Friday, January 02, 2015

தீரா வினை தீர்க்கும் திருக்கயிலை நாதர் தரிசனம் -7

நைலமில் ஒரு நாள் ஓய்வு


ஜாங்மூ நகரம்  நேபாளப் பகுதியிலிருந்து 

மறு நாள் காலையில் எந்தவித சிரமமும் இல்லாமல் எல்லையைக்  நட்புப் பாலம் வழியாகக் கடந்தோம். மூன்று பேருந்துகள் மூலம் நைலமை நோக்கிப் புறப்பட்டோம்.  இப்பகுதியிலும் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. எனவே வழியில் நிறைய அருவிகளைக் கண்டோம், நைலம் வரையிலும் மலை பசுமையாகவே இருந்தது. மேலே செல்ல செல்ல குளிர் அதிகமாகிக்கொண்டே சென்றது. நடுவில் ஜாங்மூவில் அனைவருக்கும் மதிய உணவு  பொட்டலம் வழங்கினர். அந்தி சாயும் நேரம் நைலம் அடைந்தோம். பின்னர் நைலம் நகரைச் சுற்றி வந்தோம்.     

கொடரி சீனப்பகுதியிலிருந்து 



நைலம் செல்லும் வழியில் சில அருவிகள் 


நைலத்தில் அடியோங்கள் தங்கிய விடுதி

2014ல் நைலம் மிகவும் மாறியிருந்தது.  அனைத்து தங்கும் விடுதிகளிலும் கழிவறைகள், கட்டண சுடு தண்ணீர் அறைகள், Wi-Fi வசதி, எல்லாம் வந்து விட்டது, பொதுக் கழிவறைகள்தான் ஆனால் தண்ணீர் வசதி இருந்தது. இது ஒரு நல்ல முன்னேற்றம்.  மேலை நாட்டினர் வந்து தங்கினால் என்ன என்ன வசதிகள் எதிர்பார்ப்பார்களோ அதெல்லாம் இப்போது நைலாமில் உள்ள தங்கும் விடுதிகளில் உள்ளன.  பலர் 15 யுவான்கள் கட்டி சுடு தண்ணீரில் குளித்தனர். காலை வெயில் இருக்கும் நேரத்தில் குளிப்பது உத்தமம். குளிராக இருக்கும் போது குளித்தால் சிலருக்கு சளிப்பிடித்துக்கொள்ளும். 

நைலம் நகரம் 



திகமான கடைகள், ஹோட்டல்கள், உணவு விடுதிகள்,  பல் பொருள் அங்காடிகள்(Super Markets) என்று பெருகிவிட்டன. பல கடைகளில் யாத்திரைக்கு வேண்டிய அனைத்து பொருள்களும்  கிட்டுகின்றன வேண்டும் பொருட்களை இங்கும் வாங்கிக்கொள்ளலாம். பலர் கைத்தடிகளை இங்கு நைலாமில் வாங்கினோம்.

 பயணம் செய்த  ஒரு பேருந்து 


நைலத்தில் இரவு பிரார்த்தணை


சிவ புராணம் பாராயணம் 

போற்றித்திருத்தாண்டகம் பாராயணம் 


பல அளவுகளில் அறைகள் இருந்தன. பொதுவாக ஒரு அறையில் ஆறு பேர் தங்கும் வண்ணம் கட்டில்கள் அமைந்திருந்தன. ஒரு அறையில் 13 பேர் தங்கும் அளவிற்கு பெரிதாக இருந்தது. அங்கு அனைவரும் கூடி பிரார்ரத்தனை செய்தோம்.  


ஓய்வு நாளில்  மலையேற்றப் பயிற்சி


மலையேற்றம்


மறு நாள் மலையேற்ற பயிற்சி செய்தோம். சரியாக தலைக்குத்தொப்பி மற்றும் கம்பளி உள்ளாடை அணியாமல்  மலையேறிய சிலருக்கு நாள் முழுவதும் பூச்சி ஊர்வது போன்ற ஒரு உணர்வு இருந்தது. எனவே சீனாவில் நுழைந்தவுடனே அனைத்து கம்பளி உடைகளையும் முறையாக அணிந்து கொள்ளுங்கள்.  


மலை உச்சியில்  








மலை மேலிருந்து நைலம் நகரம்

மலையில் மலர்ந்திருக்கும் ஒரு மலர் 

மலை இறக்கம் 

அதிகம் போக்குவரத்து இல்லாத பாதை 

மலையேறிய பின் சிறிது நேரம் ஒய்வு 


இரவு உறக்கம் ( ஆறு பேர் ஒரு அறையில்)

                                                                                                                           புனித யாத்திரை தொடரும் . . . . . . . . .