதன் எதிரே அரண்மணையில் பிரம்மாண்ட மணி உள்ளது இதை அடுத்து எண்கோண கல்லால் ஆன கிருஷ்ணர் ஆலயம் உள்ளது.  எல்லா கோவில்களையும் சிம்மங்கள்யாணைகள்ட்ரேகன்க காவல் காக்கின்றன.  சுந்தரி சௌக் எனப்படும் தண்ணீர் தொட்டியில் உள்ள அஷ்ட மாதர்கள்அஷ்ட நாகங்கள்மற்றும் அஷ்ட பைரவர்களின்      கற்சிற்பங்கள் அற்புதம்படான் சதுக்கத்தை முழுதுமாக சுற்றி பார்க்க ஒரு முழு நாள் வேண்டும் கிடைத்த நேரத்தில் நாங்கள் சுற்றிப் பார்த்து விட்டு மாலை நேரமாகி விட்டதால் பௌத்நாத்திற்கு புறப்பட்டோம்.குமாரி பெஹல்

வழியில் குமாரி பஹல் என்னும் கட்டிடத்தைப் பார்த்தோம்நேபாளத்தில் வாழும் தேவியை வழிபடும் வழக்கம் உள்ளதுநான்கு வயதான ஒரு தெய்வ அம்சம் கொண்ட  பெண் குழந்தையை துர்கை அம்மனாக கருதி தேர்ந்தெடுத்து அம்மனாக வணங்கி வருகின்றனர்அந்த குமாரி தெய்வம் வசிக்கும் கட்டிடம் தான் இந்த குமார் பஹல்
************** 


திருநாவுக்கரசர்  தேவாரம்

திருக்கயிலாயம்
களித்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடி
நெளித்தவ னெடுத்தி டல்லு நேரிழை யஞ்ச நோக்கி
வெளித்தவ னூன்றி யிட்ட வெற்பினா லலறி வீழ்ந்தான்
மளித்திறை யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே.(6)

பொருள்:செருக்குற்ற இராவணன் கண்சிவந்து கயிலை நன்மலையை நோக்கி ஓடிச் சென்று உடலை நெளித்துக் கொண்டு பெயர்க்கமுற்பட்ட அளவில் பார்வதி அஞ்ச , அதனை நோக்கி வெண்ணிற நீறு பூசிய பெருமான் மலையை அழுத்த , இராவணன் அலறிக்கொண்டு விழுந்தான் . விரலை மடித்துக் கொண்டு அழுத்தமாக ஊன்றியிருந்தால் மறித்தும் நோக்கு இல்லை அன்றே .
தேவாரம் முழுவதையும் படிக்க செல்லுங்கள் http://www.thevaaram.org/

                                                                                                    புனித யாத்திரை தொடரும்.  .   .   .