சீனப்பகுதியில் பயணம் -1
முதல் நாள் பயணம்
சீனப்பகுதியில் பத்து நாள் பயணத்திற்கு வேண்டிய உணவுப்பொருட்கள் அனைத்தையும் இங்கிருந்தேதான் வாங்கிக்கொண்டு சென்றார்களாம். சிக்கிம் சுற்றுலா நிறுவனத்தினரின் அதிகாரி ஒருவரும் உடன் வந்தாராம்.
வழியில் கொஞ்சம் பசுமை
நாதுலா கணவாயை கடந்த அனுபவம் எவ்வாறு இருந்தது என்று நண்பரிடம் கேட்டேன். எல்லையின் இரு புறமும் கதவுகள் உள்ளன. அனைத்து பைகளையும் இறக்கி சோதனை செய்து அவர்கள் அனுமதிக்கின்ற பொருட்களை மட்டுமே சீனாவுக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கின்றனராம். யாத்திரிகளின் பைகளும் சோதனை செய்யப்பட்ட பின்னே உள்ளே அனுமதிக்கப்பட்டதாம்.
எல்லையில் எந்த இடத்திலும் புகைப்படம் எடுக்க அனுமதிப்பதில்லையாம். வரிசையில்தான் செல்லவேண்டும், அந்தப் பக்கம் இந்தப்பக்கம் செல்ல அனுமதிக்கவில்லை. கண்கொத்தி பாம்பைப்போல கண்காணித்து கொண்டிருந்தனர். எல்லையைக் கடந்து உள்ளே நுழைந்து பேருந்தில் ஏரும் வரை வரிசை கலையவில்லை என்றார்.
இடையில் மதிய உணவு
முதல் நாள் காங்மாவில் இவர்கள் தங்கிய ஹோட்டல் மூன்று நட்சத்திர தரத்திற்கு ஈடானதாக இருந்ததும். தனி குளியலறைகள், கழிவறைகள், சுடு தண்ணீர் என்று எல்லா வசதிகளும் இருந்ததாம். இதற்குப்பின் எங்கும் குளிக்கும் வசதி இருக்கவில்லை என்றார்.
சிறிது நேரம் ஓய்வு
மலைப்பிரதேசம் என்பதால் அங்கொன்றும் இங்கொன்றுமமாக கிராமங்கள் இருந்தன, பாதையில் அதிக போக்குவரத்தும் இருக்கவில்லை., நடு நடுவே மணல் குன்றுகளைப் பார்த்தார்களாம். சீனப்பகுதியின் இரண்டாம் நாள் லாஜியிலும் மற்றும் மூன்றாம் நாள் ஜோங்பாவிலும் தங்கிய விடுதிகளில் அதிக வசதி இருக்கவில்லை ஆனால் யாத்ரிகளுக்கென்றே பிரத்யேகமாக தங்கும் விடுதிகளை அமைத்துள்ளனர். என்றார்.
ஒரு சிலையின் முன்னர் திரு சிங் அவர்கள்
முத்தாய்ப்பாக அவர் கூறியதாவது திருக்கயிலாயம் செல்லும் ஒவ்வொரு பக்தரும் அனுபவிக்கும் தெய்வீகம் அது. அந்த அனுபவத்தை ஒரு நாள் கூட மறக்க முடியவில்லை மனதில் அசை போட்டுக்கொண்டு ஆனந்தப்படுகின்றேன் என்று கூறினார். திருக்கயிலாயத்தின் ஒரு சிறப்பு அதுதான். ஒரு தடவை சென்றவர்களை மறுபடியும் செல்ல செல்ல வேண்டும் ஈர்க்கும் ஒரு ஈர்ப்பு அது. அதை அனுபவித்தால் மட்டுமே ஒருவர் உணரமுடியும். அவனருளால்தானே அவன் தாள் வணங்கமுடியும்.