Saturday, December 26, 2009

Holy Kailash yatra 2009 -9

மூன்றாவது நாள் கிரிவலம்

மேகங்களுக்கிடையில் ஆனந்த கூத்தரின் திருமுடி தரிசனம்

The peak of the Holy Kailash in among the clouds

இரண்டாம் நாள் கடினமான கிரி வலத்தின் போது அதிகாலையில் ஐயனின் கதிர் ஒளி முகம் கண்டு களிக்கிறோம். பின்னர் சிவஸ்தலத்தை தாண்டி செங்குத்தான மலை ஏறி டோல்மா கணவாயை அடைந்து அங்கு பார்வதி தேவியை தரிசனம் செய்து கௌரி குள தரிசனமும் பெற்று கீழே செங்குத்தான மலையில் பின் இறங்கி ஜுடுல்புக(ஜாங்ஜெர்பூ) முகாமை அடைந்து தங்குகின்றோம்.

கௌரி குளத்தில் இரு யாத்திரிகள்

Two yatris at Gauri Kund

மலைமகள் உமைநங்கை தன் பாங்கிகளுடன் நீராடும் கௌரி குளம் டோல்மா கணவாயிலிருந்து சுமாத் 1 கி.மீ கீழே உள்ளது செங்குத்தான இறக்கம் அதுவும் இரண்டு மலைத்தொடர்களுக்கு நடுவில் அமைந்துள்ளது. ஆகவே வழுக்கும் கற்கள் நிறைந்த பாதையில் இறங்குவது அவ்வளவு உசிதமல்ல என்றாலும். அன்னையின் திருமேனி தழுவும் நீரை பருக இறங்கிய இரு அன்பர்கள்.

The descent to Gauri Kund from Dolma La is very steep as this is situated in between two mountain ranges chances are there that stones may fall , so it is advised not to get down to Gauri Kund. Still out of enthusiam some yatris reach Gauri kund and collect the water which is believed to have curing effects.


ஐயனை தரிசித்த ஆனந்தத்தில் இத்தனை நாட்களாக இந்த பாக்கியத்திற்காகத் தானே காத்திருந்தோம். இனிப் பிறவியில்லை என்ற ஆனந்தத்தில்

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வெண்டறை பொய்கையும் போன்ற
ஈசன் எந்தையின் திருப்பாதக்கமலங்களில் வீழ்ந்து வணங்கும் அன்பர்கள்.

The second day of the kora is the most toughest part of the who;w yatra, the weather at Dolma is very fickle and the yatris havae to cross Dolma before noon. Also yatris are advised not to stay for long time at time at Dolma as this is the highest altitude in the whole yatra and oxygen is very less. Still the yatris take up the yatra willimgly and by the grace of the Lord almost everybody complete the yatra successfully. Only absolute faith is needed in Shivasakthi and they take care of you.




ஐயனின் ஜடாமுடியிலிருந்து தானே கங்கை ஓடி வருகின்றாள். அந்த ஜலமகள் கங்கை விழுந்து உருவான ஆத்ம லிங்கத்தை தரிசனம் செய்கின்றோம்.


Day 11 Wednesday 5th August 2009 – Trekfrom zhutulpuk to Tarchen and drive to Manasarovar Hor. Over Night at Guest House:


Trek to Tangsar Tangmar and a 3 hrs walk brings us to where the river emerges onto the Borkha plain and Our jeeps will be waiting to transport us to Darchen then to Manasarovar Hor. our camp will be at Lake Mansarovar. Time permit we will perform Homa/Siva puja at Lake Manasarovar.



இரண்டாம் நாள் கடினமான கிரி வலத்திற்குப்பின் மூன்றாம் நாள் கிரிவலம் மிகவும் சுலபமானது, சமமான பாதைதான் வரும் வழியில் மானசரோவர், இராக்ஷஸ் தால் ஏரிகளின் தரிசனம் கிடைக்கின்றது. டார்ர்ச்சனில் இருந்து சுமார் 3 கி, மீ தூரத்திற்க்கு முன் வரை வாகனங்கள் வருகின்றன. பின் டார்ச்சன் முகாமை அடைந்து. ஐயனின் தெற்கு முக தரிசனம் பெறுகின்றோம். தெற்கு முகத்தை மிக அருகில் இருந்து தரிசனம் செய்ய அஷ்டபத் செல்ல வேண்டும் அங்கு செல்லும் போது ஆத்ம லிங்க தரிசனம் கிட்டுகின்றது.

No comments:

Post a Comment