Saturday, August 16, 2008

Kailash Manasarovar yatra (darshan) - 15

Eighth day 9 Km trek from Kalapani to Nabidang




OM PARVAT A wonder of Nature

As the altitude increases the distance to be trekked also comes down, we left for Nabidang on the eighth day as we were almost at the top of the hills above the tree line revealing the face of mountains, the route was steep and now we trekked along the Lipu Nala the vegetation has completely vanished except for some bushes and some cacti here a herb is found which gives out fine incense like a agarbathi our porter showed us the plant we decided to take something home when we come back. We reached Nabidang at around noon time and took some well deserved rest.




TREKKING TO LIPU LEH PASS



Nabidang is an axis. of three beautiful peaks and it is also a junction of three international borders. As the wind velocity is high we were advised to wear wind sheeters and to cover our head. Lipu Nala originates from the confluence of these three peaks. The first peak is the OM Parvat the naturally formed celestial symbol OM is present in this peak. One can see white (snow) OM on black background, no hypothesis, no assumption, no imagination is needed. OM- the celestial symbol and the guide to meditation connecting men, God and universe, chanted at the beginning and finale of all proceedings. Extolled in the Upanishads as the best and most effective symbol of God. . On snowy days we can clearly see the naturally formed OM.
As we were nearing Nabidang the peak was covered with clouds and we could not see the OM symbol which stands for God. Then clouds played some sport with us we has a partial darshan after about two hours the clouds cleared fully and we had the full darshan of OM and clicked to our heart’s content with our digital cameras and video cameras. The other peak is the Trishul peak it has three sharp projections and is supposed to represent the trinity of Shiva, Parvati and Ganesh. The third peak is the Nabi peak, Nabi means navel as the depression in the peak resembles the navel of human it is named Nabi and this place is called Nabidang.


We are supposed to deposit the film rolls, tapes and the memory stick of digital cameras as a safety measure so that they will not fall into the hands of Chinese. Most of us didn’t had spare memory cards so we didn’t deposit it here but deposited our film rolls and video tapes here. We can also leave extra or unwanted items here and collect them when we come back. A helicopter wreckage was lying just above the camp we just walked up to that place and we also experienced that our head ache disappear. Our L.O also explained to us about the vegetation available at the altitude of 14000 ft. There is also a small temple at Nabidang. Later we returned back took rest and we prepared ourselves for the crossing of Lipulekh pass next day.
Ninth day crossing the Lipulekh pass.




THRISOOL(TRIDENT) PEAK



A pass is an opening in the mountain where we can cross over to the other side . There are two passes in this Kailash yatra route one is on the Indian side and the other is in the Kailash ranges. Both are the tallest points in their respective places and are considered to be the toughest to cross. There had been lot of difficulties because of snow, blizzards heavy winds in these passes. So at most care is taken before crossing these passes. It is always better to cross the passes before morning 9 ‘O clock as otherwise the weather will change inimical and will be difficult to cross the pass. Also it is advised not to stay at the pass and to climb down immediately as the winds are bitter and the atmosphere is rare with little oxygen. In case of Lipulekh pass the added problem is that it is the international boundary. The Kailash yatra is so designed that when one batch crosses into China one batch will be crossing out after completing the yatra into India. ITBP authorities hand over the fresh batch of yatri’s to the Chinese officials and vice versa any delay on either side will cause problem to the other group so there is always good co-ordination and the L.O makes contact with the Chinese authorities and the L.O on the other side and finalizes the timing.








NABI PEAK AND NABI CAMP



*********



NINTH DAY TREK FROM NABIDANG TO LIPULEH PASS




As we have to cross the Lipulekh pass, the last stretch of our yatra on the Indian side before 9 O’ clock we started from Nabidang at around 4’O clock we could witness the OM shining in that twilight hour also, the trek was really tough as it was a steep climb and the cold was also at its bitterest even in three layers of woolen clothing and hand gloves , two layers of woolen socks and monkey cap we felt the cold but we advanced chanting OM Namashivaya Mantra softly as it was very difficult to walk also. We could see the snow on both the sides of the trek route in the early morning sunlight but luckily there was no snow in the route, later Mudgal told that last time as he went in the first group , ie start of the season they encountered knee deep snow along the route also. We reached Lipulekh pass at around eight ‘O clock..


SNOW COVERED PLACES ENROUTE TO LIPULEH PASS




To our surprise the weather was clear and there was bright sun shine and we faced no problem at the pass rather we stayed for more than one hour as the batch from Taklakot got delayed. Though we carried the smelling camphor in our pouches it was never used. We waited on the highest point on the Indian side chanting the OM Namashivaya Mantra softly because already we were tired very much because of the steep climb and cold. ITBP authorities, doctor and our porters and pony keeper took leave of us and we crossed into China by the Grace of the Lord Shiva the most compassionate, the dancer of Thillai and the Lord of Universe .


On this Ninth day we completed our Indian part of the yatra and entered into China where Kailash Manasarovar is located.

Friday, August 15, 2008

கண்டேன் அவர் திருப்பாதம் (திருக்கயிலாய யாத்திரை) -15

ஒம் நமசிவாய
8ம் நாள் காலாபனியிலிருந்து நாபிதாங் வரை (9 கி.மீ நடைப்பயணம்)




இயற்கையின் ஒரு அற்புதம் ஓம் பர்வதம்


(இயற்கையில் உருவான தேவநாகரி- பிரணவம் )

********************



அப்பர் பெருமான் அருளிச்செய்த போற்றித் திருத்தாண்டகம்

திருக்கயிலாயம்



உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி
ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி



எண்ணா இலங்கைக்கோன் றன்னைப் போற்றி
இறை விரலால் வைத்துகந்த ஈசா போற்றி



பண்ணா ரிசையின் சொற் கேட்டாய் போற்றி
கண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி



கண்ணாய் உலகுக்கு நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி (11)


காலை 6 மணிக்கு கிளம்பினோம், லிபு கால்வாயை ஒட்டி பாதை செல்கின்றது, ஒரே ஏற்றம் தான் மலை உச்சியை நெருங்குவதால் மரங்கள் ஏதும் இல்லை ஒரு வகை பாசியும், கத்திரிப்பூ நிற மலர் கொண்ட செடிகள் மட்டுமே உள்ளன. இங்கு ஒரு வகை புல் வளர்ந்துள்ளது அதை காய வைத்து நல்ல வாசனையுடன் சாம்பிராணி போல் புகை தர வல்லது என்று குதிரைக்காரர் கூறினார் சரி வரும் போது பறித்துக் கொள்ளலாம் என்று நினைத்தோம். மதிய உணவிற்கு நாபிதாங்கை (3987 மீ உயரம்) அடைந்தோம்.




நபிதாங் ஒரு முக்கூடல் என்று சொல்லலாம் ஆனால் இங்கு நதிகள் சங்கமம் ஆவதில்லை ஆனால் இந்தியா, நேபாளம், சீன நாடுகளின் எல்லைகள் இங்கு சங்கமம் ஆகின்றன. மேலும் இங்கு மூன்று மலைச்சிகரங்கள் உள்ளன. அவையாவன ஓம் பர்வதம், திரிசூல பர்வதம், மற்றும் நாபி பர்வதம்.











நபிதாங்கில் அமைந்துள்ள கோவில்கள்






இயற்கையின் அற்புதத்தை இங்கு நாம் காணலாம் மலையிலே யாரோ கையால் ஓம் என்னும் பிரணவத்தை எழுதியது போல் மலையிலே பள்ளம் அமைந்திருக்கின்றது. பனி நன்றாக பெய்யும் பருவத்தில் சுத்த ஓம்காரத்தை (தேவ நாகரியில் உள்ள எழுத்தைப் போல்) நாம் காணமுடியும், நாங்கள் நாபிதாங்கை அடைந்த சமயம் சிறிது மேக மூட்டம் அம்மலையின் மேல் இருந்தது, சரியாக தரிசனம் கிடைக்கவில்லை ஆனால் சிறிது நேரத்திலேயே மேகம் விலகி அருமையான தரிசனம் மாலை வரை கிடைத்தது. ஓம் பர்வதத்திற்கு வலப்புறம் திரிசூல பர்வதம் மூவிலைச் சூலம் போலவே மூன்று சிகரங்கள், சிவன், சக்தி மற்றும் கணேசன் என்பது ஐதீகம். இடப்புறம் நாபி மலை இதன் நடுவே உள்ள பள்ளம் மனித உடலில் உள்ள தொப்புளைப் போல உள்ளதால் இதற்கு இந்நாமம், இந்த இடமும் இம்மலையின் பெயராலேயே நாபிதாங் என்று அழைக்கபடுகின்றது.






நாபி சிகரமும் கீழே நாபிதாங் முகாமும்



(மூன்று சிகரங்களுள் ஒன்று)






முகாமிற்கு சிறிது மேலே இரண்டு கோவில்கள் உள்ளன. விபத்தில் சிக்கி கீழே விழுந்த ஒரு ஹெலிகாப்டரின் எஞ்சிய பகுதிகள் இன்னும் அங்கேயே கிடக்கின்றன. நாம் இந்தியப்பகுதியில் எடுத்த புகைப்பட சுருள்களையும், டிஜிட்டல் கேமராவின் மெமெரி சிப்பையும் இங்கு விட்டு செல்லலாம். சீனர்கள் கையில் இவை கிடைக்கமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு. வரும் போது இவற்றை திரும்ப வாங்கிக் கொள்ளலாம். எங்களில் பலரிடம் ஒரே memory chip இருந்ததால் அவ்வாறு செய்யமுடியவில்லை, முடிந்தால் தாங்கள் இரண்டு சிப் எடுத்துச் செல்லவும். அடுத்த நாள் காலை 4 மக்கே கிளம்ப வேண்டும் என்பதால் சீக்கிரம் தூங்கச் சென்றோம்.
ஓம் பர்வதம் எங்களுக்கு கிடைத்த தரிசனம்



(பனிக்காலம் அல்ல என்பதால் தெளிவாக இல்லை பிரணவம்)


மலைகள் தான் எத்தனை முகங்களை காட்டியது இப்பயணத்தில், சில இடங்களில் மொட்டையாக , சில இடங்களில் மரங்கள் அடர்ந்து, பச்சை பசேல் என்று, பனி மூடி, திரி சூலம், ஓம், நாகம், சிவப்பு றத்தில், ஆனால் வழியெங்கும் நிலச்சரிவுகளின் வடுக்கள் காணக்கிடைக்கின்றன.



இந்த எட்டாவது நாள் மலைச்சிகரங்களின் நாள்.




நபிதாங்கின் மூன்றாவது சிகரம் திரிசூல பர்வதம்




(முச்சிகரங்கள் சிவன் பார்வதி கணேசர் என்பது ஐதீகம்)





****************************





9ம் நாள் நாபிதாங்கிலிருந்து லிபு கணவாய் நடைபயணம்( 9 கி.மீ)



ஒரு குழு திபெத்துக்குள் செல்லும் போது சரியாக இன்னொரு குழு தரிசனம் முடித்து வெளியே வரும் வகையில் அட்டவனை அமைக்கப்பட்டுள்ளது, லிபு கணவாயில் பிராண வாயு குறைவு என்பதால் அதிக நேரம் அங்கு தங்கவும் முடியாது, பனிப் பொழிவு அதிகமாக இருக்கலாம். எனவே காலை 7 மணியிலிருந்து 9 மணிக்குள் நாம் லிபு கணவாயை கடக்க வேண்டும். எனவே அதிகாலை 4 மணிக்கே புறப்பட்டோம். காலையில் நல்ல குளிர் நான் நான்கு அடுக்குகள் ஸ்வெட்டர் அந்திருந்தும் குளிர் தெரிந்தது. இன்றைய தினம் கைகளுக்கு கையுறை, கால்களுக்கு கம்பளி சாக்ஸ் முதலியன மிகவும் அவசியம், கை வசம் பச்சை கற்பூரம் இருக்கட்டும். நாபிதாங்கிலிருந்து ஒரே ஏற்றம், வழியிலே பனியிலே நடந்து செல்ல வேண்டி இருந்தது. சுமார் 7 ம அளவில் லிபு கணவாயை ( 5334 மீ உயரம்) அடைந்தோம்.










இந்தியப்பகுதியின் உயரமான இடம் இதுவே. அந்த கருணா மூர்த்தியின் கருணையால் žதோஷணம் மிகவும் ரம்மியமாக இருந்தது. சூரியன் நன்றாக பிரகாசித்தான். žனப்பகுதியிலிருந்து வர வேண்டிய பேருந்தில் ஏதோ கோளாறு காரணமாக அவர்கள் கால தாமதமாக வந்தனர், எங்கள் குழுவினர் எனவே லிபு கணவாயில் சுமார் அரை ம நேரம் காக்க வேண்டி வந்தது. ஓம் நமசிவாய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே காத்திருந்தோம். அந்த குழுவினர் (12 வது குழு) வந்ததும் ITBP அதிகாரிகள் žன அதிகாரிகளிடம் எங்களை ஒப்படைத்துவிட்டு வந்த குழுவினரை அழைத்து சென்றனர். போர்ட்டரும், குதிரைக்காரரும் விடைபெற்றனர்.



நபிதாங் செல்லும் பாதை

இவ்வாறு ஆலந்தான் உகந்து அமுது செய்த உம்பர் கோனின் அருளினால் முதல் சோதனையில் எந்த துன்பமும் இல்லாமல் சுகமாக கடந்தோம் இனி வருகின்ற நாட்களில் இவ்வாறே அருள வேண்டும் என்று திங்கள் தங்கிய சடையுடையானை வேண்டிக்கொண்டோம். நாபிதாங்கிலிருந்து கிளம்பிய அன்றே லிபு கணவாயைக் கடந்து தக்லகோட் நகரத்தை அடைகின்றோம்.




மிகவும் கடினமான லிபு கணவாயில் வரும் குழுவிற்காக காத்திருக்கும்




ஆசிரியர் மற்றும் தபஸ்வி அவர்கள்




இந்த ஒன்பதாவது நாள் மலை முகட்டின் நாள். இந்தியப்பகுதியில் செல்லும் பயணம் நிறைவடைந்த நாள். அடுத்த பதிவில் இருந்து சீனப்பகுதியின் பயணத்தைப் பற்றி காணலாம்.

Kailash Manasarovar yatra (darshan) - 14

In 2005 on this August 15 only the 14th batch members assembled at Delhi with the prayer in our hearts that He should give His darshan to us. You are enjoying that divine experience through these postings.


Seventh day of yatra trek of 9 Km from Gunji to Kalapani








The next phase of the journey started on the seventh day as the altitude increases human population comes down , the vegetation also changes and it becomes difficult for us to trek in the rarified atmosphere as oxygen in the atmosphere and air pressure becomes less. After three days of trek and one day of rest we continued our yatra on the seventh day by trek upto Kalapani.






As usual we started early morning from Gunji towards Kalapani the vegetation has changed and now we witnessed more wood roses and pine trees the scenario on the Nepal side was wonderful. It looked like a picture card the thick canopy conical pine trees presented a collage of nature . Lot of wood roses bearing orange fruits were seen on the way the fruits are rich in C vitamin and the locals consume this fruit This day also the trek was on the banks of Kali river as we were nearing the source of the river no longer the river was fierce as we had seen earlier . The pony which was let for grazing the earlier day had wandered away so the pony keeper made some alternate arrangement. In between ITBP personnel were waiting with snacks and tea and we also bathed in Kali river at one place and proceeded further . Nearing Kalapani we saw the Vyasa’s cave in the mountains. Sage Vyasa considered to be an incarnation of Lord Vishnu wrote the great epic Mahabharata and codified all the 18 Puranas( holy scriptures). It is believed that Vyasa wrote Mahabharata in this cave. The cave is situated on the top of a steep rock and is not possible to climb to the cave. But a party of ITBP soldiers has attempted from the top and has entered into the cave. The cave is 18 ft in length and they found some ash and some utensils used by Vyasa inside the cave.










Kalapani camp




As we neared Kalapani we could hear the clinging noise of the bells. We crossed the Kail river and entered into Kalapani we could see the twin towers of Shiva and Kali temples the path leading to the temple from the river was lined with bells of all sizes. . In front of the shrines is the Kali Kund ( Kali’s pond) supposed to be origin of Kali river. Water from the mountains enter the Shiva pond then it flows down another stream which comes all the way from Nabidang joins called as Lipu Nala joins this stream and flow as Kali river many rivers add their water to this stream and then the mighty fierce Kali river we saw on the first day is formed. We could really feel that we are in a high altitude when we tried to recite some hymns in the temple we started gasping. The ITBP camp and our camp site is located adjacent to the temple and we went and took rest in the camp. From there we saw the Nag and Nagini peaks the peaks were resembling snakes with raised hoods and were named so.







NAG PARVAT PEAK




There is a hot spring in Kalapani but we didn’t visit that due to lack of time.


Kali Mata of Kalapani

ITBP has built a mini hydel power generation unit across Kali river and we can visit that place. There is an emigration counter at Kalapani and we completed the emigration formalities there, our passports were affixed with emigration seal. In the night we all gathered in the Shiv Kali temple and sang bhajans with the ITBP jawans. As this temple is situated at a high altitude pooja articles have to be carried only ITBP jawans as Joshi knew about this he carried five litres of oil for this temple which he carried all by himself and at no part of the journey did he allow anybody to carry it, already I had mentioned that he didn’t wear chappels throughout the journey walking with bare foot even in snow, we had such great devotees among our group. He reminded me of Karaikkalammmaiyar who walked on head on the
Holy Kailash.





The seventh day was day of pine and woodroses, snow covered peaks and Kalapani temple.





கண்டேன் அவர் திருப்பாதம் (திருக்கயிலாய யாத்திரை) -14




ஒம் நமசிவாய


2005ம் வருடம் இன்றைய தினம் அதாவது ஆகஸ்டு 15 அன்று மாப்பெருங்கருணையன், மாதொரு பாகனை, த்ரிசிக்க அவரால் அழைக்கப்பெற்ற 40 நபர்கள் டெல்லியில் கூடினோம் ஆகவே இந்த 2008 ஆண்டில் அவர் கொடுத்த அற்புத தரிசனத்தைக் அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்வதும் அவரது கருணையே.


7ம் நாள் கூஞ்சியிலிருந்து காலாபானி வரை (9 கி.மீ நடைப்பயணம்)




அப்பர் பெருமான் அருளிச்செய்த போற்றித் திருத்தாண்டகம்

திருக்கயிலாயம்





நெடிய விசும்பொடு கண்ணே போற்றி



நீள அகல முடையாய் போற்றி


அடியும் முடியும் இகலி போற்றி


அங்கொன் றறியாமை நின்றாய் போற்றி


கொடிய வன் கூற்றம் உதைத்தாய் போற்றி


கோயிலாய் என்சிந்தை கொண்டாய் போற்றி


கடிய உருவமொடு மின்னே போற்றி


கயிலை மலையானே போற்றி போற்றி (10)



காலாபானிக்கு கூஞ்சியிலிருந்து யாத்திரை ஆரம்பம்

மூன்று நாள் நடைப்பயணம் பின்பு ஒரு நாள் ஓய்வுக்குப்பின் மன்னு மகேந்திர மாமலை நாதரைக் காண செல்லும் யாத்திரையின் ஏழாம் நாள் அதிகாலை 5 மணிக்கே உற்சாகத்துடன் கிளம்பினோம், எப்போதும் சரியான நேரத்திற்கு வந்து விடுகின்ற குதிரைக்காரர் அன்று வரவில்லை, எனவே பாதி தூரம் நடந்தே மலை ஏற நேரிட்டது. விசாரித்ததில் இரவில் மேய விட்டிருந்த குதிரை எங்கோ ஓடி விட்டது எனவே குதிரைக்காரர் குதிரையை தேடிக்கொண்டு சென்றிருக்கிறார் என்று மற்றவர்கள் கூறினார்கள். தெய்வ சித்ததினால் அன்று வேறு ஒரு குதிரை கிடைத்தது பாதி தூரம் அக்குதிரையில் பயணம் செய்தேன். குதிரைக்காரர்கள் வாடகையை அவர்களுக்குள் சரி செய்து கொண்டனர். செல்லும் வழியில் ஆதி சேஷன் மற்றும் நாகினி சிகரங்களை கண்டு களித்தோம்.


வியாசர் குகை சிறு புள்ளியாய் தெரிகின்றது

எதிர்ப்பகுதியில் போஸ்ட் கார்ட் போல பனி மூடிய சிகரங்களில் கீழே பைன் மரங்கள் அடர்த்தியாக இருந்தன். வழியெங்கும் பைன் மரங்கள், மற்றும் wood rose எனப்படும் புதர்கள் கரும் பச்சை றப்புதரில் சிவப்பு நிறப்பழங்கள்(இலந்தைப்பழம் போல் உள்ளன) நிறைய 'சி' விட்டமின் உள்ள பழம் என்றனர், இங்குள்ள மக்கள் இப்பழங்களை உண்கின்றனர். கூடவே முன்னும் பின்னும் ITBPயினர் பாதுகாப்புக்காக நம்முடன் வருகின்றனர்.ஒற்றையடிப்பாதைதான் சில இடங்களில் காளி நதி இங்கு பாதை மட்டத்திலேயே ஓடுகின்றது உயரம் அதிகமானதால் அப்படிப்பட்ட ஓரிடத்தில் காளி நதியில் குளித்து சிறிது நேரம் இளைப்பாறினோம் இங்கு காளி நதி வெகு சாந்தமாக ஓடுகின்றது. காலாப்பானியை நெருங்கும் போது உயரத்திலே வியாசர் தவம் செய்த குகை கண்ணில் படுகின்றது. ITBP யினர் இந்த குகைக்குள் சென்று வந்திருக்கின்றனர். 14 அடி நீளமுள்ள குகை உள்ளே கமண்டலம், மற்றும் சாம்பல் முதலியவற்றை கண்டதாக கூறினார்கள். இங்கும் காளிநதியின் மேல் உள்ள பாலத்தை கடந்து காலாபானிக்குள் நுழைந்தோம், சிவன் கோவில், காளி கோவில், மற்றும், காளி குளம் நம்மை வரவேற்கின்றது.








உயரம் அதிகமாக அதிகமாக நாம் நடைப்பயணம் செய்யும் தூரம் குறைகின்றதை கவனித்தீர்களா? ஏனென்றால் ஆக்ஸிஜன் குறைவு மேலும் நாம் அதிகமாக சக்தியை செலவிட வேண்டியுள்ளது உயர் மட்டங்களில் என்பதால்.

காளி நதியில் குளியல்


காலாபானி(3370 மீ) என்னும் இந்த இடமே தாருசூலாவிலிருந்து நாம் தொடர்ந்து வந்த காளி நதியின் உற்பத்தி ஸ்தானமாக கருதப்படுகின்றது. லிபு கணவாயிலிருந்தே ஒரு கால்வாய் உருவாகி வழியில் அங்கங்கே பல்வேறு ஆறுகள் கொண்டு வந்து சேர்க்கும் நீரைக்கொண்டு வருகின்றது. காலாப்பனியிலுள்ள சிவ குளத்திலிருந்து உருவாகும் ஆறும் இத்துடன் கலந்து காளி நதியாக கீழே பாய்கின்றது. குளக்கரையில் சிவபெருமானுக்கும், காளி தேவிக்கும், அனுமனுக்கும் கோவில்கள் உள்ளன. திரு. ஜோஷி அவர்கள் இந்த கோவிலுக்காகவே விளக்குக்கான எண்னையை தானே சுமந்து வந்தார். பனிக்காலங்களில் கீழிருந்து பொருட்கள் கொண்டு வருவது சிரமம் என்பதை உணர்ந்திருந்த அவர் இவ்வாறு செய்தார், ஏற்கனவே ஒரு தடவை அவர் கைலாய யாத்திரை செய்தவர் என்பதால் அவருக்கு இந்த உண்மை தெரிந்திருந்தது.





காளி குளம் மற்றும் காளி சிவ திருகோவில்கள்




நதியிலிருந்து கோவில் வரைக்கும் மற்றும் காளி குளத்தை சுற்றியும் மணிகள் நிறைய தொங்குகின்றன, அவற்றை ஒலித்துக்கொண்டே அந்த காளிக்கும், சிவனுக்கும் நன்றி கூறிக்கொண்டே முகாமை அடைந்தோம். அங்கு பின் emmigrationஐ முடித்தோம், பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்வதற்கான முத்திரை இடப்பட்டது. இங்கிருந்தும் ஆதி சேஷன் மலை நன்றாகத் தெரிகின்றது. இங்கு லிபு கால்வாயின் குறுக்கே ஒரு சிறிய நீர்மின் நிலையம் அமைத்துள்ளனர். அருகில் ஒரு சுடு தண்ணிர் ஊற்று உள்ளது, ஆனால் நாங்கள் யாரும் அங்கு குளிக்கச் செல்ல முடியவில்லை. சிவன் கோவிலும் காளி கோவிலும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன, அய்யனுக்கு வலப்புறம் அம்மனின் சந்தி, கல்யாண கோலத்தில் கோவில்கள் அமைந்துள்ளன. ஏதிரே விலாசமான காளி குளம். அனுமன் சந்தியின் கீழே சிறிய சிவக்குளம் இதிலிருந்து தான் நீர் பின் காளி குளத்திற்கு பாய்கின்றது. காளி குளத்தின் நடுவிலே சிறு மேடையில் சிவலிங்கம் மற்றும் திரி சூலம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.






காளி குளக்கரையில் உள்ள அனுமன் ஆலயம்.


இவ்வாலயத்தின் அடியில் உள்ள சிவ குளத்தில் இருந்து தான்



காளி நதி உற்பத்தியாகின்றது.








காலாபானி காளி தாயின் அருட்காட்சி






இரவு காளி கோவிலில் அருமையான பஜனை நடைபெற்றது, அடியேன் திருநாவுக்கரசு சுவாமிகளின் போற்றித் திருத்தாண்டகம் பாராயணம் செய்தேன் இப்பதிகத்தின் ஒவ்வொரு பாடலும் கயிலை மலையானே போற்றி போற்றி என்று முடிகின்றது, திருவையாற்றிலே கையிலைக் காட்சியை கண்டபின் அப்பர் பெருமான் பாடிய பதிகம் இது. உயர் மட்டத்தில் பாராயணம் செய்யும் போது கீழே பாராயணம் செய்யும் வேகத்தில் பாராயணம் செய்ய முடியவில்லை, மருத்துவ பரிசோதனையின் உண்மையான அர்த்தத்தை அப்போது உணர்ந்தோம். இன்றைய தினத்திற்குப்பின் தினமும் ஒரு தடவையாவது போற்றித் திருத்தாண்டகம் பாராயணம் செய்யும் வாய்ப்பை அளித்தார் அந்த மாதொரு பாகர்.





இந்த ஏழாம் நாள் காளி கோவில் மற்றும் பனி மூடிய சிகரங்கள், பைன் மரங்கள் மற்றும் wood rose பழங்களின் நாள்.