Monday, November 18, 2019

வெள்ளிப் பனி மலையார் தரிசனம் - 7


இன்று கார்த்திகை சோமவாரம் சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாள். சிவபெருமானுக்குரிய அஷ்டமஹா விரதங்களில் ஒன்று. இந்நாளின் சிறப்புகளை அறிந்து கொள்ள இங்கு செல்லுங்கள். கார்த்திகை சோமவாரம்


காத்மாண்டுவில் தங்கிய மூன்றாம் நாள், நேபாளத்தின் பிரசித்தமான இன்னொரு அம்மன் ஆலயத்தை தரிசனம் செய்தோம். மனோகாம்னா தேவி என்றழைக்கப்படும் நமது வேண்டுதல்களை நிறைவேற்றி வைக்கும் அம்மன் ஆலயத்திற்கு சென்று அம்மனை தரிசித்தோம். காத்மாண்டுவிலிருந்து போக்ரா செல்லும் வழியில் சுமார் 140  கி.மீ தூரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் உயரம் 1300 மீ ஆகும். இவ்வலய்த்திற்கு செல்ல இழுவை வண்டி ( Cable Car ) வசதி உள்ளது. ஆலயம் அமைந்துள்ள மலையைச் சுற்றி திரிசூலி ஆறும், மச்யந்தி ஆறும் ஓடுகின்றன. ஆலயத்திலிருந்து சுற்றிலும் உள்ள அன்னப்பூர்ணா, மனசுலூ ஆகிய சிகரங்களையும் தரிசிக்க முடியும். சென்ற தடவை திருக்கயிலாய யாத்திரை முடித்து முக்திநாத் செல்லும் வழியில் மனாகாம்னா அம்மனை தரிசித்தோம். அதற்குப்பின் 2015ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆலயம் பாதிக்கப்பட்டது என்பதையும் அறிந்திருந்தோம். தற்போது ஆலயத்தை புதுப்பித்து விட்டார்கள் என்றும் கேள்விப்பட்டோம், மேலும் எங்கள் குழுவில் மனோகாம்னா தரிசிக்காதவர்கள் சிலர் இருந்தனர் அதற்காகவும்,  இன்னொரு முறை அம்மனை தரிசிப்போம் என்று மனோகாம்னாவிற்கு வந்தோம்.


நுழைவு வாயில்


திரிசூலி ஆறு

கேபிள் கார் பயணம் 

நெடுஞ்சாலையில் தற்போது விளம்பரப்பலகைகள் அதிகமாகி விட்டதை கவனித்தோம்தூரத்தைக் காட்டும் மைல் கல்களைக் காணோம்தூரமும்ஊரின் பெயரும்  தற்போது விளம்பரப்பலகைகளில்தான் உள்ளனசைவ  உணவு விடுதிகளை நேபாளத்தில் காண்பது மிகவும் துர்லபம்அனைத்தி விடுதிகளிலும் அசைவம் சாப்பிடுகின்றனர்நாமாக செல்லும் போது வேறு வழியில்லை அங்குதான் சாப்பிடவேண்டும் அல்லது நாமே சாப்பிடுவதற்கு ஏதாவது எடுத்துசெல்வது உத்தமம்






மாக்னோலியா மரம்




புதுப்பிக்கப்பட்ட ஆலயம் 






நெற்றிச்சுட்டியில் அஷ்டமங்கலப் பொருட்கள்

விநாயகர் 

அற்புத மரவேலைப்பாடு



ஆலயம் முழுவதுமாக இடிக்கப்பட்டு புதிதாக முன்னை விட பொலிவுடன் கட்டப்பட்டிருந்ததை கண்டு உவகையடைந்தோம்கூரைகள் பொன் வேய்ந்தது போல் மின்னினமரச்சட்டங்கள் வர்ணபூச்சினால் ஒளிர்ந்ததுஆலயத்திற்கு அருகில் பிரம்மாண்டமான மாக்னோலியா மரம் ஒன்று இருந்தது நில நடுக்கத்தால் அம்மரத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லைஇவ்வாலயத்திலும் பலியிடும் வழக்கம் உள்ளதுதற்போது அது குறைந்துவிட்டது என்று கேள்விப்பட்டோம்.  அம்மன் சன்னதிக்குப் பின்னர் நவதுர்க்கைகளின் சன்னதி   அமைத்திருக்கின்றனர்அம்மன் உற்சவர் வடிவிலும்லிங்க வடிவிலும் தரிசனம் அளிக்கின்றார்கள்அம்மனிடம் திருக்கயிலாய தரிசனம் கிட்டவேண்டும் என்று வேண்டிக்கொண்டு வந்தோம்.  மனோகாம்னா அம்மன் 17ம்நூற்றாண்டில் இங்கு வந்து கோவில் கொண்ட  அற்புத புராணக்கதை இது தான்





தரிசனத்திற்காக காத்திருக்கின்றோம்


ஷைலபுத்ரி

மஹாகௌரி

சித்திதாத்ரி

இத்தலத்தின் வரலாறு இவ்வாறு கூறப்படுகின்றது. இராம் ஷா என்ற கூர்க்கா அரசனின் பட்டத்தரசியாக அம்பாள் வந்து அவதரித்தாள். இந்த இரகசியம் அம்மனின் பக்தரான லக்கன் தாபா என்பவரைத்தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஒரு நாள் அரசன் இராணியை அம்பாளாக சுய ரூபத்தில் பார்த்தவுடன் இறந்து விடுகின்றார். அவ்வூர் வழக்கபப்டி இராணியும் உடன்கட்டை ஏறுகின்றாள். பின்னர் லகன்தாபா வேண்டிக்கொண்டபடி ஆறுமாதங்கள் கழித்து அம்மன் தன்னை வெளிப்படுத்திக்கொண்டாள்.  தந்தோஜ் தாபா என்ற குடியானவர் நிலத்தை உழும் போது   இரத்தமும் பாலும் வெளி வந்தது. லகன் தாபா அங்கு வந்து தாந்திரீக முறையில் பூஜை செய்ய இரண்டும் நின்றது. தற்போதைய பூசாரி இவரது 21வது தலைமுறையினர் ஆகும். தினமும் காலையில் தாந்திரீக முறைப்படி முட்டை ஆரஞ்சுப்பழம், அரிசி, குங்குமம், சுன்ரி ( சிவப்புத் துணி) படைத்து வழிபாடு செய்த பின்  பக்தர்களை அனுமதிக்கின்றனர்.





புது வர்ணத்தில் எழிலாக கருடன்

சிவன் சன்னதி


கருடன்

புத்தர்

நேபாளக்கோவில்களைப் போலவே மலை உச்சியில் இரண்டடுக்கு பகோடா அமைப்பில் அமைந்துள்ளது  இவ்வாலயம். நேபாளக்கோவில்களைப் போலவே மலை உச்சியில் இரண்டடுக்கு பகோடா அமைப்பில் அமைந்துள்ளது கோவில். தங்க முலாம் பூசப்பட்டுள்ளது சன்னல்கள் மற்றும் கூரைகளைத் தாங்கும் மர சட்டங்களில் அருமையான வேலைப்பாடுகளை இங்கும் காணலாம். ஒரு பிரகாரம் சுற்றி வந்து கர்ப்பகிரகத்திற்குள் நுழைகிறோம். அம்மன் மலை சிகரமாக சுயம்புவாக அருள் பாலிக்கின்றாள். கருவறையில் மனோகாம்னா தேவியுடன் விநாயகர், பைரவர், துர்கா, கன்யாகுமரி மற்றும் சப்த மாதர்களும் சுயம்பு வடிவில் அருள் பாலிக்கின்றனர். மேலே சிலைகளாகவும் அமைத்துள்ளனர் பூசாரி வரும் பக்தர்களுக்கு திலகமிட்டு அனுப்புகிறார். நாம் அன்னையை தொட்டு வணங்க முடியும்.

ஓம் காத்யாயனாய வித்மஹே கன்யகுமாரி தீமஹி |
தன்னோ துர்கி பிரசோதயாத் ||

என்று அன்னையை திவ்யமாக தரிசித்த பின்னர் காத்மாண்டு திரும்பினோம். மறு நாள் எவ்வாலயத்தை தரிசித்தோம் என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து வாருங்கள் அன்பர்களே.

யாத்திரைத் தொடரும் . . . . .