Saturday, August 31, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -42 (திருக்கயிலாய யாத்திரை-2012)

டார்ச்சனிலிருந்து திருமுடி தரிசனம் 

 திருமுடியின் அருகாமை காட்சிகள்

முக்கண்ணனின் அற்புத தரிசனம்
ஹர்ஷித் ஹிமான்சு சீன வழி காட்டி

விஷ்ணு மூர்த்தி

சென்ற  தடவை பார்த்ததற்கு மிகவும் விரிவடைந்துவிட்டது. பல நவீன கட்டிடங்கள் உள்ளன. தக்லகோட்டிலிருந்து தற்போது ஒரு தார் சாலை டார்ச்சனை இணைக்கின்றது. மிகவும் அதிக அளவில் தங்கும் விடுதிகள் உள்ளன. அதிக அளவில் திருக்கயிலை வாசரை தரிசனம் செய்ய அன்பர்கள் வருகின்றனர் என்பதற்கு இதை விட இன்னும் என்ன சான்று தேவை. ஆயினும் இன்னும் பாதைகளில்  பச்சை நிறத்தில்   Snooker டேபிள்கள் கிடக்கின்றன. டார்ச்சன் ஒரு தூங்குமூஞ்சி நகரம் போலவே இன்னும்  காட்சி அளிக்கின்றது. 

திரு.சுதார் அவர்கள் ஒரு விஷ்ணு சிலை கொண்டு வந்திருந்தார். அதை ஒரு புத்த விகாரத்தில் ஸ்தாபிதம் செய்தோம். பிரம்மா மானசரோவர், திருக்கயிலாயம், நடுவில் டார்ச்சனில் விஷ்ணு மூர்த்தி அருள் பாலித்தால் மும்மூர்த்திகளையும் வணங்கியது போலாகும் என்பது அவரது நம்பிக்கை. பின்னர் மதிய உணவை அங்கேயே முடித்துக் கொண்டு நேராக இன்றே சாகா சென்று விடலாம் என்று புறப்பட்டோம். தங்குமிடம் எதுவும் சரியாக அமையாததால் எவ்வளவு குறைவு காலம் சீனப்பகுதியில் தங்க முடியுமோ அவ்வளவு நல்லது என்று இந்த முடிவெடுத்தோம், சிரேஷ்டாவினரும் ஒரு நாள் காத்மாண்டுவில் தங்கிக் கொள்ள சம்மதம் தந்தனர். எனவே தார்  சாலையில் வழுக்கிக்கொண்டு அன்றே சாகா அடைந்தோம் அந்த காட்சிகளை மறு பதிவில் காணலாமா அன்பர்களே. 
  

Friday, August 30, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -41 (திருக்கயிலாய யாத்திரை-2012)

கிரிவலம் நிறைவு

ட்ரூங்டோவில் உள்ள அறிவிப்பு பலகை

வண்டிகள் காத்துக்கொண்டிருக்கின்றன

(பின் புலத்தில் குர்லா மாந்தாதா மலைத் தொடர்கள்)

சிவசக்தியின் அருளால் கிரி வலம்
 நிறைவு செய்த அன்பர்கள் 

இளம் யாத்திரிகள் ஹிமான்சு & ஹர்ஷித்

டார்ச்சன் நகரம்

பறவைப் பார்வையில்  டார்ச்சன் நகரம்

சூரிய அடுப்பு


டார்ச்சனிலிருந்து திருக்கயிலையின் திருமுடி தரிசனம்


திருக்கயிலையின் அற்புத தரிசனம்


திருக்கயிலாய மலைத் தொடர்

எதிரே குர்லா மாந்தாதா மலைத் தொடர்


 ட்ரூங்டோவிலிருந்து பேருந்து மூலமாக அனைவரும் டார்ச்சன் வந்தடைந்தோம். கிரி வலம் வராமல் தார்ச்சனில் தங்கியிருந்தவர்கள் எங்களுக்காக ஆவலுடன் காத்திருந்தனர். அனைவரும் மகிழ்ச்சியாக அளவளாவினோம். அவர்கள்  நாங்கள் சென்ற தடவை  கிரி வலம் செல்லும் போது தங்கிய விடுதியில்தான் தங்கியிருந்தனர். இன்றைய தினம் வானம் மேகம் இல்லாமல் நிர்மலமாக இருந்தது. வெயில் குளிருக்கு மிகவும் இதமாக இருந்தது. ஐயன் வெள்ளிப் பனித் தலையராக அருமையாக  திருமுடி அருமையாக  தரிசனம் தந்தருளினார். 

 சென்ற தடவையின் போது அடியேனுக்கு ஐயன் முதல் முழு தரிசனம் தந்த இடத்திற்கு சென்று இன்னொரு முறை அவரை வணங்கினேன்.  இங்கு தங்கியிருந்தவர்கள் அஷ்டபத்திற்கும், யம துவாரத்திற்கும் சென்று வந்தனராம். சுடு தண்ணீர் 20 யுவானுக்கு வாங்கி குளிக்க முயன்றிருக்கின்றனர் தலையில் சூடாக விழுந்த தண்ணீர் இடுப்பு வரை வருவதற்குள் குளிர்ந்து விடுவதால் சிலருக்கு சளி பிடித்து விட்டது என்றனர். டார்ச்சனில் இருந்து ஒரு பக்கம் திருக்கயிலாய மலைத் தொடர்களையும் மறு பக்கம் குர்லா மாந்தாதா ம்லைத் தொடர்களையும் அருமையாக காணலாம். மதிய உணவை அந்த விடுதியிலேயே முடித்துக்கொண்டு அப்போதே  காத்மாண்டிற்காக கிளம்பினோம். அடுத்த பதிவில் டார்ச்சனில் கிடைத்த ஐயனின் திருமுடி தரிசனத்தை காணலாம். 


Thursday, August 29, 2013

Kailash Manasarovar Yatra -2012 - 40

Third day's Parikrama 

Beginning  of Third day's Parikrama

Amit Agrawal ......

                                                              Nishta Pandey ....... on the trek

The trek route was plain  with little up and downs 

This day's trek by for the easiest of the three day's trek

On both side of the Jang Chu River  roads are being  constructed 


View of  Gurla Mandata Ranges  

Full view of Gurla Mandata Ranges 

A Black crow above the silvery snow mountain


 Buddhist Prayer spotsSome of our group membersBrahmini White kite

Some group members employed ponies

 Ajay Kaushik at Trungto

A Tibetan mother & child

                                                               Kora of a Tibetan woman
Kneel down .....

 Semi Prostration....... 

                                                                
Full Prostration10th day completion of Parikrama and travel to saga (580Km)

When I woke up on the third day of trek, I could not move my knee, it was tender and was paining a lot. I tried to move but it was very difficult. So I decided to travel by pony that day, luckily who ever wanted pony we got that day also. The pony was available for 100 yuan that day Compared to the earlier days trek route this route was plain with little undulations and is the easiest of thee three days. Also now we have to trek upto Trungto only from there we can travel to Darchen by vehicle. Zang Chu River was flowing silently down and we trekked  above in tha easy soiled path enjoying the beauty of silvery  Gurla Mandata ranges and the azure Manasarovar and Rakshas Tal lakes and it was a mesmerizing site.   During this day's trek we get the full darshan of Gurla Mandata ranges as well the beautiful view of Manasarovar and Rakshas Tal from  a higher elevation. The weather was also pleasant and all of us complted the parikrama upto Trungto easily and without any difficulty. 

As Mr. Mukherjee of our group  undertook the parikrama without wearing black glasses his eyes got affected and he applied eye ointment and it took three days for his eyes to become normal. So it is essential that one use UV protected black glasses especially when  we trek in the vicinity of snow or when it is snowing. The pathe we trekked had been widened so that in future vehicles can ply up to the base of Dolma. One interesting thing was they were  constructing road on the other shore of the Zang Chu river also.   We all reached Trungto  within two hours and the vehicle was waiting for us.  We thanked the Lord of Kailash and the lady who is residing in His body for being so much benevolent to us not only they gave us nice darshan also made us complete the full parikrama in trying conditions. 
.