Wednesday, September 16, 2015

நாதுலா கணவாய் வழி திருக்கயிலாய யாத்திரை - 2



இந்தியப்பகுதியில் பயணம் 

இந்தமுதல்வருடம் 40 யாத்திரிகள் கொண்ட ஐந்து குழுக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதுஅடியேனது நண்பர் ஐந்தாவது குழுவில் யாத்திரைக்கு தேர்தெடுக்கப்பட்டார்யாத்திரை அட்டவணை இவ்வாறு இருந்தது.


திரு.நாகேஷ்வர் சிங் மற்றும் கோவையின் நாச்சியப்பன் 


31.07.2015 அன்று சென்னையிலிருந்து கிளம்பி டில்லி சென்று குஜராத்சதனில் தங்கினார்டில்லியில் முதல் மூன்று நாட்களில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது, இந்திய-திபெத் எல்லை போலீசார் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளின் யாத்திரை பற்றிய விளக்கம் பெற்றனர். டில்லி சுற்றுலா சென்று வந்தனர் .அன்னிய செலாவணி மாற்றம் செய்து கொண்டனர், .சீன விசா பெற்றனர். நண்பர் மருத்துவப்பரிசோதணையில் தேர்வு பெற்றதை தொலைப்பேசி மூலம் கூறினார். 



கேங்டாக்கில்  தங்கிய விடுதி




1. 04.08.2015 டில்லியிலிருந்து விமானம் மூலம் மேற்கு வங்காளத்தில் உள்ள பாக்டோக்ரா(Bagdogra) என்ற ஊருக்கு விமானம் மூலம் வந்தடைந்து பின்னர் அங்கிருந்து பேருந்து மூலம் சுமார் 125கி.மீ பயணம் செய்து சிக்கிம் தலைநகர் கேங்டாங் ( Gangtok- 1600 மீஉயரம் ) அடைந்தனர்.

2, 3. 05/06.08.2015 கேங்டாங்கிலிருந்து சுமார் 25கி.மீ பயணம் செய்து 15வதுமைல் (15thMile -  3050மீ) என்னும் இடத்தை அடைந்து அங்கு மறுநாள் உயர் மட்டத்தில் தங்கினர்.

4, 5. 07/08.08.2015 15வது மைலிலிருந்து சுமார் 20கி.மீ பயணம் செய்து  செரதாங் (Sherathang – 4115மீஎன்னும் இடத்தை அடைந்து தங்கினர்மறுநாள் உயர் மட்ட மருத்துவ பரிசோதனை இங்கு நடந்தது.





கேங்டாக்கின் சார்தாம் ஆலயம்  





6-1 09.08.2015 செரதாங்கிலிருந்து கிளம்பி நாதுலா கணவாய் வழியாக சீனாவிற்குள் நுழைந்து சுமார் 200கி.மீ பயணம் செய்து காங்மா (Kangma- 4176மீ) என்ற இடத்தில் தங்கினர். (6-1 : யாத்திரையின் ஆறாம் நாள், சீனாவின் முதல் நாள்)

(பொதுவாக கேங்டாங்கிலிருந்து நாதுலாவிற்கு ஒரு நாளில் திரும்பி வந்து விட முடியும்  இது  உயர் மட்ட யாத்திரை என்பதால் உடல்,  உயர் மட்டதிற்கு ஒத்துக்கொள்ளும் வகையில் இவ்வாறு தங்கி  செல்ல வேண்டி உள்ளது) 



நாதுலா செல்லும் வழியில் ஒரு தேயிலைத் தோட்டத்தில்
 திரு சிங் அவர்கள் 


7-2 10.08.2015 காங்மாவிலிருந்து சுமார் 275கி.மீ பேருந்து பயணத்திற்க்குப்பின் லாஜி (Lazi – 4053 மீஅடைந்து தங்கினர்.

8-3 11.08.2015 லாஜியிலிருந்து சுமார் 477கி.மீ பயணம் செய்து ஜோங்பா (Zhongba – 4728 மீ) அடைந்து தங்கினர்.ஐயனின் முதல் தரிசனம் பெற்றனர்.


 வழியில்  பல அருவிகளின்  அழகு 





9-4 13.08.2015 ஜோங்பாவிலிருந்து டார்ச்சன்(Darchen – 4670மீ) அடைந்து அங்கு தங்கினர். ஐயனின் தெற்கு முக உச்சி தரிசனம் பெற்றனர் 

10-5, 11-6 14.08.2015 மானசரோவர் கிரிவலம்மானசரோவர் கரையில் யாகம், மானசரோவரின் கரையில் குகூ  (Qugu – 4620மீ) தங்கினர்.

12-7 15.08.2015 குகூவிலிருந்து டார்ச்சன் வழியாக யமத்துவாரம் அடைந்து முதல் நாள் திருக்கயிலாய கிரிவலம் துவக்கி டேராபுக் (Deraphuk – 5060 மீஅடைந்து தங்கினர். ஐயனின் மேற்கு முகம் மற்றும் வடக்குமுக தரிசனம் பெற்றனர்ஐயன் முன் நின்ற போது அடியேனை செல்பேசி மூலம் அழைத்தார் நண்பர். மானசீகமாக தரிசனம் பெற்று ஐந்தெழுத்து மந்திரம் கூறி வணங்கினேன்





13-8 16.08.2015 இரண்டாம் நாள் கிரிவலம் டோல்மா கணவாய் (Dolma Pass) கடந்து கௌரிகுளத்தை தரிசித்து ஜுடுல்புக் அடைந்து தங்கினர்.

14-9 17.08.2015 மூன்றாம் நாள் கிரிவலத்தை முடித்து ஐயனுக்கு அருமையான தரிசனத்திற்கு நன்றி கூறிஅன்றே பின்னர் பேருந்து மூலம் ஜாங்போ அடைந்து அங்கு தங்கினர்.

15-10  18.08.2015  ஜாங்போவிலிருந்து   லாஜி   பேருந்து   பயணம்.

16-11 19.08.2015 லாஜியிலிருந்து   காங்மா,     நாதுலா கணவாய்,  செரதாங்  வழியாக காங்டாக்  திரும்பினர்இறக்கம் என்பதால் பிரச்சினை கிடையாதுஉயர்மட்டத்தில் ஏற்றத்தின் போதுதான் உடல் அந்த உயர்மட்டத்திற்கு ஒத்துக்கொள்ள தங்கி செல்ல வேண்டியது அவசியமாகின்றது.





பாதையின் இரு புறமும் பசுமை 


மழைச் சாரலையும் அனுபவிக்கின்றனர் 


17 20.08.2015  காங்டாக் சுற்றிப் பார்த்தனர் 


18 21.08.2015 கேங்டாக்கிலிருந்து பாக்டோக்ரா வழியாக தில்லி சென்றனர் . (விரும்பும் அன்பர்கள் கேங்டாக்கிலிருந்தே தங்கள் இல்லம் திரும்பலாம்.) 

19 22.08.2015  சென்னை திரும்பினார்.


**********

முன்னரே கூறியது போல எதோ அடுத்த ஊருக்கு சென்று வந்தது போல இருந்தது வழியிலோ கிரிவலத்தின் போதோ எந்தவித சிரமமும் இருக்கவில்லை. பேருந்திலேயே பயணம் செய்ததால் அதிகாலை கிளம்பி மதியம் அல்லது மாலைக்குள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று பின்னர் ஓய்வு எடுத்தார்களாம். வழியில் மதிய உணவை உண்டார்களாம். இது முதல் வருடம் என்பதால் சில தங்கும் இடங்களில் சிறிது சிரமம் இருந்தது என்றார். 

தில்லியிலும் செல்லும் வழியிலும் அனைவரும் திருக்கயிலாய யாத்திரை செல்பவர்களுக்கு அளிக்கும் மரியாதையும், உதவியும் உண்மையிலே மிகவும் ஆச்சரியப்பட வைக்கின்றது, . எப்படிப்பட்ட பக்தி ஒரு சிரத்தை இவர்களுக்கு என்று வியந்தார் நண்பர்.  

சீன அரசு 50 பேர் பயணம் செய்ய மூன்று பேருந்துகள் மற்றும் ஒரு கார்( முக்கியமானவர்காளுக்காக) ஏற்பாடு செய்திருந்தார்களாம். எனவே அனைவரும் மிகவும் சுகமாக பயணம் செய்தார்களாம்.   ஐந்து சமையல்காரர்களையும், ஒரு வழிகாட்டியும் இவர்களுக்காக ஒதுக்கியிருந்தார்களாம் அதனால் சாப்பாட்டிற்கு எந்த பிரச்சினையும் இருக்கவில்லை என்றார்.  தட்டு மற்றும் டம்ளரும் அவர்களே வழங்கினார்களாம். 

அவசர அவசரமாக செல்லாமல் உயர் மட்டத்திற்கு உடல் தயார் ஆகும் படி மெதுவாக சென்றதால் கிரி வலத்தின் போதும் யாருக்கும் எந்த சிரமும் இருக்கவில்லை என்றார். யாத்திரை துவங்குவதற்கு முன்னரே Whatsappல் ஒரு குழு அமைத்து  அதன் மூலம் யாத்திரையின் போதே அனைவரின் நலத்தைப் பற்றி தங்கள் குடும்பங்களுக்கு செய்தியும் படங்களும் அனுப்பிக் கொண்டிருந்தனர். அதற்காக பொதுவில் ஒரு சர்வதேச SIM வாங்கிக்கொண்டார்களாம். அனைவரும் பொது செலவிற்காக ரூ. 4000/- வழங்கினார்களாம். . இவர்களை தலமையேற்று அழைத்து சென்ற L.O ( Liason Officer) எனப்படும் மூத்த அதிகாரியும் அனைவரும் கிரி வலம் செய்ய வேண்டும் என்றே விரும்பினார் என்றும் கூறினார். 

உண்மையில் இது ஒரு அருமையான, இனிமையான, இறைவனின் கருணையை விளக்கும் ஒரு அற்புதமான யாத்திரையாக அமைந்தது என்று பெருமையாக,  மன நிறைவுடன் கூறினார். "எல்லாம் எனை ஆளும் அந்த ஈசன் செயல்"    

2 comments:

ப.கந்தசாமி said...

பயணம் இனிமையாக இருந்ததற்கு இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

S.Muruganandam said...

அவனருளால் அருமையாகஆவன் தாள் வணங்கி வந்தார்கள்.