முதல் நாள் கிரி வலம்
யமதுவாரத்திலிருந்து ஐயனின் தெற்கு முகம்
சாகா தாவா பண்டிகையின் போது மாற்றப்படும் கொடிமரம்
யமதுவாரம்
அஷ்டபத் சென்றதால் கிரி வலத்தை சமயத்தில் முடிக்க வேண்டுமே என்று நாங்கள் யமதுவாரம் செல்லவில்லை. மேலே உள்ள படங்கள் அகோர முகம் என்னும் ஐயனின் தெற்கு முகம் மற்றும் யமத்துவாரம். இவை 2005 யாத்திரையின் போது எடுத்த படங்கள். இனி வருபவை இந்த வருடத்திய படங்கள்.
கிரி வலத்தை தொடங்குகின்றோம்
(முகர்ஜி, சுதார்,மஹாஜன்,ஹிமான்சு, சேர்ப்பா ரஞ்சித், குப்தா)
பாபு, போர்ட்டர் சிறுவன், அடியேன்
ரஷ்மி, பங்கஜ் குப்தா
(படத்தை பெரிது படுத்தினால் லாரி செல்வதை காணலாம்)
யக்யாங் பாண்டே
கிரி வலம் ஆரம்பித்த போது இருந்த சூழ்நிலை
கிரி வலப் பாதையில் கோயல் தம்பதியினர்
வழியில் ஒரு நீர் வீழ்ச்சி உறைந்து இருக்கும் காட்சி
கிரி வலப் பாதை
ஆனந்தமாக கிரி வலம் வருகின்றோம்
நடுவில் சிறிது நேரம் ஓய்வு
மற்றவர்களுகாக காத்திருக்கின்றோம்
லா சூ ஆறு |
டார்ச்சன் திரும்பி வந்து கிரி வலத்திற்கு வேண்டிய நொறுக்குத் தீனி,
குளுகோஸ், சுடு தண்ணீர் கொண்டு செல்ல பிளாஸ்க் மற்றும் மழைக் கோட் ஆகியவற்றை
அவர்கள் கொடுத்த தோளில் மாட்டக்கூடிய தண்ணீர் புகாத பையில் போட்டு எடுத்துக் கொண்டு பேருந்து மூலமாக டார்போசே
வந்து சேர்ந்தோம். மதிய உணவிற்காக பொன் வைத்த இடத்தில் பூ வைப்பது போல ஒரு சமோசா,
ஒரு Frooti மற்றும் ஒரு kitkat, மற்றும் ஒரு ஆப்பிள் ஒரு பிளாஸ்டிக் பையில்
போட்டு கையில் கொடுத்து விட்டனர்.
கிரிவலம் செய்ய அனுமதி கிடைக்குமா என்பதே
முதலில் சந்தேகமாக இருந்தது, அனுமதி
கிட்டியபின் பனி பெய்ததால் குழப்பம் என்று எல்லாம் நீங்கி சூரியனைக் கண்டால் பனி
மறைவது போல அவர் தாள் பணிந்து புறப்பட்டால் அவர் எல்லாவற்றையும் பார்த்துக்
கொள்வார் என்று கிரிவலம் ஆரம்பிக்கும் இடத்தை அடைந்தோம். அஷ்டபத் சென்றதனால் கால தாமதம் ஆகி விட்ட காரணத்தால் யமதுவாரம் செல்லமுடியவில்லை.
அங்கிருந்து கிடைக்கும் தென்முக தரிசனம் கிட்டவில்லை. யமதுவாரம் தாண்டி சிறிது தூரத்தில்
உள்ள கிரி வலம் ஆரம்பிக்கும் இடத்திற்கு நேராக பஸ் மூலமாகவே சென்று விட்டோம். சாகா தாவா
பார்க்கலாம் என்று நினைத்திருந்தோம் ஆயினும் கொடி மரத்தைக் கூட பார்க்க
முடியவில்லை. அனைவரும் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என்நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க என்று ஐயனின் பதமலர்களுக்கு வாழ்த்துப்பாடி,கிரி வலத்தை வெற்றி கரமாக முடிக்க வேண்டிக் கொண்டு மதிய நேரத்தில் நடைப்பயணமாக முதல் நாள் கிரி வலத்தை
துவக்கினோம். இன்றைய தினம் யாரும்
குதிரையை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளவில்லை, அடியேன் உட்பட சிலர் மட்டும்
போர்ட்டர்களை வாடகைக்கு அமர்த்திக்கொண்டோம்.
இன்றைய
தின கிரி வலத்தின் போது இரண்டு முன்னேற்றங்களை கவனித்தோம் முதலாவது கிரிவலப் பாதை
இரட்டைப் பாதை ஆகி விட்டிருந்தது. வழியெங்கும் எண்ணெற்ற பக்தர்கள். கூட்டம்
அதிகமாகவே இருந்தது. பல பல வண்ண கோட்களில், தமிழர்கள், தெலுங்கர்கள்
திபெத்தியர்கள் வட நாட்டினர் சீனர்கள், ஜப்பானியர்கள் ஐரோப்பியர்கள் என்று பல
தரப்பட்ட வண்ணத்துப் பூச்சிகள் திருக்கயிலாயம் என்னும் மலரை சுற்றி வரும் காட்சி
அருமை. வழியில் அங்கங்கே அறிவிப்புப்
பலகைகள் அமைத்துள்ளனர் ஆனால் இங்கு ஆங்கிலத்தில் இல்லை . லா சூ ஆறு முழுவதும்
உறைந்தே காணப்பட்டது. திருக்கயிலாய காப்பு மலை காட்டும் பல்வேறு முகங்களை
பார்த்துக்கொண்டே லா சூ சமவெளியில் மனதில்
ஐந்தெழுத்தை ஜபித்துக்கொண்டே மெல்ல மெல்ல மலையேறினோம். சில அன்பர்கள் தேவார
திருவாசகம் ஓதிக்கொண்டே எங்களை கடந்து
சென்றனர். பாண்டியனாய் வந்து தமிழ் வளர்த்த தென் பாண்டி நாட்டானின் திருமுன்
சுந்தரத் தமிழ் பதிகம் கேட்டது காதில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது போல இருந்தது.
இன்றைய தின ஏற்றம் அவ்வளவு செங்குத்தானது அல்ல என்பதால் மிகவும் சிரமம்
இருக்கவில்லை.
இன்றைய கிரி வலத்தின் போதும் ஒரு அற்புத அனுபவம் கிட்டியது அது என்னவென்று அறிந்து கொள்ள அடுத்த பதிவு வரை காத்திருங்கள் அன்பர்களே.
கிரிவலம் அருமை...
ReplyDeleteஅற்புதத்தை காண ஆவலுடன் உள்ளேன்...
நன்றி...
படங்களின் எண்ணிக்கை கூடக்கூட யாத்திரையில் நேரில் பங்கு கொண்ட உணர்வு மேலிடுகிறது..பாராட்டுகள்
ReplyDeleteபோர்ட்டர்கள் இன்றி யாத்திரை மேற்கொள்பவர்கள் முதல் நாள் எளிதாக சென்று விடலாம். இரண்டாவது மூன்றாவது நாட்கள் சிரமம்.
முதல்நாளே நடக்க இயலாதவர்கள் குதிரை வைத்துக்கொள்ளலாம். மூன்று நாட்கள் செல்பவர்களும் குதிரை வைத்துக்கொள்ளலாம். இரண்டாம் நாள், மூன்றாம் நாளுக்கு மட்டும் குதிரை கிடைப்பது சிரமம். பணச்செலவு ஒன்றேதான்..
தொடர்ந்து அடுத்த இடுகைக்காக காத்திருக்கிறேன்
//படங்களின் எண்ணிக்கை கூடக்கூட யாத்திரையில் நேரில் பங்கு கொண்ட உணர்வு மேலிடுகிறது..பாராட்டுகள்//
ReplyDeleteமிக்க நன்றி சிவா
//முதல்நாளே நடக்க இயலாதவர்கள் குதிரை வைத்துக்கொள்ளலாம். மூன்று நாட்கள் செல்பவர்களும் குதிரை வைத்துக்கொள்ளலாம். இரண்டாம் நாள், மூன்றாம் நாளுக்கு மட்டும் குதிரை கிடைப்பது சிரமம். பணச்செலவு ஒன்றேதான்..//
ReplyDeleteசரியாக சொன்னீர்கள் சிவா. முதலிலேயே குதிரை வைத்துக் கொள்வது உத்தமம்.
இந்த தடவை எங்கள் குழுவினருக்கு வேண்டிய போது அவனருளால் குதிரை கிட்டியது.