Monday, May 25, 2009

திருக்கயிலை தரிசனம் (2008) 1

சென்ற வருடம் அடியேனுடன் பணி புரியும் அன்பர் திருக்கயிலாய் யாத்திரை சென்று அருமையான தரிசனம் பெற்று வந்தார் அவர் அனுப்பிய புகைப்படங்கள் இவை. இந்த வருடத்திய யாத்திரை துவங்கும் சமயத்தில் ஐயனின் அந்த அற்புத திருக்காட்சிகளை அடியார்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த வருடம் யாத்திரைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்களுக்கு வாழ்த்துக்கள். திருக்கயிலை நாதரும் மலையரசன் பொற்பாவையும் தங்களுக்கு அற்புதமான தரிசனம் தந்தருளி தங்கள் யாத்திரை வெற்றிகரமாக முடிய சிவசக்தியிடம் வேண்டுகின்றேன்.

A colleague of mine was fortunate enough to undertake the Kailash Manasarovar yatra last year. I am publishing those photos for the benifit of those yatris who are selected for the yatra this time. I pray to Shivasakthi to grant you all a very good yatra and darshan.


ஹோரே செல்லும் வழியில் இருந்து திருக்கயிலாய தரிசனம்

View of Holy Kailash onway to Hore


சத்யோஜத முக தரிசனம்





West aspect of the Lord



வடக்கு மற்றும் மேற்கு முகங்கள் இணைந்த தரிசனம்



West and North faces of the Lord


North face of the Lord


அகோர முக தரிசனம்

முதல் நாள் கிரி வலத்தின் போது கிடைக்கும் தரிசனம் இது. டார்ச்சன் முகாமிலிருந்து பேருந்தில் புறப்பட்டு யமத்துவாரம் அடைந்து ஐயனின் அற்புத தெற்கு முக தரிசனம், கணேசர் தரிசனம் மற்றும் நந்தியெம்பெருமான் தரிசனம் பெற்று கங்கா சூ நதியை ஒட்டி நடைப்பயணம் துவங்கி பரக்கா சமவெளியில் நடந்து மதிய வேளையில் மேற்கு முக தரிசனம் பெறுகிறோம் அப்படியே நடைப்பயணத்தை தொடர்ந்தால் பின் மேற்கு மற்றும் வடக்கு முகம் இனைந்த தரிசனம் பெர்றுகிறோம். பின் கொஞ்சம் கொஞ்சமாக காப்பு மலைகளுக்குப் பின்னால் உதய சூரியன் போல வடக்கு முக தரிசனம் கிட்டுகின்றது. இறுதியாக டேராபுக் முகாம் அடிகின்றோம். இம்முகாம் வடக்கு திருமுகத்தின் நேர் கீழே அமைந்துள்ளது. மேலே உள்ள படம் டேராபுக் முகாமில் இருந்து கிடைக்கும் தரிசனம்.

The views are the view of the Holy Kailsh on the first day of the circumambulation of Holy Kailash called Parikrama or Kora (in tibet). The yatris leave Darchen base camp by bus and reach Yamadwar and worship of the South face of the Lord. Here they get the darshan of Ganesha and Lord's mount Nandi's view also. From here the trekking starts along Ganga Chu river in the parakha valley around lunch time the yatris get the darshan of the west face of the Lord. Continuing their trek they have the darshan of the combined view of both the west and North faces. Slowly they ge tthe full view of the North face of the Lord. They halt at Deraphuk camp at the end of first day's trek. This camp is situated just at the feet of the North face.