மானசரோவர் தடாக வலம்
புனித மானசரோவர் தடாக வலம் செல்லும் பாதை
சூரிய ஒளியில் மின்னும் மானசரோவர்
குர்லா மாந்தாதா மலை சிகரங்கள்
குர்லா மாந்தாதா மலை தொடர் மற்றும் லாயமலைத்தொடருக்கும் இடையில் மானசரோவர் மற்றும் இராக்ஷஸ் தால் ஏரி அமைந்துள்ளன
மானசரோவரில் பொன் வாத்துக்கள்
மானசரோவரில் கடற்பறவைகள்
மானசரோவரில் வந்து கலக்கும் ஆறு
மானசரோவரின் வர்ண ஜாலம்
கரையெங்கும் கற்களை அடுக்கி வைத்துள்ள சிறு வீடுகள்
மானசரோவரின் கரையில் உள்ள ஒரு புத்த விகாரம்
மானசரோவரின் ஒரு கரை
எடி, கவுசிக், சுதார், முகர்ஜி, ஸ்வாதி
குஹூ புத்த விகாரம்
( கடந்த யாத்திரையில் இங்குதான் இரண்டு நாட்கள் தங்கினோம்)
மானசரோவரின் இன்னொரு வர்ணஜாலம்
வெள்ளி பனி, கருப்பு மலை, பல நீல வர்ண பொய்கை, சிவப்பு மண் என்னே இறைவனின் கை வண்ணம்.
மானசரோவரின் கரையில் தொலைத்தொடர்பு கம்பங்கள்
ஒரு பகுதி தார் சாலை ஆகிவிட்டது
வண்டி சத்தத்தை கேட்டு மிரண்டு ஓடும் யாக் எருமைகள்
ஐயனின் அற்புதமான முதல் தரிசினத்திற்கு பின், நாங்கள்
மானசரோவரின் கரையிலுள்ள ஹோர்ச்சூ (Horchu) என்று அழைக்கப்படும் ஹோரேவிலிருந்து (Hore) தடாக வலத்தை துவங்கினோம். வழியில் பல வண்டிகளைப் பார்த்தோம் அதாவது நிறைய
பக்தர்கள் ஐயனை தரிசனம் செய்ய வந்துள்ளனர் என்பது மட்டும் புரிந்தது. கிளம்பிய
சமயம் நல்ல வெயில் சூரிய ஒளி பட்டு மானசரோவரின் அலைகள் வைரம் போல் மின்னுவதைப்
பார்த்தோம். . ஏரியெங்கும் பல வித
பறவைகள், பல வண்ண பறவைகள் ஆனந்தமாக பறந்து கொண்டிருந்தன ஒரு பொன் வாத்தையையும்
கண்டோம். பின்னர் இராக்ஷஸ்தால் ஏரியின் கரையில் பேருந்தை நிறுத்தி அந்த ஏரியின்
அழகையும் படம் எடுத்துக்கொண்டோம். நிமிடத்திற்கு நிமிடம் மாறும் மானசரோவரின் அழகையும் வர்ண ஜாலங்களையும் கண்டு இரசித்தோம்.பின்னர் மானசரோவர் கரையில் உள்ள குஹூ கோம்பாவையும்
(Quhu-சென்ற யாத்திரையின் போது இங்கு தான் இரு நாட்கள் தங்கினோம்) அப்படியே
பார்த்துக்கொண்டு குர்லா மந்தாதா மலைச்சிகரங்களின் அழகை இரசித்துக்கொண்டு சியூ
கோம்பாவை வந்தடைந்தோம். இந்த இடம் ஜைடி(Zaidy) என்றும் அறியப்பட்கின்றது. இங்குதான் தங்கினோம்.
அங்கு அடைந்த சமயம் சூரியன் மானசரோவர் ஏரியின் மறு பக்கத்தில் இறங்கிக்
கொண்டிருந்தான் அதன் மஞ்சள் கிரணங்கள் மானசரோவரை ஒரு பொன் வண்ண வட்டில் போல
மாற்றியிருந்தது அப்படியே அந்த அழகை இரசித்தோம். இவ்வாறு இன்றைய தினம்
ஹோரேவிலிருந்து சியூ வரையிலான பாதி ஏரி வலத்தை முடித்தோம். மானசரோவர் ஏரி வலப்பாதை பெரும்பகுதி முன் போலதான் உள்ளது. தக்லகோட்டிலிருந்து ஜைடி வரும் பாதை தார் சாலை ஆகிவிட்டது. வரும் காலத்தில் மானசரோவர் கிரிவலப் பாதை முழுவதும் தார் சாலை ஆகும் வாய்ப்புகள் உள்ளன. இன்றைய தினம் இங்கு
மானசரோவரின் கரையில் முழுமதி நாளில் தங்கினோம்.
*****************
திருஞான சம்பந்தர் தேவாரம்
திருக்கயிலாயம்
பாடல் எண் : 3
மாவினுரிவை மங்கைவெருவ மூடி முடிதன்மேல்
மேவு மதியு நதியும்வைத்த விறைவர் கழலுன்னும்
தேவர்தேவர் திரிசூலத்தர் திரங்கன் முகவன்சேர்
காவும்பொழிலுங் கடுங்கற்சுனைசூழ் கயிலை மலையாரே.
பொருள் : திரங்கிய தோலை உடைய குரங்குகள் வாழும் காடுகளும் பொழில்களும் மலையிடையே
இயற்கையாக அமைந்த சுனைகளும் சூழ்ந்த கயிலைமலைப் பெருமானார் உமையம்மை அஞ்ச யானையின்
தோலை உரித்துப் போர்த்திக் கொண்டு முடிமீது பிறை கங்கை ஆகியவற்றைக் கொண்ட இறைவர், தம்
திருவடிகளை நினைந்து போற்றும் தேவர்களின் தேவர். முத்தலைச் சூலத்தை உடையவர்.
தேவாரம் முழுவதையும் பொருளுடன் படிக்க இங்கு செல்க http://thevaaram.org/
யாத்திரை தொடரும்....................
சூரிய ஒளியில் மின்னும் மானசரோவர், பொன்வாத்துகள் கண்டு களித்தோம்.
ReplyDeleteவாருங்கள் மாதேவி, இன்னும் தரிசனம் உள்ளது அதையும் வந்து கண்டு களியுங்கள்.
ReplyDelete