Thursday, November 13, 2014

தீரா வினை தீர்க்கும் திருக்கயிலை நாதர் தரிசனம் -2

                              திருக்கயிலாய மானசரோவர் தரிசனம் - 2014

                                          காத்மாண்டுவில் தங்கிய விடுதி 

இத்தடவை அடியோங்கள் மேற்கொண்ட யாத்திரையின்  கால அட்டவணை .

முதல் நாள் (04/09/2014) : சென்னையிலிருந்து தில்லி.  தில்லியிலிருந்து நேபாள தலைநகர் காத்மாண்டு சென்று அங்கு இரவு தங்கினோம்.

2ம் நாள்: காத்மாண்டு சுற்றுலா. பசுபதிநாதர் ஆலயம், பௌத்நாத், ஸ்வயம்பு நாத் புத்த விகாரங்கள் மற்றும் காத்மாண்டு நகரை சுற்றிப்பார்த்தோம்.

3ம் நாள்: காத்மாண்டு - கொடாரி  காத்மாண்டுவில் இருந்து  எல்லை நகரான கொடாரி (தாதோபாணி) சென்று தங்கினோம். நிலச்சரிவை நடைப்பயணம்  மூலம் கடந்ததால் இங்கு தங்க வேண்டி வந்தது. இல்லையென்றால் எல்லையை கடந்து நைலம் அடைந்து தங்கியிருக்கலாம். இதனால் யாத்திரை முழுவது ஒரு நாள் தள்ளிச்சென்றது.  

4ம் நாள்:  கொடாரியில் எல்லையைக் கடந்து  நைலம் சென்று இரவு தங்கினோம்.

5ம்நாள் நைலாம் உயர் மட்டத்தில்  பயணம் செய்வதற்காக உடலை தயார் செய்து கொள்ள நைலாமில் தங்குதல் மற்றும் மலையேற்றப் பயிற்சி.

 6ம் நாள்  நைலம்  - பழைய டோங்பா(4570மீ) 365 கி.மீ பேருந்து பயணம்:    நைலாமிலிருந்து லா-லுங்-லா கணவாய் (16000 அடி) வழியாக , பிரம்மபுத்திரா நதியை கடந்து  சாகா   கடந்து,  டோங்பா அடைந்து  அங்கு தங்கினோம். பௌர்ணமியன்று பழைய டோங்பாவில் தங்கினோம்.

காத்மாண்டுவில் இருந்து செல்லும் மார்க்கத்தின் வரை படம் 

7ம் நாள்  பழைய டோங்பா மானசரோவர் (4558 மீ) 420கி.மீ  பேருந்து பயணம்:
டோங்பாவில்  இருந்து கிளம்பி மயூமா-லா கணவாய் (17000 அடிவழியாக ஹோர்சு அடைதல். அங்கு ஐயனின் முதல் தரிசனம்  பெற்றோம் பின் மானசரோவரில் புனித நீராடி ஐயனை வணங்கி மானசரோவர் கரையில்  சியூ  அடைந்து அங்கு தங்கினோம்.

8ம் நாள் மானசரோவரிலிருந்து டார்ச்சன் : மானசரோவர் தீரத்தில் சிவசக்திக்கு  யாகம் மற்றும் பூஜைகள் முடித்தோம். மதியத்திற்கு மேல்   டார்ச்சன்  வந்து கிரிவலத்திற்காக உடலை தயார் செய்து கொள்ள அங்கு  தங்கினோம்.

9ம் நாள் முதல்நாள் கிரிவலம்:  திருக்கயிலாய கிரிவலம்  தொடங்கி,  யமதுவாரத்திலிருந்து       டேராபுக் வரை நடைப்பயணம் செய்து தெற்கு,  மேற்கு மற்றும் வடக்கு முக தரிசனம் பெற்றோம்.  ஐயனின் அருள் மழை என்னும் பனி மழையில் நனைந்தோம். டேராபுக்கில் தங்கினோம்.

10ம் நாள் டேராபுக் ஜுடுல்புக்கிரி வலத்தின் இரண்டாம் நாள் யாத்திரையின் கடினமான நாள். செங்குத்தான மலையேற்றம். 5200 மீ யாத்திரையின் மிக  உயரமான டோல்மா கணவாய் ஏறி அன்னை பார்வதியை வணங்கி, அன்னை நீராடும் கௌரி குளத்தை தரிசனம் செய்தோம்.  ஜுடுல்புக்கில் தங்கினோம்.

11ம் நாள் கிரி வலம் நிறைவு: கிரிவலத்தின் மூன்றாம் நாள், கிரி வலத்தை சுபமாக நிறைவு செய்தோம். சுமார் 6 கி.மீ நடந்து  வந்து, பின்னர் பேருந்து மூலம் டார்ச்சன் அடைந்து பின்னர் பழைய டோங்பா வந்து  தங்கினோம்.

12ம் நாள் பழைய டோங்பாவிலிருந்து  நைலம்  பேருந்து பயணம் நைலமில் தங்கினோம்

13ம் நாள் (16/09/2014) :  ஐயனின் தரிசனம் முடித்து காத்மாண்டு திரும்பினோம்: நைலத்திலிருந்து  எல்லை கடந்து கொடாரி வந்தோம். சிலர்  காத்மாண்டு  ஹெலிகாப்டரில் திரும்பினோம் சிலர் நடந்தே நிலச்சரிவை கடந்து காத்மாண்டு வந்து சேர்ந்தார்கள்..

14ம் நாள் (17/09/2014) : ஒரு சிலர் திரும்பி தங்கள் இல்லம் சென்றனர். மற்றவர்கள்  காத்மாண்டிலிருந்து  முக்திநாத் யாத்திரை கிளம்பினோம்..




                                                      விடுதியில் ஒரு அருமையான ஓவியம் 
                   ( போக்ராவிலிருந்து அன்னபூர்ணா மலைத்தொடர் மீன் வால் சிகரம் )


பசுபதிநாதர் ஆலய மாதிரி

திருக்கயிலாயம் சீனாவின் ஆளுமைக்குட்பட்ட திபெத் பகுதியில் உள்ளதால் இந்திய குடிமக்களுக்கு சீன அரசின் விசா தேவை. அதுவும் சீன அரசு கடவு சீட்டில் முத்திரை இடுவதில்லை குழு விசாதான் வழங்குகின்றது. எனவே தாங்கள் ஒரு குழுவில்தான் செல்லமுடியும். அதில் இரண்டு  மார்க்கங்கள் உள்ளன. மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பாக செல்லும் இந்திய வழி. இரண்டாவது தனியார் சுற்றுலா நிறுவனங்கள் மூலம்  நேபாள் வழியாக செல்லும் வழி. இரண்டு வழிகளிலும் சில நன்மைகளும் உள்ளன சில பாதகங்களும் உள்ளன. எது சிறந்தது என்று பார்ப்போமா? 


சின்னபாப்பையா தம்பதிகள்

அறையில் அடியேன்

காலை உணவை சுவைக்க தயாராகும் 
மைசூர்  ஜனார்த்தனன் தம்பதிகள்




 அஸ்வின் -   திவாகர்  

பண்ணுடன் பன்னிரு திருமுறை பாடி ஐயனை மகிழ்வித்த
 குமாரசுவாமி ஐயா


 தனலட்சுமி - ரமேஷ் - ஆனந்தவல்லி 


பல அன்பர்கள் மனத்தில் எந்த மார்க்கமாக செல்வது சிறந்தது என்ற ஒரு ஐயம் இருக்கலாம். மானசரோவர் கரையிலிருந்து பயணம் இரண்டு மார்க்கங்களிலும் செல்பவர்களுக்கு ஒன்று போலத்தான் இருக்கும்.  பெருவழிப்பாதையில் உள்ள சில சாதகமான அம்சங்கள் என்னவென்று பார்த்தால்  அதிகமாக நடைப்பயணம் உடல் நல்ல விதத்தில் உயர் மட்டத்திற்கு பழகிக் கொள்ள அதிகமான வாய்ப்பு உள்ளது. அரசு ஊழியர்களுக்கு 30 நாள் விடுப்பு கிட்டும். செலவு கொஞ்சம் குறைவாக இருக்கும்.  சில பாதகமான அம்சங்கள் ஹிந்தி தெரியாதவர்கள் இவ்வழியாக சென்றால் மொழிக்கும், உணவிற்கும் மிகவும் சிரமப்படவேண்டியிருக்கும். குலுக்கள் மூலம் தேர்ந்தெடுப்பது,  மருத்துவ பரிசோதனை முதலியவற்றால் அதிக அன்பர்கள் செல்வது கடினம் மேலும் நாம் தேர்ந்தெடுக்கப்படுவோமா எப்போது செல்வோம் என்பதெல்லாம் தெரியாது.  நடைப்பயணம் அதிகம் என்பதால் மிகவும் கடினமான பயணம். இனி நேபாள் வழியாக செல்லும் போது உள்ள பாதகங்கள் சரியாக உடல் நலம் இல்லாதவர்கள் தங்கள் விருப்பபப்டி சென்றுவிட்டு அங்கு சென்று நோய்வாய்ப்பட்டால் பல இன்னல்களை சந்திக்க வேண்டி இருக்கும். வேகமாக யாத்திரை செல்வதால் சிலர் உயர் மட்ட நோய்க்கு ஆளாகின்றனர்.  செலவு அதிகமாக ஆகும். பல  சமயம் சுற்றுலா நிறுவனத்தினர் கிரி வலம் செல்வதை தடுக்க முயற்சிக்கிறனர். இனி  இவ்வழியின் சாதகங்கள் யாத்திரை காலம் மிகவும் குறைவு. நடை பயணம் கிரி வலம் மட்டும்தான் அதுவும் அவரவர்கள் விருப்பப்படி. செல்லலாம்.  சீனாவில் தற்போது அருமையான பேருந்து பயணம். இவை எல்லாவற்றையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது  தற்போதைய சூழ்நிலையில் நேபாள் வழியாக செல்வதே சிறந்தது.

பேருந்தில் காத்மாண்டு சுற்றுலா

பெங்களூர் லதா அம்மாள்

பாலசுப்பிரமணியன் தம்பதியர்


இளங்கோவன் - குமாரசுவாமி



- ராமகிருஷ்ணன்

ரேவதி - கலாவதி


சின்ன பாப்பையா தம்பதிகள்
V.சேகர் -  ஸ்ரீராம்


 ஜனார்த்தனம் தம்பதிகள்
T.சேகர் -  வெங்கட்ராமன்


இந்த வருடம் ஹோட்டலில்  அறை பெரியதாகவும் சுத்தமாகவும் இருந்தது. உணவும் தென்னிந்திய உணவே வழங்கினார். மேலும் பசுபதிநாதர் ஆலயத்திற்கு அருகில் இருந்ததால் நடந்தே  ஆலயம் சென்று வர  மிகவும்  வசதியாக இருந்தது. 

காலை பிரார்த்தணை

தினமும் காலையும் மாலையும் திரு. குமாரசாமி ஐயா தலைமையில் பன்னிரு திருமுறைகளையும் குறிப்பாக சிவபுராணம் இசைத்து சிவசக்தியை வணங்கினோம்.  


யாத்திரை கிளம்பிய குழுவினர் 



வரமாவது எல்லாம் வடகயிலை மன்னும்
பரமாவுன் பாதாரவிந்தம்சிரமார
ஏத்திடும் போதாகவந்து என்மனத்தில் எப்பொழுதும்
                   வைத்திடுநீ வேண்டேன்யான் மற்று                          
- திருநாவுக்கரசர்


வடகயிலையில் எழுந்தருளியுள்ள கருணைக் கடவுளே! அடியேன் தம்மை வேண்டுவதெல்லாம் ஒன்றுதான். தம்மை தலையார வணங்கும் போது தமது திருவடித்தாமரையை நாயேனின் மனதில் நீங்காமல் வைத்துவிடுங்கள். இதைத்தவ்விர வேறு ஒன்றையும் உம்மிடம் வேண்டமாட்டேன்.

                                                                                                புனித யாத்திரை தொடரும் . . . . . . . . . 


No comments: