Friday, July 17, 2015

முக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 10தாய்நாடு திரும்பினோம் 

மறு நாள் காலையிலும் மழை தொடர்ந்தது,  ஜோம்சம் விமான போக்குவரத்து அதிகாலையில் நடைபெறவில்லை. போக்ராவிலிருந்தவர்கள்  பேருந்து மூலம் காத்மாண்டிற்கு புறப்பட்டோம். சுமார்  மணியளவில் வானிலை சரியாகி ஜோம்சமில் மாட்டிக்கொண்டவர்கள் போக்ரா வந்து உடனே காத்மாண்டிற்கு கிளம்பினார்கள்.
படான் தர்பார் சதுக்கம்
நரசிம்மர் சிலை

அடியேன் - ஜனார்த்தனன்
( அரண்மணை வளாகம்)

பைரவர்


ஓர் அழகிய கருடன் சிலை

சுவற்றில்தான் எத்தனை விதமான முகங்கள்
(இவ்வருட நில நடுக்கத்தில் இந்த புராதன கட்டிடங்கள் பல் சேதமடைந்து விட்டன, மறுபடியும் புதுப்பொலிவுடன் கட்டுவார்களா???)  

 அடியோங்கள் மாலை காத்மாண்டை அடைந்தோம் தேமல் பகுதியில் உள்ள ஹாரதி ஹோட்டலில் தங்கினோம். இங்கும் மழை பெய்து கொண்டிருந்தது. ஹாரதி என்பது ஒர் யக்ஷிணி. புத்த விகாரங்கள் மற்றும் ஸ்தூபங்களின் காவல் தெய்வம். நம்மூர் மாரியம்மன் போல் அம்மை நோயில் இருந்து காப்பவளாக வணங்கப்பட்கிறாள்.அங்கு இந்த  அம்மனின் கதையை இவ்வாறு கூறினார்கள்.  குழந்தைகள் மேல் மிகுந்த பிரியம் கொண்ட இவள் காத்மாண்டு பள்ளத்தாக்கில் உள்ள குழந்தைகளை கடத்திச் சென்று தன்னுடன் வைத்துக்கொண்டு அவர்களை நன்றாக போஷித்து வந்தாள். இதனால் துன்பமுற்ற அந்தக் குழந்தைகளின் பெற்றோர் புத்தரிடம் முறையிட்டனர். புத்தரும் ஹாரதி தேவியை திருத்த ஒரு உபாயம் செய்தார். அவளது குழந்தையை புத்தர் எடுத்துக் கொண்டு வந்து விட்டார். தாய் பாசம் என்பது அப்போது ஹாரதி தேவிக்கு புரிந்தது. புத்தரின் அறிவுரையின் பேரில் அனைத்து குழந்தைகளையும் விடுவித்தாள். அப்போது புத்தர் அளித்த வரத்தின் படி குழந்தைகளை மற்றும் புத்தரின் புனித தலங்களை  காக்கும் பேறு பெற்றாள். எனவேதான் அனைத்து புத்த தலங்களிலும் ஹாரதி தேவிக்கு தனி சன்னதி உள்ளது.      இனி அந்த ஹோட்டலில் அழகிய மரவேலைப்பாடுகளுடன் கூடிய அரிய சிற்பங்கள் மற்றும் இவர்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பல ஓவியங்கள் இருந்தன.  


 ஹாரதி ஹோட்டலில்


 இவ்வாறு இந்த மூன்றாவது யாத்திரையின் போது அவனருளால் சிவசக்தி தரிசனமும், ஹரிஹர தரிசனமும் திவ்யமாக  கிட்டியது. இத்தடவை  இரண்டு கடினமான யாத்திரைகளும் எந்தவிதமான விக்னமும் இல்லாமல் நிறைவடையும்படி அருள் பாலித்தார் மலையரையன் பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதர்.

பசுபதி நாதர் ஆலயம் 
 .    
பல் வேறு ஆலயங்களும் அரண்மணைகள்ம் நிறைந்த காத்மாண்டின் படான் தர்பார் சதுக்கம் சுமார் 10  நிமிட நடை தூரத்தில் இருந்ததால் சிலர் மாலையிலும் சிலர் காலையிலும் அங்கு சென்று சுற்றிப்பார்த்து விட்டு வந்தனர்.நேபாளத்தில் கன்னிப் பெண்ணை அம்மனாக வணங்கும் வழக்கம் உள்ளது.  அந்த வாழும் அம்மன் சிக்கும் அரண்மணை குமாரி பஹல் என்று அழைக்கப்படுகின்றது. அங்கு சென்று     குமாரியின் தரிசனமும் பெற்று வந்தனர். சிலர் மறுபடியும் பசுபதிநாதர் ஆலயம் சென்று நன்றி கூறிவிட்டு வந்தனர். அடியோங்களுக்கு ஐயனின் காலை அபிடேகம் தரிசனம் செய்யும் பெரும்  பாக்கியம் கிட்டியது. காத்மாண்டுவில் ருத்ராக்ஷம் வாங்கினோம்.காத்மாண்டு விமான நிலையம்
இவ்வாறாக திருக்கயிலாயம் மற்றும் முக்திநாத் யாத்திரைகள் அவனருளால்  நிறைவு செய்து விமானம் மூலம் சென்னை திரும்பினோம். இதுவரை வந்து யாத்திரையை இரசித்த அன்பர்கள் அனைவருக்கும்  மிக்க  நன்றி.  இப்பதிவுடன்  2014  திருக்கயிலாய பதிவுகள் நிறைவடைகின்றன. அவனருளால் அடுத்து ஒரு யாத்திரை சித்திக்கும் போது  அந்த தகவல்களுடன் தங்களை சந்திக்கின்றேன் அன்பர்களே. 

No comments: