Friday, May 17, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -13 (திருக்கயிலாய யாத்திரை-2012)

நைலாமில் தங்கல்

சீ - சா- பங் -மா ஹோட்டல்

நாங்கள் சென்ற சமயம் ஒரு குழுவினர் தங்கும் விடுதியின் முற்றத்தில் அமர்ந்து  ஒரு சுவாமிஜீ ஒருவரின் தலைமையில் அமர்ந்து லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்து கொண்டிருந்தனர். ஒரு குழுவினர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். உண்மையாகவே ஹோட்டல் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது ஜே ஜே என்று கூட்டம். அறைகள் எதுவும் காலியாக இல்லை. பின்னர்  ஒரு குழுவினர் கிளம்பிச் சென்ற போதுதான் இரண்டு  பெரிய ஹால்கள் கிடைத்தன அந்த இடைப்பட்ட நேரத்தில் சிறிது நேரம் பஜனைப் பாடல்களைப் பாடி கொண்டிருந்தோம். உணவு தயார் ஆனவுடன் உணவருந்தினோம்.   அதுவும் 8 பேர் தங்கும் இடத்தில் 12 பேர் தங்க வேண்டியிருந்தது. அனைவருக்கும் பொதுவாக சுமார் 10 கழிவறைகளும், குளியல் அறைகளும் இருந்தன. வரிசையில் நின்றுதான் இந்த அறைகளை பயன் படுத்த வேண்டியிருந்தது. சுத்தம் என்பது பேருக்குக்கூட இல்லை. அறைகள் கிடைத்த பின் அவரவர்கள் பொருட்களை பாதுகாப்பாக வைத்து விட்டு சிறிது மலையேற்றப் பயிற்சிக்காக அருகில் உள்ள ஒரு மலைக்கு சென்றோம். தங்கும் விடுதியின்   அழகு

 அறைகளுக்காக காத்திருக்கின்றோம் இன்னும் காத்திருக்கின்றோம்.........

 காத்திருக்கும் நேரத்தில் பஜனை

நண்பர்கள் பாபு மற்றும் சுந்தர்

 செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் உணவு


விடுதியின் முற்றத்தில் அமர்ந்து லலிதா சகஸ்ரநாமம்
 பாராயணம் செய்யும் ஒரு குழுவினர் 

ஒரே அறையில் 12 யாத்திரிகள்

பொதுவாக உயர் மட்டத்திற்கு உடலை தயார் படுத்திக்கொள்ளும் வண்ணம் அனைத்து யாத்ரிகளூம் ஒரு நாள் நைலாமில் தங்கிய பிறகே செல்கின்றனர். அதே சமயம் மலையேற்றப் பயிற்சியும் மேற்கொள்கின்றனர். இரண்டு நாள் தங்கும் சில குழுவினர்   கைலாய மலையின் உச்சிக்கு சென்றவரான புத்த பிட்சு மில்ரெபா வர்கள் தங்கியிருந்த குகைக்கும் சென்று வருகின்றனர். இக்குகை சாகா செல்லும் வழியிதான் உள்ளது என்பதால் சில குழுவினர் செல்லும் போது அப்படியே வண்டியை நிறுத்தி குகையின் உள்ளே சென்று வணங்கி விட்டு செல்கின்றனர். நாங்கள் அரை நாள்தான் நைலாமில் தங்கியதால் மலையேற்ற பயிற்சி மட்டும் செய்தோம்.


*************************************

சுந்தரர் தேவாரம்
நொடித்தான் மலை பதிகம்

திருக்கயிலாய மலையை எம்பிரான் தோழர் சுந்தரர் நொடித்தான் மலை  என்று போற்றி பாடியுள்ளார். நமது துக்கங்களுக்கு காரணமான பாவங்களை நீக்குவதாலும (நொடித்தல்- அழித்தல்) அழித்தல்  தொழிலை உடைய உருத்திரமூர்த்தி வீற்றிருந்தருளும் தலமாதலால்  நொடித்தான் மலை  என்னும் பெயர் பெற்றது.


திருமயிலையில் சுந்தரர் குருபூசை விழா
வெள்ளை யானையில் திருக்கயிலாயம் செல்லும் காட்சி


இவ்விழாவை முழுதும்காணஇங்கு செல்லுங்கள்மந்திரம் ஒன்றறியேன் மனை வாழக்கை மகிழ்ந்தடியேன்
சுந்தர வேடங்களால் துரி சேசெயுந் தொண்டன் எனை
அந்தர மால்விசும்பில் அழ கானை யருள்புரிந்த
துந்தர மோநெஞ்சமே நொடித் தான்மலை உத்தமனே !(3)

பொருள்: நெஞ்சே, அடியேன், மறைமொழிகளை ஓதுதல் செய்யாது இல்வாழ்க்கையில் மயங்கி, அடியவர் வேடத்தை மேற்கொள்ளாது, அழகை தரும் வேடங்களை புனைந்து கொண்டு, இவ்வாறெல்லாம் பொருந்தாதனவற்றையே செய்து வாழும் ஒரு தொண்டன்; எனக்கும், திருக்கயிலையின் கண் வீற்றிருக்கும்  முதல்வன் வெளியாகிய  பெரிய வானத்திற் செல்லும் அழகுடைய  யானையூர்தியை அளித்தருளியதும் என் தரத்ததோ! 


தேவாரம் முழுவதையும் படிக்க இங்கு செல்லுங்கள்

 http://www.thevaaram.com 

Wednesday, May 15, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -12 (திருக்கயிலாய யாத்திரை-2012)

பஞ்சம் சிகரங்கள்நைலம் அருகில் உள்ள 7000 மீ உயர பஞ்சம் பனிச்சிகரங்கள்இவ்வாறு சுமார் இரண்டு  மணி நேரம் பயணம் செய்தபின் நைலாமிற்கு சற்று முன்னர் பஞ்சம் சிகரங்கள்(7000 மீ) என்னும் பனிமுடிய சிகரங்களை கண்டோம். அது அற்புத காட்சியாக இருந்தது. சிகரங்களை கண்டு களிக்கும் விதத்தில் காணும் மேடையும் அமைத்திருக்கின்றனர். அங்கிருந்து கீழிறங்கி சென்று சலசலத்து ஓடும் ஆற்றையும் கண்ணுற்றோம். இப்பகுதியில் சிறிது பசுமை உள்ளது. பஞ்சம் என்னும் புத்த குருமாரின் பெயரால் இந்த சிகரங்கள் அழைக்கப்படுகின்றன என்று எங்கள் சேர்ப்பாக்கள்  கூறினார்கள்.   அனைவரும் வண்டியை விட்டு இறங்கி பின் புலத்தில் சிகரங்கள் இருக்குமாறு பல புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு மதிய நேரத்திற்கு நைலாம் வந்து சேர்ந்தோம். இன்றைய பயணம் செய்த தூரம் 35 கி.மீ தான் என்றாலும் 1400 மீ உயரம் ஏறியுள்ளோம். 

பஞ்சம் சிகரத்தின் அழகை இரசிக்கும்-
 புகைப்படம் எடுக்கும் குழுவினர்


 பஞ்சம் சிகரம் முன் புலத்தில் எங்கள் குழுவினர்

மதிய நேரத்திற்கு நாங்கள் நைலாம் நகரின் (3750மீ - 12300 அடி) சீ–சா–பாங்-மா என்னும் தங்கும் விடுதிக்கு சென்று சேர்ந்தோம். “எங்கெங்கு காணினும் சக்தியடா என்று பாரதியார் அன்று பாடியது போல் இங்கு எங்கு நோக்கினும் சிவ பக்தர்கள்தான் கண்ணில் பட்டனர் அனைவரும் மலையரசன் பொற்பாவை உடனுறை திருக்கயிலை நாதரை தரிசனம் செய்ய வந்தவர்கள் அவரவர்கள் சுற்றுலா நிறுவனத்தரின் வண்ண வண்ண தொப்பிகளையும், கோட்டுகளையும் அணிந்து கொண்டு வலம் வந்து கொண்டிருந்தனர். 3750 மீ உயரம் என்பதால் காற்றிலேயே ஈரப்பதம் இருந்தது. வாடைக் காற்றும் வேகமாக வீசிக்கொண்டிருந்தது.


நாங்கள் 13 பேரும் ஒரே  நிறுவனத்தில் பணி புரிகிறோம்

சிகரத்தின் அழகை கண்டு களிக்கவும் ஆற்றைக் காண
 அமைத்திருக்கும் நடை மேடை மற்றும் படிகள்


அமர்ந்து அருமையான காற்றை அனுபவித்துக்
கொண்டு சிகரங்களை இரசிக்க மேடை


********************************


சுந்தரர் தேவாரம்
நொடித்தான் மலை பதிகம்


திருக்கயிலாய மலையை எம்பிரான் தோழர் சுந்தரர் நொடித்தான் மலை என்று போற்றிப் பதிகம்  பாடியுள்ளார். நமது துக்கங்களுக்கு காரணமான பாவங்களை நீக்குவதாலும (நொடித்தல்- அழித்தல்) அழித்தல்  தொழிலை உடைய உருத்திரமூர்த்தி வீற்றிருந்தருளும் தலமாதலால்  நொடித்தான் மலை  என்னும் பெயர் பெற்றது.
வெள்ளை யானையில் சுந்தர மூர்த்தி சுவாமிகள்  சுந்தரர் வெள்ளை யானையில் திருக்கயிலாயம் சென்ற விழா திருமயிலையில் கொண்டாடப்படும் அழகை இங்கு சென்று படியுங்கள்ஆனை உரித்தபகை அடி யேனொடு மீளக்கொலோ
ஊனை உயிர்வெருட்டி ஒள்ளி யானை நினைந்திருந்தேன்
வானை மதித்தமரர் வலஞ் செய்தெனை யேறவைக்க
ஆனை அருள்புரிந்தான் நொடித் தான்மலை உத்தமனே (2)

பொருள்: யான் கருவி கரணங்களை அறிவினால் ஆடக்கி அறிவே வடிவாய் உள்ள தண்ணாஈ உள்கியிருத்தலாகிய ஒன்றே செய்தேன், அவ்வளவிற்கே திருக்கயிலை மலைக்கண் வீற்றிருக்கும் அம்முதல்வன், வானுலகத்தையே பெரிதாக மதித்துள்ள தேவர்கள் வந்து என்னை வலம் செய்து ஏற்றிச் செல்லுமாறு,ஒர் யானையூர்தியை அருளினான். அஃது அவன் முன்பு யானையை உரித்தனால் நிலைத்து நிற்கும் பகைமையை அடியேனால் நீங்கச்செய்து, அதற்கு அருள் பண்ணக் கருதியதாலோ அல்லது அடியேனுக்கு அருளவோ!


தேவாரம் முழுவதையும் படிக்க செல்லுங்கள் http://www.thevaaram.org/

                                                                                                    புனித யாத்திரை தொடரும்.  .   .   .   

Tuesday, May 14, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -11 (திருக்கயிலாய யாத்திரை-2012)

ஜாங்மூவிலிருந்து நைலாம் பயணம் 

ஜாங்மூவிலிருந்து நைலாம் செல்லும்  தார் சாலை
(தற்போது டார்ச்சன் வரை பாதை இது போல அருமையாக உள்ளது)


மறு நாள் காலை சூரிய உதயம் அருமையாக உதித்தது தன் செவ்வண்ணக் கதிர்களினால் சூரியன் அந்த ஜாங்மூ நகரத்தை தழுவும் அழகைக் கண்டு களித்தோம். பனி உருகி விட்டதால் நகரமெங்கும் கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருந்தன. மலைப்பிரதேசம் என்பதால் அடுக்கடுக்காக நெருக்கமாக வீடுகள் அமைந்துள்ளன. நகரின் நடுவே பெரும்பாதை செல்கின்றது. இன்றைய தினம் நைலாம் நகரில் தங்க வேண்டும் என்பதாலோ என்னவோ வண்டி ஓட்டுநர் தாமதமாக வந்தார்.

பாம்பு போல வளைந்து செல்லும் பாதை
வழியில் உள்ள ஒரு  சுரங்கப்பாதை

எனவே காலை உணவை முடித்து விட்டு நாங்கள் ஜாங்மூ நகரை சிறிது  சுற்றி வந்தோம். எல்லைப்புற நகரம் என்பதால் நகரம் முழுவதும் கடைகள் நேப்பாளத்தில் இருந்து வருபவர்கள் மொத்தமாக பொருட்களை வாங்கிக்கொண்டு செல்கின்றனர். பலதரப்பட்ட ஒப்பணை (Cosmetics) பொருட்கள் விற்கும் கடைகளைப் பார்த்தோம். இந்நகரில் ஒரு இந்துக் கோவிலும் உள்ளது. நகரத்தை சுற்றி வந்து அழகான குழந்தைகளை புகைப்படம் எடுத்துக்கொண்டு வண்டி ஓட்டுநர் வந்தவுடன் நைலாமிற்கு புறப்பட்டோம்.

                         


வழியில் ஒரு அருவி

வண்டியில் ஏறிய உடன் ஒரு பாட்டில் குடிநீர் அனைவருக்கும் வழங்கினர். முன்பே கூறியது போல பாதை இரட்டை வழி தார்ச் சாலை மலையிலிருந்து நிலச்சரிவு ஏற்பட்டாலும் அதை பாதையை அடைக்காதவாறு பல இடங்களில் தடுப்பு சுவர்களும் வலைகளும் அமைத்திருக்கின்றனர் மழைத் தண்ணீர் ஓடுவதற்காக கால்வாய்கள் அமைத்திருக்கின்றனர். பல்வேறு லாரிகள் நேபாளத்திற்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. ஆற்றின் ஓரமாகவே பாதை அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் இரு பக்கமும் பல பனி முடிய சிகரங்களை கண்ணுற்றோம். 

      
                                                               குளு குளு வண்டியில் எங்கள் குழுவினர்

ஒரு கொண்டை ஊசி வளைவு
********************************

சுந்தரர் தேவாரம்
நொடித்தான் மலை பதிகம்

திருக்கயிலாய மலையை  எம்பிரான் தோழர்  சுந்தரர் நொடித்தான்மலை என்று போற்றிப் பதிகம் பாடியுள்ளார்.  நமது துக்கங்களுக்கு காரணமான பாவங்களை நீக்குவதாலும (நொடித்தல்- அழித்தல்) அழித்தல் தொழிலை உடைய உருத்திரமூர்த்தி வீற்றிருந்தருளும் தலமாதலால்  நொடித்தான் மலை என்னும் பெயர் பெற்றது. 

  

சுந்தரர் வெள்ளை யானையில் திருக்கயிலாயம் சென்ற விழா திருமயிலையில் கொண்டாடப்படும் அழகை இங்கு சென்று படியுங்கள்தானெனை முன்படைத்தான் அதறிந்துதன் பொன்னடிக்கே
நானெனை பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து
வானெனைவந் தெதிர்கொள்ள மத்த யானை அருள் புரிந்து
ஊனுயிர் வேறு செய்தான் நொடித் தான்மலை உத்தமனே (1)

பொருள்: திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்த்ருளும் முதல்வன், தானே முன்பு என்னை நிலவுலகில் தோற்றுவித்தருளினான். தோற்றுவித்த அத்திருக்குறிப்பினையுணர்ந்து அவரது பொன் போலும் திருவடிகளுக்கு அந்தோ, எவ்வளவில் பாடல் செய்தேன்!  செய்யாதொழியவும், அப்புன்மை நோக்கி ஒழியாது , என்னை தன் அடியார்களுள் ஒருவனாக்  வைத்தெண்ணி, வானவர்களும் வந்து எதிர் கொள்ளுமாறு, பெரியதோர் வெள்ளை யானை ஊர்தியை எனக்கு அளித்து, எனது உடலொடு உயிரை உயர்வு பெறச் செய்தான்; அவன் திருவருள் இருந்தவாறு என்!


தேவாரம் முழுவதையும் படிக்க செல்லுங்கள் http://www.thevaaram.org/

                                                                                                    புனித யாத்திரை தொடரும்.  .   .   .   

Sunday, May 12, 2013

Kailash Manasarovar Yatra -2012 -7


KATHMANDU

Boudhnath Stupa


Ornately decorated Entrance 

Continuing our tour of Kathamandu,  our next place of visit was to  Bodhnath Stupa also called as Boudha  one of the famous stupas of Kathmandu. Among the Buddhist stupas of Kathmandu  valley Swayambunath and Boudha are among the most impressive and  most visited monuments in Nepal. This is  one of the largest  stupa in  Nepal and one of the largest in the world.  it is a religious centre for Nepal's considerable population of Tibetan Buddhists and  there are lot of monasteries and  many small shops selling  Tibetan artifacts around Boudha.  

Impressive Boudhnath Stupa

Boudha is associated with Lhasa and Tibetan Buddhism. One of the major trade routes coming from Lhasa went through Sankhu and Boudha therefore lies at the Tibetan trader's entry to Kathmandu valley. They gave thanks for their  successful journey across the Himalayas, or praying for a safe return. All the Gompas are decorated with impressive mural paintings depicting  mythological scenes, and sometimes with Thangkas (painted on cotton, framed on brocade). The subjects are deities, great lamas, ritual mandalas and the wheel of life. Most likely the stupa was built some time  after 600 AD after the Tibetan King , Songsten  Gampo, was converted to Buddhism  by his two wives namely  Bhirikuti , the Nepali princess  and Wencheng Konjo from China. Both of them are considered as Green Tara and White Tara. The current  stupa was probably built  after depredation  of Mughal  invaders  in the 14th century. 


 Our group at Boudnath


The stupas are built on holy relics or to commemorate an event or place with a structure that symbolizes Buddhist beliefs. They are never hollow. It is believed that there is a piece of  Gautama Buddha's bone which is interred at Boudha.   The speciality of the base of Boudha is it is not square like in other stupas but four tired Mandala.  We saw lot Tibetans circumambulating tha stupa in all its four levels. The other aspects like dome, spire, watchful eyes of Buddha and 13 step spire are there in Boudha also.  Around the base of the   stupa's circular mound are 108 small images of Dhyani Buddha Amithaba. A brick wall around the stupa has 147 niches , each with prayer wheels bearing the  immortal mantra " OM Mani Padme Hum". On the northern side  of the stupa there is a small shrine  dedicated  to Ajima, the goddess of small pox.    Evening prayer


When we reached the Stupa it was already dusk and in the subdued light the stupa looked more beautiful with thousands of faithfuls circumambulating the Stupa  with prayer in this lips and pious in their eyes. In one of the shrines a prayer ceremony was going on.  Pop-corn packets , Biscuit packets , puffed rice, chocolates  offered by the devotees was heaped like a mound and the Lamas were reciting mantras accompanied with the loud sound of  drums, cymbals and trumpets and it was really dramatic. 

 Drum

 Prayer  flags
While returning form Boudha to the Hotel,  Nawang Sonam  introduced himself. He told that he along with his fellow Sherpas   Ranjit Lamba,  Ram Tamang, Ram Touth Roy will be accompanying us into Tibet for the yatra.  Living in the mountains of eastern and central Nepal, at the foot of Mt.Everest , the Sherpas are the  best known Nepali ethnic group. They are originally from Tibet . Now they  name has become synonymous with  mountaineering and trekking. They have won worldwide fame for their skill  hardiness and  loyalty.

The great bell

After reaching the hotel one representative from Shreshta Holidays briefed us about the yatra.  He told that we will be travelling by bus  to the border town of Kodari   and will cross into Tibetan Autonomy region of China by foot through friendship. Then we will travel to  Nylam  for one day stay for acclimatization. From Nylam we will travel to Saga via La Lung La pass, after crossing River Brahmaputra  we will stay at  Saga for the  night. Next day we will be travelling to Prayang and halt there.  Our next stop will be Manasarovar after having the first darshan of Kailash. After holy  bath and a day's stay at Manasarovar on  full moon night,  we will proceed to Darchen for Kora which can be completed in three days.  From there we return by the same route.   He also informed that some two groups have completed the Kora and there is every chance that we will be also able to complete the Kora.

He advised us to take Diamox tablets in the morning and evening to avoid high altitude sickness.  Because of the laying of new roads on the Tibetan side the duration of the yatra is very less and there is no acclimatization possible so  they requested us to take the tablets.  He likened this tablet to life support,  and asked us drink lot of fluid to avoid loss of fluid due to administration of this medicine and wished us a nice yatra and successful completion of Kora.We packed all our things in the two  water proof   bags they  had provided and deposited unwanted items at the Hotel itself for collection on the return. They provided woolen coats for the needy at a  rent of Rs 500/- for use during the yata.