Tuesday, February 24, 2009

கண்டேன் அவர் திருப்பாதம் (திருக்கயிலாய தரிசனம்) -31

நேபாளம் மூலமாக செல்பவர்கள் அனுபவம் -2

இராக்ஷஸ் தாலிலிருந்து திருக்கயிலாய தரிசனம்

*********


அப்பர் பெருமான் அருளிச்செய்த போற்றித் திருத்தாண்டகம்
திருக்கயிலாயம்

போற்றிசைத்துன் னடிபரவ நின்றாய் போற்றி

புண்ணியனே நண்ண லரியாய் போற்றி

எற்றிசைக்கும் வான்மே லிருந்தாய் போற்றி

எண்ணா யிர நூறு பெயராய் போற்றி

நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி

நான்முகற்கும் மாற்கும் அரியாய் போற்றி

காற்றிசைக்குந் திசையெல்லாம் வித்தே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி


திருச்சிற்றம்பலம்


* * * * * * *


ஏழாம் நாள் மானசரோவரின் கரையில் உள்ள ஹோரேவை அடைந்து அங்கிருந்து குஹூ அடைந்து அங்கு கூடாரமடித்து தங்கினார்களாம். கூடாரம் இரட்டை அடுக்குகள் கொண்டது, உள்ளே குளிர் தெரிவதில்லை. அதே சமயம் காற்றோட்டமாகவும் இருந்தது, கீழே விரித்துக் கொள்ள ஒரு மெத்தை வழங்குகின்றனர் அதன் மேல் தூங்கும் பைகளில் தூங்கினோம் என்று கூறினார். கூடாரத்தை சுற்றுலா நிறுவனத்தினரே வழங்குகின்றனர், அமைக்கின்றனர். ஹோரோவிலிருந்து தக்ஷி்ணாமூர்த்தியை, சம்போ சங்கர உமாபதியை, சாம்பசுந்தர பசுபதியை, நந்தி வாஹணரை, நாக பூஷணரை, சந்திர சேகரை, ஜடாதரரை, கங்காதரரை, கௌரி மனோஹரரை, கிரிஜா காந்தரை, சதா சிவரை தரிசித்து வணங்கினார்களாம். இவர்களுக்கும் முதலில் தரிசனம் தரும் முகம் தெற்கு முகம் தான்.


மானசரோவரில் புனித நீராடல்


எட்டாம் நாள் குஹூவில் மானசரோவரில் நீராடி காலை பூஜையை முடித்துக் கொண்டு ஹோர்ச்சு (Horchu) வழியாக டார்ச்சென் ஆதார முகாமை அடைந்தார்களாம். இவர்கள் குழுவில் 12 பேர் அங்கிருந்து கைலாய தரிசனத்தை முடித்துக் கொண்டு டார்ச்சனில் இருந்தே கைலாசவாசரின், கனக சபேசரின், சுந்தர குஞ்சித நடராஜரின், ஸ்மசான வாசரின், சிதம்பரேசரின் தரிசனத்தை முடித்துக் கொண்டு உடனே தாய் நாடு திரும்பி வந்து விட்டனராம். குழு விசா பெற்றிருந்ததால் இவர்கள் மட்டும் žக்கிரமாக திரும்பி வந்ததனால் இவர்கள் அனைவரும் அபராத கட்டணம் கட்டிய பிறகே žனாவை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார்களாம். மேலும் 8 பேர் பரிக்கிரமாவை மேற்கொள்ளாமல் டார்ச்சென்னிலேயே தங்கி விட்டார்களாம். அவர்களை அடுத்த நாள் ஹோர்ச்சு முகாமிற்கு அழைத்து சென்று விட்டார்களாம். இங்கு ஒன்றை கூற வேண்டும், அரசு நடத்தும் யாத்திரையில் செல்லும் போது யாரையும் திருப்பி அனுப்ப L.O முயற்சி செய்வதில்லை, ஏதாவது சுகவீனம் ஏற்பட்டால் அவர்களாகவே திரும்பி வர ஏற்பாடு செய்யப்படுகின்றது. ஆனால் நேபாள் வழியாக செல்லும் யாத்திரையில் மருத்துவ பரிசோதனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை, மேலும் யாத்திரிகளை பரிக்கிரமா செய்வதிலிருந்து தடுக்க முயற்சி செய்கின்றனர் என்பது உண்மையையே என்று என் நண்பரும் உறுதி படுத்தினார். பரிக்கிரமா மிகவும் கடினமானது, தாங்கள் தங்கள் விருப்பப்படிதான் செல்கின்றீர்கள் என்று கூறி, விருப்பபட்டவர்களை மட்டும் தான் பரிக்கிரமாவிற்கு அனுப்பினார்களாம். ஆனால் நாம் செலுத்திய பணத்தில் எதையும் திருப்பித்தருவது இல்லையாம். அதே சமயம் உடல் நலம் காரணமாக நடைப்பயணம் மேற்கொள்ள முடியாதவர்கள் அந்த தேவ பூமியை ஸ்பர்சிக்க வேண்டும் அந்த தேஜோரூபரின், ஜோதிப்பிரகாசரின், விபூதி சுந்தர விஸ்வேச்வரரின் , வ்ருஷபாரூடரின், வாம தேவரின், பார்வதி ரமணரின்,பரமேசரின் ஒரு தரிசனம் மட்டும் போதும் என்று நினைப்பவர்களுக்கு இந்த வழியாக செல்லும் யாத்திரை ஒரு வரப்பிரசாதம்.


வடக்கு முக தரிசனம்

ஒன்பதாம் நாள் 10 பேர் மட்டுமே பரிக்கிரமாவிற்கு சென்றனர். இவர்கள் பரிக்கிரமா செல்லும் வழியும் அடியேன் சென்ற வழிதான் ஆனால் இவர்கள் தங்குவது இவர்களுடைய கூடாரத்தில், முதல் நாள் இரவு டேராபுக்கில் தான் தங்கினார்களாம். இரண்டாம் நாள் காலை வடக்கு முகத்தில் சிவ சக்தியை, சூலாதரியை, த்ரிமூர்த்தியை, வ்யோம கேசரை, சர்வேசரை, ஸ்வயம்ப்ரகாசரை, சொர்ண பூரீசரை, சொர்ணாம்பிகையின் பிராணேசரை தரிசித்த ஆனந்தத்துடன் மிகவும் கடினமான யாத்திரையை தொடங்கினார்களாம். குதிரைக்காரர்களால் பெரும் துன்பம் ஏற்பட்டிருக்கின்றது முதல் நாளே மூன்று நாட்களுக்கும் வாடகை பேசி முன் பணமாக 300 யுவானும் தந்திருக்கின்றார். ஆனால் இரண்டாம் நாள் குதிரைக்காரன் வரவே இல்லையாம் , நடைபயணமாகவே செல்பவர்களும் முதலிலேயே சென்று விட்டார்களாம். இவர்கள் இரண்டு பேர் மட்டும் தனியே நிர்கதியாக நின்றார்களாம், நடப்பது நடக்கட்டும், நடந்தே செல்லலாம் என்று இவர்கள் நடக்க ஆரம்பித்த போது ஒரு சிறுவன் இரண்டு குதிரைகளுடன் வந்து போனி வேண்டுமா என்று கேட்டுக்கொண்டு வந்தது தெய்வ செயல்தான் என்று கூறினார். பின் டோல்மாவை அடைந்த போது பழைய குதிரைக்காரன் வந்தானாம் ஆனால் இவரை பார்த்ததே இல்லை என்று கூறினானாம். எனவே žனப்பகுதியில் குதிரைக்காரரை வாடகைக்கு அமர்த்தும் போது உங்கள் சேர்பா அல்லது வழிகாட்டியை கலந்து கொண்டு செய்யவும் ஏனென்றால் அவர்களுக்கு குதிரைகாரர் பாஷையும் தெரியும் எதாவது பிரச்சினை வந்தாலும் தீர்த்துக் கொள்வது சுலபம். இதை அடியேன் நண்பர் அவசியம் எழுதுமாறு கூறினார்.


அடி அளந்து கும்பிட்டு கோரா ( கிரி வலம்) செய்யும் திபெத்திய பெண்கள்

இவர்கள் சென்ற சமயம் பனி அதிகமாக இருந்ததால் டோல்மாவில் அதிக நேரம் தங்க முடியவில்லையாம், பார்வதி தேவியை, கௌரியை, சந்திர சடாதரியை, முகுந்த சோதரியை, த்ய கல்யாயை, சாம்பவியை, கிரி கன்னியை, மனதார வணங்கி விட்டு புகைப்படங்களை எடுத்துக் கொண்டு உடனே கீழே இறங்கி விட்டார்களாம். கௌரி குளம் இன்னும் உறைந்து காணப்பட்டது, மலை முகட்டில் இன்னும் பனி இருந்ததாம். பின் அன்று ஜுடுல்புக் (Jhutulpuk) என்ற இடத்தில் முகாமிட்டு தங்கினார்களாம். ஜுடுல்புக் என்றால் அதிசய குகை என்று அர்த்தமாம். இங்கு புத்த பிக்ஷ” மில் ரெபா அதிசயங்கள் செய்திருக்கின்றாராம். இவர்கள் தங்கியிருந்த போது அங்கு பனிப்பொழிவு இருந்ததாம்.


கூடாரமடித்து அதில் தங்குகின்றனர்

யாத்திரையின் பதினொன்றாம் நாள் அங்குகிருந்தே யாத்திரையின் பதினொன்றாம் நாள் சுமார் மூன்று மணி நேர நடைப்பயணத்திற்குப்பின் வண்டிகளில் மானசரோவரின் கரையில் உள்ள ஹோர்ச்சு முகாமிற்கு திரும்பினார்களாம். இவ்வாறு செல்லும் வழியில் ஹோர்ச்சு வழியாக சென்று பின் திரும்பி வரும்போது ஹோர்ச்சு அடைந்ததால் மானசரோவர் கிரி வலமும் முடிந்தாம். இவர்கள் திரும்பி டார்ச்சென் செல்லவில்லை எனவே அஷ்டபத் செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை என்றார்.


நேபாள் வழி யாத்திரை இன்னும் தொடரும்........



*********

Om Namah Shivay

Kailashi ji.

I was part of the 7th batch in 2007 - 7th July to 31st July 2007.

I have posted some photos at

picasaweb.google.com/jeyceebee



You can check this and may pass on the link to fellow yatris.

இப்பதிவுகளை கண்ட ஒரு அன்பர் ஜகதீஸ் அவர்கள் தாம் சென்ற யாத்திரையின் புகைப்படங்களை பிகாசோவில் இட்டிருப்பதை கூறினார் அவ்விடமும் சென்று தரிசனம் பெற வேண்டுகிறேன்.



No comments:

Post a Comment