Monday, June 03, 2013

கயிலை மலையானே போற்றி! போற்றி! -17 (திருக்கயிலாய யாத்திரை-2012)

சீ சா பாங் மா பனிச் சிகரங்கள்

செல்லும் வழியில்  ஒரு காட்சி

மலையின் மேல் ஒரு ஊரின் பெயர்  

சீ-சா-பாங்-மா சிகரம் செல்லும்
 பாதையின் அருகில் உள்ள விளம்பரம்

திபெத்திய வீடு





                                                        அலங்காரத் தூண்கள்



பெயர்ப் பலகை

பனிச் சிகரங்களை நெருங்குகின்றோம்





சீ சா பாங் மா சிகரங்கள் 

மலையை சுமக்கும்  வீரர்






சிகரத்தின் அண்மை காட்சிகள்
(சுந்தர் அவர்களின்  கை வண்ணம்)






சீ சா பாங் மா மலை

செம்மறி ஆடுகள் மேயும் காட்சி

சீ சா பாங் மா என்னும் 8013 மீ பனி சிகரங்களுக்கு நடந்து பாதையை குறிக்கும் வகையில் அலங்கார மண்டபங்கள் அமைத்துள்ளனர், அருகிலேயே சில கிராமங்கள் உள்ளன. மேலும் இம்மலை சிகரங்களைப் பற்றிய விவரங்களையும் அறிவிப்பு பலகைகள் அமைத்துள்ளனர். இந்த மலை சிகரத்திற்கு மலையேற்றம் செய்ய செல்லும் அன்பர்களுக்காக இப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழியில் கௌரி சங்கர், லாங்தாங் ஹிமால் ஆகிய மலைச் சிகரங்களையும் காணலாம். சிறிது நேரத்திற்குப் பின் பாதையில் இடது புறமாக திரும்பி சாகாவை நோக்கி பயணம் செய்தோம் நேரே செல்லும் பாதை திபெத்தின் தலைநகர் லாசா செல்கின்றது.  

சீசாங்பாங்மா உலகிலேயே பதினாலாவது உயர்ந்த மலை, 8000 அடிக்கும் உயரமான மலைகளில் குட்டி மலை  சீனப்பகுதியில் அமைந்துள்ள ஒரே 8000 மீட்டருக்கும் உயரமான மலை. சமஸ்கிருதத்தில் இம்மலை கொசைன்தாம் அதாவது இறைவனின் இருப்பிடம் என்று பொருள் படுகின்றது. இந்த மலை திருக்கயிலாயம் செல்லும்  யாத்திரிகளுக்கு உதவிய ஒரு முனிவரின் பெயரால் இவ்வாறு அழைக்கப்படுகின்றதாம். நாங்கள் நைலாமில் தங்கிய விடுதியின் பெயர் இந்த துறவியின் பெயர்தான் . அது போலவே பல தங்கும் விடுதிகளுக்கு இவரது பெயரை வைத்துள்ளனர். சிறிது நேரம் வண்டியை நிறுத்தி புகைப் படங்கள் எடுத்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம்.


****************************************
சுந்தரர் தேவாரம்
நொடித்தான் மலை பாசுரம்


குதிரை  வாகனத்தில் சேரமான்  பெருமாள் 

திருக்கயிலாய மலையை எம்பிரான் தோழர் சுந்தரமூர்த்தி நாயனார்  "நொடித்தான் மலை" என்று போற்றிப் பாடியுள்ளார். நமது துக்கங்களுக்கு காரணமான பாவங்களை நீக்குவதாலும்( நொடித்தல்- அழித்தல்). அழித்தல் தொழிலையும் உடைய உருத்திரமூர்த்தி ரூபமாக ஐயன் எழுந்தருளியிருப்பதாலும் நொடித்தான் மலை என்னும் பெயர் பெற்றது.

திருமயிலையில் ஆடி சுவாதியன்று சுந்தரர் திருக்கயிலாயம் செல்லும் உற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. அதைக் காண இங்கு செல்லுங்கள்


அநிலைகெட விண்ணதிர நிலம் எங்கும் அதிர்ந்தசைய
மலையிடை யானைஏறி வழி யேவரு வேனெதிரே
அலைகட லால் அரையன் அலர் கொண்டுமுன் வந்திறைஞ்ச
உலையணை யாத  வண்ணம்   நொடித் தான்மலை உத்தமனே (7) 
  


பொருள்: திருக்கயிலை மலைக்கண் வீற்றிருந்தருளும் முதல்வன், விண்ணுலகம் தனது நிலை கெடுமாறு அதிரவும், நிலவுலகம் முழுவதும் அதிரவும், மலையிடைத்திரியும் யானை மீது ஏறி, தனது திருமலையை அடையும் வழியே வருகின்ற என் எதிரே, அலை கடல் அரசனான வருணன், பூக்க்ளைக் கொண்டு யாவரினும் முற்பட்டு வந்து வணங்குமாறு, உடல் அழியாதே உயர்ந்து  நிற்கின்ற ஒரு நிலையை எனக்கு அருளினான் ;   அவன் திருவருள்தான் என்னே! 


தேவாரம் முழுவதையும் பொருளுடன் படிக்க இங்கு செல்க




No comments:

Post a Comment