Saturday, July 11, 2015

முக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 6

முக்தி நாதர் தரிசனம்

முக்திநாதர் ஆலய வளாகத்தின் நுழைவு வாயில்
(கருடனும் நாக கன்னிகைகளும்)

முக்திநாதர் ஆலயம் மிகப்பெரிய வளாகம் ஆகும். இந்து மற்றும் பௌத்த அம்சங்கள் இணைந்த பல சன்னிதிகள் இவ்வளாகத்தில் உள்ளன. ஆலய வளாகத்தை சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அலங்கார வளைவில் கருடனும் நாக கன்னிகைகளும் முக்திநாதரை சேவிக்க வரும் நம்மை வரவேற்கின்றனர். 


முக்திநாதர் ஆலய வளாக வரைபடம்

அருகில் மூன்று   பெரிய பிரார்த்தனை உருளைகள் உள்ளன. இந்த உருளைகளின் உள்ளே மந்திரங்கள் எழுதிய காகிதங்கள் வைத்துள்ளனர். நாம் அந்த உருளைகளை சுற்றும் போது அவ்வளவு மந்திரங்களை ஜபித்த பலனை நாம் பெறுகின்றோம் என்பது இவர்கள் ஐதீகம்.



நுழைவு வாயில் அருகே உள்ள பிரார்த்தணை உருளைகள்
(அருகே உயர்ந்த மதில் சுவரைக் காணலாம்)

நுழைவு வாயிலைத் தாண்டியவுடன் சாங்தோ புத்தவிகாரம் அமைந்துள்ளது. இவ்விகாரத்தில் புத்தர்,  அவலோகிதேஸ்வரர் மற்றும் திபெத்திற்கு புத்தமதத்தை கொணர்ந்த பத்மசம்பவரும் அருள் பாலிக்கின்றனர். முக்திநாத்தின் லாமாக்களும், இங்கு பூசை செய்கின்ற  புத்த பிக்குணிகளும் இதன் அருகில் உள்ள கட்டிடத்தில்  தங்குகின்றனர். 



விஷ்ணு பாதம் - சுவாமி நாராயண்
( இவரது பக்தர்கள்தான் மதில் சுவரை எழுப்பினார்களாம்)


அடுத்து இடப்பக்கத்தில்   சுவாமி நராயண் என்று தற்போது அழைக்கப்படும் சுவாமிகளின் நினைவிடம் உள்ளது அதில் விஷ்ணு பாதம் அமைத்துள்ளனர். இவர் தனது பதினோராவது வயதில் முக்திநாத் வந்து சில காலம் இங்கு கடுமையான தவத்தில் இருந்து சித்தி பெற்றார். பின்னர் சபீஜ் யோகத்தை உலகெங்கும் பரப்பினார். இவ்வாலயத்தின் இப்போதுள்ள  சுற்று மதிலை இவரின் சீடர்கள்தான் கட்டினார்களாம். 


யக்ஞ சாலை - திருமங்கையாழ்வார் பாசுரங்கள்


அடுத்து யக்ஞசாலை அமைந்துள்ளது. அதன் முகப்பில் திருமங்கையாழ்வாரின் பாசுரங்கள் எழுதிய  பலகை வைத்துள்ளனர். இமயமலையில் இவ்வளவு உயரத்தில் தமிழ் படித்தபோது மிகவும் பெருமையாக இருந்தது.
சிவ பார்வதி சன்னதி - பெரிய சாளக்கிராமம்


அடுத்து நாம் சேவிப்பது சிவபார்வதி சந்நிதி. நடுநாயகமாக இரண்டடுக்கு பகோடா அமைப்பில்   பெரிய சிவன் சன்னதியும் அதன் நான்கு திசைகளிலும் சிறிய இராமர், கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் கணேசர்களுக்கு சிறு சன்னதிகள் என்றபடி பஞ்சாயதன அமைப்பில் அமைந்துள்ளது. சிவபார்வதி பளிங்குச்சிலை பெரிய சாளக்கிராமம் ஒன்றும் சன்னதியில் உள்ளது. சிவபெருமானுக்கு எதிரே சிறு நந்தியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. புத்தமத கலப்பில்லாமல் இந்த வளாகத்தில்  முழுதும் இந்து கோவிலாக அமைந்துள்ள சந்நிதி இது ஒன்றுதான். சிவபார்வதியை வணங்கிவிட்டு முக்கிய மைய  சன்னதியை நோக்கி சென்றோம். இருபுறமும் பெரிய மரங்கள் வளர்ந்திருக்கின்றன என்பது இத்தலத்தின் ஒரு தனி சிறப்பு ஆகும். பொதுவாக இந்த உயரத்தில் (3750 மீ) மரங்கள் வளராது. வளாகத்திற்ககுள் சிறு ஆறு ஒடுகின்றது.



முக்திநாதர் சன்னதி

ஒரு முன் மண்டபம் ஒரு பிரகாரத்துடன் மூன்றடுக்கு பகோடா அமைப்பு




இந்த ஆலயத்தை நேபாள அரசர் ஷா ராணா பகதூரின் பட்டமகிஷி சுவர்ணா பிரபா தனது கனவில் வந்து முக்திநாதர் கட்டளையிட்டபடி 1815ல்  கட்டி முடித்தார்.  நேபாளக் கோவில்களைப்போலவே மூன்றடுக்கு பகோடா அமைப்பில் எழிலாக அமைந்துள்ளது முக்திநாதர் ஆலயம். ஆலயத்திற்கு முன் புறம் இரண்டு குளங்கள் புண்ணிய-பாவ குளங்கள் உள்ளன.

புண்ணிய பாவ குளங்கள்

அரை வட்ட  வடிவில்    108 நீர் தாரைகள்

கோ முகத்து ஓர்  நீர் தாரை

 கோவிலைச் சுற்றி அரை வட்ட வடிவத்தில் 108  நீர் தாரைகள் விழுந்து கொண்டிருக்கின்றன. பக்தர்கள் இந்த 108 தாரைகளில் நீராடி பின்னர் இரு குளங்களிலும் முழுகி எழுந்து உடல் தூய்மையான பின் முக்திநாதரை சேவிக்க செல்கின்றனர். இந்துக்களுக்கு இந்த 108 தாரைகள் 108  திவ்ய தேசங்களை குறிக்கின்றது. பௌத்தர்கள் பத்ம சம்பவருடன் வந்த  84  சித்தர்கள் உருவாக்கிய புனித தாரைகள் இவை என்று நம்புகின்றனர். இந்த புனித நீரானது மானசரோவரின் தீர்த்தம் என்றும், வரும் காலத்தில் பாவம் செய்தவர்கள் பாவத்திலிருந்து விடுபட இந்த தீர்த்தங்களை அவர்கள் ஆசீர்வதித்து சென்றுள்ளனர் என்பதும் இவர்கள் ஐதீகம். எனவே இந்த 108  தாரைகளில் நீராட ஒருவரது கன்ம வினைகள் அனைத்தும் நீங்கும்.   தண்ணீர் விழும் தாரைகள் பசு முகம் போல உள்ளன, முதல் மற்றும் கடை தாரைகள் மட்டும் ட்ரேகன் போல உள்ளன. சங்பா ரின்போசே அவர்கள் இவைகளை அமைத்தாராம். மிகவும் குளிர்ந்த தண்ணீர்தான் இவைகளில் இருந்து வருகின்றன மேலும் எப்போதும் தண்ணீர் விழுந்து கொண்டிருப்பதால் பாசமும் பிடித்துள்ளது. கவனமாக நீராடவும். பாதுகாப்பிற்காக  தடுப்புக் கம்பி வளையம் அமைத்துள்ளனர் அதை பிடித்துக்கொள்ளலாம்.  முதல் தாரையில் கீழ் வந்த உடனே அந்த சீதள நீரினால் உடல் சில்லிட்டு விட்டத. ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை பாசுரங்களை சேவித்துக்கொண்டே ( முதல் பாசுரத்திலிலேயே மார்கழி நீராடத்தானே அழைக்கின்றாள் கோதை)  அவசர அவசரமாக மற்ற தாரைகளில் தலையை நனைத்துக்கொண்டே ஓடினோம். பாவக்குளத்தில் இறங்கியவுடன் உடல் அப்படியே உறைந்து விட்டது போல உணர்ந்தோம், அவசர அவசரமாக வெளியே வந்து புண்ணிய குளத்தில் மூழ்கி நீராடினோம். இரண்டும் நீங்கப்பெற்றோம். வெளியே வந்து தலை துவட்டி புது ஆடை அணிந்தவுடன் புது ஜென்மம் பெற்றது போல புத்துணர்வு பெற்றோம்.  வாருங்கள் இனி முக்திநாதரை சேவிப்போம்.

முன் மண்டபக் கதவின் ஒரு அருமையான சிற்பம்

முன் மண்டபத்தின் கதவில் அருமையான சிற்பங்கள் மற்றும் அருமையான மரவேலைப்பாடுகள் அமைந்துள்ளன. ஒரே பிரகாரம் சுற்றி வந்து முக்தி நாதரின் எதிரே நின்றோம்.
முக்தி நல்கும் ஸ்ரீமூர்த்தி


முக்தி நாராயணரின் திருமுக மண்டலம்

புத்தர் - நர நாராயணர்          

இராமானுஜர், விநாயகர், பத்மசம்பவர், கருடன்

பெரிய திருவடி
அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களில் சங்கு சக்கரம், பத்மம், கதை தாங்கி ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார் முக்தி நாதர். அப்படியே நம்முடன் பேசுவது போல உள்ளது பெருமாளின் திருவழகு. பெருமாள் மற்றும் உபய நாச்சியார்களின் திருமேனிகள் செப்பு சுயம்பு திருமேனியாகும். அந்த ஆரவமுதை அப்படியே பருகினோம். கண்ணீர் மல்க அப்படியே நின்றோம்  நேரம் சென்றதே தெரியவில்லை. முதலில்
சிற்றஞ்சிறு காலே வந்துன்னை சேவித்து உன்
பொற்றாமறையடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றமேய்துண்ணூம் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளமல் போகாது
இற்றைப்பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ்  பிறவிக்கும் உந்தன்னோடு
உற்றோமேயாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்  என்று சரணாகதி செய்தோம். கண் குளிர சேவித்தோம் மனம் குளிர நன்றி கூறினோம்.

ஒரு வகையில் பார்த்தால் முக்திநாதர் தரிசனம் மிகவும் துர்லபமானது, வானிலை, உடல் நலம், நிலசரிவுகள், விமானப்பயணம் என்று ஏதாவது ஒன்றில் பிரச்சினை ஏற்பட்டாலும் நாம் இங்கு வரமுடியாது, பெருமாளின் அருள் பூரணமாக இருந்தால் தான் நாம் இங்கு வரவே முடியும் அதற்கு அவருக்கு நன்றி செலுத்தினோம்.


விஷ்ணு சகஸ்ரநாமம் சேவிக்கின்றோம்

முன்பே கூறியது போல நேபாள நாட்டில் மஹா விஷ்ணுவிற்கும் புத்தருக்கும் இடையே  இவர்கள் வேறுபாடு காண்பதில்லை. முக்தி நாதர் நமக்கு பெருமாள், புத்தர்களுக்கு அவலோகிதேஸ்வரர், ஆதி சேஷன் குடைபிடித்து, பிரபையாகவும் விளங்க, வெள்ளி கிரீடம், காதுகளில் குண்டலங்கள், பட்டுப்பீதாம்பரம், முத்துமாலைகள் என்று அற்புதமான அலங்காரத்தில்  தாமரை  மலரில் பத்மாசனத்தில்  அமர்ந்த கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் சேவை சாதிக்கும் முக்தி அளிக்கும் பெருமாளை திவ்யமாக  சேவிக்கின்றோம்.  நாம் உபய நாச்சியார்கள் என்று வணங்கும் தாயார்கள் இருவரும்  சாமரம் வீசும் பாணியில் நின்ற கோலத்தில் எழிலாக  சேவை சாதிக்கின்றனர். புத்தர்கள்  தாயார்களை டாகினிகள் என்று வணங்குகின்றனர். மேலும் புத்தர், நர நாராயணர்கள் (சிலர் லவ குசர்கள் என்கின்றனர்), இராமானுஜர், கணேசர், அஞ்சலி ஹஸ்தத்துடன் கருடன் ஆகிய மூர்த்திகளும் சேவை சாதிக்கின்றனர். பெருமாளுக்கும், உபய நாச்சியார்களுக்கும், கருடன், இராமனுஜர் ஆகியோருக்கு  திருமண் அழகு சேர்க்கின்றது. மேலும் பெரிய நரசிம்ம சாளக்கிராமமும் உள்ளது. புத்த சந்நியாசிநிகள் தீர்த்தப்பிரசாதம், சடாரி சாதிக்கின்றனர்.  பெருமாளின் திருமூக்கு சிறிது வித்தியாசமாக பட்டது, காரணம் பின்னால் தெரிய வந்தது முற்காலத்தில் நாம் கர்ப்பகிரகத்தின் உள்ளேயே சென்று  பெருமாளை ஆலிங்கனம் செய்ய முடியுமாம். 2004 முதல் அந்த வழக்கத்தை நிறுத்தி விட்டனராம். 

இங்கு வந்து சேவித்த அருளாளர்களில் திருமங்கையாழ்வாரையும் இராமனுஜரையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். விசிஷ்டாத்வைத்தை நிலை நாட்டிய இராமானுஜர் கர்ப்பகிரகத்தில் எழுந்தருளியுள்ளார். மேலும் ஆண்டாள் மற்றும் மணவாள மாமுனிகளுடன்   பிரகாரத்தில் உள்ள யக்ஞ சாலையிலும் எழுந்தருளியுள்ளார்.     விமானம்  வாகனங்கள் என பல வசதிகள் மிக்க இந்த காலத்திலேயே சாளக்கிராமத்தை தரிசிக்க  நாம் பெரும் பிரயத்தனம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறதுஆனால்இவர்கள்  எவ்வாறு  பல நூற்றாண்டுகளுக்கு முன்னால்  எப்படி இங்கு வந்துபெருமாளை தரிசனம் செய்துமங்களாசாசனமாக பாசுரங்களை இயற்றினார் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.  


யாக சாலையில் யாகம்

திருமங்கையாழ்வார்  சாளகிராமத்தை பத்துப் பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார்இவற்றில் கடைசி பாசுரம் தவிர மற்றவற்றில் எல்லாம்சாளக்கிராமம் அடை நெஞ்சே என்று சொல்லி முடிக்கிறார் ஆழ்வார்சாளக்கிராமத்தை அடைவது அத்தனைக் கடினமானது என்று மறைமுகமாக உணர்த்தினாலும்அந்த சிரமம் தெரியாமலிருக்கஇராமகிருஷ்ண காலத்துச் சம்பவங்களைச் சொல்லி, ‘அந்தப் பெருமாள் கோயில் கொண்டிருக்கும் சாளக்கிராமத்தை அடைவாயாக’ என்று  நமக்கு அறிவுறுத்துகின்றார்.  நம்முடைய பயணச் சோர்வை நீக்க முயன்றிருக்கிறார் நம் கலியன்.  மேலும்  திருவூரகத்தானையும்குடந்தை உத்தமனாம் சார்ங்கபாணியையும்திருப்பேர்நகர் எம்பெருமானையும் குறிப்பிட்டு அந்தப் பெருமாள்களைப் போல பல பெருமாள்களைத் தரிசித்திருக்கிறீர்களேஅதேபோல இந்த ஸ்ரீமூர்த்திப் பெருமாளையும் தரிசிக்க வாருங்கள் என்று அழைப்பு விடுத்தாற் போலவும் பாசுரங்களை அமைத்திருக்கிறார் என்பது சிறப்பு

தாராரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத்து அடிகளை
காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலிசெய் தமிழ்மாலை
ஆரார் உலகத்து அறிவு உடையார் அமரர் நல்நாட்டு அரசு ஆளப்
பேராயிரமும்  ஓதுமின்கள் அன்றி இவையே பிதற்றுமினே  என்று ஆழ்வார் பாடியபடி பிரகாரத்தில் அமர்ந்து விஷ்ணு சகஸ்ரநாமத்தின் ஆயிரம் நாமங்களால் பெருமாளை போற்றினோம், ஆழ்வாரின் பாசுரங்களையும் சேவித்தோம் (பிதற்றினோம்). ஆழ்வார்களின் பாசுரங்களையும் சேவித்தோம்.  
யாக சாலையில் இராமனுஜர், ஆண்டாள், மணவாள மாமுனிகள்


சந்நிதிக்கு எதிரே யாக சாலை அதில் குழுவினர் சார்பாக யாகம் நடத்தினோம். இந்த யாக சாலையில் இராமனுஜர், ஆண்டாள், மணவாள மாமுனிகள் மூர்த்தங்கள் உள்ளன. சின்ன ஜீயர் சுவாமிகள் இந்த மூர்த்தங்களை இங்கு பிரதிஷ்டை செய்தாராம்..

மேலும் இரண்டு புத்தவிகாரங்களை நாம் முக்திநாத்தில் தரிசிக்கலாம். முதலாவது நரசிங்க கோம்பா. இந்த சன்னதி முக்திநாதர் சன்னதியை விட   சிறிது உயரத்தில் வளாகத்தின்  வடக்கு மூலையில் அமைந்துள்ளது. இந்த புத்தவிகாரத்தில் பத்மசம்பவர் தன்னைப்போலவே உருவாக்கிய சிலை அமைந்துள்ளது. அடுத்து நாம் தரிசிக்கும் புத்த விகாரத்தில் ஒரு ஜுவாலை எப்போதும் எரிந்து கொண்டிருக்கின்றது எனவே இது “ஜ்வாலாமாயி” என்றும் அழைக்கப்படுகின்றது.  இந்த புத்தவிகாரம் வளாகத்தின்  தெற்கு மூலையில் அமைந்துள்ளது  மெபர் லகாங் கோம்பா (Mebar Lakhang Gompa) என்றும் அழைக்கப்படுகின்றது



அணையாது எரிந்து கொண்டிருக்கும் ஜுவாலை( நீல நிறம்)

 இந்த முக்திநாத் தலத்தை பராமரிக்கும்  “லாமா  வாங்யால்”  புத்த பிக்குணிகள் இங்குதான் தங்களது புனித நூல்களை கற்கின்றனர். இங்கு தண்ணீரில் நீல நிறத்தில் எப்போதும் ஒரு ஜ்வாலை எரிந்து கொண்டிருக்கின்றது. ஜ்வாலையை தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தால்  அந்த ஜுவாலை எரியும் நீர் சேரும் “துர்கா  குண்டத்தை” தரிசிக்கலாம். இவ்வாறு நீர், நிலம், அக்னி, காற்று வாயு என்று பஞ்ச பூத சம்பந்தமும் பெற்றுள்ளது முக்திநாத் தலம்.  இவ்வாறு முக்திநாதர் சேவை  அருமையாக அமைந்தது பின்னர் இரு சக்கர வண்டிகள் மூலம் அனைவரும் கீழே கிராமத்தை வந்தடைந்தோம்

Mukthinath yatra -5


Jomsom to Muktinath by Jeep 

According to the Skanda Purana, a Hindu Scripture  these shalagrama-shilas appear in various colours, shapes, and markings. Their colour may be either black, blue, yellow, whitish, blood-red or tawny coloured. Their shape may be either smooth, rough, uneven, very plump, or frog-shaped. They may be without markings, marked with one chakra, many chakras, large chakras, broken chakras, a chakra in the middle of a circle, or with one chakra attached to another. Some shalagrama-shilas exhibit a large mouth and others a down-turned mouth. - The Skanda Purana also enumerates the good and bad results derived from venerating different types of shalagrama-shilas. Worshiping a smooth shila brings mantra-siddhi (perfection in the chanting of one"s given mantra). Black shilas bestow fame, yellow shilas give sons, whitish shilas destroy one's sins, blue shilas increase wealth, and blood-red shilas bring diseases.“Shalagramas do not require installation ceremony. When one begins the worship of shalagrama, however he should start with elaborate puja using all articles. The worship of shalagrama is the best form of worship, better than the worship of the sun. Any person who has seen Salagram Shila, paid obeisances to Him, bathed and worshiped Him, has achieved the results of performing ten million sacrifices and giving ten million cows in charity. He who takes the charanamrita of shalagrama destroys all sinful reactions at their roots, even the killing of a Brahmana. “By taking the remnants of foodstuffs offered to shalagrama, one will get the result of performing many sacrifices. One who has drinked the water that bathes a Shaligram at least once in life time won't have to suck his mother's breast for the second time. He has attained Moksha (liberation)".



Kali Gandaki River 




The quaint bridge across Gandaki River

These Shalagramas need no consecration and can be worshipped straight away.  These are identifiable from other stones by special markings which resemble Vishnu's paraphernalia such as   mace, conch, lotus, and chakra. Narasimha, Varaha, Vamana are the popular forms of worship. They are  usually kept closed in a box and are only brought out for daily  puja.. The Shilas are usually hereditary and are passed down through many generations, never being purchased or sold.The legend of Muktinath is also linked to Shalaigrama- shilas we will see some of them. 


A new bridge is under construction



Map showing Lubra Muktinath trekking route

 


Recently renovated Bonpa Monastery at Lubra

The first legend is that Salangayna Rishi son of  Vishvamitra  performed severe penance  towards Mahavishnu on the banks of Gantaki River under a Sal tree for a progeny. Pleased with the penace of Salangayana Maha Vishnu appeared before him and granted the boon and as per the request of the Rishi stayed here and bestows His blessings as Shalagrama-shilas. 

The second legend is that,  like all  North Indian Rivers starting from  the Holy Ganges are sanctified by  to Lord Vishnu,  River Gandaki also wanted to be sanctified by Him. So she performed  severe penance to get the blessings of Maha Vishnu. Pleased with her penance when Maha Vishnu appeared before her she requested that He should incarnate in her. Hence Lord Vishnu is formed in Gantaki as Shalagrama-shilas.


The dirt road leading to Muktinath 

Happy pilgrims in the small bus 






A village in between 

The other  Legend is the story of Tulasi the Holy Basil palant. Tulasi was the wife of Jalandarasura,  she was a very chaste woman. Jalandara had a boon that he will be defeated in war when his wife  loses her chastity. Once during a fight between Lord Shiva and Jalandara, Lord Vishnu disguised as Jalandara visits Tulasi who is tricked her.  Because of this Shiva wins the battle. After the truth is known Tulasi curses Mahavishnu to turn to stone. Mahavishnu explains her that in the previous birth she had performed  penance to get Vishnu as husband and so that only it happened like this and gave an exalted position to her that she will turn to Tulasi plant which will adorn Him always.  He will stand as Shalagrma hill and she will also turn into Gantaki river which will cut the mountain  to Shalagrma-shilas.  According to the Narada purana  “It is impossible to fully explain the importance of Tulsi leaves (Holy Basil) in the worship of shalagrama, as Tulsi is the most beloved consort of Hari in the form of shalagrama.”



Solar cookers resembling dish Antennae


Two wheeler station on the outskirts of Muktinath 
One more legend is the story of beautiful comfort woman called Gandaki. She had a strange habit that she treated the male who cme to her every night as her husband served him like a dutiful wife. Oneday a handsome youth visited her , she treated him also as her husband and served him, at the time of bathing she found him to be a leper, her relatives asked her to turn him out immediately, but  as her wontnursed his wounds he served him  and truthfully. In the morning she found that the youth was dead, as per the custom she wanted to perform sati, when she was to enter the fire a miracle happened, the fire extinguished itself and the youth came alive and   there stood Lord Maha Vishnu smiling,  along with Conch, Chakra, mace and lotus like an effulgent sun. He blessed Gandaki and told that he enacted this drama to make her devotion public and gave her  three boons, but she asked just one boon that she should be always with Him,  Vishnu blessed that when  he will turn into stone by a curse  she can surround Him like a garland in the form of  river. So Gandaki turned into a river and she circles the Shalagrama mountain still today. 

A wooleen knitting lady 

The Shlagrma-shilas are formed  in the Damodar Kund (A holy lake believed to be a Sakthi peetam also)  above Muktinath from where Gantaki river originates. Nepal Government has banned the sale and export of Shalagramams, according to Shastras  alsoone should not buy Shalagramams but  the locals collect these shilas by using nets  right from Damodar Kund andsell them. Many pilgrims buy them also  As they have become scarce nowadays  there are duplicates also in the market.

By mini bus we reached the banks of Holy Gandaki  as the water is muddy here and black  in color the river is also called Kali Gantaki, some other names of Gantaki are Shalagrami, Hiranyavathi,  Narayani, Samta Gantaki. There we tried our like searching for Shalagrmams but we were not lucky. Later we crossed a old quaint wooden bridge  across the Gandaki river and reached Lubra village where the  jeep station for travel to Muktinath is situated.  We also a new bridge is coming up  across the river. Later our guide told that the Nepal Givernment is planning to build a highway upto Muktinath for easy movement pf pilgrims and the same can be used by Kailsh yatris also to enter into Tibet via Thorang La pass.




Thrilling two wheeler ride to the Muktinath Shrine


The welcome arch 


 We waited for sometime at Lubra for the jeeps to arrive. There was a beautiful Gompa at the village it was shining with a new coat of painting. Later we   travelled by a jeep and amini bus to Muktinath. There was not any regular road , the journey was bone rattling there were many ascents and descents in some part we travelled on the Gantaki River bed, as it was not monsoon season the river was lean so the vehicles used this short cut. In between there were many villages. There are many Gompas and archeological sites in between.  The villages are fertile and regular cultivation is being done in these elevation also. We could she apple orchards, maize, buck wheat fields all along the way. The mud path was lined with trees, the villagers were using solar cookers and guest houses are there in almost all the villages, thus we travelled for  about two hours and reached the Muktinath jeep station.


The Muktinath jeep station is situated on the outskirts of the village and to reach the temple one has to walk for about one K.M and also have to climb some 500 steps. But for the benefit of the pilgrims motor bikes are available. The local youth have taken to vocation to help the pilgrims in this process they also earn some money during the season. They give a token as a mark of identification and on the return we can travel by any motor bike. This bike station is situated at a distance form jeep station and one has to walk between them but on the return at the request of the pilgrims they drop at jeep station. Some of the pilgrims in our group used these bikes but some of them preferred to walk to the temple. 

Friday, July 10, 2015

முக்தியளிக்கும் முக்திநாதர் தரிசனம் - 5

ஜோம்சமிலிருந்து முக்திநாத் ஜீப் பயணம்


காளி கண்டகி நதி



கண்டகி நதியின் குறுக்கே உள்ள பழைய பழுதடைந்த பாலம்

அவனருளால் குழுவினர் சுமார் 40 பேரும் விமானம் மூலம் போக்ராவிலிருந்து ஜோம்சம் வந்தடைந்தோம். பின்னர் காலை உணவை முடித்துக் கொண்டு சிறு பேருந்து மூலம் கண்டகி நதியை அடைந்தோம். காளி கண்டகி (கறுப்பு கண்டகி) என்ற பெயருக்கேற்றார் போல - அந்த கருவிளை வண்ணன் பாதம் தொட்டு வருவதால் கருமையான நிறத்தில் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தாள் கண்டகி. ஆற்றங்கரையில் எதாவது சாளக்கிராமம் கிடைக்கின்றதா என்று தேடினோம். இங்குள்ளவர்கள் தாமோர் குண்டத்தில் இருந்து நதி புறப்படும் இடத்தில் இருந்தே  வலை கட்டி சாளக்கிராமங்களை சேகரித்து விடுவதால் அவரின் பிராப்தம் உள்ளவர்களுக்கு மட்டுமே சாளக்கிராமம் ஆற்றில் கிடைக்கும் என்பதால் யாருக்கும் சாளக்கிராமம் கிட்டவில்லை. சில கூழாங்கற்களை மட்டும் சேகரித்துக் கொண்டோம்.

ஆதி காலத்தில்  இமயமலைப் பிரதேசம் சமுத்திரமாக இருந்தது. அப்போது நமது இந்தியக் கண்டம் தனியாக இருந்தது. சுமார் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய நிலப்பரப்பு மெல்ல மெல்ல வடமேற்காக நகர்ந்து வந்து  ஆசிய நிலபரப்போடு மோதியதால் உருவானவையே உலகின் உயர்ந்த மலையான இமயமலை. எனவே உயர் பீடபூமியான திபெத்தில் உள்ள பல   ஏரிகள் இன்றும் உப்பு நீராக இருப்பதற்கு இதுவே காரணம். சாளக்கிராமங்களும் அந்த கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள் என்று அறிவியலார் கூறுகின்றனர். நேபாள அரசும் சாளக்கிராமங்களை விற்பதையும், நேபாளத்தில் இருந்து வெளியே எடுத்து செல்வதையும் தடை செய்துள்ளது. ஆனால் விஞ்ஞானமும் மெய்ஞானமும் எப்போதும் ஒன்றாக இருப்பதில்லையே, கடல் வாழ் உயிரினங்களின் கூடு என்றால் இமயமலையில் இருந்து உருவாகி ஆசியா முழுவதும் பாயும் எண்ணற்ற நதிகளில் இந்த ஒரு நதியில் மட்டுமே ஏன் சாளக்கிராமங்கள் கிட்டுகின்றன என்பதை யாராலும் விளக்க முடியவில்லை.  எது எப்படி இருந்தால் என்ன நம்புகின்றவர்களுக்கு சாளக்கிராமங்கள் பெருமாள்தான்.



லூப்ரா - முக்திநாத் நடைப்பயண வரைபடம்

பழுதடைந்த பாலத்தைக் கடந்து லூப்ரா கிராமத்தை அடைந்தோம். இக்கிராமத்தில் உள்ள முக்திநாத் செல்லும் சிறு பேருந்துகளும், ஜீப்களும் புறப்படும் நிலையத்தை அடைந்தோம். இந்த பேருந்து நிலையத்தின் எதிரே போன்பா அவர்களின் புத்த விகாரம் உள்ளது. புது வர்ண கலாபத்தில் எழிலாக இருந்தது புத்த விகாரம். இங்கிருந்து நடைப்பயணம் மூலமாகவும் பலர் முக்திநாத் செல்கின்றனர். 


லூப்ராவில் உள்ள போன்பா புத்த விகாரம்

இங்கிருந்து முக்திநாத் செல்ல  சரியான பாதை கிடையாது மலையில் கல் நிறைந்த பாதையில் மேலும் கீழும் இறங்கி   குலுங்கிக்கொண்டே பயணம் செய்தோம் பின்னர் சிறிது தூரம் சென்றவுடன் பேருந்து கண்டகி நதியில் இறங்கியது மிகப்பெரிய நதி ஆனால் தண்ணீர் சிறு பகுதியில்தான் ஓடிக்கொண்டிருந்தது. பின்னர் மலையேற்றம் என்று சுமார் 20  கி.மீ தூரத்தை 3 நேரத்தில் கடந்தோம். வழியெங்கும் சிறு சிறு கிராமங்கள் உள்ளன. கடுகு, வரகு அரிசி முதலியன பயிர் செய்கின்றனர். ஆப்பிள் மரங்களையும் பார்த்தோம்.  சில கிராமங்களில் தக்காளி, முள்ளங்கி கூட விளைகின்றன. அனைத்து இல்லங்களின் முன்புறம் டிஷ் ஆன்டனாக்கள் போல  சூரிய குக்கர்கள் (Solar cookers) அமைத்துள்ளனர்.   அனைத்து கிராமங்களிலும் தங்கும் விடுதிகள் அமைந்துள்ளன. அன்னபூரணா மலைதொடரின் பனி படர்ந்திருந்த தொராங் லா கணவாயை பார்த்தோம். இந்த உயரத்தில் பொதுவாக மரங்கள் இருக்காது. ஆனால் இவ்வழியில் பல மரங்களைக் கண்டோம்.


முக்திநாத் சென்ற பாதை???

சிறு பேருந்தில் பயணம்






குலுக்கியெடுக்கும் ஜீப் பயணம்

அக்டோபர் மாதத்திற்கு பிறகு பனி பெய்ய ஆரம்பித்து முக்திநாத் முழுவதும் பனியால் மூடிவிடும் பின்னர் இளவேனில் காலத்தில் பனி
 உருக ஆரம்பிக்கும் மே மாதம் சில சமயம் குறைவாக பனி இருக்கும் சாகச பயணம் மேற்கொள்ள விரும்பும் ஐரோப்பிய  அன்பர்கள் அப்போது இங்கு வருவர், பருவ மழை துவங்குவதற்கு முன்னர் ஜூன் மாதம் இங்கு வர ஏற்ற காலம்.   நேபாள அரசு இந்த ஜோம்சம் - முக்திநாத்  பாதையை 2020க்குள் தார் சாலையாக  மாற்ற திட்டமிட்டுள்ளதாம்.  அப்படி நடந்தால்  தொராங் லா எனப்படும் கணவாய் வழியாக சீனாவில் நுழைந்து  திருக்கயிலாய யாத்திரை செல்ல இனியொரு வழி உருவாகும் என்றும் வழிகாட்டி  கூறினார்.  



 வழியில் உள்ள் கிராமங்களில் டிஷ் ஆன்டன்னா போல சூரிய குக்கர்கள்


இரு சக்கர வண்டிகள் நிலையம்

கம்பளி ஆடைகள் பின்னும் பெண்கள்



கோவில் வரை ஜீப்கள் செல்வதில்லை சுமார் அரை கி.மீ தூரம் முன்னதாக உள்ள ஜீப் நிறுத்ததில் இறக்கி விடுகின்றனர். ஜீப் நிறுத்ததில் இருந்து இரு சக்கர வண்டி நிறுத்தம் செல்ல சிறிது தூரம் நடக்க வேண்டி உள்ளது. அங்கிருந்து ஆலய வாசல் வரை இரு சக்கர வாகனங்கள் செல்கின்றன. விரும்புபவர்கள் சுமார் 100  படிகள் ஏறியும் கோவிலை அடைகின்றனர். அடியோங்களில் சிலர் இரு சக்கர வண்டியிலும் சிலர் நடந்தும் கோவில் வாசலை அடைந்தோம். வழியில் உள்ள கிராமத்தில் ஒவ்வொரு வீட்டின் முன்னரும் சாளக்கிராமங்கள் விற்பனைக்கு வைத்துள்ளனர். அன்றைய தினம் சூரியன் பிரகாசித்துக்கொண்டு இருந்தான் எனவே வெளியே அமர்ந்து கம்பளி உடைகளை பின்னிக் கொண்டிருந்தார்கள்.


த்ரில்லான இரு சக்கர வண்டி பயணம் 




 வளைந்து நெளிந்து செல்லும் பாதையில் ஏற்றத்தில் இரு சக்கர வண்டி பயணமும் த்ரிலானதாகத்தான் இருந்தது. 15 நேபாள ரூபாய்கள் செல்வதற்கும் வருவதற்குமாக வசூலிக்கின்றனர் ஒரு அடையாள அட்டை கொடுத்து விடுகின்றனர் தரிசனம் முடித்து திரும்பி வரும் போது  அடையாள அட்டையை  காண்பித்து எந்த வண்டியில் வேண்டுமென்றாலும் அமர்ந்து திரும்பி வரலாம். திரும்பும் போது முடியாதவர்களை ஜீப் நிறுத்தம்  வரை  கொண்டு வந்து விடுகின்றனர். இதனால் அப்பகுதி இளைஞர்களுக்கு வருமானம் கிட்டுகின்றது. வாருங்கள் இனி முக்திநாதரின் ஆலயத்தை தரிசனம் செய்வோம்.