Sunday, February 22, 2015

தீரா வினை தீர்க்கும் திருக்கயிலை நாதர் தரிசனம் -12

மானசரோவரில் புனித நீராடல்

கௌரி சங்கர் தரிசனம் 

ஸ்படிகம் போல தூய மானசரோவர் நீர், தரையில் உள்ள கற்கள் கூட தெளிவாக தெரிகின்றது பாருங்கள் 

சரியாக ஐயனுக்கு எதிரே குர்லா மாந்தாதா சிகரங்களுக்குக் கீழே வண்டியை நிறுத்தி புனித நீராடக் கூறினார்கள் . தடாகத்த்தின் நீர் ஸ்படிகம் போல் இருந்தது.  அவ்விடம் சேறாக இல்லாமல் நல்ல கூழாங்கற்களுடன் தூய்மையான  இடமாக இருந்தது.  மேலும் நல்ல  வெயில்  காய்ந்து கொண்டிருந்தது. சேர்ப்பாக்கள் உடை மாற்ற தற்காலிக தடுப்பு அமைத்தனர்.  


ஆர்த்தப்பிறவி துயர் கெட நாம் ஆர்த்தாடும்
 தீர்த்தன் நல் சிற்றம்பலத்தே தீயாடும் 
கூத்தன்;  இவ்வானும் குவலயமும் எல்லோமும்  
காத்தும் படைத்தும் கரந்தும்  விளையாடும் . . . . . . .

  சிவசக்தியின் நாமம் பரவிக்கொண்டே ஐயனின் அற்புத தரிசனத்தை  கண்டு  களித்துக் கொண்டே  மானசரோவரின்  சீதள நீரில் குடைந்து  அற்புதமாக நீராடினோம்.  அனைவரும் அருமையாக மானசரோவரில் புனித நீராடினோம்.  திருக்கயிலாய யாத்திரையின் மிக முக்கிய கடமையை மிகவும் திருப்தியாக நிறைவேற்றினோம். 


புனித நீராடலுக்கு தயாராகின்றோம்



புனித நீராடல் 



சிவ சக்திக்கு பூஜை 
இளகோவன்,   திருமுறை குமாரசுவாமி, அடியேன்

 சென்னை பார்வதி ஜெகதீசன் தம்பதியினர்

சென்னை பால சுப்பிரமணியன் சுஜாதா தம்பதியினர்

மைசூர் ஜனார்தனன் சுகந்தி தம்பதியினர்

திருப்பூர் சுதாகர்,  இராமகிருஷ்ணன் சகோதரர்கள்

திருமுறைகள் இசைத்தபின் சங்கநாதம் இசைத்த போது கதவு திறந்தது போல மேகமூட்டம் விலகியது. 


சிவசக்திக்கு நைவேத்யம்

ஐயனுக்கு உபசாரங்கள்


 ஐயனுக்கு கற்பூர ஹாரத்தி

அனைவரும் புனித ஈராடி புத்தாடை உடுத்திக்கொண்டு ஐயன் முன்பு இன்று திருமுறைகள் இசைத்தோம். மெல்ல  மெல்ல மேக மூட்டம் வந்து ஐயனை மறைத்துக்கொண்டது. கற்பூர ஹாரத்தி காட்டவேண்டிய சமயத்தில் ஐயனை வேண்டிக்கொண்டு சங்கம் முழகினோம். ஐயனின் அருளினால்  ஒரு  அற்புதம் டன்தது. மேகமூட்டம் அப்படியே கதவு திறன்தது போல விலகி ஐயனின் அற்புத தரிசனம் கிட்டியது. அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் சிவசக்தியை அடி வீழ்ந்து வணங்கினோம். 

கொச்சி இராதாராமன் ரமா தம்பதியினர்

சின்ன பாப்பையா, சந்திரா  தம்பதியினர் , நாகம்மாள் குமாரி


பின்னர் அனைவரும் பேருந்தில் ஏறி இராக்ஷஸ் தால் எரியை  இரசித்துக் கொண்டே   ஜைடியை அடைந்தோம்.  சரி பாதி பாதை  தார் சாலையாக இருந்தது.   அன்றிரவும் மறு நாளும்  அங்கு  தங்கினோம். 

 தேனி இரமேஷ், சேகர்,  ரேவதி , கலாதேவி, மல்லிகா

மானசரோவர் கரையில் குழுவினர் அனைவரும்

ஏசா நிற்பர் என்னை; உனக்கு அடியான்
என்று பிறரெல்லாம்
பேசா நிற்பர்; யான்தானும் பேணா
நிற்பேன் நின் அருளே;
தேசா! நேசர் சூழ்ந்து  இருக்கும் திருவோ
லக்கம் சேவிக்க 
ஈசா! பொன்னம் பலத்து ஆடும் எந்தாய்!
இனித்தான் இரங்காயே! 


என்று மாணிக்கவாசக சுவாமிகள் பாடியபடி,   சிவசக்தியின்  திருவோலக்கம்  ஆனந்தமாக தரிசனம் செய்தோம்  



                                                                                                                               யாத்திரை தொடரும் . . . . . . . . .

1 comment:

ப.கந்தசாமி said...

ஐயனை நானும் தரிசித்தேன்.