மானசரோவரின் அதிகாலை அழகு
அருணோதய காலத்தில் மானசரோவர் தடாகம்
(முழு நிலா இன்னும் மறையவில்லை)
அதிகாலையில் பூபாளம் பாடும் பறவைகள்
சூரிய உதயத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்
அதிகாலை வேளை வர்ண ஜாலம்
நெருப்புப் பிழம்பாக தோன்றும் மேகம்
(படத்தை பெரிதாக்கிப் பார்க்கவும்)
சூரிய நமஸ்காரம் செய்யும் அன்பர்
உதய காலத்தின் இன்னுமொரு அழகு
காலை சூரிய ஒளியில் பொன் வண்ணமாய்
சியூ கோம்பா
அந்தி சாயும் நேரத்தில் சியூ கோம்பா
இது ஒரு பொன் மாலைப் பொழுது
அதிகாலை நேரத்தில் மானசரோவர் கரையில்
கௌசிக் குடும்பத்தினர்
முந்தைய பதிவில் குளிர் நிலவின் கிரணங்களால் ஏற்படும் வர்ண ஜாலத்தைப் பார்த்தோம், இப்பதிவில் சூரியனால் ஏற்படும் மகேந்திர ஜாலத்தை காண்கின்றீர்கள்.சூரியன் உதிப்பதற்கு முன்னர் வரும் செக்கர் வான சிவப்பும், சூரியன் உதித்தவுடன் ஏற்படும் பொன் நிறத்தையும் காண்கின்றீர்கள். நிமிடத்திற்கு நிமிடம் மாறும் அழகுடையது மானசரோவர், அதுவும் தட்பவெட்ப நிலையைப் பொறுத்து அமையும். மேலும் காலை கிழக்கில் உதிக்கும் சூரியன் மாலை சியூ கோம்பா அமைந்துள்ள சிறு குன்றின் பின்னே மறையும் அழகையும் காண்கின்றீர்கள். என்ன தங்களுக்கும் திருக்கயிலாய யாத்திரை செல்ல ஆவல் எழுகின்றதா? தங்கள் எண்ணம் ஈடேற சிவசக்தியை வேண்டிக் கொள்கிறேன்.
*****************
திருஞான சம்பந்தர் தேவாரம்
திருக்கயிலாயம்
பாடல் எண் : 6
தாதார் கொன்றை தயங்குமுடியர் முயங்கு மடவாளைப்
போதார்பாக மாகவைத்த புனிதர் பனிமல்கும்
மூதாருலகின் முனிவருடனா யறநான் கருள்செய்த
காதார்குழையர் வேதத்திரளர் கயிலை மலையாரே.
பொருள் :
கயிலைமலை இறைவர், மகரந்தம் நிறைந்த கொன்றைமாலை விளங்கும் முடியினை உடையவர்.
தம்மைத் தழுவிய உமையம்மையை மென்மையான இடப்பாகமாக ஏற்றதூயவர். குளிர்ந்த இவ்வுலகின்கண்
வயதால் முதிர்ந்த சனகர் முதலிய முனிவர்களுக்கு அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கையும்
அருளிச் செய்தவர். வலக்காதில் குழை அணிந்தவர். வேதவடிவாய் விளங்குபவர்.
தேவாரம் முழுவதையும் பொருளுடன் படிக்க இங்கு செல்க http://thevaaram.org/
யாத்திரை தொடரும்....................
கருப்பு பின்புலத்தில் வெள்ளை எழுத்துக்களைப் படிப்பது சிரமமாக இருக்கிறது.
ReplyDeleteஅழகு... மிக அழகு...
ReplyDeleteஅழகு மிக அழகு...
ReplyDeleteTemplateஐ மாற்றிவிட்டேன்.
ReplyDeleteமிக்க நன்றி கந்தசாம் ஐயா.
ஆம் திண்டுக்கல தனபாலன் ஐயா. ஆண்டவன் நடத்தும் வர்ண ஜால அழகு.
ReplyDelete