>
அப்பர் பெருமான் அருளிச்செய்த போற்றித் திருத்தாண்டகம்
திருக்கைலாயம்
பிறவியறுக்கும் பிரானே போற்றி
வைச்சா ட னன்று மகிழ்ந்தாய் போற்றி
மருவியென் சிந்தை புகுந்தாய் போற்றி
பொய்ச்சார் புரமூன்றும் எய்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
கச்சாக நாக மசைத்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி(1)
கிடைத்தற்கரியது மானிடப்பிறவி. நாம் முற்பிறவியில் செய்த புண்ணிய பாவங்களின் பயனால் மட்டுமே இந்த கர்ம பூமியில் நமக்கு இறையருளால் மனிதப்பிறவி கிட்டுகின்றது. இவ்விதம் அமையும் பிறவியில் நமக்கு இறைவன் பால் ஆழ்ந்த பக்தியும் நம்பிக்கையும் தூய நெறியுடன் வாழவும் அவரது அருள் வேண்டும். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனை அல்லும் பகலும் அனவரதமும் இதயக் கமலத்தில் நிறுத்தி பூஜிக்கவும், அவருடைய திவ்விய தரிசனத்தை பெறவும் நாம் முற்பிறவியில் நற்காரியங்கள் செய்திருக்க வேண்டும். அவ்வாறு புண்ணியம் செய்திருந்த நமது பாரதத் திருநாட்டின் பல்வேறு பிராந்தியங்களில் இருந்து வந்த 42 பேர்
" யோ ருத்ரோ அக்நௌ யோ அப்ஸுயே
ஓஷதீஷூ யோ ருத்ரோ
விஸ்வா புவநா விவேஸ தஸ்மை ருத்ராய நமோ அஸ்து "
"எந்த ருத்ரன் அக்னி, நீர், செடி, கொடி(மூலிகைகள்), மரம், மற்றும் பிரபஞ்சம் முழுவதும் ஊடுருவி நிலைத்திருக்கின்றாரோ அந்த ருத்ர பகவானை வணங்குகிறோம்"
என்று ஸ்ரீருத்ரத்திலே சிவபெருமானின் பெருமை கூறப்பட்டுள்ளது. அவர் பார்வதியம்மையுடன் நித்ய வாசம் செய்யும் தலம் தான் திருக்கயிலாயம், அத்தலத்தை சென்று தரிசிக்கும் எண்ணத்துடன் டெல்லியில் கூடியிருந்தோம்.
முதல் நாள் நடைபெற வேண்டிய மருத்துவ பரிசோதனை எங்கள் குழுவினருக்கு இரண்டாம் நாள் அன்று தான் நடைபெற்றது. காலையிலேயே பேருந்து மூலம் வெறும் வயிற்றில் பத்ரா மருத்துவமனை சென்றுவிட்டோம். மருத்துவ பரிசோதனைக்காக ரூபாய் 2000/- கட்ட வேண்டி இருந்தது. மருத்துவமனையில் திருக்கயிலாய யாத்திரைக்காக வந்திருக்கும் அனைவருக்கும் நல்வரவு என்னும் பேனர் எங்களை வரவேற்றது. இந்த மருத்துவமனை ITBP மருத்துவமனைக்கு எதிரிலேயே இருந்தது. மருத்துவமனையில் ஒரு மருத்துவர் கூடவே இருந்து குழுவினரின் எல்லா தேவைகளையும் கவனித்துக் கொண்டார். இரத்த பரிசோதனைகளுடன், நீரிழிவு நோய் இருக்கின்றதா என்பதற்கான பரிசோதனை, நுரையீரல், இருதயம், கல்லீர மற்றும் சிறுநீரகங்களும் சரியாக செயல்படுகின்றனவா என்பதற்கான பரிசோதனைகளும் நடைபெறுகின்றன. மார்பு எக்ஸ்-ரே, TMT (Tread Mill Test), ECG , முதலிய எல்லா பரிசோதனைகளும் நடைபெறுகின்றன. எங்கள் குழுவில் நான்கு பேர் TMTனால் மருத்துவ பரிசோதனையில் தேறவில்லை. பின் மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகளைப் பெற்றுக் கொண்டு ITBP மருத்துவமனை சென்றோம் அங்கு மீண்டும் இரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டு யாத்திரைக்கு தேர்ந்தெடுக்கபட்டவர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. எங்களுடன் வந்த 12 பேர் நிராகரிக்கப்பட்டனர், அவர்கள் பல மணி நேரம் ITBP மருத்துவர்களிடம் கெஞ்சிப் பார்த்தனர் ஆனால் பயன் ஒன்றும் இல்லை. அந்த ஆண்டவனின் சித்தம் அதுவானால் என்ன செய்வது என்று அவர்கள் கடைசியாக வெளியே வர இரவு 8 மணி ஆனது. இந்த மருத்துவ முடிவுகளை கூஞ்சி வரை நாம் எடுத்து செல்ல வேண்டும் அங்கு இரண்டாவது மருத்துவ பரிசோதனையின் போது. ITBP மருத்துவர்கள் அவற்றை சரி பார்க்கின்றனர்.
பின் அந்நிய செலாவணி மாற்றத்திற்காக அசோகா ஹோட்டல் கனரா வங்கிக்கு சென்றோம். அந்த வங்கி 24 மணி நேரமும் திறந்திருக்கும். நாம் சீன அரசுக்கு 601 அமெரிக்க டாலர்கள் பணம் செலுத்த வேண்டும், (2008 வருடத்தில் இத்தொகை 700 அமெரிக்க டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது) ஒரு டாலர் விசா முத்திரைக்காக. எங்களுக்கு முன்னால் சென்ற குழுவினர் எந்த வரிசை எண் (serial number) கொண்ட அமெரிக்க டாலர் நோட்டுகளை žன வங்கிகள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன என்ற விவரம் L.O மூலம் எங்களுக்கு அறிவிக்கப்பட்டது அந்த வரிசை எண்களை நாங்கள் ஒதுக்கி விட்டோம்.
மேலும் கைலாய கிரிவலத்தின் போது குதிரை, போர்ட்டர்கள் முதலியவற்றுக்கும் , மற்றும் žனப்பகுதியில் செய்யும் செலவுகளுக்கும் žன யுவான் தேவைப்படும். தக்லகோட்டில் நாம் அமெரிக்க டாலர்களை žன யுவான்களாக மாற்றிக் கொள்ளலாம். பணமாற்றம் முடிந்தபின் அனைவரும் குஜராத் சதன் திரும்பினோம். பல பேர் தேர்ந்தெடுக்க படாதற்கு சிறிது வருத்தம் இருந்தது ஆயினும் அடியேனும் எனது அறை நண்பரும் தேர்ந்தெடுக்கப்படதற்கு 108ம் எண் அறையில் தங்க வைத்த இறைவனுக்கு 1008 நமஸ்காரங்கள் கூறி தூங்கச் சென்றோம்.
எங்கள் குழுவினர் (14வது குழு 2005)
எங்கள் குழுவினரின் சிறு அறிமுகம். மிகவும் வயதானவர் சீமா பண்டிட் என்னும் 66 வயதான மூதாட்டி ஜெயிப்பூரைச் சார்ந்தவர், இரண்டாவது தடவையாக எப்படியும் கயிலைநாதனை, ம வளர் கண்டரை, இலை புனை வேலரை, செஞ்சுடர் வண்ணரை, சாந்த மார்பரை, ஏறது ஏறியவரை, தரிசிக்க வேண்டும் என்ற திட சங்கல்பத்துடன் வந்தவர், சரியாக TMT செய்ய முடியவில்லை, எங்கள் குழுவில் இருந்த மரூத்துவரின் ஆலோசனையின் பேரில் Echo test எடுத்து ITBP மருத்துவரிடம் சண்டையிட்டு, இறையருளால் எங்கள் குழுவில் வந்தவர். இரண்டாவது வயதானவர் திரு, குல்கர்னி அப்பா ராவ், இவரது வயது 65. எங்களில் பலரை விட உடல் ஆரோக்கியத்துடன் இருந்தவர், மஹாராஷ்டிர மாலத்தில் உள்ள ஒமர்காம்வ் என்ற இடத்தை சார்ந்தவர். எங்கள் குழுவில் மொத்தம் ஐந்து பெண்கள், மூன்று பேர் தங்கள் கணவருடன் இந்த யாத்திரையை மேற்கொண்டனர். நாசிக்கை சேர்ந்த போக்ரே தம்பதியினர் (மருத்துவர்), குஜராத்தை சேர்ந்த அட்ரோஜா தம்பதியினர், மற்றும் கிம்ஜி தம்பதியினர் என்ற மூவர். இன்னொரு பெண் யாத்திரி மேற்கு வங்காளத்திலிருந்து வந்திருந்த ஷர்மிஷ்டா தத்தா அவர்கள். அதே மாநிலத்தைச் சேர்ந்த IITயில் பேராசியராக ப புரியும் திரு கஞ்சன் சௌத்ரி அவர்கள். குஜராத்திலிருந்து திரு ஜோஷ’, இரண்டாம் தடவை யாத்திரை வந்தவர், திரு கோஸ்வாமி , திரு ஜெய்ராம்டோண்டா, திரு பிஹாரிலால் புரோகித், திரு தினேஷ் படேல், திரு சுசில் குமார் மோடி, திரு பிரஜாபதி ஆகியோர் மற்றவர்கள். மஹாராஷ்டிராவிலிருந்து எனது அறை நண்பர் திரு சஷிகுமார் தபஸ்வி, மும்பையிலிருந்து திரு வினாயக் ரோக்டே( ஹோமியோபதி மருத்துவர்) ஆகியோர். தமிழர்கள் இருவர் அடியேனும், டில்லியில் பணி புரியும் திரு தனுஷ்கோடியும். வேறு தென் மாலங்களிலிருந்து வேறு யாரும் இல்லை. டெல்லியிலிருந்து திரு தேவேந்திர குமார் முட்கல், பல முறை 12 ஜோதிர் லிங்கங்களை சார் தாம் (Char Dham) என்றழைக்கப்படும் வடக்கில் உள்ள பத்ரி நாதம், மேற்கில் உள்ள துவாரகை, கிழக்கில் உள்ள பூரி ஜகந்னாதம், தெற்கில் உள்ள இராமேஸ்வரம், ஆகிய நான்கு தலங்களையும் பல முறை தரிசித்தவர் , மற்றும் இந்தோரைச் சேர்ந்த திரு இந்திரேஷ் புரோகித் இருவரும் இரண்டாவது தடவை யாத்திரை மேற்கொண்டனர். மேலும் ஜெயிப்பூரை சேர்ந்த திரு சஞ்ஜ“வ் மிட்டல், பிரோஜாபத்தை சேர்ந்த திரு மனிஷ் குமார் வர்மா. எங்கள் குழுவின் குறைந்த வயதுக்காரர் ஒரு žக்கியர் 25 வயதான திரு அமந்தீப் சிங் என்கிறவர். யமுனா நகரை சேர்ந்தவர். இவ்வாறு பல் வேறு வண்ண மலர்களைக் கொண்ட மாலையாக விளங்கியது எங்கள் குழு. தமிழர்களாகிய நமக்கு இந்த மாதிரி யாத்திரைகளில் இரு குறைபாடுகள் இருக்கும். ஒன்று உணவு ஆம் வட இந்திய உணவே இங்கு வழங்கப்படுகின்றது, மற்றொன்று ஹ’ந்தி மொழி மற்றவர்களுடன் கலந்துரையாட தேவை, அடியேன் நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 20 வருடங்களாக பயாற்றியுள்ளதால் அந்த இரண்டும் எந்த வகையிலும் பிரச்சினையாக இருக்கவில்லை.
No comments:
Post a Comment