Monday, April 22, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -9 (திருக்கயிலாய யாத்திரை-2012)

கொடாரி - நட்புப் பாலம்- சீனாவில் நுழைதல்



கொடாரி வீதியில் சுந்தர் கௌசிக் மற்றும் அடியேன்

சீனாவின் திபெத்திய தன்னாட்சி பகுதியில் உள்ள ஜாங்மூ என்னும் ஊரையும் நேபாளத்தில் உள்ள கொடாரியையும் இணைக்கும், போடே கோசி( Bhote Kosi)  நதியின் மேல் கட்டப்பட்டுள்ள  நட்புப் பாலத்தை நாம் நடந்து தான் கடக்க வேண்டும் அது போலவே எல்லா பொருட்களும் இறக்கப்பட்டு எகஸ்-ரே சோதனைக்குப் பிறகே சீனாவுக்குள் அனுமதிக்கப்படுகின்றது. வண்டிகள் அப்படியே எல்லையை கடக்க முடியாது  என்பதால்  பல வண்டிகள் நின்று கொண்டிருந்தன  எனவே நேசப் பாலத்திற்கு சுமார்  1.கி.மீ தூரம் இருக்கும் போதே பேருந்தை நிறுத்தி விட்டனர். 


கொடாரியில் காலை+மதிய உணவு
( C.K.வைஷ்ணர் மற்றும் அவரது துனைவியார், ஹர்ஷித் மற்றும்ஹிமான்ஷு)

இங்கிருந்து நமது கையில் உள்ள பொருட்களை நாம்தான் சுமந்து செல்ல வேண்டும், சில சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் நங்கள் உங்கள் பொருட்களை தூக்கி வருகின்றோம் என்று பிஞ்சு/ தள்ளாத  வயதிலேயே உழைக்க முன் வரும் அளவிற்கு வறுமையான பகுதி. காலை  சுமார்  9மணி அளவில் கொடாரி அடைந்தோம்இக்கிராமத்திலேயே எங்களுக்கு  உணவும்    ஏற்பாடு செய்திருந்தனர். நமது பாஸ்போர்ட்களில் நேபாளத்தை விட்டு வெளியே செல்வதற்கான முத்திரை இடப்படுகின்றது.  உணவு உண்ட பின் அனைவரும் நட்பு பாலத்தை கடக்க சென்றோம்.

சுந்தர் மற்றும் அடியேன்

பாலத்தில் இருந்து பார்த்தால் சீனாவின் சுங்கத்துறை மற்றும் பாதுகாப்புத் துறையினரின் கட்டிடங்களைக் காணலாம்பாலத்தின்மேல் இருந்து சீன கட்டிடங்களை புகைப்படம் எடுப்பதை சீனர்கள் விரும்புவதில்லைஅது போலவே அனைவரையும் வேண்டாத விருந்தாளிகள் போலத்தான் நடத்துகின்றனர்இங்குள்ள பாதுகாப்பு வீரர்களின் முகத்தில் சிறிது கூட புன்னகை கிடையாது மரம் போலவே நிற்கின்றனர்பாலத்தின் நடுவாக ஒரு சிவப்புக் கோடு போட்டிருக்கின்றனர் அது சீன நேப்பாள எல்லைகளை பிரிக்கின்றது.  பாஸ்போர்ட்களை கையில் வைத்துக்கொண்டு வரிசையில் நின்றோம் சோதனைக்குப்பின் உள்ளே அனுமதித்தனர்.  எல்லாரும் சென்று  Immigration அலுவலகத்திற்கு முன் அமர்ந்தோம்.  எங்களுக்கு முன் வந்த பல கைலாய யாத்திரை குழுக்கள் இவ்வாறு   தரையில் அமர்ந்திருந்தனர்சீன வீரர்கள் எல்லாரையும் கட்டுப்படுத்திக்கொண்டே இருக்கின்றனர்அங்கு இங்கு நடக்க விடுவதில்லை கண்காணித்துக் கொண்டே இருக்கின்றனர். அங்கு செல்லாதே இங்கு பார்க்காதே, இங்கு உட்காராதே, அப்படி இப்படி நடக்காதே என்று கண் குத்தி பாம்பு போல கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர்.



பொருட்களை எல்லாம் இவ்வாறுதான் தலைச் சுமையாக
 தூக்கிச் செல்கின்றனர்



நட்புப் பாலத்தில் பொருட்களை சுமந்து வரும் மகளிர்

சுமார் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை பாலத்தில் கற்சிலை போல நிற்கும் வீரர்கள் மாறுகின்றனர்.  அவர்களின் கட்டிடத்திலிருந்து அருமையாக காலை உயர தூக்கி நடை போட்டு இறுகிய முகத்துடன் இரு வீரர்கள் பாலம் வருகின்றனர் பின்னர் வீரர்கள் இடம் மாறுகின்றனர் இப்போது வந்தவர்கள் கற்சிலையாக நிற்க முன்னர் நின்றிருந்தவர்கள் நடை போட்டு பின் திரும்பி செல்கின்றனர். 



சீனப்பகுதியின் கட்டிடங்கள்


எங்களுக்கு முன் வந்த குழுவினரை அனுப்பி விட்டு, எங்களுடன் வந்த இரண்டு வண்டி   பொருட்கள் அனைத்தும் தலை சுமையாக நேபாளத்திலிருந்து இப்பக்கம் மாற்றும் வரை எங்களுக்கு அனுமதி கிடையாது என்பதால் அங்கேயே அமர்ந்திருந்தோம்நாள் ஒன்றுக்கு   400  பேரை மட்டுமே அனுமதிப்பார்களாம்எப்போது எங்கள் முறை வரும் என்று காத்துக்கொண்டிருந்தோம். பனி உருகி கயிலாய கிரி வலம் செய்யும் வாய்ப்பு கிட்ட வேண்டும் என்று மனதில் பிரார்த்தனையுடன் அமர்ந்திருந்தோம்  அப்போது இந்த நட்புப் பாலத்தைப் பற்றி அவர்கள்  ஒரு   அறிவிப்பு பலகை வைத்துள்ளனர் அந்த குறிப்பு இதோ.


போட் கோசி நதியின் குறுக்காக கட்டப்பட்டுள்
 நேசப் பாலம்

1965ம் ஆண்டில்   முதலில் முதலில் கொடாரி மற்றும் நைலம் இடையில் போட் கோசி நதியில் இந்த நட்புப்பாலம் கட்டப்பட்டதாம்பின்னர்  1981ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் ஏரி உடைந்து    அது அடித்து செல்லப்பட்டதாம்பின்னர் அதற்கு மேற்புறம்  220 அடி தூரத்தில் இந்த புதுப்பாலம் கட்டப்பட்டதாம்.  கற்சிலை வீரர்கள் காவல் காக்கும் நுழைவு வாயில்  1991ல் கட்டப்பட்டதாம்.

ஒன்றை இங்கே கவனித்தோம் இங்கு போர்டர்கள் ஆக பணி செய்து பொருட்களை தங்கள் தலையில் சுமந்து நேபாளத்திலிருந்து சீனப்பகுதிக்கு மாற்றுபவர்கள் அதிகமாக பெண்கள்தான்தங்கள் குழந்தைகளையும் கழுத்தில் மாட்டிக்கொண்டு இவ்வாறு சுமைகளை அவர்கள் சுமந்து செல்லும் காட்சியைக் காண்பது மிகவும் கஷ்டமாக இருந்தது.  இவ்வாறு சுமார் மணி நேரம் காத்திருந்ததற்கு பிறகு ஒரு வழியாக அலுவலகத்தின் உள்ளே எங்களை அனுமதித்தனர்.


 சீனப்பகுதியில் இருந்து கொடாரி

சீன அரசு வெளியிலிருந்து கொண்டு வரும்   தாவரப் பொருட்கள் (plants) மற்றும் விலங்குகளின் பொருட்களை (animal products )அவர்கள் நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை எனவே நாங்கள் மானசரோவரில் ஹோமத்திற்காக கொண்டு சென்றிருந்த நெய்,  மற்றும் சமித்துகள் எல்லாம் எவ்வாறு அவர்களின் ஊடு கதிர் இயந்திரத்தைத்  (X-Ray Machine) தாண்டி செல்லுமா? என்ற கவலை வந்தது. ஏனென்றால் நாம் கொண்டு செல்லும் எல்லாப் பொருட்களையும்  X-Ray  செய்து பார்த்த பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர்முதலில் நமது  passport மற்றும் விசாவில் உள்ள பெயர் சரியாக உள்ளதாஎன்று சரி பார்த்துவிட்டுநம் கையில் உள்ள பைகளை எல்லாம் சோதனை செய்து பார்த்துவிட்டு பின்னரே அப்பகுதிக்கு அனுமதிக்கின்றனர். பாஸ்போர்ட்களில் முத்திரை இடுவதில்லை.இறைவன் அருளால் எங்களது எந்த பொருளையும் அவர்கள் தடை செய்யவில்லை.



 சரக்கு ஏற்றி செல்லும் வண்டிகள்


 இவ்வாறு வரிசையில் நின்றிருந்த போது வந்த சில வெள்ளைக்காரர்கள் கொண்டு வந்திருந்த புத்தகங்களை எல்லாம் பிரித்துப் பார்த்து ஏதாவது தலாய் சம்பந்தமான பகுதிகள் இருந்தால் அந்த புத்தகத்தை  திபெத்துக்குள் அனுமதிக்க மறுக்கின்றனர் என்பதை கவனித்தோம்இவ்வாறு மாலை  4  மணி அளவில் சீனாவுக்குள்   சிவ சிவ சங்கராஹிரண்ய பதயே!, அம்பிகா பதயேஉமா பதயேபசுபதயே!  உங்களது பரிபூரண தரிசனமும் கிரிவலமும் சித்திக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டே நுழைந்தோம்ஒரு பத்து அடிதான் நடந்திருப்போம் மழை பெய்யத் தொடங்கிவிட்டது.


கொடாரியிலிருந்து ஜாங்மூ நகர காட்சி

***************



திருநாவுக்கரசர்  தேவாரம்

திருக்கயிலாயம்


கயிலை மலையை காவல் காக்கும்
அதிகார நந்தியில்   வடபழனி  வேங்கீஸ்வரர்


கரியத்தான் கண்சி வந்து கயிலைநன் மலையைப் பற்றி
இரியத்தா னெடுத்தி டல்லு மேந்திழை யஞ்ச வீசன்
நெரியத்தா னூன்றா முன்ன நிற்கிலா தலறி வீழ்ந்தான்
மரியத்தா னூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே. (9)

பொருள் :உள்ளம் கரியக் கண்கள் சிவக்கக் கயிலை மலையைப் பற்றி அது உறுதிகெட்டுத் தளர இராவணன் பெயர்த்த அளவில் பார்வதி அஞ்ச , ஈசன் இராவணன் உடல் நெரியுமாறு தன் கால்விரலைச் சிறிது ஊன்றாத முன்னரே கனத்தைத் தாங்கமுடியாத அவன் அலறியவாறு விழுந்தான் . அவன் இறக்குமாறு எம் பெருமான் விரலை ஊன்றியிருப்பின் மறித்தும் நோக்கு இல்லை அன்றே .


தேவாரம் முழுவதையும் படிக்க செல்லுங்கள் http://www.thevaaram.org/

                                                                                                    புனித யாத்திரை தொடரும்.  .   .   .