Tuesday, April 14, 2015

தீரா வினை தீர்க்கும் திருக்கயிலை நாதர் தரிசனம் - 25

அன்பர்கள் அனைவருக்கும் இனிய மன்மத வருட புத்தாண்டு வாழ்த்துகள்
மலையரையன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதரின் மாப்பெருங்கருணையினால் தாங்கள் அனவரும் தங்கள் குடும்பம் உறவினர் நண்பர்கள் ஆகியோருடன் நலமாக வாழ பிரார்த்திக்கின்றேன். 


காத்மாண்டு திரும்பினோம்

 வழியில் பல  மணல் மேடுகள் 

சென்ற வழியிலேயே திரும்பினோம். திருன்பி வரும் போதும் வேகக்கட்டுப்பாடு இருந்தது. அங்கங்கே நின்று நின்றுதான் வந்தோம். முதல் நாள் டோங்பாவிலும் இரண்டாம் நாள் நைலத்திலும் தங்கித்தான் வந்தோம். அதே சென்ர தடவை முதல் நாளிலேயே சாகா வந்து மறு நாள் காத்மாண்டு அடைந்தோம். அதன் மூலம் காத்மாண்டை சுற்றிப்பார்க்க ஒரு நாள் அதிகமாக கிடைத்தது. இந்தத்தடவை அது மாதிரி நடக்கவில்லை.    

பிரம்மபுத்திரா உற்பத்தி ஸ்தானம் 

நடுவில் ஒரு கிராமத்தில் தங்கினோம். அங்கே இந்த இடம்தான் பிரம்மபுத்திராவின் உற்பத்தி ஸ்தானம் என்ற அறிவிப்புப்பலகை இருந்தது. அடியோங்கள் சென்ர பாதை தெற்கு பாதை பிரம்மபுத்திரா நதியை ஒட்டி செல்லும் பாதை ஆகும். 

பிரம்மபுத்திரா நதியின் அருகே ஒரு பழைய பாலம் 


முதல் நாள் பழைய டாங்போவில் அதே தங்கும் விடுதியில் தங்கினோம் 

பிரம்மபுத்ரா நதிக்கரையில் சாகா  

சாகா அடைந்து விட்டோம் 


சீ சா பாங் மா சிகரங்கள்


பொதுவாக இவ்வழியில் லா லுங் லா கணவாய்,  8000  மீ உயர சீ சா பாங் மா சிகரங்கள்  மற்றும் பைகு சோ ஏரி ஆகிய நின்று இரசித்து விட்டு செல்வோம். சென்ற போது இங்கெல்லாம் நிற்கவில்லை என்பதால் வரும் போது நின்று இரசித்து புகைப்படமும் எடுத்துக்கொண்டு வந்தோம்.   




பைகு சோ ஏரி
உப்புத்தண்ணிர் ஏரி 


வானில் மானசரோவர் ராக்ஷஸ் தால் ஏரிகள்


அருமையான தரிசனம் கிட்டிய ஆனந்தத்தில் திரும்புகின்றோம் 





இப்பாதையின் உயரமான லா லுங் லா கணவாய் 



நைலத்தை நெருங்கும் போது மீண்டும் பசுமை 

ஒரு செழுமையான கிராமம்

நைலத்தில் கான்க்ரீட் சாலை பணிகள் 

நைலத்தில் இருக்கும் போதே கொடாரியில் இருந்து காத்மாண்டு செல்லவேண்டும் என்று முடிவு செய்தவ்ர்கள் சென்னையில் உள்ள ஒரு உறவினர் மூலம்  ஆன் லைன் வழியாக  ஹெலிகாப்டருக்கு முன்பதிவு செய்து கொண்டோம். ஒரு வருக்கு ரூ 15000/ ஆனது. 

கொடாரி நகரம் 

சுமை தூக்கும் பெண்கள் 

கொடாரியில் இருந்து ஹெலிகாப்டர் பயணம் 

முதல் ஹெலிகாப்டர் பயணிகள்


இரண்டாம் ஹெலிகாப்டர் பயணிகள்

பொதுவாகவே நேபாளத்தில் விமான விபத்துக்கள் அதிகம்.  மலை நாடு என்பதாலும் மழை பெய்யும் போது நிலச்சரிவுகள் ஏற்பட்டால்  அவசரமாக செல்ல விரும்புகின்றவர்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் ஹெலிகாப்டர் மற்றும் சிறு விமானங்களை நாடுகின்றனர். ஆனால் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் இவர்கள் கொடுப்பதில்லை என்பதே உண்மை. இறைவன அருளால் அனைவரும் எந்த துன்பமும் இல்லாமல் காத்மாண்டு வந்து சேர்ந்தோம்.  

ஹெலிகாப்டரிலிருந்து  கிடைத்த அருமையான காட்சி

சிலர் நடந்தே வர முடிவு செய்தனர். திரும்பி வந்த போது பாதை ஒரளவு சரி செய்யப்பட்டிருந்தது. லாரிகள் மற்றும் ஜீப்புகள் ஓடின  எனவே அவர்களும் மாலை வரை காத்மாண்டு வந்தடைந்தனர்.

ஹெலிகாப்டரிலிருந்து காத்மாண்டு நகரம்

நன்றியுடன்  அடியேன் 

காத்மாண்டு வந்து சேர்ந்தோம் முதலில் செய்தது ஒரு குளியல்தான். அன்று மாலை பசுபதி நாதர் ஆலயம் சென்று சிவபெருமானுக்கு நன்றி தெரிவித்து விட்டு வந்தோம்.  மறு நாள் அங்கிருந்தே 108  திவ்ய தேசங்களில் ஒன்றான முக்திநாத் யாத்திரை  சென்றோம்.. 

இது வரை வந்து தரிசனம் செய்த அன்பர்கள் அனைவருக்கும் அந்த  .   சிவசக்தியின் அருள் சித்திக்க  அவர்கள் பாதம் இறைஞ்சுகின்றேன். இத்துடன் இந்த யாத்திரைக்கான பதிவுகள் இப்பதிவுடன் நிறைவடைகின்றன.  முக்திநாத் யாத்திரைப் பதிவுகள் இனி தொடரும். 

                                          மாணிக்கவாசகர் அருளிய கண்டபத்து  

அளவுஇலாப் பாவகத்தால் அழுக்குண்டு இங்கு அறிவின்றி 
இளைவுஒன்றும் அறியாதே வேறுவியனாய்க் கிடப்பேனுக்கு 
அளவு இலா ஆனந்தம் அளித்து என்னை ஆண்டானை
 களவு இலா வானவரும் தொழும் கயிலை(தில்லை) கண்டேனே! (8)

பாங்கினோது பரிசொன்றும் அறியாத நாயேனை
ஓங்கி ஊளத்து ஓளிவளர; உலப்புஇலா அன்பு அருளி
வாங்கிவினை மலம் அறித்து; வான்கருணை தந்தானை
நான்குமறை பயில்தில்லை(கயிலை) அம்பால்த்தே கண்டேனே (9)

பூதங்கள் ஐந்து ஆகிப் புலன் ஆகிப் பொருளாகிப்
பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமிலாப் பெருமையனை
கேதங்கள் கெடுத்து ஆண்ட கிளர் ஓலியை மரகதத்தை
வேதங்கள் தொழுது ஏத்தும் விளங்குதில்லைக் கண்டேனே! (10)

ஓம் நமசிவாய 

2 comments:

ப.கந்தசாமி said...

ஓம் நமசிவாய. இறைவன் வாழ்க.

S.Muruganandam said...

நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க