சியூ புத்த விகாரத்திலிருந்து மானசரோவர்
மலை மேலிருந்து பார்க்கும் பொழுது இன்னொரு அழகு
மாறுகின்ற நீல நிறத்தை கவனியுங்கள்
ஹிமான்சு
பங்கஜ் குப்தா மலை மேல்
***************
எட்டாம் நாள் காலை
எங்கும் வெண் பனி எதிலும் வெண் பனி
கொடி மரத்தின் அடியிலும் கொட்டிக் கிடக்குது பனி
வெள்ளிக் கவசம் பூண்ட மலை
இவர் யார்?
கீழே பாருங்கள் தெரியும்.....
*
*
*
*
*
*
*
*
*
*
*
இதுவரை தாங்கள் கண்டு இரசித்த அருமையான பல புகைப்படங்களை எடுத்தவர் இவர்தான்.
பனியிலும் மானசரோவரின் அழகை இரசிக்கும் அன்பர்கள்
நிஷா பாண்டே
கைத்தடியுடன் யஞ்யாங் பாண்டே
( நைலாமில் வாங்கிய உலோக, மடக்கக்கூடிய, எடையில்லா கைத்தடி, 7 யுவான்கள்)
விஜய் குமார் மஹாஜன்
ரஷ்மி மஹாஜன்
( பனி கொட்டினாலும் சரி , கிரி வலத்திற்கு தயாராக உள்ளனர் அனைவரும்)
மஞ்சு கொஞ்சும் வண்டிகள்
மானசரோவரிலிருந்து டார்ச்சன் செல்லும் வழியில்
பாதையின் இரு பக்கமும் பனிதான்
மானசரோவரில்
முக்கிய கடமைகளை முடித்து, அதன் பல் வேறு அழகை இரசித்து உறங்க என்றோம், என்னவென்று
தெரியவில்லை அன்று இரவு யாருக்கும் சரியாகவே தூக்கம் வரவில்லை. மறுநாள் காலை
ஐந்துமணிக்கு எழுந்து பார்த்தபோதுதான்
காரணம் புரிந்தது. எங்கெங்கு நோக்கினும் ஒரே வெள்ளி மயம். ஆமாம் இரவு முழுவதும்
நல்ல பனி பெய்து கொண்டு இருந்திருக்கின்றது. மானசரோவரின் குளிரும் முழு மதியின் குளிரும்
இனைந்து பனியை உருவாக்கியது போல இருந்தது. வரப் போகும் நாட்களின் சீதோக்ஷண
நிலைக்கு இது ஒரு கட்டியம் என்று அப்போது நாங்கள் உணரவில்லை. வெளியே பனி பெய்து கொண்|டிருந்ததால் குளிர்
அதிகமாகியதால் உறக்கம் வரவில்லையா? அல்லது மறு நாள் கிரி வலம் செய்ய முடியுமா என்ற
குழப்பதால் துயில் வரவில்லையா தெரியவில்லை.
மானசரோவரிலேயே தங்கியதால் அதன்
இன்னோரு எங்கும் வெண் போர்வை போத்தியது போல விளங்கும் மலைகளின் அழகை இரசிக்கும் அற்புதமான
ஒரு வாய்ப்பு கிட்டியது என்பதில் எந்த ஐயமுமில்லை. மானசரோவரின் இத்தனை அழகை பார்த்த நாங்கள் இந்த அழகையும் பார்த்து இரசித்தோம்.
அடியேனின்
நண்பர்கள் இருவரும் வரவில்லை என்று ஒதுங்கிவிட்டனர். சிறு பெண் எடியின் உடல் நிலை
சரியில்லாததால் அவளும், அவளுடைய தாயாரும்
வரவில்லை, மேலும் பேர் நான்கு பேரும் விலகிக் கொண்டனர். இரவு முழுவதும்
தூங்கவில்லை பனி வேறு பெய்து கொண்டிருக்கின்றது, சூரியனை முழுதுமாக மேகங்கள்
மறைத்து விட்டன, கிரி வலம் செய்ய முடியுமா?
மனதில் குழப்பம். இவ்வளவு தூரம் அழைத்து தரிசனம் தந்த ஐயன், அன்பர் உள்ளம் கவர்
கள்வன் காந்தமாக இழுத்தான், கிரி வலம் செல்ல முடிவு செய்தேன்.
கிரிவலம் வராதவர்கள்
தார்ச்சனிலேயே தங்கிகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டது ஒரு நாள் அறை வாடகை 200
யுவான்கள் அவர்கள் தந்து டார்ச்சனில் தங்கினார்கள். இங்கு எடியைப் பற்றிக் கூற
வேண்டும், அவள் சிறு பெண் (14 வயது)
என்பதால் இந்த உயர் மட்டத்தில் சுலபமாக நோய்வாய்ப் பட்டு விட்டாள், இதனால் அவளுடைய தாயாரும் கிரி வலம் செய்ய
முடியாமல் போனது. எனவே 18 வயதை தாண்டாதவர்களும், 70 வயதை தாண்டியவர்களும் பொதுவாக இந்த யாத்திரையை
மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது.
காலை
சுமார் 6 மணியளவில் மானசரோவரிலிருந்து புறப்பட்டோம். தார்சாலையை விடுத்து இரு
பக்கமும் ஒரே வெள்ளிப் பனி மயம். பனிப்
பொழிவும் லேசாக இருந்தது. மலையரசன்
பொற்பாவை உடனாய திருக்கயிலை நாதனை தரிசனம் கிட்ட வேண்டும், கிரி வலம் செய்ய
வேண்டும் என்று வேண்டிக்கொண்டே பஜனைப் பாடல்களைப் பாடிக்கொண்டே சென்றோம்.
டார்ச்சனில் தட்பவெட்பம் எவ்வாறு இருந்தது கிரி வலம் செய்தோமா என்று அறிய அடுத்த பதிவுவரை காத்திருங்கள் அன்பர்களே.
*****************
திருஞான சம்பந்தர் தேவாரம்
திருக்கயிலாயம்
பாடல் எண் : 11
போரார்கடலிற் புனல்சூழ்காழிப் புகழார் சம்பந்தன்
காரார்மேகங் குடிகொள்சாரற் கயிலை மலையார்மேல்
தேராவுரைத்த செஞ்சொன்மாலை செப்பு மடியார்மேல்
வாராபிணிகள் வானோருலகின் மருவு மனத்தாரே.
காரார்மேகங் குடிகொள்சாரற் கயிலை மலையார்மேல்
தேராவுரைத்த செஞ்சொன்மாலை செப்பு மடியார்மேல்
வாராபிணிகள் வானோருலகின் மருவு மனத்தாரே.
பொருள்:கரையோடு போர் செய்யும் கடலினது நீரால் சூழப்பட்ட சீர்காழிப்பதியில் தோன்றிய
புகழ் பொருந்திய ஞானசம்பந்தன், கரிய மேகங்கள் நிலையாகத் தங்கியுள்ள சாரலை உடைய கயிலைமலை
இறைவர்மேல் தெளிந்துரைத்த இச்செஞ்சொல் மாலையாகிய திருப்பதிகத்தை ஓதும் அடியவர்பால்
பிணிகள் வாரா. அவர்கள் வானோர் உலகில் மருவும் மனத்தினராவர்.
தேவாரம் முழுவதையும் பொருளுடன் படிக்க இங்கு செல்க http://thevaaram.org/
யாத்திரை தொடரும்....................
படங்கள் அருமை... பதிவை (பயணத்தை) சிறப்பாக்கிய சுந்தர் அவர்களுக்கும் நன்றி...
ReplyDeleteமிக்க நன்றி தனபாலன் ஐயா.
ReplyDelete