Thursday, April 18, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -8 (திருக்கயிலாய யாத்திரை-2012)

காத்மாண்டுவிலிருந்து கொடாரி பேருந்து பயணம்

பயணம் செய்த பேருந்து

31/05/2012  வியாழக்கிழமை  அன்று அதிகாலை மணிக்கே எழுந்து தயாராகி பைக்களை எல்லாம் வெளியே வைத்துக்கொண்டு சீன எல்லைக்கு அழைத்துக் கொண்டு செல்லக்கூடிய பேருந்துக்காக காத்திருந்தோம். பேருந்து சுமார் மணிக்கு வந்தது, பைகளை எல்லாம் ஏற்றிய பின் அந்த முக்கண் முதல்வரை, ஆலம் உண்ட நீல கண்டரை, மலையரசன் பொற்பாவை உமையுடன் தரிசனம் செய்ய புறப்பட்டோம்  


கோசி நதியோரமே பயணம்

முதலில் பக்தபூர் வழியாக நெடுஞ்சாலையில் பயணம் செய்தோம்  114 கி.மீ தூர   இந்த அரனிகா ராஜ்மார்க்  (Aranika Rajmarg)  என்று அழைக்கப்படும் இந்த இரு வழிப்பாதை நெடுஞ்சாலையை முதலில் சீனா  1963-64ல் கட்டியதுஇப்போது இதன் ஒரு பகுதி தற்போது ஜப்பான் அரசின் உதவியுடன் நான்கு வழிப்பாதை ஆகியுள்ளதுபின்னர் காத்மாண்டு நகரத்தை கடந்து துலிகேல்லை கடக்கும் போது  143 அடி உயர சிவபெருமானை பேருந்திலிருந்தே தரிசனம் செய்தோம்காலைச் சூரிய ஒளியில் இந்த காட்சி மிகவும் இரம்மியமாக இருந்தது.


கொண்டல் கொஞ்சும் மலைச் சிகரங்கள்

 பின்னர் அழகிய   பாலன்சௌக் பள்ளத்தாக்கில் பயணம் செய்து டோலாகாட் என்னும் நகரை அடைந்தோம்,  பல் வேறு   சுற்றுலா அமைப்பாளர்கள் நதியில் படகுப் பயணம் நடத்துகின்றனர்இரு பக்கமும் இமயமலையின் அருமையான காட்சி பச்சை பசேல் என்று இருந்ததுவழியில் பல கிராமங்கள்சூரிய கோசி நதியோரமாவே பயணம் செய்தோம். வழியெங்கும் பெரிதும் சிறிதுமாக பல அருவிகள். பல கிராமங்கள் எல்லா கிராமங்களிலும் விவசாயம் நடைபெறுகின்றது. இப்பகுதி மக்கள் சிறந்த உழைப்பாளிகளாக உள்ளனர் என்பது தெளிவாக தெரிந்தது. 



இடையில் சிறிது நேரம் மழை 

வழியெங்கும் கருப்பு ஆடை அணிந்த விசேஷப் படையினர் பல இடங்களில் சோதனை செய்த பின்னரே மேலே செல்ல அனுமதிக்கின்றனர்.  ஒரு இடத்தில் பைகளை எல்லாம் சோதனை செய்தனர் ஏன் என்று விசாரித்த போது சீனாவிற்கு கடத்தல் அதிகம் அதுவும் சந்தனக் கடத்தல் அதிகம் ஆகவேதான் இவ்வளவு சோதனை என்று கூறினார்கள்மேலும் சரியான ஆட்கள்தான் செல்கின்றார்களாஎன்று பாஸ்போர்ட்டையும் சரி பார்த்தனர்.   இதனால் பயணம் மிகவும் தாமதப்பட்டதுநாங்கள் சென்ற போது மழைக் காலம் இல்லை எனவே எந்த பிரச்னையும் இல்லைஆனால்  ,மழைக் காலத்தில் இப்பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு தாமதமாக வாய்ப்பு உள்ளது.
தேநீர் அருந்திய ஜீரோ கிலோ கிராமம்
(படத்தில் பாண்டே சகோதர சகோதரி மற்றும் நடுவில் அமீத் அஹர்வால்)



எண்ணற்ற அருவிகள் சங்கமங்கள்


ஜீரோ கிலோ என்ற இடத்தில் தேநீர் அருந்தினோம்வழியில் கோசி நதியில் பல நீர் மின் நிலையங்களைப் பார்த்தோம்பார்பிஸே என்ற இடத்தில்  Bungy Jump  என்னும் வீர விளையாட்டு நடைபெறும் பாலத்தைக் கண்டோம்அடுத்து பல்பிங் பாலத்தை கடந்து   சிந்த்பால் சோக் மாவட்டத்தில் உள்ள தோதாப்பாணி சுடு நீர் ஊற்றுகளை கடந்து சீன எல்லை ஊரான கொடாரியை (Kodari) அடைந்தோம்


மலை  உச்சியில் ஒரு வீடு

வழியெங்கும் இயற்கை அன்னை பச்சைப் போர்வையுடன
 எழிலாய் காட்சி தருகின்றாள் 

வழியிலொரு கிராமம்

சீனப்பகுதியில் பத்து நாட்களுக்கு அனைவருக்கும் வேண்டிய உணவு பொருட்கள் அனைத்தையும் காத்மாண்டுவில் இருந்தே வாங்கிச் செல்கின்றனர், கோதுமை மாவு, அரிசி, பால் பவுடர், சர்க்கரை, எண்ணெய், காய்கறிகள்பழ வகைகள், ரொட்டி, போர்ன்விடா குப்பிகள், குடி தண்ணீர் குப்பிகள் என்று அனைத்து பொருட்களையும் மற்றும் சமையலுக்கு வேண்டிய பாத்திரங்கள், எரிவாயு உருளைகள், அனைவருக்கும் தட்டு டம்ளர் ஆகியவற்றை இரண்டு வண்டிகளில் நிரப்பிக்கொண்டு வந்தனர். அனைவரது பெரிய பைகளும் இந்த வண்டிகளில்தான் கொண்டு வரப்படுகின்றன. சேர்ப்பாக்காள் இதிலேயே படுத்து தூங்குகின்றனர். 



ஆற்றின் குறுக்கே தடுப்பணை, நீர் மின் நிலையம்

************

திருநாவுக்கரசர்  தேவாரம்

திருக்கயிலாயம்






கயிலை மலையை காவல் காக்கும்
அதிகார நந்தியில்  திருவான்மியூர்  மருந்தீஸ்வரர்


கடியவன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடி
வடிவுடை மங்கை யஞ்ச வெடுத்தலு மருவ நோக்கிச்
செடிபடத் திருவி ரல்லா லூன்றலுஞ் சிதைந்து வீழ்ந்தான்
வடிவுற வூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே. (8)


பொருள் :கொடிய இராவணன் வெகுண்டு ஓடிச்சென்று கயிலை நன்மலையைப் பார்வதி அஞ்சுமாறு பெயர்த்த அளவில் சிவபெருமான் பொருந்த நினைத்து அவனுக்குத் தீங்கு நிகழுமாறு திருவிரலால் அழுத்திய அளவில் உருச்சிதைந்து விழுந்தான் . விரல் நன்றாகப் பொருந்த ஊன்றியிருந்தாராயின் மறித்தும் நோக்கு இல்லை அன்றே .



தேவாரம் முழுவதையும் படிக்க செல்லுங்கள் http://www.thevaaram.org/

                                                                                                    புனித யாத்திரை தொடரும்.  .   .   .   


Sunday, April 14, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -7 (திருக்கயிலாய யாத்திரை-2012)

காத்மாண்டு

பௌத்நாத் ஸ்தூபி

அழகிய தோரண வாயில் 


அடுத்து நாங்கள் பௌத்நாத் ஸ்தூபியை தரிசிக்க சென்றோம். உலகின் ஒரு பெரிய ஸ்தூபி இந்த புத்தநாத் ஸ்தூபி. திபெத்திய புத்தர்களுக்கு இந்த ஸ்தூபி மிகவும் முக்கியமானது. இதன் அருகே பல கோம்பா எனப்படும் திபெத்திய புத்த கோவில்கள் உள்ளன. இந்த ஆலயங்களில் தாங்கா எனப்படும்   ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவை மண்டலங்கள்,  புத்தரின் வாழ்க்கை வரலாறு, தர்ம சக்கரம் ஆகியவை     அருமையான வர்ணங்களை பயன்படுத்தி இந்த ஓவியங்கள் வரையப்படுகின்றன.  திபெத்திய புத்தர்கள் தாந்த்ரீக முறையில்   வழிபாடு செய்கின்றனர். ஆதி காலத்தில் திபெத்தின் தலை நகரான லாஸா செல்லும் பக்தர்கள்   எந்த இடர்பாடும் இல்லாமல் பாதுகாப்பாக திரும்பி வருவதற்காக இங்கு பிரார்த்தனை செய்து விட்டு செல்வார்களாம்.




பௌத்நாத் ஸ்தூபி



இந்த ஸ்தூபம் சுமார் கி.பி  600ம் ஆண்டில் திபெத்திய அரசன் சாங்சன் கோம்போ   என்பவன் தனது துணைவியரின் தூண்டுதலால் புத்த மதத்திற்கு மாறிய போது கட்டியதாக   நம்பிக்கைபின்னர் முஸ்லிம் படையெடுப்பின் போது சேதமடைந்த இந்த விகாரத்தை  14ம் நூற்றாண்டில் புணருத்தாரணம் செய்துள்ளனர்இந்த ஸ்தூபியில் கௌதம புத்தரின் எலும்பு இருப்பதாக நம்பப்படுகின்றது.  இந்த ஸ்தூபியின் கீழ்பாகம்  ஸ்வயம்புநாத் போல சதுர மேடையாக இல்லாமல் நான்கு அடுக்காக கட்டப்பட்டுள்ளது இதன் தனி சிறப்பு.  இந்த ஸ்தூபியை அடித்தளத்தில்  108  தியான அமிதாபரின் சிலைகள் உள்ளனமேலும் எண்ணற்ற பிராத்தனை உருளைகளும் உள்ளன.

 பௌத்நாத்தில் எங்கள் குழுவினர்

நாங்கள் சென்ற சமயம் சூரியன் மறையும் தருணம் என்பதால் பல ஆயிரம் புத்தர்கள் இந்த ஸ்தூபியை வலம் வந்து கொண்டிருந்தனர்மேலும் ஒரு சன்னதியில் பூஜைகளும் நடந்து கொண்டிருந்ததுபிரம்மதாளம்கொம்புபேண்ட் போன்ற வாத்தியங்கள் முழங்க மந்திரங்கள் கூறி மிகவும்  ஆரவாரத்துடன் கோலாகலமாக  பூஜை நடைபெற்று கொண்டிருந்தது. . பொரிபாப் கார்ன்முறுக்கு,  பிஸ்கட் ஆகியவை நைவேத்யமாக குவிக்க வைக்கப்பட்டிருந்ததுநான்கு நிலையிலும் பக்தர்கள் மந்திரங்களை கூறிக்கொண்டே வலம் வந்த காட்சி காணக் கிடைக்காத ஒரு காட்சியாகும்.  மேலே ஏறி சென்றும் வலம் வரலாம்.

 மாலை பூசை

 மேள  வாத்தியம் 

 பிரார்த்தனை கொடிகள்


பிரம்மாண்ட மணி


பௌத்நாத்திலிருந்து திரும்பி வரும் போது பேருந்தில் எங்களுடன் வந்த சேர்பா  நவாங் சோனம் அவர்கள் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொண்டார்இவர்தான் எங்களுடன் திபெத்திய பகுதிக்குள்  எங்களுடன் வரப்போவதாக   கூறினார்இவருடன் மேலும் ரஞ்சித் லம்பா, ராம் தமங், ராமு தௌத் ராய் ஆகிய மூன்று சேர்பாக்காளும் மற்றும் சீன வழிகாட்டி ஒருவரும் வருவார் என்று கூறினார்பின்னர் ஹோட்டல் வந்து சேர்ந்தோம்.

சிரேஷ்டா ஹாலிடேஸிலிருந்து ஒருவர் வந்து யாத்திரை பற்றி எங்களுக்கு விளக்கினார்.  நாளை இங்கிருந்து கோடாரி சென்று  நட்புப் பாலம் வழியாக சீனாவுக்குள் நுழைந்து முதல்   இரண்டு நாட்கள் நைலம் என்னும் ஊரில் தங்குவோம்பின்னர் மறு நாள் நாள் முழுக்க பயணம் செய்து பிரமபுத்ரா நதியின்  கரையில் உள்ள சாகா என்ற நகரத்தில் தங்குவோம்அடுத்த நாள் மானசரோவரை அடைந்து அங்கு தங்குவோம்அங்கு முழு மதி நாளின் அழகைக் கண்டு   களிக்கலாம்அதன் கரையில் யாகம் செய்து சிவபெருமானையும்பார்வதி அம்மையையும் வணங்கி முடிந்தால் அன்று சாகா தாவா என்று அழைக்கப்படும் திபெத்திய பண்டிகையை சென்று பார்க்கலாம்  என்று கூறினார்பின்னர் மூன்று நாட்கள் கைலாய கிரிவலம் செய்து பின்னர் சென்ற வழியில் திரும்பி வந்து   காத்மாண்டு வருவோம் என்றார்மேலும் தற்போது இரு குழுக்கள் கிரி வலத்தை முடித்து விட்டன என்று வயிற்றில்   பால் வார்க்கும் நல்ல செய்தியையும் கூறினார்.

உயர் மட்டம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்தினமும்   High altitude sickness  என்னும் நெஞ்சில் தண்ணீர் கட்டிக்கொள்ளும் நோய் வராமல் தடுக்க  Diamox  என்னும் மாத்திரை தருவோம் அதை அனைவரும் சாப்பிடுங்கள் எந்த பிரச்னையும் இருக்காதுஇது நீங்கள் யாத்திரையை சுகமாக முடிக்க மிகவும் உதவும் என்றார்பிடிக்கின்றதோ இல்லையோ சாப்பிடுங்கள்வெறும் வயிற்றுடன் இருக்காதீர்கள்நிறைய திரவ பதார்த்தங்களை  பருகிக் கொண்டிருங்கள்இந்த மருந்து சாப்பிடும் போது சிறுநீர் அதிகமாக வெளியாகும் என்பதால் இது மிகவும் அவசியம் என்றார்கள்.  இவர்கள்  பைகள் த்விர ஒரு தொப்பி மற்றும் மழைக்கோட்டும் இலவசமாக கொடுத்தார்கள்வேண்டியவர்களுக்கு குளிரைத் தாங்கக்கூடிய கோட்டை ரூ.500/- என்று வாடகைக்கு கொடுத்தார்கள்கைத்தடி பின்னர் தருவதாக கூறினார்கள்பின்னர் அறைக்கு திரும்பி  வந்து அவர்கள் கொடுத்த தண்ணீர் புகா பையில் வேண்டிய பொருட்களை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு தேவைப்படாத பொருட்களை வேறு  ஒரு பையில் போட்டு ஹோட்டலிலேயே வைத்து விட்டு உறங்கச் சென்றோம்.


திருநாவுக்கரசர்  தேவாரம்

திருக்கயிலாயம்

கயிலை மலையை காவல் காக்கும்
அதிகார நந்தியில் கபாலீஸ்வரர்


கருத்தனாய்க் கண்சி வந்து கயிலைநன் மலையைக் கையால்
எருத்தனா யெடுத்த வாறே யேந்திழை யஞ்ச வீசன்
திருத்தனாய் நின்ற தேவன் றிருவிர லூன்ற வீழ்ந்தான்
வருத்துவா னூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே.(7)

பொருள் :
இலங்கைத் தலைவன் வெகுண்டு கயிலை நன் மலையைக் காளைபோன்றவனாய்க் கழுத்தைக் கொடுத்துப் பெயர்த்த அளவில் பார்வதி அஞ்ச , எல்லோரையும் ஆள்பவனாய்த் தீய வினைகளிலிருந்து திருத்தி ஆட்கொள்ளும் எம் பெருமான் திரு விரலை ஊன்றிய அளவில் அவன் செயலற்று விழுந்தான் . இராவணனைத் துன்புறுத்தும் எண்ணத்தோடு விரலை ஊன்றி யிருந்தால் மறித்தும் நோக்கு இல்லை அன்றே .




தேவாரம் முழுவதையும் படிக்க செல்லுங்கள் http://www.thevaaram.org/

                                                                                                    புனித யாத்திரை தொடரும்.  .   .   .