டோங்பாவிலிருந்து மானசரோவர் பயணம்
திருக்கயிலாய யாத்திரையின் ஆறாம் நாளான இன்று டோங்பாவில் இருந்து பயணம் செய்து, பல பனி படர்ந்த தவளகிரி மலைத்தொடர்களின் சிகரங்கள் மற்றும் குர்லா மாந்தாதா மலைத்தொடர்களின் வெள்ளிப் பனி சிகரங்கள். மணல் குன்றுகளை இரசித்துக்கொண்டே பயணம் செய்தோம். ஐயனின் முதல் தரிசனம் பெற்றோம் மானசரோவரில் புனித நீராடினோம்
மலையின் உச்சியில் உருவங்கள்
சிறு மணல் குன்றுகள்
உயரம் அதிகமாகிக்கொண்டே வந்ததால், பசுமை குறைந்து கொண்டே வந்தது. மழை மிகவும் குறைவாகப் பெய்வதால் இது ஒரு பாலைவனம் தான் அதாவது மலைப்பாலைவனம். உயரம் அதிகமாக அதிகமாக இது போன்ற மணற்குன்றுகளைக் காணலாம்.
இங்குள்ள ஏரிகள் எல்லாம் பனி உருகுவதால் வரும் நீரால் உருவாகின்றன.
தவளகிரி மலைச்சிகரத்தின் முன்னர் குழுவினர்
செல்லும் பாதை
ஒரு அலங்கார வளைவு
புல்வெளி
யாக் கூட்டங்கள்
பல முகம் காட்டும் பனி படர்ந்த மலைச்சிகரங்கள்
வழியில் ஒரு சோதணைச் சாவடியில் நிறைய நேரம் காக்க வேண்டி வந்தது. மலையில் யாரும் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளமுடியாத வகையில் கூடாரம் அமைத்து அதில் இருந்து கொண்டு வருகின்ற போகின்ற வாகனங்களை கண்காணிக்கின்றனர் என்பதை கவனித்தோம் .
காலை புறப்பட்டோம் மாலை சுமார் 3 மணி அளவில் குர்லா மந்தாதா மலைச்சிகரங்கள் கண்ணில் பட்டன. ஐயனின் முதல் தரிசனம் கிட்டப்போகின்றது என்பதை உணர்ந்து கொண்டோம். ஆர்வத்துடன் காத்திருந்தோம் பேருந்து சென்று கொண்டிருந்தது. இதோ என்று டோக்சென் என்ற இடத்தில் பேருந்தை நிறுத்தினார் ஐயனின் முதல் தரிசனம் எவ்வாறு இந்த வருடம் கிட்டியது என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.
யாத்திரை தொடரும் . . . . . . . . .